Saturday, January 06, 2018

சார்,நமீதாவை அர்ஜெண்ட்டா பாக்கனும்

Audi car வச்சிருக்கவங்கள தான் நான் லவ் பண்ணுவேன்😐

ஈரோடு மாவட்டத்துல மட்டும் 5 பேரு ஆடி கார் வெச்சிருக்காங்க,எல்லாரையும் லவ்விடுவீங்களா?


============


2 இப்போலாம் சம்பாதிக்கிற பணத்துல பாதி விசேஷ மொய், செய்றதுக்கே சரியாய் போயிருது...

ஓஹோ,சம்பாதனைக்கு என்ன பண்றீங்க?
மொய் எழுதற வேலைதான்


============


3 மாமா,உங்க பொண்ணு அடிக்கடி மக்கர் பண்றா

அன்இன்ஸ்டால் பண்ணி மறுபடி இன்ஸ்டால் பண்ணிடுங்க
புரீல
டைவர்ஸ் பண்ணீடுங்க.பயம் வரும்.ரீ மேரேஜ்


==============


4 மிஸ்,உங்க எழுத்து மேல ஈர்ப்பு எனக்கு,மத்தபடி லவ் எல்லாம் கிடையாது

ஓஹோ,ஆண் எழுத்து மேல ஈர்ப்பு வர்லையே"ஏன்?
ஆம்பளைங்க எழுதறதை படிக்கறதில்ல


=============


5 என்னவனின் கண்ணிற்கு நான் மட்டுமே அழகாக தெரிய வேண்டும் இது தப்பா குருவே!

பேராசை.எல்லார் கண்ணுக்கும் சுமார் பிகராதான் தெரியறிங்க


============


6 குருவே!அருமைக்கும் எருமைக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?

பொண்ணுங்க என்ன எழுதுனாலும் அருமைனு சொல்வாங்க.ஆம்பளைங்க எதை எழுதுனாலும் எருமைம்பாக


=====================


7 எந்த ஆர்க்கெஸ்ட்ரா போனாலும் "பூப்போட்ட தாவணி" கேட்பேன்

அடடா,சென்னை சில்க்ஸ் ல கேட்டிருந்தா கிடைச்சிருக்கும்



==============


8 அன்பே!தினம் ஒரு வரி இங்கு உன்னைப்பற்றி எழுதுகையில் காகிதம் சிரிக்கிறது.

யோவ்,ஊரே சிரிக்குது, காகிதம் சிரிக்கறத பெரிசா பேச வந்துட்ட


===============



9 தலைவரே!நம்ம கட்சி ஆளுங்க 100 பேரை விஜய் மக்கள் இயக்கம்ல ஏன் சேரச்சொல்றீங்க?
அப்போதான் 4 நாள் கழிச்சு அங்க இருந்து இங்க வந்தாங்கனு சொல்லலாம்


=============



10 யாருக்கும் தொந்தரவு இல்லாத
ஒரு வேலை இருக்குதுனா
அது தூங்குறது தான்
கனவுல நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணுவம்
அதனால் தூங்குவோம்.


============


11 ரைட்டர் சார்,
தெளிவா இல்லையே உங்க
எழுத்து நடை
யோவ்.டைப் பண்ணது.இதை விட தெளிவா எப்டி வரும்?



==============



12 பசங்கலாம் சீரியல் பாப்பாங்களா....மாட்டாங்ளா

ஆக்சுவலா யாரும் பாக்க மாட்டாங்க.ஆண்ட்டிகளை கரெக்ட் பண்ற க்ரூப் பாக்கும்.எதுனா டிஸ்கஸ் செய்யனுமே



================


13 சார்,நமீதாவை அர்ஜெண்ட்டா பாக்கனும்

எதுக்கு ?
கல்யாண முகூர்த்தத்துக்குதான் வர முடியல,அட்லீஸ்ட்...
யோவ்
இப்பவாவது ஒருக்கா பாக்கலாம்னு


===========================


14 சார் ,கவிஞன் என்பவன் பற்றி உங்க அபிப்ராயம் என்ன?

ஒரு பொண்ணை காதலிச்சு தோல்வி அடைஞ்ச சோகத்துல கவிதை எழுதி 4 , 5 பேரை கரெக்ட் பண்றவன்


==============

15 டாக்டர்.புத்திசாலிங்க ,GK உள்ளவங்களுக்கு உடம்புல முடி அதிகமா வளருமாமே?நிஜமா?

அப்டி பாத்தா சத்யராஜை விட கமலுக்கு தானே ஜாஸ்தியா இருக்கனும்?


===============


16
எடிட்டர் சார்.ஒரு நிமிடக்கதை அனுப்பச்சொன்னீங்க
ஆமா
ஒரு நிமிசத்துல டைப்பிடனுமா?ஏன்னா ஒரு நிமிடம்னு டைப்பவே எனக்கு 2 நிமிசம் ஆகிடும்


=============


17 டியர்,உன்னை எண்ணி பாக்கயில் கவிதை கொட்டுது

நல்லா பாரு
அது தேளு.நண்டு னு நினச்சு ஷேக் ஹேண்ட் தந்தியா?


============


18 தலைவரே!உங்க கட்சில விஜய் ரசிகர்கள் இணைஞ்சதா வர்ற செய்தியை நம்ப மாட்டோம்

ஏன் ?
இன்னைக்கு திங்கள் கிழமை.ஸ்கூல் ஒர்க்கிங்டே


=============


19 மிஸ்டர்,உங்களை
எனக்கு சுத்தமா பிடிக்கல
சரி,நான் வேணா போய்ட்டு 10 நாள் கழிச்சு குளிக்காம வரட்டா?அசுத்தமா இருந்தா பிடிக்குமோ என்னமோ?


=============


20 ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் மாதிரி சொல்வாரு அவரு,

அப்டியா?அவர் திருவாசகத்தை தான் சொன்னாரு மேடம்.முதல்ல அதை படிங்க


============

0 comments: