Tuesday, January 30, 2018

டீச்சர்.கொழுந்தியா வுக்கு எந்த ழ/ள/ல வரும்?

சார்,டைவர்ஸ் ஆன"பின்பும் நீங்க இன்னும் சம்சாரம்"கூடவே தங்கி இருக்கீங்களே?

எல்லாம் விட்ட குறை ,தொட்ட"குறை,தான்

==============


தலைவரே!ஜல்லிக்கட்டுல கலந்துக்கனும்னா"வீரர்கள் ஆதார்"அட்டை"காட்டனுமா?ஏன்?

இதெல்லாம் ஒரு ராஜதந்திரம்,இப்டி ஆதார் கார்டு ,பேன் கார்டுனு அலையவிட்டா அவன்,அதுலயே"டயர்டு ஆகிடுவான்.மாடு ஜெயிச்சிடும்,பரிசுப்பணம் மிச்சம்


=================


3 எங்க ஆள் நடிச்சு ப்ளாப் ஆன ் படம் கூட 30-40 கோடிகள் லாபம் கொடுக்கும்.

;அடேங்கப்பா,இந்த தங்க மலை ரகசியத்தை வெளில யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.
ஏன்? .
.நீங்க"சேப்டியா நடமாடனுமில்ல?

==============

4 ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்கவும்னு டெய்லி ஒரு பொண்ணு போன் பண்ணுது.அப்போ இது லவ் தானே ஜெஸ்ஸி


=================


5 டியர்,என்னை 5 வருசமா லவ் பண்ணிட்டு மேரேஜ் பேச்சை,எடுத்ததும் என்னை கழட்டி விட்டுட்டியே?

சரி,என் வாழ்வில் இந்த ஆண்டின் சிறந்த கவன ஈர்ப்புக்காதலன் விருது வேணா"தர்றேன்


==================


6 டைட்டில்ல இருக்கு,ஆனா தியேட்டர்ல இல்ல,அது என்ன?

கதையா?
தானா சேர்ந்த "கூட்டம்


===============


7 சூர்யா வோட அடுத்த பட டைட்டில் 28

எப்டி சொல்றே?
முதல்ல 24 இப்போ ஸ்பெஷல் 26 (ஹிந்திப்பட) ரீமேக்.வரிசைப்படி அடுத்தது 28 தானே?


================


8 சென்சார்ல 40% சீன்களை கட் பண்ணிட்டாங்க

அடடா,என்ன பண்ணப்போறீங்க?
அசர மாட்டோம்ல.பத்மாவதி யை பத்மா னு ரிலீஸ் பண்ணப்போறோம்

=============


9 டீச்சர்.கொழுந்தியா வுக்கு எந்த ழ/ள/ல வரும்?

நல்லா கொழுக் மொழுக்னு இருந்தா"சிறப்பு ழ ,மீடியமா இருந்தா ள ,ஒல்லியா இருந்தா ல அப்டி எல்லாம் கிடையாது.எல்லாக்கொழுந்தியாக்களுக்கும் சிறப்பு ழ தான்


==============


10 ஆண்டவன்"கட்டளை"படத்த"டிஜிட்டல் ல ரீ"ரிலீஸ்"பண்றோம்.சம்பந்தமே இல்லாட்டி"பரவால்ல,ட்ரெண்டியா ஒரு டைட்டில்"சொல்லுங்க

ஆண்டாள்""(கல்யாணம்) கட்டலை


==============


11 தலைவரே!சம்பளத்துல பாதியை"மக்களுக்கு அளிக்கறீங்க,மகிழ்ச்சி,அதே போல்"கிம்பளத்துல 10% தர,முடியுமா?

;ஆ அஸ்கு புஸ்கு,அது வெறும் 50,000, இது கோடிகள்ல புரளும்


==============


12 நகை வாங்க வந்தவங்களுக்கு நாங்க ராஜ மரியாதை அளிப்போம்;;

;ஓஹோ,இன்னா செய்வீங்க?
டீ கொடுப்போம்
10 ரூபா
ஒரு டீ எவ்ளோ?
ஒரு பவுன் நகை மினிமம் என்ன லாபம் கிடைக்கும் ?
20% வெச்சாக்கூட ரூ 4250
அடப்பாவி,இது ராஜ துரோகம்

===============


13 தலைவரே!நல்ல வேளை,பெரியார் உயிரோட இல்லை.

ஏன்?
பெரியாருக்கே வளர்மதி , அறிவுமதி,அதிமுக வை மதி விருது குடுத்திருப்பாங்க


===============


14 குருவே! வெள்ளிக்கிழமை
புலவர்கள் எல்லாம்
சோமபானம் அருந்தி
உறங்கி இருப்பார்களா?
டாஸ்மாக்ல குப்புறக்கிடப்பாங்க.10 மணிக்கு வாட்ச்மேன் எழுப்பி விட்டா வீட்ல போய் உறங்குவாங்க


===============


15 மேடம்.பெரியார் விருது"வாங்கினதும்"முதல் வேலையா என்ன செய்வீங்க?

மாரியம்மனுக்கு மண்"சோறு படைச்சு என் வீட்டுக்காரருக்கு மொட்டை அடிச்சு ,பசங்களுக்கு பூ மிதிப்பு நடத்துவோம்
உங்களை எல்லாம்"எத்தனை பெரியார் வந்தாலும் ...


===============


16 போகி அன்னைக்கு என்ன சமைக்கணும்? நியமம் ஏதும் இருக்கா?

"புதிய நியமம்" எதும் இல்ல.அதே"பருப்பு"குழம்பு ,பூசணிக்காய் கூட்டு


==============


17 பொண்ணுங்க FB ல"போஸ்ட்"போட" புதுசா ,க்ரியேட்டிவ்வா ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சிருக்காங்க

பிரமாதம்,என்ன அது?;
டீ கப் கு மு (குடிப்பதற்கு முன்)
காலி டீ கப் கு பி (குடித்த பின்)
2 தனித்தனி ஸ்டேட்டஸ்,அதுக்கு 17,868 பேர் லைக்ஸ் போட்டு 69,325 பேர் மார்வலஸ்"ங்கறாங்க,கமெண்ட்ல


===============


18 இன்ஸ்பெக்டர் ,சென்னை சிட்டி போலீஸ் என்னை பாலோ பண்ணுது

சரி,ஏன் கோபமா இருக்கீங்க மேடம்?
பக் வீட் பரிமளாவையும் FB ல பாலோ பண்ணுது,அவ அவ்ளவ் 1ம் அழகு கிடையாது,பின் ஏன்?


=================


19 சூர்யா ரசிகைகளுக்கு பொங்கல் முடியும் வரை ஒரு தர்மசங்கடமான சூழல் தான் பாவம் ;
ஏன்?
மை "ஸ்கெட்ச்" போட முடியாது,அது விக்ரம் ரசிகைகள் தான் போடுவாங்க


=============


20 சார் ,பேய் கரும்பு சாப்ட்டா நுனிக்கரும்பு இனிக்குமாமே?

பேய்,பிசாசு,மனுசன் யார்"கரும்பு சாப்ட்டாலும் அடிக்கரும்பு தாங்க இனிக்கும்


==============


0 comments: