Wednesday, January 24, 2018

சார்.ஒரு பஸ் கண்டக்டர் சிஎம் ஆகலாமா?

1தலைவரே!அந்தப்பொண்ணோட ் ரூம்ல தங்குனதுக்கு பிரஸ்காரங்கதான் காரணமா?

ரூம் போட்டு யோசிப்பீங்களா?னு கேட்டு கேட்டு ரூம் போட்டு நேசிக்கவெச்ட்டாங்க


============


2 யாரெல்லாம் Singleஆ இருக்கீங்க?

மிஸ்!நானு நானு!
யோவ்,உனக்குதான் மேரேஜ் ஆகிடுச்சில்ல?
.அவ அம்மா வீட்டில்.அப்ப நான் சிங்கிள்தானே?


=============


3 மாமா,உங்க பொண்ணு குத்து விளக்கு மாதிரி இருக்கு

மாப்ளை,இதுல எதுனா உள்குத்து இருக்கா?
சரி,பொண்ணு உள் குத்து விளக்கு மாதிரி னு வெச்சுக்கலாம்


==============

4 சப்போஸ் பாம்பு நம்மைப்போலவே சோறு சாப்ட்டா நாம என்ன சொல்வோம்?

வாட் எ சர்ப்ப ரைஸ்!


==========


5 சார்
24 மணி"நேரமும் மஞ்சமாக்கான் மாதிரி ஆன்லைன்லயே இருக்கீங்களே,ஏன்?
இங்கதான்"மஞ்சள் நிலா,மஞ்சுளா,மஞ்சரி எல்லாம் உலாத்தீட்டு இருக்காக


===============


6 டியர்,கைக்கு "எட்டு"னது வாய்க்கு "எட்டு"வதில்லை ,அது ஏன்?

டெய்லி காலைல எட்டு பூரி சாப்ட்டா எப்டி எட்டும்,கொஞ்சம் வேலையும் செய்யனும்


==============


7 என் ட்விட்டர் ஹேண்டில் Iyeruma.என்னை பாலோ பண்ணுங்க.

எருமையை எப்டி பாலோ பண்ண?;
;யோவ்.நல்லா"படி.அது Iyer uma


===============


8 தலைவரே!டிசம்பர்"31 ரசிகர்களுக்கு என்ன சொல்லப்போறீங்க?

ஹேப்பி நியூ இயர் தான்


===========


9 அடிக்கடி இனி FB வரமுடியாது .

ஓஹோ,எப்போ எப்போ வருவீங்க?
காலை 6 டூ 2 pm.
மாலை 3 டூ 8 pm


===============


10 இண்ட்டர்வ்யூல கேட்கற கேள்விக்கு விளக்கமா,விரிவா பதில் தரனும்

ok சார்
உங்க பேர் என்ன மிஸ்?
மிமிமிமிமிமிமி
சப்தமி
வாட்?புரியல


=========

11 டியர்,உனக்கு என்னை பிடிக்குமா?

பிரியாணி
பால்கோவா
ரோஸ்மில்க் பிடிக்கும்.
சரியான சாப்பாட்டு ராமினு சொல்லு

==============


12 குருவே!பொண்ணுங்க எல்லாம் ஆப் பாயில்னு சில ஆம்பளைங்க சொல்றாங்களே?
மத்தவங்களை மட்டம் தட்றவங்க யாரா இருந்தாலும் அவங்க ஆப் பாயில்தான்


=============


13 சார்,ரஜினி அரசியலுக்கு வந்ததுல பர்சனலா உங்களுக்கு மகிழ்ச்சியா?எப்டி?
இனி"சினிமா"ல சூப்பர் ஸ்டார் நாற்காலி ல நான் உக்காந்துக்கலாம் இல்ல?

=============


14 தாங்கள் அரசியலில் இருக்கும்வரை ரஜினி, கமலை வரவிடாத கலைஞரும் ஜெ வும் ராஜதந்திரிகளா?
இல்ல.அந்த பாராட்டு ரஜினி,கமல் 2 பேருக்கும்தான்


=============


15 தலைவரே!உங்களுக்கு எதிரா மற்ற கட்சிகள் இணைஞ்சா என்ன செய்வீங்க?
அவங்களைப்பிரிக்கற வேலையை மாப்ளை தனுஷ் பாத்துக்குவார்.இது எப்டி இருக்கு?


============


16 ஆன்மீக அரசியல்னா என்ன தலைவரே?
தேர்தல் முடிஞ்சதும் இமயமலை போய்டறது


=============


17 தலைவரே!இனி வெட்டி அரட்டை அடிச்ட்டு கட்சி ஆபிஸ்ல குறட்டை விட்டு தூங்கறது வேலைக்காகாது
ஏன்?
நமக்கு ஆப்பு வைக்க பரட்டை வந்துட்டாரு

==============


18 சார்.போயஸ் தோட்ட வெற்றிடத்தை நிரப்பத்தான் அரசியலுக்கு வந்திருக்கீங்களா?
உங்க பார்வைல போயஸ் தோட்டம் வெற்றிடம்.
என் பார்வைல வெற்றி இடம்


=============


19 சார்.ஒரு பஸ் கண்டக்டர் சிஎம் ஆகலாமா?
ஏன் கூடாது.பேருந்து நடத்துனர் மாநிலத்துக்கு நடத்துனர் ஆகக்கூடாதுனு சட்டம் இருக்கா என்ன?


==========


20 நான் ஜெயிச்ட்டா யாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்ய விட மாட்டேன்
அதிகார தனுஷ்பிரயோகம் நடக்குமோனு ஜனங்க பயப்படறாங்க


============

0 comments: