Sunday, January 14, 2018

மிஸ்!அடிக்கடி டிபி மாத்திடறீங்களே அது ஏன்?

1  டியர்,ஆம்பளை அழலாமா?

அட போம்மா நம்ம நாட்ல முதல்வர்,துணை முதல்வர்,பிரதமர்னு ஆளாளுக்கு அழுது காரியம் சாதிச்சுக்கல?


=========2 2மாதம் முன்Walking போகும் போது 1 நாய்க்கு பிஸ்கெட் கொடுத்தேன்.அது என்னைப்பாத்து ஏதோ சொல்ல வந்தது

Fb ல இதை பதிவா போட்ராதீங்கனு சொல்ல வந்ததோ?


===========


3 சார்,உங்கள் லவ்வர் க்கு ஸ்பெஷல் ரிங்டோன் வச்சிருக்கிங்களா ?

இல்லீங்க,லவ்வரை மட்டும்தான் வெச்சிருக்கேன்===========4 நேத்து நைட் 11 மணிக்கு நான் தூங்குனபின் எங்கே போனீங்க?

நான் எங்கயும் போகலையே?
ரீசன்ட் விசிட்னு 5 பொண்ணுங்க பேர் ட்விட்டர்ல காட்டுச்சே?


=========


5 டியர்,எனக்காக ஜன்னல் ஓர சீட் விட்டுக்கொடுத்துட்டீங்களே?

அவ்ளோ அன்பா?
போறவன் வர்றவன் எல்லாம் உரசாம பாதுகாக்கனுமில்ல?


==========6 மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் - வைகோ #
தலைவா !விஜயகாந்த் தையும் அப்டிதானே சொன்னீங்க?
அது போன மாசம்.இது இந்த மாசம்=========


7 மாமா,பொண்ணு ட்விட்டர்ல இருக்குனு கேள்விப்பட்டேன்.ஹேண்டில்நேம் என்ன?

நீ மூடு
வாட்?
அட ஹேண்டில்நேமே அதான் மாப்ள=========

8 என்னோட மாஜிக்காதலிகள் அழும்போது நானும் அழுதுடுவேன்

ஓஹோ,எத்தன?
உங்க வீட்ல காலண்டர் எத்தனை?
வருசாவருசம் 1
அதே பார்முலா


=========
9 சார்,நகரத்தை விட்டு காட்டுக்குள்ளே போக ஏன் முடிவு எடுத்தீங்க?

நான் எப்போ அப்டி எடுத்தேன்?
இனி நா போற பாதை சிங்க பாதைன்னீங்களே?


=============

10 டாக்டர்,எங்கம்மா எனக்கு 10 தோசைதான் சுட்டுத்தந்தாங்க

அடடா,உங்களை முதல்ல சுட்டுப்போட்டிருந்தா அந்த 10 தோசையை உங்க குடும்பமே சாப்ட்டிருக்கும்=======11 தலைவரே!கே பாக்யராஜ்,விஜய்சேதுபதி − ரசிகரா நீங்க?

ஏன்?
"வேட்டியை மடிச்சுக்கட்டு"ம்போது "நானும் ரவுடிதான்" னு சொன்னீங்களே?


===========12 நிறைய பேர அன்பாலோ பண்ணிடனும் போல... டி.எல் பூரா ஒரே கெட்ட வார்த்தையா கிடக்குது🚶

ஒரே ஒரு கெட்ட வார்த்தைதானே இருக்கு,அதுக்கு ஒரு ஆளை அன் பாலோ பண்ணா போதாதா?


===========13 பசங்க எல்லாம் டிஎல்ல ஏன் கெட்ட வார்த்தை எழுதறாங்க னு கண்டுபிடிச்ட்டேன்

ஏன்?
நல்ல வார்த்தை எழுதும்போது ஒரு பொண்ணும் கண்டுக்கல,இப்போ பாருங்க===========14 மேடம்.நிறை குடம் தளும்புமா?குறை குடம் தளும்புமா?

தெரிலங்க.போரிங் பைப்ல தண்ணி அடிச்சு குடத்தை தூக்கீட்டு வர்ற என் புருசனத்தான் கேட்கனும்===========15 டிக்கெட் எப்டி புக் பண்றது?னு ஆன் லைன் ல கோச்சிங் க்ளாஸ் நடத்துன குற்றத்துக்காக உங்களை கைது பண்றோம்.

இன்ஸ்பெக்டர்.அது ட்ரெயின் TKT============


16 மேலதிகாரி தன்னிலும் கீழ் சாதி என்றறிந்தால் வேலையையும் விட்டுடுவானுகளா?

காதல்,கல்யாணம் மட்டுமே தடை.கள்ளக்காதல்,பணி,இன்ன பிற க்களுக்கு இல்ல


==============17 டீச்சர்,பொறுக்கிக்கு சின்ன ரு வருமா?பெரிய று வருமா?

சாதா பொறுக்கி ,பொம்பள பொறுக்கி எல்லா பொறுக்கிகளுக்கும் று தான் வரும்


============


18 சார்,பெண்ணுக்கு வைர நெக்லெஸ் போல் ஆணுக்கு ஐ போன் பத்து ன்னு சொல்லலாமா?

நோ நோ ஐ போன் 1 இருந்தாலே திருப்திப்பட்டுக்குவான்.10 எதுக்கு?==============


19 மிஸ்!அடிக்கடி டிபி மாத்திடறீங்களே அது ஏன்?

அடிக்கடி காதலியையே மாத்திடற ஆம்பளைங்க,கூட்டணியை மாத்தற கட்சிங்களை முதல்ல கேள்வி கேளுங்க


=============


20 ஊட்டி ப்ளவர் "ஷோ ல உலகத்துல இருக்கற எல்லா பூக்களும் காணக்கிடைக்கும்

நான் நம்ப மாட்டேன்
ஏன்?
கருணை மலர் ,பனிமலர் இன்ன பிற மலர்களை காணமே?===============

0 comments: