Monday, January 22, 2018

காங்கேயம் காளைகள் vs அந்தியூர் அடிமாடுகள்

Rkநகரில் மக்கள் பணிகளை நிறைவேற்ற
தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால்# எதுக்கு சுத்தி வளைச்ட்டு?ஒரு ஷால் போர்த்தி கட்சில இணைஞ்சிடலாமே?


============


2 தினகரன் ஒரு மாய மான்-OPS # மேயாத மான் ,சக்தி மான் அப்டினு ஜனங்க நினைக்க"றாங்க"போல

=================

3 அதிமுகவுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் −OPS & EPS ?உங்க மேல நீங்களே நடவடிக்கை எடுக்கமுடியும்?

=============


4 தினகரன் தம்மை ஒரு 420 என அழைத்துக் கொண்டவர்.. ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு # அவரு ஓப்பனா சொல்லிட்டாரு,பலர் கமுக்கமா 420 வேலை பண்றாங்க

=============


5 தினகரன் பற்றி மக்களுக்கு தெரிந்ததை விட எனக்கு தெரியும்.−OPS உங்களுக்கே தெரியாத ரகசியம் எல்லாம் அவருக்கு தெரியுமாமே?


==============


6 அரசியலில் தினகரனை விட மூத்தவன் நான் - பன்னீர்செல்வம்
இளையவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கப்போறீங்களா?


=============


7 ரஜினி இன்று முதல் 6 நாட்களுக்கு ரசிகர்களை சந்திக்கிறார் வர்றவங்க ஆதார் கார்டு ,பான் கார்டு, ரேஷன் கார்டுடன் வரனுமா?


==================


8 மாயாஜாலம்

தந்திரம் சதி திட்டம் மூலம்
தினகரன் வெற்றி -EPS
எப்படியோ மோடி மஸ்த்தான் வேலை இவர்"கிட்டே எடுபடலை.மகிழச்சி========================


9


இமாலய வெற்றி பெற்ற தினகரன் தலைமையில் செயல்பட தயார்.சசிகலா புஷ்பா அந்தர் பல்டி! க்கு இரங்கற்பா பாடாம TTV க்கு வாழ்த்துப்பா பாடறாரே புஷ்பா


===============


10 திமுகவினரும் பணம் வாங்கி கொண்டு தினகரனுக்கு ஓட்டு போட்டு விட்டனர் -துரைமுருகன் # மேலிடம் மட்டும்தான் கை நீட்டனுமா?தொண்டன் கை நீட்டக்கூடாதா?


===============


11 , மக்கள் என்னிடம் ஏமாறத் தயாராக இருக்கிறார்கள். உங்களிடம் இல்லை! - டிடிவிடி. # தமிழன் 5 வருசத்துக்கு ஒரு தடவை ஒரு கட்சி கிட்டே ஏமாறுவான்


================


12
"தினகரனுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்தது பாஜக" - திருமா # தினகரனுக்கு வால் பிடிக்கும் வால் நட்சத்திர அந்தஸ்து உங்களுக்குத்தந்தது யாரு?


==================


13 திமுகவின் ஓட்டு கூட திமுகவுக்கு செல்லவில்லை: கங்கை அமரன்
# தேர்தல் அன்னைக்கு உங்களை மாதிரியே அவங்க கட்சிக்காரங்களுக்கும் காய்ச்சல் வந்ததாம்

===============


14 ஜெ வின் வெற்றிடத்தை தினகரன் நிரப்பவில்லை: விஜயகாந்த் # வெற்றிடத்தை நிரப்பாட்டி என்ன?வாக்காளர் பாக்கெட் நிரப்பி வெற்றி இடம் பிடிச்ட்டாரே?

================


15 எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிறுவனர் ஜெ.தீபா வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் # தீபா வ எழுப்பி விட கதவை தட்டி இருப்பாங்க


=============

16 உலகத்தோடு இணைய ஆங்கிலம் தேவை;இந்தியாவை புரிந்துகொள்ள இந்தி தேவை-கிரண்பேடி # தமிழ் நாட்டை கொஞ்சம் புரிஞ்சுக்க நோட்டா தேவை


=====================


17 புதிய உத்வேகத்துடன் DMKசெயல்பாடு தொடரும் −ஸ்டாலின்#தினகரன் புல்லட் ட்ரெயன்ல போய்ட்டு இருக்காரு.நீங்க இப்பதான் புல்லட் பைக்கை ஸ்டார்ட்டிங்


==============


18 ரஜினிகாந்த் தெளிவான முடிவை அறிவித்துள்ளார் − தமிழிசை # அவரும் குழம்பி நம்மையும் குழப்பிட்டு இருக்காரு,இதான் உங்க ஊர்ல தெளிவுங்களா?


==============


19 நாங்கள் காங்கேயம் காளைகள்-ஜெயக்குமார்# அந்தியூர் அடிமாடுகள் னு அக்கம் பக்கம் பேசிக்கறாங்க


=============

20 RKநகர் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன்-தமிழிசை# கட்சி செலவுல தமிழ்நாடு டூர் போக ஐடியா


==============0 comments: