Monday, January 29, 2018

எங்க ஹீரோ அவார்டு "வாங்கிட்டாரு"

டாக்டர்,என்னமோ பண்ணுது.. ஆனா என்ன பண்ணுதுனு தெரில...கண்ண கட்டுது.. லெமன் சோடா குடிச்சும் சரியாகல..

சோடாவை சரக்கு அடிக்கறப்பவே மிக்ஸ் பண்ணி அடிச்சிருக்கலாமில்ல?

================


2 டியர்,என்னை வர்ணிச்சு"ஒரு கவிதை சொல்லுங்க

முடியாது
ஏன்?
காதலி பக்கத்துல இருக்கும்போது மாங்கா மடையன்"தான்"டைம்"வேஸ்ட் பண்ணி கவிதை சொல்லிட்டு இருப்பான்

==============


3 ஹலோ,ரயில்வே போலீசா?சென்னை டூ திருவனந்தபுரம்"ரயிலை தீவிரவாதிங்க யாரோ கடத்தறாங்க.எதிர் திசை ல ரயில் போகுது

யோவ் ,பாலக்காடு தாண்டுனா சொர்ணூர்ல இஞ்சின் மாத்தி தான்யா போகும்

===========

4 ஓட்டுநர் முன்னேற்ற முன்னணி"னு"கட்சி ஆரம்பிச்ட்டாங்க

யாரு?அரசு டிரைவர்களா?
இல்ல ,தீபா"கார் டிரைவர்

===============


5 மேடம்,நீட் தேர்வு எழுதனும்னா தாலியை கழட்டி வைக்கனும்.

அது முடியாதுங்க
ஏன் மேடம்?பதி பக்தியா?
அதெல்லாமில்ல,இன்னைக்கு தாலி செயினை மறந்துட்டு வந்துட்டேன்.

================


6 தலைவரே!தமிழ்நாட்லயே தில்,உள்ள"கட்சி நம்முளுதுதான்;

நிஜமாவா?
பின்னே? பேரைக்கேட்டாலே"ஷாக் ஆகி"ஓடற அளவு"ராசி உள்ளவர்"கூட தைரியமா"கூட்டணி"வெச்சிருக்கமே?


=========


7 தலைவரே!ரேஷன் கார்டில் நடிகைங்க படம் அச்சிடப்பட்டிருக்கே?எதுனா குறியீடா?

ரேஷன் னா போடற பொருளோட எடை குறைச்சலா இருக்கும் ,நடிகைன்னா போடற உடை அளவு குறைச்சலா இருக்கும்


==================


8 எங்கள் தலைவி இறந்தாலும்"எங்கள் மனதில் வாழ்ந்து"கொண்டுதான் இருக்கிறார் யுவர்,ஆனர்

அடம்"பிடிக்காதீங்க.உயிரோட இருப்பவர்களுக்கே நோபல் பரிசு


=================


9 டாக்டர் ,அந்த பேஷண்ட் உடம்பு பூரா வலி ங்கறாரு,ஆனா டான்ஸ் ஆடிட்டே இருக்காரு.இது என்ன விதமான வலி யா இருக்கும்?

நர்ஸ்.ஒரு வேளை குலேபகா"வலி"யா இருக்குமோ?


================


10 தலைவரே!உங்களுக்குப்பக்கத்துல யார்"நிக்கறதுனு 2 பேரு அடிச்சுக்கிட்டாங்களே?அவங்களை"நீங்க"ஏன்"தடுக்கலை?

அப்புறம் வடிவேலு காமெடில வர்ற மாதிரி"என்னை அவங்க அடிச்ட்டா?அதான் கம்முனு இருந்துட்டேன்

==============


11 தலைவரே! கமல் மாதிரியே ஆகனும்னு ஆசைப்படறீங்களா?

இல்லையே?ஏன்?
டிவி க்கள்ல கருத்து விவாதங்கள்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கெட்டப்ல ஒவ்வொரு லேபிள்ல வர்றீங்களே?


==================


`12 தலைவரே!கவர்மெண்ட் பஸ் ஓடாம இருந்தும் ஜனங்க எப்டி சமாளிச்சாங்க?

ஜூஜூபி மேட்டர் இது,தமிழ்நாட்ல கவர்மெண்ட்டே இயங்காம இருந்தப்பவே சமாளிச்சாங்க,கவர்மெண்ட் பஸ் இயங்கலைன்னா சமாளிக்க மாட்டாங்களா?


=============13 தலைவரே!நம்ம கட்சி எம்எல்ஏக்கள் வாயைத்திறக்கறதே இல்லையே?எதுக்காக அவங்களுக்கு தொலைபேசி படி ரூ 7500 ஆக உயர்த்தி தர்றீங்க?

எதுவும் (லூசுத்தனமா)பேசாம இருக்கத்தான் அந்த இன்க்ரீமெண்ட்


================


14 குருவே!ஆண்டாள்"பற்றி"தப்பா பேசறவங்களைப்பத்தி"என்ன நினைக்கறீங்க?

ஏற்கனவே"தமிழ்நாட்டை ஆண்டாள்"பற்றி பேசினா,இந்து மத ஆண்டாள் பற்றி தப்பா பேசினா ஆண்"டான் ஆகிடலாம்னு நினைக்கறாங்க


===============


15 இண்டர்வ்யூவில்.

ஊரு ஊரா சுத்துற வேலை பிடிக்குமா? அது ஓகே வா?
பாதி ஓகே"ங்க; புரியல
ஊர் ஊரா சுத்தறது ஓகே"ங்க.அந்த வேலை தான் சிரமம்


================


16 அரசியல்வாதிக்கும் கம்பளிப்பூச்சிக்கும் என்ன வித்யாசம்?

கம்பளிப்பூச்சி திடீரென தனது இருப்பிடத்தை மாற்றினால் மழை வரப் போகிறது என்று அர்த்தம். அரசியல்வாதி கட்சி மாறுனா தேர்தல் வரப்போகுதுனு அர்த்தம்


=================


17 டைரக்டர்"சார்,நம்ம"படம் கின்னஸ்ல இடம்"பெறப்போகுது,

சபாஷ் ,எந்த கேட்டகிரில?
சென்சார் ல 315 கட் வாங்குனது உலகத்துயே நம்ம படம்தானாம்


===============18 எங்க ஹீரோ அவார்டு "வாங்கிட்டாரு"

பிரமாதம்,எவ்ளோ"குடுத்தாரு?


===============


19 இந்த உலகத்தில எல்லாரும் எல்லாரையும் ஏமாத்திட்டு தான் இருக்காங்க.

அப்டியா?உங்க டிபி ல யாரு?நீங்களா?
இல்ல,ஒரு நடிகை
அப்போ நீங்க கூட உங்க பாலோயர்சை ஏமாத்தறதா சொல்லலாமா?

===============


20 தலைவரே!65+ வயசுக்கப்புறம்"ரஜினி"அரசியலுக்கு வந்து என்ன சாதிக்கப்போறார்னு நம்ம ஆளுங்க கேட்டுட்டாங்க

பிரமாதம்
ஆனா,உங்க தலைவர் 93+ வயசு ஆகியும் ஏன் அரசியல்ல இருந்து ரிட்டயர் ஆகலைனு திருப்பித்தாக்கறாங்க

================

0 comments: