Friday, January 12, 2018

உங்களை விட அதிகமா சம்பாதிக்கற பொண்ண திருமணம் பண்ணிக்குவீங்களா?

1  உங்கள் ரசிகர்களுக்காக வருடம் இரண்டு படம் பண்ணனும்

ஒரு படம் பண்ணவே 2 வருசம் ஆகிடுது.அது ரிலீஸ் ஆக 2 வருசம்.ஆனா 4 நாள் தான் ஓடுது


===========

2 தலைவரே!திடீர்னு எல்லாரும் கறுப்பு சட்டை போட்டு போஸ் குடுக்கறீங்க?

கறுப்பு ஆடு தானே நாம எல்லாம்?மேட்சுக்கு மேட்ச்


===========

3 போயிட்டு அப்புறம் ஆன்லைன் வருவோம் பொறுக்கிப் பசங்களா இருக்கானுங்க ஆன்லைன்ல

மிஸ்,நாங்க எல்லாம் மெடிக்கல்ஷாப் மாதிரி,24 மணி நேரமும் ட்யூட்டி


============


4 காதல்
சுகமானதா??? இல்லை
சுமையானதா???
முத மாசம் சுகமானது,மூணாவது மாசம் சுமையானது மேடம்

============5 தூக்கம் வரலன்னு Drட்ட போனேன். 4,5 பாடப் புத்தகங்கள் கொடுத்து அனுப்பினார்.

நல்ல வேளை நர்ஸ் கிட்ட போகலை,நல்லா நாலு குடுத்து அனுப்பி இருக்கும்


=============

6 வேலையில்லாம வீட்ல இருக்கறதால் நூடுல்ஸ் தான் போடுறா, உப்புமா போடுறதுக்குள்ள வேலை கிடைச்சுடனும்

உப்புமா கம்பெனியா இருந்தாலும் பரவால்ல?


==========


7 குருவே!முருகர் எனக்கு வேலை கொடுப்பாரா?

வள்ளி,தெய்வானையைத்தவிர எது கேட்டாலும் தருவார்


=============


8 இன்டர்வ்யூ இல்லாம வேலை கிடைக்க எதுவும் வழியிருக்கா?

டிக்கெட் கவுண்ட்டருக்கே போகாம தியேட்டர்ல படம் பார்க்க முடியுமா?


==============


9 சார் ,உங்க மனைவிக்கு சமையல்ல எதுனா உதவி செய்வீங்களா?

அவ சமைக்கறதை சாப்பிடறதே பெரிய உதவிதான்


==============


10 நண்பா ரொம்ப நாள் டவுட்டு... என்ன வேலை செய்றீங்க.. எப்ப பாரு ஜாலியாவே இருக்கிங்க?

ஜூலி 2 மாதிரி படம் பாத்துட்டு ஜாலியா இருப்பதே நம் ஜோலி

=============


13 கடவுளே!எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களை தந்தாய்?

இல்லையே?உனக்கு ஒரே ஒரு சம்சாரம்தானே?


==============

14 மேடம்,வருசாவருசம் ஒரு குழந்தை பெத்துக்கிட்டாதான் சினி பீல்டுல ஜெயிக்க முடியுமா?எப்டி?

பச்ச உடம்புக்காரினு பேர் வாங்கினா Ever Green ஹீரோயின்


==============


15 தலைவரே!வீட்டுக்கு ஒரு குக்கரா?
ஓட்டுக்கு ஒரு குக்கரா?
கஷ்டப்ட்டு சம்பாதிச்ச காசா போச்சு?யார் வீட்டுக்காசோ?அள்ளி விடு அழகேசா!ஓட்டுக்கு 1

===============


16 கன்னி ராசி பெண்களுக்கு ஒரு பெரிய கொடுப்பினை இருக்கு

எது?
மேரேஜ் ஆகி எத்தனை வருசம் ஆனாலும் "நீங்க கன்னி தானே?" னு பலரும் கேட்பாங்க

==============17 தலைவரே! உங்களை வாழும் புத்தர் னு ஜனங்க கொண்டாடறாங்க

நிஜமாவா?
ஆமா ஒரு வேளை சம்சாரத்தை விட்டுட்டு வந்துட்டீங்கனு நக்கல் பண்றாங்களோ என்னவோ?


================

18 உங்களை விட அதிகமா சம்பாதிக்கற பொண்ண திருமணம் பண்ணிக்குவீங்களா?

வீட்டோட மாப்ளையா இருக்கறதை விட அபாயம் நம்மைவிட வசதியான பொண்ணை கட்டுவது


==============

19 டாக்டர்.சாப்ட்டதும் தூக்கம் வருது
தூங்கி எழுந்தா பசிக்குது
மேடம்,சமைச்சு போட,சம்பாதிச்சுக்கொட்ட புருசன் இருக்கும்போது என்ன கவலை?என்சாய்


==============


20 என்னை Tlல் திட்டியவர்களை விட DMல வர்ணித்தவர்களே அதிகம்

மிஸ்,நெட் தமிழன் உங்களை மட்டுமா வர்ணிக்கறான்?கோகிலாஹனினு நினச்சு ஜெயக்குமாரையும்தான்


============

1 comments:

vijay said...

engaluku la kalyanama agumane therila . ipo la ponunga romba ethirpakranga .