Monday, January 22, 2018

கிருணிகா கூட சண்டை

மேடம்,போன வருசம் நடந்த கான்வோ வை இப்ப வரை நினைவுல வெச்சிருக்கீங்களே?


இது என்ன பிரமாதம்?மேரேஜ் ஆன பொண்ணு புருசன் 25 வருசம் முன் சொன்னதைக்கூட=============


2 மேடம்.ரெகுலரா 5 am to 6 am தான் வாக்கிங் போவேன்னு fbல சொன்னீங்க?


ஆமா
வாக்கிங் போன போது கிளிக் பண்ணிய கோல போட்டோ ல சூரிய வெளிச்சம் இருக்கே==============


3 தலைவரே!கட்சிப்பணில நம்ம தொண்டர்கள் முழு வீச்சில் இறங்கிட்டாங்க


வெரிகுட்.என்ன பண்றாங்க?
வீச்சு புரோட்டா சாப்ட்டுட்டு இருக்காங்க==============


4 சார்,உங்க ஜோக்ஸ் மொக்கையா இருக்குனு 4 பேர் முன்னால உங்களை கலாய்ச்ட்டேன்.


அடடா!ஊருக்கே தெரிஞ்ச மேட்டர்னு அவங்க உங்களை கலாய்ச்சிருப்பாங்களே?================


5 சார்,அப்பளம் 1 பாக்கெட் குடுங்க


ஜூலி விளம்பரம் பண்ற அருணா அப்பளம் தரவா?
அய்யய்யோ,அதைத்தவிர வேற எது வேணா குடுங்க.சாப்பிடற டைம் ல உவ்வே===============


6 மிஸ்!நாலு புள்ளிக்கோலம் போட்டு 4 மூலைலயும் சோடா கலர் பாட்டில் வெச்சிருக்கீங்களே?எதுனா குறியீடா?


இதுதான் கலர்க்கோலம்===============


7 சார்,FM ரேடியோ பூ வேணுமா?


அப்டி ஒரு பூ இருக்கா?
ரேடியோ பூ தான்.மாடர்னா பேரை மாத்தீட்டோம்================


8 கிருணிகா கூட சண்டை போட்டு டூ விட்டிருந்தேன்.இப்போ ராசி ஆகிட்டோம்


ஓஹோ,அப்போ கிருணிகா கிருணிப்பழம் ஆகிடுச்சா?================


9 தலைவரே!நம்ம கட்சிக்காரங்களே அவங்க கிட்டே கை நீட்டிட்டாங்க


ஏன்?
நாம எச்சக்கை ல கூட காக்கா ஓட்ட மாட்டோம்னு கண்டுபிடிச்ட்டாங்க போல
================10 ஆண்டவன் என்ன சொல்றான்னா....


தலைவா!இந்தக்கதை எல்லாம் வேணாம்.வருவீங்களா?மாட்டீங்களா?வெட்டு 1 துண்டு================


11 மிஸ்!ஐ லவ் யூ. யூ?


31/12/18 அன்னைக்கு என் முடிவை அறிவிக்கிறேன்
ஏம்மா.புதுக்கட்சியா ஆரம்பிக்கப்போறே?பில்டப் எதுக்கு?
===========================

12 ரைட்டர் சார்.குக்கர் ஜெயிச்சுட்டா இந்த நாட்டை விட்டுப்போய்டுவேன்னீங்களே?போகலை?

பாஸ்போர்ட்,விசா எடுக்க தினகரன்ட்ட காசு கேட்டிருக்கேன்.வெய்ட்


================


13 குருவே!கோபத்தை ஒழிக்க /தொலைக்க என்ன வழி?

முத கட்டமா சொந்த சம்சாரத்தை யும் ,ஆபீஸ் மேனேஜரையும் ஒழிக்கனும்.


================


14 மார்க்கெட்டிங்க நம்பி ஏமாறாதீங்க என்பதுதான் நம்ம படத்தோட கதைக்கரு
ஓஹோ,படத்துல ஹீரோயினுக்கு வேலையே இல்லையே?
அது ஒரு மார்க்கெட்டிங்க்தான்


===============


15 இப்ப இருக்கற சூழல்ல ரஜினி யால தினகரனை ஜெயிக்க முடியாது
ஏன்?
அவரு தான் தர வேண்டிய வாடகை பாக்கியையே தர்லை.எங்கே வாக்குக்கு பணம் தரப்போறாரு?


================


16 துக்க மிகுதியால் சாப்பிடலை.
அப்டி என்ன துக்கம்?
அதான் சொன்னேனே சாப்பிட முடியல ன்னு
நீங்க சமைச்சதை உங்களாலயே சாப்பிடமுடியலன்னா எப்டி?


===============


17 டெய்லி 100 பேர் என்னை பாலோவ் பண்றாங்க
எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்குங்க மேடம்.ஆபீசுக்கோ ,வீட்டுக்கோ பாலோ பண்ணிட்டே வந்துடப்போறாங்க


================


18 அன்பேனு பேசுறவங்க அம்போனு விட்டுட்டு போய்டுவாங்க
தப்பு மேடம்
பொதுவா பசங்க அம்பு வேணா விடுவாங்க.ஆனா நம்பி வந்த பெண்ணை அம்போ னு விடமாட்டாங்க


=============
19 யாருக்கெல்லாம் பூ கட்ட தெரியும்?

எனக்கு தெரியும் மேடம்
ஓஹோ கட்டுங்க பார்ப்போம்
இந்த மூட்டை ல நீங்க கொட்டுங்க.அந்த மூட்டையை நான் கட்றேன்


================


20 ஒவ்வொரு நியூஇயர்க்கும் ஒரு நல்லபழக்கத்த கடைபிடிக்கறேன்

ஓஹோ.இதுவரை எத்தனை நல்ல பழக்கம்?
24
அடடா,வயசை சொல்லீட்டிங்களே,இது நல்ல பழக்கமா?


=================

0 comments: