Sunday, January 28, 2018

முருங்கைக்கீரை யை செம குத்துப்பாட்டு பர்ட்னு சொல்லலாமா?

குருவே!ஒரு பொண்ணை இம்ப்ரெஸ் பண்ண அடுத்தவன் கிட்ட ஐடியா கேட்டவன் கரக்ட் பண்ணதா சரித்திரமே இல்லயாமே?

ஆமா,ஒரு பொண்ணு கிட்டேயே"ஐடியா கேளு,ஐடியா"ஒர்க் அவுட் ஆகலைன்னா அந்தப்பொண்ணே"ஒர்க்"அவுட்"ஆனாலும் ஆகும்

================


2 குருவே!ஆத்து மீனு,குளத்து மீனு,கடல் மீனுனு பல வகை இருக்கு

ஆமா
ஆனா கடல் கன்னி 1 தானே இருக்கு?ஏன் குளத்துக்கன்னி,கிணத்துக்கன்னி,ஏரிக்கன்னி எதும் இல்ல?


================


3 குருவே!நிலாவை அதிகம் பிடிப்பதற்கு காரணம் நிலாச்சோறு சாப்பிட்டதற்காக கூட இருக்கலாம்கறாங்களே உண்மையா?

நிலா தோசையோ ,பூரியோ சாப்ட்டா பிடிக்காமயா போய்டும்?SJ சூர்யாவை நினைச்சாதான் பயமா இருக்கு


===============


4 குருவே!நந்தினின்னு பேர் வச்சவங்க எல்லாம் கொழுக் மொழுக்குன்னு இருக்காங்களே,ஏன்?

நல்ல தீனி சாப்டற நறுந்தீனி பார்ட்டியா இருக்கும் போல


=============


5 குருவே!திறமைசாலிகளுக்கு வித்யாகர்வம் வருவது,ஏன்?

அதைப்பற்றி பிறகு விளக்குகிறேன் .வித்யாவை,ஆசிரமத்தில்"சேர்த்து"விடு


================


6 நான் உன்னை முத்தமிடுகிறேன்
நீ அமைதியாக இருக்கிறாயே!!
யோவ்,லூசாய்யா நீ?அடிக்கறது லிப் கிஸ்,வாயைத்திறக்கவே முடியல


================


7 மன்னா!பல்லக்கு,தூக்கிகள் ஸ்ட்ரைக்.புது தற்காலிக பணியாட்களை நியமிப்போமா?

அது என்ன அரசுப்பேருந்தா?வர்றவன்"நைசா இளவரசியை"தூக்கிட்டு"அவன் வீட்டுக்கு கொண்டு"போய்ட்டா?


================


8 முந்தானை முடிச்சு"புகழ் தீபா,வும் அரசியலுக்கு"வரும்னு எப்படி கணிக்கறீங்க?

பட"டைரக்டர் வர்றப்ப பட"கிளாமர்,ஆர்ட்டிஸ்ட்"வர"மாட்டாரா?


==============


9 F B வரும் போது எதை தேடி வந்தேனோ இன்னும் தேடிட்டு தான் இருக்கேன் கிடைக்கல உண்மையான அன்பு

மிஸ்,உண்மையான அன்பை,நாம"தேடிப்போக வேண்டியதில்லை,நம்மைத்தேடி"வரும்.டிஎம் பாருங்க

================


10 இண்ட்ர்வ்யூவில்

உங்க,எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிடீஸ் என்ன?
பொண்ணுங்களோட"நெட்ல லூடோ கேம் ஆடறது
சரி,உங்க பொண்ணைக்கொடுங்க,கட்டிக்கிட்டு நேர்லயே லூடோ ஆடறேன்
உனக்கெல்லாம் எவன் வேலை தருவான்?


==============


11 குருவே!ஒரு பொண்ணு கிட்ட ரகசியம் அதிகபட்சம் 47 மணி நேரம்தான் தங்கும்னு சொல்றாங்களே,நிஜமா?

தெரில,நான் இந்தப்பொண்ணு வீட்ல தங்கி 36 மணி நேரம்தான்,ஆகுது


================


12 கிரிக்கெட் வீரர் கோஹ்லியோட உருவத்தை கலர் பொடி யால கோலம் போட்டிருக்கீங்களே,எதுக்கு?

ரங்கோலி கோலப்போட்டி ன்னாங்க


================


13 தலைவரே!பாபாவோட தாரக மந்திரம் என்ன?

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தனும்
நாம திருப்பூர்ல என்ன செஞ்சோம்?
200 கிலோ மட்டன் விருந்து


================


14 தலைவரே!உங்க பொண்ணு கல்யாணத்துக்கு வந்த ரசிகர்களை விரட்டி விட்ட நீங்க இப்போ அவங்களை அழைச்சு விருந்து வைக்கறீங்களே,ஏன்?

இப்போ அவங்க தேவை,அவங்க ஆதரவு தேவை


=================

15 ஹன்சிகா & சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்த பார்த்து பெண்கள் ஏன் கடுப்பாகறாங்க?

சிம்ப்பிள் லாஜிக்,அடுத்தவங்களைப்பாத்து பொறாமைப்படறது பொண்ணுங்க பாலிசி,தான் உண்டு தன் வேலை உண்டுனு இருப்பது ஆம்பளைங்க பாலிசி


================


16 இன்ஸ்பெக்டர்,ஆசை காட்டி இவன்"என்னை மோசம் பண்ணிட்டான்.

நம்ப முடியல
ஏன்?
நீங்க விஜய் ரசிகை.இவர் "ஆசை" காட்றப்ப அது அஜித் படம்னு சொல்லி தியேட்டருக்கே போய் இருக்க மாட்டீங்களே?


=================


17 டைரக்டர் சார், குழந்தைகளுக்கு புதிது புதிதாய் கதை சொல்ல யோசிப்பதற்குள் 5 படங்களுக்கு திரைக்கதை எழுதி விடலாம்.னு எப்டி சொல்றீங்க?

10 பாரீன் படம் பாத்தா போதும்.ஆனா குழந்தைங்களுக்கு புதுசா யோசிக்கனுமில்ல?


================


18 தமிழகத்தில் ஊழல் இல்லாத ஒரு
துறை எது?
படித்துறை.குளிக்க,துணிதுவைக்க இலவசம்


=================


19 குருவே!ரஜினி-கமல் அரசியலில் இணையாததற்குக் காரணம் ideology ஒத்துப்போகாததாலா?

நோ ஐடியா
உங்களுக்கா?அவங்களுக்கா?


=================


20 அகத்திக்கீரையை ஹம்மிங்க் பர்ட் னு சொல்வாங்க.

ஓஹோ,அப்போ முருங்கைக்கீரை யை செம குத்துப்பாட்டு பர்ட்னு சொல்லலாமா?


=================

0 comments: