Tuesday, January 09, 2018

மழை வந்ததும் தலைவர் மகளிர் அணித்தலைவியை கூட்டிக்கிட்டு பெட்ரூம் போறாரு?

மழை வந்ததும் தலைவர் மகளிர் அணித்தலைவியை கூட்டிக்கிட்டு பெட்ரூம் போறாரு?

மழைக்குக்கூட பள்ளி(யறைப்)பக்கமே ஒதுங்காதவர்னு இனி சொல்லமுடியாது

===========


2 தலைவரே!நாதஸ்வரத்தை அவமதித்ததா உங்க மீது தொடரப்பட்ட வழக்கை எப்டி வாபஸ் வாங்க வெச்சீங்க?

இதை மேலும் மேலும் ஊதிப் பெரிதாக்க வேணாம்.லீவ்இட்


=============


3 கோபம் வந்தால் தூக்கி போட்டு மிதிக்க ஒரு தோழன் இல்லை...

மிஸ்.காவல் துறை உங்கள் நண்பன் னு சொல்றாங்க.முடிஞ்சா அட்டாக் பண்ணிப்பாருங்க


=============


4 மழைன்னு பார்க்காம கிளம்பி போனாலும் போன வேலையை முடிக்க முடியல

ஓஹோ,அப்டி என்ன வேலை?
தோட்டத்துல செடிகளுக்கு தண்ணி ஊத்தற வேலைதான்


==============


5 அழகான பெண்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதில்லை,ஏன்?

ஏன்னா அவங்க வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குடிகார பணக்காரன கட்டிக்கறாங்க=============


6 உங்க பையன் எதிர்காலத்துல அரசியல்ல பெரிய ஆளா வருவான்

எப்டி டீச்சர்?
செக்கிழுத்த செம்மல் யார்?னு கேட்டா சேக்கிழார்ங்கறான்


===============


7 டைரக்டரோட க்ரியேட்டிவிட்டி ,எளிமையான கதை சொல்லும் உத்தி பிரமாதம்,

எப்டி?
அண்ணன் பேரு அண்ணாதுரை
தம்பி பேரு தம்பிதுரை


=============


8 ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடலையா?

உனக்கு வேணா மாலை போடறேன்


=============


9 சார்.எழுதும்போது கலர் ஸ்கெட்ச்ல டெக்கரேசன் குடுத்து அன்டர்லைன் பண்ணி எழுதறீங்களே,ஏன்?

அப்பதான் பொண்ணுங்க "அழகான எழுத்து"னு சிலாகிப்பாங்க


==============


10 சார்.உங்க பட விளம்பரத்துல "சம்திங் ஸ்பெஷல்"னு சப் டைட்டில் போடுங்க

ஏன்?
அக்‌ஷய் குமார் நடிச்ச Special 26 படம் சாயல் தெரியுதே?


=============


11 மிஸ்!உங்க ஹேண்டில்நேம்ல Lazy னு போட்டிருக்கீங்க

ஆமா
ஆனா டெய்லி 2 டைம் டிபி மட்டும் சுறுசுறுப்பா மாத்திடறீங்களே,அது எப்டி?


=============


12 ஆட்டு வால் மாதிரி சார்ஜர் வொயர் வைக்கறாங்க , கொஞ்சம் லெங்த்தா வச்சா என்ன?

அனுமார் வால் மாதிரி வெச்சா ரேட் டபுளாகும்,பரவால்லியா?

===========

13 தமிழ்நாட்டில் புயல்களுக்கு கூட தமிழில் பெயர் வைப்பதில்லை.என்ற குறை இல்லாமல் எங்கள் ஆட்சியில் சுனாமி,புயல் க்கு தமிழில் பெயர் வைக்கப்படும்


==========


14 யுவர் ஆனர் ,என் புருசன் ஒரு டிராயிங் மாஸ்டர்.பிடிக்கலை.டைவர்ஸ் வேணும்

ஏம்மா,இதெல்லாம் 1 பிரச்சனையா?
அடிக்கடி வி"சித்திரமா" நடந்துக்கறார்


=============


15 சர்வர்.இட்லி Soft டா இல்லையே?

சார்.மிருதுவாத்தானே இருக்கு?
இன்னும் எதிர்பார்க்கறேன்
இதுக்கு மேல மிருதுவா வேணும்னா மிருதுளாதான் சுடனும்


===============


16 தலைவரே!இடைத்தேர்தல்ல நிக்கற அளவு என்ன சாதனை செஞ்சிருக்கீங்க?

ஒரு IAS ஆபிசர் முகத்துல ஆசிட் அடிச்சிருக்கேன்.இந்த ஒரு தகுதி போதாதா?


===============


17 மிஸ்.முகம் பார்க்கற கண்ணாடிக்குப்பின்னாலதான் ரசம் இருக்கும்.உங்க போன்லயும் இருக்கே?

அம்மா வெச்ச ரச போட்டோ வை FBல போட்டப்ப விழுந்திடுச்


===============18 குருவே!ஏழு கழுத வயசானாலும் இன்னும் கண்ணுல சோப்பு படாம குளிக்க வரல.

அறிவுக்கண்ணை எப்பவும் திறந்தே வெச்சிருக்கனும்,ஆனா சோப் போடறப்ப மூடிடனும்


=================


19 குருவே!மழை நாட்கள்ல"என் மூளை வேலை செய்ய மாட்டேங்குது,என்ன செய்ய?

வெய்யில் வந்ததும் மொட்டை மாடில காய வெச்சிடு


===============


20 குடிகாரர்களை யார் யார் எல்லாம் மதிப்பாங்க?

ஓசில சரக்கு வாங்கி சாப்பிடலாம்னு நினைக்கறவன்
டாஸ்மாக் பணியாள்
இவங்க 2 பேரும் மதிப்பாங்க


================

0 comments: