Saturday, January 13, 2018

ஆண்கள் சட்டையில் மேல் பொத்தானை கழட்டி விடுவது கெத்து காட்டவா? காற்று வாங்கவா?

உங்க ஆயுள் ரேகை எப்படி இருக்குனு பார்க்க ஜோசியரைப்பார்க்கப்போனீங்களே என்னாச்சு?

பாவம்,ஜோசியர் திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து போய்ட்டாரு


==========

2 வீட்ல இருக்கும்போது குளிச்சிட்டுதான் சாப்பிடுவேன்

ஓஹோ,ஆனா டெய்லி ஹோட்டல்லதானே சாப்பிடறீங்க?
வீட்டுக்கு போகவே டைம் இல்ல.அவ்ளோ வேலை

==========


3 dr.எதாவது வலிச்சா பல்ல கடிச்சிட்டு பொறுத்துக்கோங்கறாங்க பல் வலினா என்ன பண்ண?

லவங்கப்பட்டையை கடிங்க,பவ் வலி குறையும்.ஆன்லைன்ல கடிக்காதீங்க


============


4 FBல பொண்ணுங்களை விட ஆண்ட்டிங்க தான் அதிகமா சுத்துதுங்க 😐😐😐

ஓஹோ,ஆண்ட்டி சோசியல் சர்வீஸ் பண்றேன்னு சிலர் கிளம்பறது இதுக்குத்தானா?


=============

5 மேடம்,பிரமாதமா பூ கட்றீங்க

நிஜமா?தாங்க்ஸ்
டெய்லி வெட்டியா 50 ஸ்டேட்டஸ் Fb ல போடறதுக்கு 50 முழம்"பூ கட்னா வருமானம் மிச்சம்


============


6 ஒரு படம் இவ்வளவு வசூல் அவ்வளவு வசூல்னு சொல்றவங்க எந்த டிபார்ட்மண்ட்ல வேலை செய்றாங்கனே தெரியல?

அள்ளிவிடு அடிச்சு விடு டிபார்ட்மெண்ட்தான்


=============

7 வயசு ஆக ஆக தான் நொறுக்கு தீனி திங்கிற ஆசை அதிகமாகுது. 🤔😋

ஆமா.பல்லு போனபின்தான் பட்டாணி கைல சிக்குது


===========8 சார்,ஈரோட்ல குடி இருக்கற நீங்க ஏன் சம்சாரத்தை சிவகங்கைல குடி வெச்சிருக்கீங்க?

பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாவட்டங்களில் சிவகங்கை முதலிடமாம்


=======


9 மாப்ளை.லோ சுகர் உள்ள பெண் தேவைனு விளம்பரம் தந்திருக்கீங்களே ஏன்?

எனக்கு ஹைசுகர்.டேலி ஆகிடுமில்ல?


===========


10 தலைவரே !"களவாடிய பொழுதுகள்"வெளிவரப்போகுதாம்.மாட்டிக்குவோமா?

யோவ்,அது தங்கர் பச்சான் படம்,நாம எப்பவும் போல சேப்


=============


11 டியர்,ஷாப்பிங் பண்ண மட்டும் தனியா டைம் வேணும் டைமே பத்தல 😭😭😆

நான் ஆபீஸ்ல 8 மணி நேரம் டெய்லி ஒர்க் பண்றத 1 மணி நேரத்துல காலி பண்றே,இன்னுமா?


===========

12 மாலை ஒரு பங்சனைச் சிறப்பிக்க செல்ல இருக்கிறேன்

ஓஹோ,எதுனா பேசப்போறீங்களா?
சாப்பிடும்போது பேசுனா புரை ஏறாதா?
ஓஹோ ,ஓசி சோறா?==============


13 டியர்.
உணராத காதல்
உணர்த்தப் படாத காதல்
எது உயர்ந்தது?
வாழைப்பழ சோம்பேறி
ட்யூப் லைட்
2 ல எது பெஸ்ட்?


==============


14 மிஸ்! மத்தியானத்துல இருந்து இன்னுமா சாப்பிட்டுட்டு இருக்கீங்க?

FB ல போட்ட சாப்பாட்டு போட்டோக்கு வந்த கமெண்ட்ஸ்க்கெல்லாம் ரிப்ளையிங்


=========


15 சார்.அடிக்கடி உலகப் படம் பாக்குற மாதிரி ஸ்டேட்டஸ் போடறீங்க,ஆனா டைட்டிலை மட்டும் சொல்ல மாட்டேங்கறீங்க?

யோவ்,பிட்டு படத்துக்கு ஏது டைட்டில்?


============


16 நான் எல்லாம் ஒரு பொண்ணு சொன்னாங்குறதுக்காகவே க்ரிக்கெட் பார்க்குறத விட்டுட்டேன்.

அப்டீயா?பொய் பேசறதை யார் எப்போ சொன்னா விடுவீங்க?


========


17எதை செய்ய வேண்டும் னு தெரிந்த சிலருக்கு எதை செய்ய கூடாது என்று தெரிவதில்லை!

ஓஹோ,உங்க அம்மா இன்னைக்கு உப்புமா செய்யறாங்களா?ஹேப்பிமா


==============


18 டாக்டர்,காதலிப்பவர்களின் இதயம் பலவீனமானது
.னு சொல்றாங்களே நிஜமா?
ஆமா,10 ,15 பேருக்கு இதயத்துல இடம் குடுத்துடறாங்க,தாங்குமா?


=============19 ஆண்கள் சட்டையில் மேல் பொத்தானை
கழட்டி விடுவது கெத்து காட்டவா?
காற்று வாங்கவா?
7கழுத வயசாச்சு,என்னத்த கழட்னேனு யாரும் கேட்ரக்கூடாதுனுதான்==========20 குருவே!காதல்,கல்யாணம் என்ன வித்யாசம்?

சிஷ்யா!கண்ண கட்டி காட்டுல விட்டா அது காதல்😍
கண்ண கட்டாம COTல விட்டா அது கல்யாணம்😢


============

0 comments: