Monday, January 08, 2018

நான் என்ன கேனயனா?

கள்ளக்காதலுக்கு மாற்று பெயர்ன்னா தாமதக் காதல்ன்னு வைக்கலாமா?

நோ நோ."லட்சுமி"கரமான லவ் னு வைக்கலாம்.ட்ரெண்டியா இருக்கும்


===========


2 குருவே!அசைவ விரதம் னா என்ன?

சிஷ்யா!சொந்த சம்சாரம் கோபமா இருந்தா வாசல் திண்ணை ல படுத்து தூங்கும் நிலைதான்.


============


3 டியர்.நம்ம காதல் உண்மைக்காதல்தானே?

ஆமா,ஆனா ஊர் உலகம் அதை "சொல்வதெல்லாம் உண்மை"க்காதல்னு சொல்லும்.
புரியல.
கள்ளக்காதல்னு சொல்லும்


=============


4 யோவ்.எதுக்காக என்னை 3 தடவை டி போட்டு கூப்பிட்டே?

நீங்க ஒரு 3D பிகர் ஆச்சே?அதான்
புரீல முன்னால பின்னால சைடுல
3 டைரக்சன்ல பார்த்தாலும் அழகு


================


5 ரொம்ப நாள் அப்றம் தலை பின்னிருக்கேன்

அய்யோ பாவம்
ஏன்
FB ல போட்டோ போட்டதுக்கு வீட்ல அடி பின்னப்போறாங்க


================


6 தீபா,அம்ருதா 2 பேர்ல யார் ஜெவோட நிஜமான மகளா இருக்கும்?

அம்ருதா தான்
எப்டி?
தீபா க்கு மேரேஜ் ஆகிடுச்சு,அம்ருதாக்கு ஜெ போலவே இன்னும் ஆகுல


==============


7 குருவே!ஓட்டு வீடு,மெத்தை வீடு எது நல்லது?

சிஷ்யா!திருமணம் ஆனபின் வீட்டோட மாப்ளையா அத்தை வீட்டில் குடி இராமல் எங்கிருந்தாலும் Ok


==============


8 சார்.அடுத்த வாரம் எனக்கு மேரேஜ்,அவசியம் வரனும்.

சரி.முகூர்த்தம் எப்போ?
காலை 7 டூ 8
பந்தி பரிமாறுவது எப்போ?
8
டாண்ணு 8 க்கு வந்துடறேன்


===============


9 Mr 8 -
உண்மைய சொன்னேன் காதலி உட்டுட்டுபோய்ட்டா
ஓ,என்ன உண்மை?
ஆல்ரெடி 2 லவ்வர்ங்க Fbல உண்டு்ங்கற உண்மை


=============


10 சார்.வாழ்த்துகள்.60 கோடி க்ளப் ல சேர்ந்துட்டிங்க

அப்டியா?
ஆமா
Sv சேகர் பேட்டி பாருங்க.60 கோடி நட்டம் ஆன முதல் தமிழ்சினிமா நம்முளுதுதான்


================


11 தலைவரே!கம்ப இராமாயணத்தை எழுதியது சேக்கிழார்னு சொன்னீங்களாமே?

ஆமா
நல்லவேளை,வால்மீகி ராமாயணம் எழுதுனது வாலி இயக்குனர் SJ சூர்யானு சொல்லல


===============


12 என் உலகத்தையும் அவனுக்காக சுருக்கி கொள்வேன்

அப்டியா?அவர் கிடைச்ட்டார்னா அயர்ன் பண்ணி சுருக்கத்தை சரி பண்ணிடுவீங்களா?


==============


13 கம்ப இராமாயணத்தை
எழுதியது சேக்கிழார்
-எடப்பாடி பழனிச்சாமி
# தலைவரே!துண்டு சீட் ரெடி பண்றவர் தினகரனோட ஸ்லீப்பர் செல் போல.மாத்துங்க


================


14 எப்போதாவது வாய்க்கும்
ஜன்னலோர இருக்கை
எதிர் காற்றில்
கண்களை கலங்க செய்கிறது.
ஓஹோ,எதிர்காற்று ங்கறது எதுனா டிவி சீரியலா மேடம்?


===============


15 தலைவரே!சினேகனையும் ,ஜூலியையும் கட்சில சேர்த்துடலாமா?

ஏன்ஸ
அவங்களும் உங்களை மாதிரியே தப்பு தப்பா ரைட்டர் பேரை மாத்தி சொல்வாங்க


=============


16 சார்,கன மழை பெய்யும்னு வானிலை அறிக்கைல சொன்னாங்க

ஆமா
ஆனா தொட்டுப்பாத்தேன்,லேசான மழையாத்தான் இருக்கு,அதிக கனம் இல்லையே?


==============


17 தலைவரே!தொகுதில ஒரு பிரச்சனை.புகார் கொடுக்கனும்

அதான் புகார் பெட்டி வீதிக்கு வீதி வெச்சிருக்காமே
புகார் பெட்டிகளை காணோம் என்பதுதான் புகாரே


==============


18 இன்ஸ்பெக்டர்,கொலைகாரனை கைது பண்ணீட்டிங்களா ?

நோ சார். கொலைகாரனை கைது செய்கனு போராட்டம் பண்ணுன 50 பேரை கைது பண்ணீடே்டேன்.எப்பூடி?


================


19 50 கோடி ரூபா GST கட்டி இருக்கோம்

குட்
எத்தனை கோடி வசூல்னு அடிச்சு விட்டீங்க?
250 கோடி
அதுக்கு 28% = 70 கோடி வருமே?இப்ப ஆடி மாசமும் இல்ல


========


20 சார்.கிழக்கு பதிப்பகம் போக வழி சொல்லுங்க

இப்டியே மேற்கே 1 கிமீ போங்க
சார் நான் என்ன கேனயனா?கிழக்கு பதிப்பகம் கிழக்கே தானே இருக்கும்?


==============

0 comments: