Saturday, January 06, 2018

சூரியனையும் சனிப்பெயர்ச்சி விட்டு வைக்காது

சொந்த மாநிலத்தில் மோடி பலம் இழந்து விட்டார்-திருநாவுக்கரசர்.#
அண்ணணோட சொந்த தொகுதி அறந்தாங்கி யில பலம் இழந்த மாதிரி


=============


2 காமராஜரை வீழ்த்தி விடலாம் மோடியை வீழ்த்தவே முடியாது-எச்.ராஜா # காமராஜரின் எளிமை யை ஜெயிக்க இனி ஒரு தலைவர் பிறந்து வரனும்


=============


3 மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் -ஸ்டாலின் # நல்ல வேளை,ஊழல் பண்ணாத கட்சிகள் ஒன்றிணையனும்னு சொல்லல,மாட்டிஇருப்பாரு


============


4 நான் முதல்வரானவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்-ஸ்டாலின்
#2026 வரை அவங்க சுதந்திரமா வெளில சுத்திட்டு இருப்பாங்களா?


================


5 விடுதலைசிறுத்தைகள்கட்சி நிர்வாகிகள்ளக்காதலிவீட்டில் மர்மச்சாவு# சில்வண்டு சிக்கும்,சிறுத்தை சிக்காதுங்கற பஞ்ச் ல அசால்ட்டா இருந்தாரோ?


==================6 விடுதலைசிறுத்தைகள்கட்சி நிர்வாகிகள்ளக்காதலிவீட்டில் மர்மச்சாவு# சில்வண்டு சிக்கும்,சிறுத்தை சிக்காதுங்கற பஞ்ச் ல அசால்ட்டா இருந்தாரோ?


==============7 தேர்தல் ஆணையம் சீசரின் மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்கனும் - ஸ்டாலின் # சசிகலாபுஷ்பா புருசன் போல் கண்டும் காணாதது போல் இருக்காக


============


8 பாகிஸ்தான் சர்ச்சில் குண்டுவெடிப்பு - செய்தி
# கூகுள் லயே சர்ச் பண்ணாலும் இனி சர்ச் எதுவும் பாகிஸ்தான்ல இருக்கக்கூடாதுனு நினைக்கறாங்க போல


=================


9 ஆர்.கே நகரில் இன்று மாலையுடன் ஒய்கிறது பரப்புரை-செய்தி # மொய்ப்பணம் வெச்ச கவர் பரப்பு உறை இனி தானா?


===============10 திமுகவினருக்கு 21-ம் தேதி முகூர்த்தம் குறிச்சாச்சி - எச்_ராஜா # உங்க வாய் முகூர்த்தம் பலிக்குதா பார்ப்போம்


=============


11 குஜராத் தேர்தல் முடிவு பாஜக.வுக்கு பெறும் பேரதிர்ச்சியை அளித்துள்ளது - ராகுல் முடிவு காங் க்கு அதிர்ச்சி அளித்ததைப்போல?==============


12 ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட கன்னியாகுமரி வந்தார் மோடி ஜெயிச்சாதான் போவேன்னு வேண்டுதல் போல


===========


13 சென்னை கே.கே.நகர் சரவணபவன் ஹோட்டலுக்கு சிஎம்டிஏ அதிகாரிகள் சீல்- செய்தி # அபூர்வமாக சில நேர்மையான அதிகாரிகள் டியூட்டி பார்க்கறாங்க போல


==============


14 இந்து மக்கள் கட்சியிலிருந்து தொண்டர்கள் விலகி பாஜக வில் இணைந்தனர் - தமிழிசை # வந்தாரை எல்லாம் சேர்த்துக்கொள்ளும் கட்சிகள்ல பாஜக வும் ?


==============


15 சொன்ன சொல் மாறாமல் மொட்டை அடித்து கொண்ட ஹர்த்திக் படேல் # இந்த அரசியல்வாதிகளுக்கு யாரையாவது மொட்டை அடிக்கனும்.இல்லைன்னா தனக்குத்தானே..


============16 என்ன செய்தாலும் பா.ஜ.க.வால் தமிழகத்தில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது: வைகோ # நாம தான் ஒரேயடியா கோபாலபுரத்துல சரண்டர் ஆகிட்டமே?


==============17 ஓட்டுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை என அதிமுக நிர்வாகிகளிடம்Rk நகர் வாக்காளர்கள் புகார்: முழுமையான 6K நகர் ஆக மாறனும்னு எதிர்பார்க்கறாங்க=============18 ஜெ வின் நினைவிடம் கோவில் போன்ற தோற்றத்தில் அமையும்:CM EPS # அப்போ வாசல் ல உண்டியலும் வெச்சிடுவாங்களோ?


==============19 Rkநகரில் வாக்காளர்களாக இல்லாதோர் தொகுதியை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு # அந்த 6000 ரூ வை குடுத்துட்டு போகனுமா?எடுத்துட்டு போலாமா?


===========


20 2ஜி− காலை 10.30 மணிக்கு தீர்ப்பை அறிவிக்கிறது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்..
சனிப்பெயர்ச்சி விட்டு வைக்காது


============


0 comments: