Tuesday, January 02, 2018

லவ்வரை எப்டி கூப்டுவீங்க?

டாக்டர் ,ஜோக் அருவி ல குளிச்சா நிறைய ஜோக்ஸ் உதிக்குமா?

நல்ல வேளை,மங்க்கி பால்ஸ்ல குளிச்சா குரங்கா மாறிடுவேனா?னு கேட்கலை


===============


2 காய்ச்சலில் 29 வகைகள் இருக்கு,எல்லாம் டெங்கு கிடையாது

தலைவரே!. சாராயம் காய்ச்சுவதும் இதில் சேருமா?


==============


3 தலைவரே!நம்ம கட்சி எஃகு கோட்டை னு சொன்னீங்க

ஆமா
அது மக்கிப்போன கோட்டை,மக்குகள் இருக்கும் கோட்டைனு மீம்ஸ் போடறாங்க


=============


4 டியர்,உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்

நிஜமாவா?இதை என்னால ஜீரணிக்கவே முடியல.பால்கோவா அரைக்கிலோ வாங்கிக்குடுங்க
அதுவும் ஜீரணமாகலைன்னா?


================


5 தலைவரே! ஆதி தமிழர்கள்னா யாரு? திராவிட தமிழர்கள்னா யாரு?ஆர்யர்கள் னா யாரு?

"ஆதி" தமிழர் னா விஜய் ரசிகர்
"திராவிடன்" சத்யராஜ் ரசிகர்
ஆர்யர் ஆர்யா ரசிகர்


===============


6 குருவியைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

டீச்சர்,அந்தப்படத்தை பாக்கும்போது 3 வது ரீல்லயே தூங்கிட்டேனே?எப்டி கருத்து சொல்ல


==================


7 மாமா.உங்க பொண்ணை நாச்சியார் போல் வளர்த்திருக்கறதா சொன்னீங்களே?வீரத்துல புலியா?

மாப்ள,நீங்க எதுனா தப்பு செஞ்சா கெட்ட வார்த்தைல திட்டுவாப்டி


=============


8 சார்,நம்ம படம் ஆஸ்கார் விருது வாங்க அனுப்பப்படுதாமே?

"வாங்கலாம்"னு ட்ரை பண்றோம்
வாங்கறது நமக்கு புதுசு இல்லையே?


==============


9 எனக்கு மாமா பையன் லவ் லட்டர் குடுத்தான் ,அதை படிக்கவே அரைமணி நேரம் ஆகிடுச்சு😢

மிஸ்.க்ரைம் நாவலையே 20 நிமிசத்துல படிச்சிடலாமே?

=============


10 யுவர் ஆனர்,கருணை கொலை பண்றதை சட்டம் ஏத்துக்காதா ஏன்?

இப்டியே விட்டா கருணை மலர்,பனி மலர் னு ஆளாளுக்கு கொலை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க

=============


11 படமே"ரிலீஸ் ஆகல,மொக்கையாதான் இருக்கும்னு எப்டி சொல்றீங்க?

எப்போ ஒரு நல்ல படைப்பாளி தன் திறமையை நம்பாம கெட்ட வார்த்தையை நம்பறாரோ அப்பவே


===============


12 காவியத்தலைவன் இப்போ யாரு?

சினிமால விகாந்த்
அரசியல்ல மோடி "காவி"ய தலைவன்


=============


13 பெண்ணை விட ஆணுக்கு பொறாமை குணம் அதிகம்

மிஸ்,பாத்தீங்களா?பொறாமைப்படறீங்க


===========


14 மிஸ்!திருக்குறள் புக்கை புரட்டி புரட்டி பார்த்து என்ன தேடிட்டே இருக்கீங்க?

தீரன் அதிகாரம் 1 எங்கே இருக்கு?னு தேடறேன்


===============


15 சார்,நீங்க எழுதெறதெல்லாம்"செம மொக்கை,இதை எப்டி சொல்லி உங்களுக்கு புரிய வைக்கறது?

நான்தான் வெட்டியா இருக்கேன் ,மொக்கை போடறேன்,நீங்களுமா?


================


16 கவர்னர் சார்,சட்டசபையைக்கூட்டி பெரும்பான்மை யை நிரூபிக்க சொல்லுங்க

இருங்க,இப்பதான் 2 தெரு கூட்டி இருக்கேன்,இன்னும் 15689 தெரு இருக்கு


==============


17 டியர்,நான் அன்புக்கு கட்டுப்படுவேன்,அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு வரமாட்டேன்

ஓஹோ,அப்போ தீரன் அன்பு 1 னு டைட்டிலை மாத்தனுமா?


============18 3 மாசமா வரி கட்டாததுக்கு அமைச்சர்தான் காரணமா?எப்டி?

GST வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு இருக்குன்னாரு,ஐ ஆம் வெய்ட்டிங்


==============

19 ஒரு டெய்ரி மில்க் தின்னது குத்தமா டாக்டர்?

மில்க் பிரச்சன இல்ல.டைரி ஜீரணம் ஆகாது


===============


20 மிஸ்.பொண்ணுங்களை டி போட்டு கூப்பிட்டா பிடிக்காதுனு இத்தனை பேர் சொல்லி இருக்கீங்க,சபாஷ்

தேங்க்ஸ்
லவ்வரை எப்டி கூப்டுவீங்க?
டேய் னு.


=============

0 comments: