Tuesday, January 23, 2018

துக்ளக் பேடு லக்

,பனங்கிழங்கு / குச்சிகிழங்கு வேக வைக்க உப்பு போடனுமா?


வேக வைக்க அடுப்பு ல வெச்சா போதும்.சாப்பிட ருசிக்காக வேணா லைட்டா உப்பு சேர்த்தலாம்


============


2 நான் நல்லா சாப்பிடனும்ங்கிறதுக்காக நூடுல்ஸ் சமைக்கிறேன்


நல்லா சாப்ட்டா போதுமா?நல்லதா சாப்பிடத்தேவை இல்லையா?===========


3 ஒரு பெண் விரும்பும் ஆண் பேரழகன் ஆகிறான் அவனை விரும்புபவளின் கண்களுக்கு மட்டும்


மிஸ்,பேரழகன் படம் பாத்துட்டு கவிதை சொல்லுங்க============


4 உடன்பிறப்பே!மாட்டிக்காமல் திருடுவதில்,விஞ்ஞானப்பூர்வ ஊழல் புரிவதில் உலகிற்கே நாம் முன்னோடி என மீண்டும் நிரூபித்தோம்
நீதி தேவதைக்கு நாமம்


============


5 சிறிதளவு கூட ஊழல் இல்லாமல் 2ஜி அலைக்கற்றை விற்றுயிருக்கிறார்கள் என்பது நம்பும்படியாக இல்லை.


தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமயா இருப்பான்?===============


6 தினகரன் ஜெயிக்கறதுல எனக்கு எந்த சந்தோஷமும் இல்ல.ஆனா OPS ,EPS,DMK மரண அடி வாங்கி அவமானப்படறதுல மட்டற்ற மகிழ்ச்சி


===============


7 OPS ,EPS க்கு சிரித்த முகம் இல்லை.குற்ற உணர்வு ,நரித்தனம்தான் தாண்டவமாடுது முகத்தில்.பாமர மக்களை கவர முடியாது.


================


8 தமிழர்கள் எதிரியை மன்னிப்பார்கள் .துரோகிகளை மன்னிக்கவும் மாட்டார்கள் ,மறக்கவும்"மாட்டார்கள்


===============


9 பெரிய பெரிய படிப்பாளிங்க ,ரைட்டருங்க எல்லாம் திமுக தான் ஜெயிக்கும்னு உறுதியா நம்புனாங்க.எப்பவும் பாமர மக்கள் கருத்து/ஆதரவு தான் ஜெயிக்கும்


==============


10 தமிழக பத்திரிக்கைகளில் துக்ளக் மட்டுமே தினகரன் வெல்வார் என கணித்தது,ஆனால் இவ்ளோ"அபார வெற்றி னு யாரும் கணிக்கல.குறிப்பா திமுக வின் 3ம் இடம்!!


================


11 ஆர் கே நகர் இடைத்தேர்தல் முடிவுகளை கருத்துக்கணிப்புகள் மூலம் சரியாகப்பதிவிட்ட தமிழ் பத்திரிக்கைகள்

1 துக்ளக்
2 குமுதம் ரிப்போர்ட்டர்=============================

12 இடைத்தேர்தல் முடிவு நமக்கு உணர்த்துவது ஒன்றுதான்.நீ நல்லவனோ ,கெட்டவனோ யாருக்கும் அடிபணியாமல் கெத்துடன் இரு


================


13 சார்,நோட்டா இருக்கக் கூடாது

னு சிலர் கருத்து சொல்றாங்களே?
சில் அறையில் இருந்துட்டு ஜனங்க பல்ஸ் தெரியாம சில்லறைத்தனமா பேசறாங்க===============14 சரக்கு சங்கர லிங்கத்தின் ஆக்சிடெண்ட் டைரிக்குறிப்பு

போன" குவார்ட்டர்"லி லீவ்ல டைபாய்டு
"ஹாஃப் "இயர்லி லீவுல கால் பிராக்சர்.
"FULL"Y டேமேஜ்டு================


15 தனக்கு தேவை எனில் மட்டும் நட்பு பாராட்டுவது பெண்கள் குணம்.தேவை இல்லை என ஒதுக்குபவரிடமும் நட்புபாராட்டுவது ஆண்கள் குணம்


===============


16 கமல் அரசியலுக்கு வர்றது உறுதி என்பதால் தொழில் போட்டி காரணமாக ரஜினியும் களத்தில் இறங்குவது உறுதி


==============


17 குருவே!யாரையும் நம்பாதே என்ற அறிவுரை சரியானதா?
பாதி சரி.ஆண்கள் பெண்களை நம்பாமயும்,பெண்கள் ஆண்களை நம்பாமயும் இருந்தா ஏமாற்றத்தை தவிர்க்கலாம்


===============


18 நேத்து"நைட் 11 மணிக்கு நான் தூங்கப்போனப்போ ஒரு பொண்ணு கிட்ட கடலை போட்டுட்டு இருந்த நெட் தமிழன் இப்ப காலைல 6 ல இருந்து அதே"ஒர்க்கை பண்றாப்டி


===============


19 துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மொழி ஆள்கையில் சறுக்கியது அவர் பேடு லக்


====================


20 DR.உடம்ப குறைக்க என்ன தான் பண்றது ?! சாப்பாட்ட கன்ட்ரோல் பண்றத தவிர.

வாக்கிங் ,ஜாக்கிங்,நீச்சல் .கொள்ளு


============

0 comments: