Monday, January 29, 2018

ரஜினிக்கு அடுத்து விஜய்தான் கறதை நான் ஒத்துக்கறேன்

ஜூலி ஹீரோயீனா நடிக்கற படத்துக்கு செம எதிர்பார்ப்பு

எப்டி?
அந்த 5 நிமிஷ குறும்படம் எப்டியும்"அட்டாச்"பண்ணி இருப்பாங்க,இல்ல?

============


2 லதாக்கள் ஜெயிக்க நினைக்கறாங்க ,ஆனா லலிதாக்கள் முந்திக்கறாங்க

எப்டி?
எம்ஜிஆர் லதா
விஜயகாந்த் "பிரேமலதா
ரஜினி லதா
ஜெயலலிதா

=============


3 More
தீர்ந்துப்போன
தேநீர் கோப்பைகளில்
நீர்த்துப்போன
வடுக்களாய்.
வலிகளின் சுவடுகள்
ஏம்மா மின்னல்.காபியை குடிச்சா டம்ளரைக்கழுவி வைக்காம கவிதை எழுதிட்டிருந்தா காய்ஞ்சிடாதா?=============


4 ரஜினி ஒரு அதிர்ஷ்டக்காரர்.

எப்டி சொல்றே?
அரசியல்ல மோடி;
சினிமால ஷங்கர்
ஸ்பான்சர்க்கு ஆள் சிக்கிடுதில்ல?


===============


5 குருவே!காதல் தோல்வியாளர்க்கும் படைப்பாளிக்கும் சொந்தமானது தாடி என்பது நிஜமா?

சோம்பேறிகளுக்கும்...


===============


6 டாக்டர் ரெட்ட வாழப்பழம் சாப்பிட்டா ரெண்டு பிள்ள பொறக்குமா?

அது நிஜம்னா வாழைப்பழ ரேட் எகிறி இருக்குமே?


==============


7 சார்.ஷை டைப் னு பயோ ல போட்டிருக்கீங்க, டெய்லி பொண்ணுங்களோட கடலை போடறீங்க?

அதாவது ஆம்பளைங்க கூட பழகறதுல ஷை டைப்.ஹிஹி


==============


8 மச்சினி டக்கர் பிகர் இல்லைங்கற கசப்பான உண்மையை தன்,சொந்த சம்சாரம் கிட்ட ஒரு ரஜினி ரசிகர் எப்டி சொல்வார்?

சிஸ்டர் சரி இல்ல


================


9 சார்,நீங்க என்ன ஜோக் சொன்னாலும் பொண்ணுங்க சிரிக்கறாங்களே?எப்டி?

அவங்க சிரிக்கறது ஜோக்குக்காக இல்ல,இதை எல்லாம் ஜோக்னு நினைச்ட்டு மெனக்கெட்டு மொக்கை போடறேன்னு


==============


10 தலைவரே!ஒரேநாளில் மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியதுனு நியூஸ் வருது,ஆனா 50,000 தான் நிஜம்.ஏன்?

சிஸ்டம் சரி இல்லனு சொன்னேனே?

================


11 மேடம், கிளி ஜோசியம் பார்ப்பீங்கனு சொன்னாங்க,அது நிஜமா?

அதாவது ரோட்டோரமா கிளி ஜோசியம் சொல்றதை வேடிக்கை,பார்ப்பேன்


==============


12 குருவே!திருத்தலங்களுக்கு சென்றால் இனியாவது திருந்தலாம் எனும் எண்ணம் வருமா?

அங்கே கிடக்கும் குப்பைகளைக்கண்டால் "திருத்தலாம்" எனும் கருத்துலாம்"தோணுது


==============


13 இந்த கேசோட விசாரணை தலைவர் ஏன்"ஆஜர்"ஆகல?

மவுன விரதம் இருக்கார்

ஓஹோ,எப்போ முடிப்பார்?
நீங்க விசாரணையை"முடிச்சதும்


==============


14 குருவே!எனது படம் கீர்த்தி (புகழ்)பெற என்ன வழி?

கீர்த்தி யையே ஹீரோயினா போட்டுடு


==============


15 புலி க்கு தமிழ்நாடு ராசி இல்லை,ஆனா மும்பை ராசி

எப்டி சொல்றே?
டைகர் ஜிந்தா ஹை (நிஜமாவே) 300 கோடி வசூலை டச் பண்ணப்போகுதே?


===============


16 தலைவா!8 8 டா"மனுஷ வாழ்க்கையைப்பிரிச்சுக்கோ.எட்டாவது எட்டுக்குள் வாழ்ந்துக்கோ"ன்னீங்க

ஆமா
ஆனா நீங்க 9 வது 8 ல தான் அரசியல் வாழ்வை ஆரம்பிக்கறீங்க?


================


17 தலைவா!8 8 டா"மனுஷ வாழ்க்கையைப்பிரிச்சுக்கோ.எட்டாவது எட்டுக்குள் வாழ்ந்துக்கோ"ன்னீங்க

ஆமா
ஆனா நீங்க 9 வது 8 ல தான் அரசியல் வாழ்வை ஆரம்பிக்கறீங்க?


=================


18 சார்.எங்க ஆளு,தம் அடிக்கற மாதிரி ஒரு மாஸ் ஸ்டில் வந்துதே பாத்தீங்களா?

தம் அடிக்கறாரா?அப்போ அது faல்ஸ் ஸ்டில் ஆச்சே?


================


19 தலைவரே!ஆந்திராவைப்பாத்து நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு,குறிப்பா ரேஷன்"கடை எவ்ளோ மாடர்ன் தெரியுமா?

முதல் கட்டமா திருப்பதி லட்டு ட்ரை பண்ணலாம்னு இருக்கோம்

===============


20 ரஜினிக்கு அடுத்து விஜய்தான் கறதை நான் ஒத்துக்கறேன்

குட்.எதுல?வசூல்லயா?
இல்ல,தம் அடிக்கற சீன் வெச்சு ரசிகர்களை தவறான பாதைக்கு கொண்டு போறதுல


==============

0 comments: