Sunday, January 28, 2018

புரட்சி 5 வருசம் ,வறட்சி 5 வருசம்

80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்.பி.ஐ திருந்திட்டானா?யார் சொன்னா? அட,நாதசேதான்"சொன்னாப்டீ


==============


2 ரஜினிகாந்தின் அரசியல் வருகை திராவிட இயக்கங்களின் 60 ஆண்டுகால அரசியலை மாற்றும்− ஆடிட்டர் குருமூர்த்தி # அரசியல் தளபதி vs தமிழ் சினிமா "தளபதி" ஜெயிக்கப்போவது யாரு?


==============


3 நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான வருடம் ஆக 2018 அமைய வாழ்த்துகள்: பிரதமர் மோடி # அது உங்க கைல தாங்க இருக்கு


==============


4 எம்ஜிஆர் போன்று வர நினைப்பது, புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகிவிடும்- கடம்பூர் ராஜூ..# இப்புச்சூடு.அவரு சூடு வைக்கப்போறதே உங்களுக்குதான்


===============


5 புத்தாண்டில் குடித்து விட்டு கும்மாளம்.... தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனை # டார்கெட்டை ஈசியா அச்சீவ் பண்றது டாஸ்மாக்தான்


===============


6 அரசியல் அறிவிப்பையடுத்து அதிரடி.. வாக்காளர்களை ஒருங்கிணைக்க வெப்சைட் தொடங்கினார் ரஜினி # தலைவா,சிஸ்டம் சரி இல்ல இங்கயும்.சுத்திட்டே இருக்கு


==============


7 ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சபாஷ் - H.ராஜா # கமல் அரசியலுக்கு வர்றதை எதிர்த்துட்டு ரஜினியை ஆதரிப்பது தமாஷ்.இனி வர இருப்பது மீம்ஸ் ,டப்மாஸ்


================


8 யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் # அங்கேயும் இங்கேயும் காந்த் ,லதா ஒற்றுமைகள்


================


9 ரஜினியின் அரசியல் தமிழக மக்களிடையே எடுபடுமா என்பது சந்தேகம் தான்: ஜெ.தீபா # நமக்குதான் செல்ப் எடுக்கலையே,மத்தவங்க செல்பி பத்தி என்ன கவலை?


===============


10 சில திரைப்பட வசனங்கள்
கண்ணியமாக இல்லை
வெங்கையா நாயுடு வேதனை
முக்கியம்?படத்தைப்பாருங்கனு யாராவது கிண்டல்"பண்ணிடப்போறாங்க


================


11 ரஜினி அரசியலுக்கும் பா.ஜ.க,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை... அடித்துச் சொல்லும் தமிழிசை # எஸ்ஜே சூர்யா ரசிகை போல.இருக்கு ஆனா இல்ல

=============


12 பொண்ணுங்க தன் புருசன் கூட இருக்கற போட்டோவை பாதுகாப்பா வீட்ல வெச்ட்டு அபிமான ஹீரோ"கூட எடுத்த போட்டோவை FB ல வெச்சிக்கறாங்க.சபாஷ்


==============


13 மத்திய அரசு
ஊழியர்கள் ரத்த தானம்
செய்தால் ஊதியத்துடன்
விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்
-மத்திய அரசு
# அப்டியாவது நல்லது நடந்தா சரி


===========


14 கதைக்கு தேவைப்பட்டால் முத்தக்காட்சியில் நடிப்பேன் - சூலி
"படலைன்னாலும் அட்டென்ஷன் சீக்கிங்க்காக லிப் கிஸ் சீன் கன்பர்ம்.என்ன பெட்?


==============


15 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ள.ஸ்டாலின் RKநகரை எப்படி தவற விட்டார் என்று தெரியவில்லை - தினகரன் # எப்டியும் எதிர்ப்பு அலைல ஈசியா ஜெயிச்சிடலாம்னு அசால்ட்டா இருந்துட்டாரு


==============


16 ஒரேநாளில் ரஜினி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது
# அடேங்கப்பா,அப்போ ஒரு வருசத்துல 365×10,00,000=36,50,00,000 ஆகிடும்போலயே=================


17 திமுக தலைவர் கலைஞரை இன்று சந்திக்கிறார் ரஜினி # ஆன்மீக அரசியல் சிலபஸ் ல இதுவும் இருக்கு போல


=============


18 ஏழை மக்களை கருத்தில் கொண்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட வேண்டும்: மோடி ரூபா நோட்டு செல்லாதுனு அறிவிச்சா பேங்க்ல க்யூவில் நிக்க ரோபோ வேணும்

===============


19 மிகப் பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்குகின்றன
-ரஜினி # ஆனா புரட்சி 5 வருசம் ,வறட்சி 5 வருசம்னு சுழற்சி முறைல அரசை தேர்ந்தெடுத்து அழர்ச்சி ஆகிட்டான்"தமிழன்


====20 ரஜினியுடன்் மோதலுக்கு கமல்் தயார் ஆகிறார் தனிக்கட்சி விரைவில் அறிவிப்பு # ரஜினி vs கமல் னு சினிமாக்கள் மோதுனதுல 70% ரஜினி சினிமா தான் ஜெயிச்சிருக்கு,அரசியல்ல எப்படியோ தெரீல


============


0 comments: