Saturday, January 13, 2018

தானா சேர்ந்த கூட்டம் - சினிமா விமர்சனம்

Image result for thaana serntha kootam

ஹீரோவோட அப்பா சிபிஐ ஆஃபீஸ்ல சாதா வேலை, சிபிஐ ஆஃபீசரா ஆகனும் என்பதுதான் ஹீரோவோட லட்சியம்,ஆசை,கனவு எல்லாமே? ஆனா இண்ட்டர்வ்யூல அவரை நக்கல் பண்ணி அனுப்பிடறாங்க , ஹீரோவோட நண்பர் அதே போல் வேலை கிடைக்காத விரக்தில, தற்கொலை பண்ணிக்கறார்.

ஹீரோ ரூட்டை மாத்தறார் , அதாவது இவனுங்க என்ன வேலை தர்றது? நாமே சிபி ஐ ஆஃபீசர் ஆவோம்னு போலி சிபி ஐ ஆஃபீசரா ஆகறதும் இல்லாம போலி சிபிஐ ஆஃபீசர்ஸ்னு ஒரு டீம் ஃபார்ம் பண்ணி ஊழல் அரசியல்வாதிங்க, பணக்காரங்க வீட்ல போலி ரெய்டு பண்ணி அவங்க கொள்ளை அடிச்ச காசை இவங்க கொள்ளை அடிக்கறாங்க 


க்ளைமாக்ஸ்ல ஒரு பிரபலமான நகைக்கடைல ரெய்டு,எப்படி வில்லன்  திட்டத்தை முறியடிக்கறார் என்பதே கதை 


 சூர்யாவு க்கு சந்தேகமே இல்லாம இது ஒரு வெற்றிப்படம் தான், ஆனா ஒரிஜினல் ஹிந்தி வெர்சன் “ஸ்பெஷல் 26” சை விட இது சில மாற்று கம்மிதான். சொடக்கு மேல சொடக்கு போட்டு  பாட்டு செம ட ப்பாங்குத்து , சூர்யா உற்சாகமா ஆடறார், அவர் ரசிகர்களும், தான், சூர்யா நீண்ட இடைவெளிக்குப்பின் “உன்னை நினைத்து “ பட கெட்டப்ல அழகா வர்றார் ( சிங்கம் 1,2,3 ல   முறுக்கு  மீசை , கடு கடு முகம் , பின் சிக்ஸ் பேக் முயற்சியால் முக பொலிவு குறைவு   இதை எல்லாம் சரி செய்து பழைய அழகு சூர்யாவாக சபாஷ் மாற்றம், க்ளைமாக்ஸ் காட்சி நடிப்பு பக்கா 

 ஹீரோயினா ஆர் டி ஓ ஆஃபீஸ்ல எட்டு போட்ட மாதிரி சிரிக்கும் கீர்த்தி சுரேஷ் , அவர்  சிகை அலங்கார நிபுணர் யாரு? ஷப்பா முடியல , என்னமோ தலைல அடிபட்டு புடைச்சிட்டு இருக்கா?னு பாமரன் கேட்கும் அளவு  கேவலமான கெட்டப் . அவர் சம்பந்தப்[பட்ட காட்சிகள் பைரவா  அளவு எடுபடவில்லை , டூயட் காட்சிகளும் டிட்டோ 


ரம்யா கிருஷ்ணனின் கம்பீர நடிப்பு பிரமாதம் . கோல்மால் படத்தில் வருவது போல் இவர் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கு , போலி சிபிஐ ஆஃபீசராக வரும்போது காட்டும் கெத்தும் , பின் தனிமையில் பம்முவதும் கலக்கல் காமெடி 


வில்லனாக வரும் ரேவதியின் முன்னாள் கணவர் புதிய முகம் சுரேஷ் மேணன் கன கச்சிதமான நடிப்பு,  நவரச நாயகன் கார்த்திக் கூட சபாஷ் போட வைக்கும் நடிப்பு தான் 


ஒளிப்பதிவு , எடிட்டிங் , இசை எல்லாம் சராசரி தரத்துக்கும் மேலே . திரைக்கதை யில் தான் நம்பகத்தன்மை இல்லை , அறம் , தீரன் அதிகாரம் 1 படங்களில் இயக்குநர் பண்ணிய ஹார்டு ஒர்க் , டீட்டெய்லிங் , இவற்றில் 25% கூட இதில் செய்யவில்லை. மிகப்பெரும் பின்னடைவு 


Image result for thaana serntha kootam


நச் டயலாக்ஸ்

நாம ஆசைப்பட்டது கிடைக்கனும்னா கொஞ்சம் காத்திருக்கனும்,சில நாளாகும்


ஹீரோ ஓப்பனிங்க் பஞ்ச் "ஜெயிச்சிடுவோம்,நம்பிக்கை இருக்கு"


ஆம்பளைன்னா சம்பாதிக்கனும்.அப்பதான் மரியாதை

புதைக்க வேண்டியது பிணத்தைத்தான்,பணத்தை இல்ல.நம்ப நாட்ல புதைக்கப்பட்ட பணத்தை தோண்டி எடுத்தாலே போதும்,நாடு சுபிட்சம்"ஆகிடும்

உண்மைக்கு பயந்தவங்க வேற எதுக்கும் பயப்படமாட்டாங்க

அவ கிட்டே எக்ஸ்ட்ராவா ஏதோ ஒண்ணு இருக்கு

தங்கநகைகளை சீஸ் பண்ற அதிகாரம் சிபிஐ க்கு கிடையாது.இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்க்குதான் இருக்கு,இது கூடத்தெரியாம போலீசா இருக்கீங்க

நாம சொல்ற எல்லாப்பொய்லயும் கொஞ்சம் உண்மை இருக்கும்

இந்த உலகத்துல எல்லாரும் சுலபமா செய்வது FEEL பண்றதுதான்

10 மேடம்,உங்களுக்கு எப்டி இத்தனை குழந்தைங்க?


15 வயசுலயே கல்யாணம்"ஆகிடுச்சு,அடிக்கடி கரண்ட் கட் ஆகறதால....


11 எளியாரை வலியார் அடிச்சா வலியாரை தெய்வம் அடிக்குதோ இல்லையோ யாராவது ஒருத்தர் செமயா அடிப்பாங்க


12 இங்கே (அரசு)வேலை ல இருக்கறவங்க ஒழுங்கா வேலை செய்யறதில்ல ,ஒழுங்கா வேலை செய்யனும்னு நினைக்கறவங்களுக்கு வேலை கிடைக்கறதில்ல


13 நாட்டுல corruption னை ஒழிக்கனும்

உங்க பேரு என்ன?
"சசிகலா"


14 சார்,நீங்க எந்த கேள்வி கேட்டாலும் அதுக்கு 4 பதில் தருவேன் ,செக் பண்ணிப்பாருங்க

அப்டியா?உங்க அப்பா பேரென்ன?

15 நீங்க செய்யற வேலைதான் உங்களுக்கான அடையாளம்

16 ஆம்பளைங்க பல வேலைகளை வெட்கமே இல்லாம செய்யறப்ப பொண்ணுங்க வெட்கப்படாம சில வேலைகளை செய்யக்கூடாதா?

Image result for thaana serntha kootam


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


துருப்பு சீட்டை ஆட்டத்தோட ஆரம்பத்துலயே இறக்கீட்டாங்க,சொடக்கு சாங் செம குத்து


சூர்யா வோட அடுத்த பட டைட்டில் 28


எப்டி சொல்றே?

முதல்ல 24 இப்போ ஸ்பெஷல் 26 (ஹிந்திப்பட) ரீமேக்.வரிசைப்படி அடுத்தது 28 தானே?


3 இடைவேளை வரை சராசரி

கீர்த்தி அபிசியலுக்கு பர்சனலா ஒரு அட்வைஸ் ,அந்த மண்டை மேல இருக்கற கொண்டையைக்குறைங்க.முடியல.


விஜய் −கீர்த்தி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன அளவு சூர்யா − கீர்த்தி ஜோடி எடுபடல.தவறு இயக்குனர்"மேல.ரொமாண்டிக் போர்சன் ஒர்க் அவுட் ஆகல.அதனால டூயட் சீன்சும் எடுபடல

மொத்தப்படத்துலயும் மனசுல நிப்பது ஆர் ஜே பாலாஜி கேரக்டர் தான் ,குட் ஆக்டிங் .ரம்யா கிருஷ்ணன் ,கார்த்திக் ஆல்சோ குட்

நயன் தாரா தன் அடுத்த பாய் பிரண்டை தேட ஆரம்பிச்சிடுவார்னு யூகிக்கிறேன்


Image result for keerthi suresh


சபாஷ் டைரக்டர்


1  சொடக்கு மேல சொடக்கு சாங் ப்ரமோ , கொரியோகிராஃபிங் எல்லாமே பிரமாதம்


2  லேடீஸ் , ஃபேமிலி ஆடியன்சை கவரும் வண்ணம்  காமெடியாக , பர பரப்பாக போர் அடிக்காமல் கதையை நகர்த்தும் விதம் . ஆபாச  வசனங்களோ , காட்சிகளோ இல்லாதது 

3  ஆர் ஜே பாலாஜி யின் கேரக்டரைசேஷன் , அவர் நடிப்பு 2ம் பிரமாதம் 


Image result for keerthi suresh

லாஜிக் மிஸ்டேக்ஸ்  &  திரைக்கதையில் சில ஆலோசனைகள்

தா சே கூ வில் வரும் ரெய்டு காட்சிகளின் ஒரிஜினல் ஸ்பெஷல் 26 லிருந்து"பைரவா உருவி மருவி எடுத்துவிட்டதால் அந்த காட்சிகள்"பெரிதாக எடுபடவில்லை


2 ஒரு பிரபல நகைக்கடை தம்மிடம் உள்ள ஒரிஜினல் நகைகளை சிபிஐ இடம்"தந்து அவர்கள் தரும் போலி"நகைகளை இடமாற்றம் செய்ய"ஒத்துக்கொள்வது"நம்பும்படி இல்லை.ஒரிஜினலை அவர்களே இடம்"மாற்ற இட வசதி இல்லாத ஏழைகளா?

துறை ரீதியான அறிவிப்பு/தகவல் இல்லாமல் ஒரு போலீஸ் ஆபீசரே ் போலி சிபிஐ ஆபீசரிடம் ஏமாந்து அவர் திருட்டுக்கு உடந்தை ஆகி ஏமாறுவதும் கொஞ்சம் கூட நம்பகத்தன்மை உடன் காட்டப்படவில்லை

4  ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி எடுப்டலை , காதல் காட்சிகள் நம்பும்படி ரசிக்கும்படி இல்லை 


5 1988 -89 தான் கதைக்களன் என்பதால் ஆர்ட் டைரக்டர் பெரிதாக மெனக்கெடவில்லை , சும்மா பழைய டெலிஃபோன் , ஒரு தாயின் சபதம் போஸ்டர்  இவற்றை மட்டும் காட்டினால்; போதுமா?


6 போலீஸ் டிபார்ட்மெண்ட் , நகைக்கடை வியாபாரி , பொது ஜனம் எல்லாமே மாங்கா மடையர்கள் , ஹீரோ மட்டும் தான் புத்திசாலி என்பது போல் காட்சிகள் அமைத்தது பலவீன்ம் , புத்திசாலி வில்லனை ஹீரோ சாமார்த்தியமாக ஜெயித்தால் தான் அது சுவராஸ்யம்

7  ஹீரோவின் நண்பருக்கு வேலை இல்லை என்பதால் அவர்  மனைவி “லட்சுமி” ஆவது  ஏற்றுக்கொள்ளமுடியலைன்னா அதுக்காக தற்கொலை பண்ணிக்கொள்வது கொடுமை

Image result for keerthi suresh

சி.பி கமெண்ட் 


தானா சேர்ந்த கூட்டம் − போலி சிபிஐ ஆபிசர்கள் அடிக்கும்"கொள்ளை.திரைக்கதையில் நம்பகத்தன்மை குறைவு.ஹிந்தி ஒரிஜினல் ஸ்பெஷல் 26 அளவு ஹிட் ஆகறது"சிரமம் . விகடன் 42 ரேட்டிங் 2.75 / 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 42


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) - 3.5 / 5 


Image result for keerthi suresh

 லீவ் நாட்கள் வரிசையா வருவதாலும் , ஃபேமிலி ஆடியன்சை கவர் பண்ணிடும் என்பதாலும்  இது ஆல் செண்ட்டர் மீடியம் ஹிட் படமே50 பேராவது வந்தாதான் படம் போடுவாங்களாம்,பொட்டி"வந்துடுச்சு",குட்டி வர்ல மொமெண்ட் @ கேரளா,திருவல்லா


0 comments: