Wednesday, January 17, 2018

ஜெ வுக்கு அடுத்து யார்? என்ற போட்டியில்

செல்போனுடன் லேண்ட்லைன் ரிசீவர் இணைத்து பயன்படுத்தினால் கதீர்வீச்சிலிருந்து தப்பலாம் -
பிரகாஷ் # வீட்லயே இருந்தா ரோடு ஆக்சிடெண்ட் ஆகாதுதான்


============

2 RK முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பதை காட்டுகிறது−தமிழிசை .நாம நோட்டா வை விட"கம்மி ஓட்டு.நோட்டாக்கு"யார் காசு தந்தா


==============


3 நடந்தது தேர்தலே இல்லை பதிவானது வாக்குகளே இல்லை.எனவே பேசவும் ஒன்றுமில்லை: தமிழிசை பேச வழி இல்லைனு சொல்லுங்க மேடம்.நோட்டா கூட போட்டி


============


4 என் மகன் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கிறான்: விஜயகாந்த் பெருமிதம் ,ரகுவரன்,அமிதாப்பச்சனைக்கூடத்தான் நிமிர்ந்து பார்க்கறாங்க


=========================


5 Rkநகரில் மக்கள் பணிகளை நிறைவேற்ற
தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால்# எதுக்கு சுத்தி வளைச்ட்டு?ஒரு ஷால் போர்த்தி கட்சில இணைஞ்சிடலாமே?


===============

6 இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது மாயை −TR# இந்த ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும்,ரிசல்ட்க்கு முன்பே சொல்லனும் இதை


==================


7 திமுக கட்சியின் வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்டது.. துரைமுருகன்#மக்கள் பணத்தை சாப்ட்ட அரசியல்வாதிங்க புலம்பறதுதான் காமெடி,நாம சாப்பிடாத பணமா?


================


8 தேர்தல் முடிவு தினகரன்- அதிமுக இணைய வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை காட்டுகிறது - செல்லூர் ராஜூ .2021 வரை இழுத்துடுவோம்


===============


9 தேர்தல் முடிவு தினகரன்- அதிமுக இணைய வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை காட்டுகிறது - செல்லூர் ராஜூ #
ஸ்லீப்பர் செல்(லூர்) ராஜூ நீங்கதானா?


=============


10 ஆர்.கே.நகரில் திமுகவின் நிலை மிகவும் பரிதாபம்: அன்புமணி சாடல் கலந்துக்கிட்டவரை வேடிக்கை பார்ப்பவர் நக்கல் பண்ணின கதை================


11 பாஜகவை களத்தில் நிற்பதாகவே மக்கள் கருத்தில் கொள்ளவில்லை - இல.கணேசன் # மொத்தத்துல உங்க கட்சியை ஒரு பொருட்டாவே மதிக்கல

==============


12 எத்தனையோ சோதனைகளை கடந்து வந்துள்ள திமுக, இந்த நிலைமையையும் எளிதில் எதிர்கொள்ளும் - வைகோ
# இவர் மீண்டும் கட்சி ல சேர்ந்ததே பெரிய சோதனைதான்


==============


13 ஜெ வுக்கு அடுத்து யார்? என்ற போட்டியில் தினகரன் வென்றுள்ளார்: திருமா # கலைஞருக்கு அடுத்து யார்?என்பதில் தளபதி தோத்துட்டாரே?


===============


14 நோட்டா இருக்ககூடாது என்பது என் கருத்து - தமிழிசை # செக்காவோ ,டிடியாவோ வாங்குனா ஜனங்க மாட்டிக்குவாங்களே?விவரமானவங்க.நோட்டாதான் வாங்குவாங்க=================

15 நோட்டா இருக்ககூடாது என்பது என் கருத்து - தமிழிசை ,அப்போ புதுசா வந்த 2000 ரூபா 500 ரூபா நோட்டும் செல்லாதுனு சொல்லப்போறீங்களா?


=======================16 காமராஜரைக்கூட வீழ்த்தி விடலாம்,ஆனால் மோடியை"வீழ்த்த முடியாது−H ராஜா தமிழ்நாட்ல நோட்டாவை வீழ்த்த வழி பாருங்க,அப்புறமா பஞ்ச் டயலாக்===============


17 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுகவுக்கு தோல்வி இல்லை, தேர்தல் ஆணையத்திற்குதான் தோல்வி: ஸ்டாலின் உள்ள பிள்ளை பிழைக்கும்,ஆனா உழைக்காது


=================


18 நகைச்சுவை வேடங்களில் இனி நடிக்க மாட்டேன் −நடிகர் சந்தானம் # நமக்கு அடையாளம் தந்ததே அதானே?ஏறி வந்த ஏணியை மறக்கலாமா?


================


19 தினகரன், திமுக கூட்டு சதி
செய்து வெற்றி : ஓபிஎஸ்-ஈபிஎஸ் 2 பேரும் கூட்டு சதி பண்ணி தினகரனை ஏமாத்துன மாதிரி?


==============


20 அதிமுகவும், தினகரனும் கூட்டுச்சதி செய்து தேர்தலில்
வெற்றி : மு.க.ஸ்டாலின் # ஜெயிச்சவன் ஒரு காரணம் சொன்னா தோத்தவங்க 1000 காரணம் சொல்வாங்க


===============

0 comments: