Thursday, January 25, 2018

ரஜினி அரசியலுக்கு வர்றதை ஆதரிக்கறீங்களா?எதிர்க்கறீங்களா?

தலைவரே!ரஜினி தனிக்கட்சி ஆரம்பிச்சா ஆளுங்கட்சிக்கு பாதிப்பு அதிகமா?எதிர்க்கட்சிக்கு பாதிப்பு அதிகமா?

ரஜினிக்குதான் பாதிப்பு அதிகம்


============


2 புது வருசத்தை த்ரிஷாவோட கொண்டாடனுமா?ஏன்?

எனக்கு 20 உனக்கு 18..( 2018)பட நாயகி ஆச்சே?


=============


3 சார்.நீயா?நானா?ப்ரோக்ராம்க்கு 18 ட்வீட்டர்ஸ் போனதா சொன்னீங்க,ஆனா யாரும் பேசலையே?

போனோம்னு தான சொன்னோம் பேசுனோம்னு சொல்லலையே?


===============


4 தேன்மொழிக்கு ஹேப்பிநியூர் எப்டி சுருக்கமா சொல்றது?

H(O)N(E)Y


=============


5 குருவே!புத்தக வாசிப்பு, பயணம் 2 ல் எது அதிக சந்தோஷம் தர வல்லது?

ஒரே கல்லில் 2 மாங்கா
பயணத்தில் புத்தகம் படி /
பயணக்கட்டுரை வாசி


=============


6 யாருப்பா காமெடி பண்றது ரெட்மி நோட் 4 ஹீட் ஆகும்னு.இதுவரை ஒரு தடவ கூட ஹீட் ஆகல.

அது விஜய் ரசிகர்கள் பரப்புன வதந்தியா இருக்கும்."ரெட்" னா ஆகாது


===============


7 டாக்டர்,phillips hair straightener யூஸ் பண்ண பிறகு பாதி முடி போயிடுச்சு.

ஆனா தலைல முடியே இல்லையே?;
இருந்ததே பாதி தான்.அதுவும் போச்சு


=====================8 குருவே!Sun டிவி"ல ஆன்மீக"சினிமா பாத்தீங்களா?

ஆன்மீக,அரசியலுக்கே"இன்னும்"வழி வர்ல.இது என்ன புதுசா?
ரஞ்சிதா − நித்தி கில்மா க்ளிப்ஸ்


==============


9 சார்.ஏன் மாத்தி மாத்தி பேசறீங்க?

புரில
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்் கவலை இல்லைன்னீங்க,இப்போ சிஸ்டம் சரி இல்லன்றீங்க?


================


10 மன்னா!நாட்டில் யாருமே"கலர் குடை உபயோகிக்கக்கூடாதா?ஏன்?

வெண் கொற்ற குடையின் கீழ் ஆட்சி நடக்குதுனு கெத்து காட்டத்தான்


===============


11 சட்டை தெச்சுத்தந்துடறேன்னு"வாக்குத்தந்து சொன்ன தேதியில் தராத டெய்லர் கிட்டே சண்டை போட்டியே,தந்துட்டாரா?

சட்டையே பண்ணலை


================


12 தலைவரே!ஆன்மீக அரசியல்னா என்ன?

கட்சி ஆபீஸ்ல வாசல்ல உண்டியல் வைப்பது


=================


13 தலைவரே!ஆன்மீக அரசியலை ஏன் முன்னிறுத்தறீங்க?

ஜனங்க சாமியார்களை நம்பறாங்க,அதனால ஜனங்க ஆதரவு வேணும்னா சாமியார்கள் ஆதரவும் வேணுமில்ல?


=================


14 தலைவரே!கபாலி,காலா பட இயக்குனர் ரஞ்சித் நம்ம கட்சில இணைஞ்சுட்டாரா?

இன்னும் இல்ல,ஆன்மீக அரசியல்ங்கறதால நடிகை ஜிஞ்சிதா வேணா இணைஞ்சிஞ்சிட்டாங்க


=================


15 நேத்து என் கைலயும்.. என் தம்பி கைலயும் மருதாணி வரைஞ்சு தள்ளிட்டேன்

வரைஞ்சீங்க சரி,ஏன் தம்பியை தள்ளி விட்டீங்க?


==================


16 மிஸ்,இன்னைக்கு மிடி டே.மிடி போடலை?

அப்டி ஒரு டே இருக்கா?
வேஷ்டி தினம்னு 1 புதுசா ஆரம்பிச்சு சேல்ஸ் பாக்கல?அது மாதிரி பொண்ணுங்களை "ரம்பா"வா பாக்க ஆசை


==============


17 ஜட்ஜ் − ஒவ்வொரு ஏடிஎம் லயும் 4 4 தடவை திருடி இருக்கே ஏன்?

கைதி− 5 தடவை ஏடிஎம் யூஸ் பண்ணா 100 ரூபா சர்வீஸ் சார்ஜாம் எஜமான்


================


18 வாழ்க்கைல உருப்படனும்னு முடிவு பண்ணிருக்கேன் ஸோ கொஞ்ச காலத்துக்கு ட்விட்டர் ,FB க்கு பிரேக்.

கொஞ்ச காலம்"கழிச்சு உருப்படாம போனா பரவால்லியா மிஸ் ?


================


19 தலைவரே!நடிகை"நதியா வை அவர்"பேருள்ள"ரசிகைகளோட சந்திப்பு நடத்தறீங்களே,எதுக்கு?

நதிகளைத்தான் இணைக்க"முடியல,நதியாக்களையாவது இணைப்போம்னுதான்


===============


20 தலைவரே!ரஜினி அரசியலுக்கு வர்றதை ஆதரிக்கறீங்களா?எதிர்க்கறீங்களா?

எங்க கட்சிக்கு ஆதரவு தந்தா ஓகே,ஆனா"அவர்"தனி"கட்சி"தொடங்கினா எதிர்ப்பு


==============