Monday, January 15, 2018

அதிர்ஷ்ட லட்சுமி் கதவை தட்டும் போது நாம வெளியூர் போயிருந்தா, .....

1  நான் பிளாக் பண்ணா அவளும் பிளாக் பண்றா நான் பிளாக் எடுத்தா அவளும் பிளாக் எடுக்குறா..


பேட்டா கடைல போய் செருப்பு எடுத்து பாருங்க==========2 டைரக்டர் சார்,ப்ளேபாய் ரோல் பண்ண மாட்டேன்


ஏன்?
முஸ்லீம் கேரக்டருக்கு கேப் விடுவோம் ,இந்து கேரக்டரா இப்போ பண்ணலாம்னு
=============


3 டியர்,பீரோவில் அடுக்கியிருக்கும் ஆடைகளை களைத்துவிட்டு மீண்டும் அடுக்கறியே,ஏன்?


எனக்குத்தெரியாம எதுனா ஒளிச்சு வெச்சிருக்கிங்களா?னு செக்கிங்
=========


4 ஒரு பெண்ணை நம்பி ரகசியம் சொல்ற ஆண்களை நினைச்சா பரிதாபமா தான் இருக்கு.


மேடம்,நாங்க சொல்றதை ரகசியம்னு நம்பற பொண்ணுங்களை நினச்சா சிரிப்பு==========


5 டியர்,

வெள்ளி
ஞாயிறு மட்டும்
ரொம்ப ஹேப்பியா இருக்கேன் ,ஏன்?
வெ =கோயிலுக்குப்போறே
ஞா =உங்க அம்மா வீட்டுக்குப்போயிடற.சமைக்கற வேல இல்ல==========


6 தலைவரே , அந்த கட்சி ஒரு சாய்ந்த கோபுரம் னீங்க?


ஆமா
சாய்ந்த கோபுரம் தான் உலக அதிசயம் (ஆகும்)னு உங்களுக்கு தெரில==========


7 டியர்,ஒரு முக்கியமான பொருளை தொலைச்ட்டேன் ,நீ இந்த ரூம்ல தேடு


நீங்க?
அதை வெச்சு Fb ல 3 ஸ்டேட்டஸ் தேத்திட்டு வர்றேன்
============8 டாக்டர் .பூண்டுபொடி இட்லி சாப்டடேன் .வயிறு எரியுது

ஏம்மா பூண்டு பொடி ன்னா லைட்டா தொட்டுக்கனும் .சாம்பார் மாதிரி குழைச்சு அடிச்சா இப்டித்தான்
=============9 2017 ல் சிறந்த சமூக சிந்தனையாளர் நால்வரை அடையாளம் காட்டுங்க


இப்டி பொதுவா கேட்டா எப்டி?கவுண்டர் சமூகமா?முதலியார் சமூகமா?செட்டியார் சமூகமா?
============10 டியர்,கவிதை என்பதே பொய் மூட்டை தானே ?


ஆமா,இப்போ உன்னை உப்பு மூட்டை தூக்க எனக்கு கசக்கவா போகுது?அப்டி
=============


11 டி போட்டுக்கூப்ட்டா என் சம்சாரத்துக்கு பிடிக்காது


அப்டியா?டீ பிடிக்கலைன்னா காபி,ஹார்லிக்ஸ் போட்டு கூப்ட்டுப்பாருங்க,ஓடி வருவாப்டி
==========12 Auto/் Taxi காரருக்கும் நாமளே வழி காட்டணுமாம்


ஏன் டென்சன் ஆகறீங்க?எங்கே,போனாலும் யாருக்காவது வழிகாட்டியா இருக்கறவன்னு கெத்தா சொல்லலாமே
=========
13 தலைவரே!கல்யாணம் ஆன ஆம்பளைங்களோட கஷ்டம் உங்களால உணர முடியல


ஏன்?
அடங்கமறு,அத்து மீறு னு கொள்கை முழக்கம் இடறீங்களே?
=============14 அன்னபூர்ணால ஒருத்தர் பூரி வாங்கி டிஸ்யூ பேப்பர்ல தட்ட துடைச்சிட்டு சாப்பிடறார்.


அதுக்கு கையோட தட்டோ வாழைஇலையோ கொண்டுவந்திருக்கலாம்
========15 தலைவரே!உங்களை மதிச்சு எத்தனை பேர் ட்விட்டர்ல பாலோ பண்றாங்க?


1,08,237
நீங்க பாலோபேக் எத்தனை பேரை பண்றீங்க?
ஜீரோ
கட்சி எப்டி வளரும்?
==========16 ரொமாண்டிக் மூட் ல இருக்கும்போது கவிதை எழுதறதால எனக்கு ரொமாண்டிக் ரைட்டர்னு பட்டம் கிடைச்சுது


ஓஹோ,கடைசிவரை ரொமான்சே நம்ம லைப்ல நடக்காதுபோல=========17 அதிர்ஷ்ட லட்சுமி் கதவை தட்டும் போது நாம வெளியூர் போயிருந்தா,

கடுப்பாகி பக்கத்து வீட்டுக்கு போயிடுமோ?
பூட்டுன கதவை தட்ட அ.லட்சுமி லூசா ?
=============18 மனசுக்கு நெருக்கமானவர்

கோபத்தில் இருக்கும்போது
நாம் பேசுவதை கவனிக்காதது போல்
நடிப்பது அழகு.
காது டமாரமா இருக்கலாம்.அதை கவனிக்கவும்
=============19 நான் சின்னப்பொண்ணா இருக்கும் போது Pop Corn கூட மூட்டையில் எடுத்து வந்து விற்பார்கள் .


பாப்சாங்,பீப்சாங் கே இப்போ வீதிவீதியா புழங்குது===========


20 என் புள்ளைக்கு சாதியே இல்லன்னு பதிவு பண்ணிட்டா,பேரனுக்கு சாதி சான்றிதழ் பெற முடியுமா?


1000 ரூபா தந்தா தேவையான சாதி போட்டு டோர் டெலிவரி===========

0 comments: