Thursday, January 25, 2018

பாப்பா,அப்டி ஓரமாப்போய் விளையாடு

முதல்வரை வேலைக்காரர் போல ஆளுநர் நடத்துறாருங்க...' எம்.பிக்கள் குமுறல்.@ டெல்லி # ஊருக்கு ஊர் தமிழ்நாட்டைப்பாத்து கத்துக்கறாங்க


============


2 பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.500 பரிசு! தெலங்கானா அறிவிப்பு # அதை அவங்களுக்குத்தந்தாலாவது பயன் அடைவாங்க


===========


3 குக்கரின் ஆயுட்காலம் ஓராண்டுக்குள் முடியலாம்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். # உங்க பருப்பு வேகாதுனு தோணுது


===================


4 நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ ,ஆகி கீழே"விழப்போகும் செல்?


==============


5 அரசியலுக்கு வருவதை வரவேற்காத வைகோவுக்கு ரஜினி நன்றி
# கபாலி பாணி ல மகிழ்ச்சினு சொல்லி இருக்கலாம்


==============


6 More
இடைத்தேர்தலில் நாங்கள் அசந்த நேரத்தில் Ttvவெற்றி ' - Ops் # அசந்தா ஜெயிக்கறது"அவர் பாலிசி,அசராம அடிச்சு விடறது இவர் பாலிசி


==================

7 மினிமம் பேலன்ஸ் எஸ்.பி.ஐ விதித்த அபராதம் ரூ.1,771 கோடி−செய்தி # கந்து வட்டி சேட்டு பேங்க்?


==============

8 போலி விளம்பரத்தை பார்த்து ஏமாந்தேன்− துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு # முன்னேற்றப்பாதையில் இந்தியா விளம்பரம் பாத்து நாங்க ஏமாந்த மாதிரி?


=============


9 ரஜினி அதிமுக ஆட்சியை குற்றம் சாட்டவில்லை- ஜெயக்குமார். # சிஸ்டம் சரியில்ல னு தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லியும் ட்யூப்லைட்களுக்கு புரில


==============


10 அதிமுக பெயரை குறிப்பிட்டு ரஜினி விமர்சனம் செய்யவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் # புளி போட்டு விளக்கினாலே புரியாது,பூடகமா சொன்னா புரியுமா?


==============


11 திமுகவுக்கு சாதகமா, பாதகமா என்பது குறித்து கவலைப்பட மாட்டோம்-ரஜினியின் அரசியல் வருகை பற்றி ஸ்டாலின் "தளபதி"க்கு ஜாதகம் சரி இல்ல


==============


12 ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் - ஸ்டாலின் முதல்வர் ஆவது இனி கேள்விக்குறி தான் தலைவரே!


============


13 ஒரே நாளில் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிப்பதெல்லாம் இனி நடக்காது−சீமான்
# சினிமா மாயை,கரிஷ்மா ,ரஜினி மேஜிக் பத்தி எல்லாம் இவருக்கு தெரில பாவம்


==============


14 ரஜினியுடன் கூட்டணி வைத்தால் வேறு மாநிலத்துக்கு செல்வேன்... சு.சுவாமி வார்னிங்
# ஜெயம் சதா பாணில போய்யா போ னு கை காட்ற மாதிரி தமிழிசை


===============


15 அ.தி.மு.க, பா.ஜனதாவின் கிளை கட்சியாகி விட்டது: மு.க.ஸ்டாலின். # கவலைப்படாதீங்க ,ரஜினி வந்துட்டா பாஜக அங்கே தாவிடும்


=============


16 எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரிச்சுக்கிட்டு இருக்காங்க - ரஜினி # இடுக்கண் வருங்கால் நகுக பாலிசி தான்


==============


17 தமிழகத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும்- சு.சுவாமி#
1/234 லயாவது நோட்டா வை முந்தனும்னு லட்சியம் போல


===========

18 ரஜினிகாந்திற்கு முகமூடி அணிவித்து பாஜக தமிழகத்தில் காலூன்ற முயற்சி!” : தனியரசு எம்.எல்.ஏ # தனித்து போட்டி னு சொன்னாரே?கவனிக்கல


================


19 என்னை இளைய புரட்சித்தலைவி என்று யாரும் அழைக்க வேண்டாம் - கிருஷ்ணப்பிரியா!# பாப்பா,அப்டி ஓரமாப்போய் விளையாடு


===============


20 தமிழகத்தை தமிழர்கள் தான் ஆளவேண்டும்;ரஜினியை கடுமையாக எதிர்த்து எம் கட்சி அரசியல் செய்யும் - சீமான் உலகம் உங்களை வெச்சு செய்யும்


================

0 comments: