Friday, January 05, 2018

அதிமுகவின் அடுத்த தலைவலி நான்தான்

1  Rkநகரில் தவறுகள் நடக்கவில்லை, அதிமுக ஜெயிப்பது உறுதி - Jkரித்தீஷ்# முன்னுக்குப்பின் முரணா பேசாதீங்க..ஜெயிச்சாலே ஏதோ தப்புனுதான் அர்த்தம்==========
2 நீலகிரியில் 25கோடி


சாயம் கலந்த
கலப்பட தேயிலை பறிமுதல்
-செய்தி
"டீ" தொலைத்த சொசைட்"டீ"==========


3 எங்களுக்கு

இரட்டை இலை சின்னம்
கிடைக்க காரணம்
ஆன்மா தான்-ஒபிஎஸ் # ஆன்மா மேல வெச்சிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போச்சு
எம்.ஜி.ஆர் ஜெ==========4 நீலகிரியில் 25கோடி

சாயம் கலந்த
கலப்பட தேயிலை பறிமுதல்
-செய்தி
# தேயிலை,இரட்டை இலை கிடைக்கக்கூடாதவங்க கைல கிடைச்சா ஆபத்துதான்==========5 வேட்டியை மடிச்சுக் கட்டினா நானும் ரவுடிதான்−H ராஜா.
# இடைத்தேர்தல் முடியும் வரை தொகுதிப்பக்கம் போய்டாதீங்க.ரவுடிங்களை கைது பண்றாங்களாம்============6 ஜெயிலுக்கு சென்றவர், ஜெயிலுக்கு போகவேண்டியவர,் பெயிலில் வந்தவர் மத்தியில் வெய்யிலில் அலைந்துஓட்டுகேட்கிறோம் −தமிழிசை சொல் கேளீர்============7 குக்கரை காட்டி ஓட்டு கேட்க அனுமதிக்கக்கூடாது-தேர்தல் கமிஷனில் அதிமுக மனு# குக்கர்,அவர் பக்கம்
பிரசர் இவங்க பக்கம்==========8 ஸ்டாலின் வேட்டியில் தேநீர் கொட்டியதில் பதறிப் போய் துடைத்து கறையை போக்கிய வைகோ # கறை நல்லதுனு தளபதி பிற்காலத்துல feel பண்ணுவாரு


============


9 ஆடு, மாடு போல் மக்களை விலைக்கு வாங்க முயற்சி - பொன். ராதா வேளை ,அடிமாட்டு விலை எல்லாம் இல்ல.5000 ரூவாயாம் ஒரு ஓட்டுக்கு============10 RK நகரில் BJPவென்றால் MLA, மோடியின் நேரடிக்கண்காணிப்பில் இருப்பார்− தமிழிசை#கண் எதிரே மயக்கம்போட்டு விழுந்தாக்கூட வேடிக்கை பார்த்தமாதிரி?


=============11 காதலால் மட்டுமே புரட்சியை உண்டாக்க முடியும்_பா.ரஞ்சித்
நிர்க்கதில விடுவது புரட்சி அல்ல.சிந்தனை வறட்சி============


12 தன்மான்முள்ள தமிழன் DMK.ADMK.TTD க்கு ஓட்டு போடமாட்டான் - சீமான் எவ்ளோ ,யார் தருவாங்க?னு பார்க்கும் சன்மானத்தமிழன்தான் அதிகம்==========


13 ஆர்.கே.நகரில் ஆண்களுக்கு 2,000 ரூபாய், பெண்களுக்கு 500 ரூபாய் என பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. உரிமை கேட்டு புரட்சிப்பெண்கள் போராடலையா


===========


14 ராயபுரத்தில் குக்கர் கடையில் வருமான வரித்துறை சோதனை- செய்தி# ஆர் கே நகர் ல யார் வீட்ல குக்கர் இருந்தாலும் கைதுனு சட்டம் இயற்றலையா?


===========


15 அ.தி.மு.க. மக்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது -CM EPS # மக்குகள் vs மக்கள்


===========16 பாரீஸில் தங்கியிருக்கும் இருக்கும் வீட்டிற்கு வாடகை தராததால் மல்லிகா ஷெராவத் வெளியேற்றப்பட்டார் # ரஜினி ரசிகையா இருக்குமோ?===========17 கடலூரில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்ததாக ஆளுநர் மீது புகார் # BJP ன்னா பயங்கர ஜொள்ளு பார்ட்டீ போல


============


18 அதிமுகவின் அடுத்த தலைவி நான்தான், இதை ஏற்கெனவே ஜெ முடிவுசெய்து வைத்திருந்தார்- சசிகலாபுஷ்பா பளார்னு விட்டாரே அப்பவா?அதுக்கப்புறமா?


===============


19 ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் அதிரடி தீர்ப்பு..!
லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு 8 ஆண்டு சிறை. # 50,000 கோடி ஊழல் பண்ணா 10,000 ரூபா அபராதமா?


================


20 படுத்து உருண்டாலும் குட்டிகரணம் போட்டாலும் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது: ஸ்டாலின் தலா ரூ 6000 கிடைக்குதாம்,போதும்


=================

0 comments: