Wednesday, January 03, 2018

"விசுவாசம்" உள்ள "வேலைக்காரன்"

தலைவரே!எதுக்காக டிபி மாத்தீட்டிங்க?

மாற்றம் நம்மில் இருந்து துவங்கனும்னாங்க

==============

2 என்னை 5 பேர் காதலித்து ஏமாற்றினர்:

அடடா,அப்புறம்?மேடம்?
விடுவனா?அவங்க சொந்தக்காரங்க 58 பேரை லவ் பண்ணி நான் ஏமாத்திட்டேன்,யாரு கிட்டே?

==============


3 ஜட்ஜ் −கல்யாணம் ஆகி 6 மாசம் கூட ஆகல,டைவர்ஸ் கேட்கறீங்க,ஏன்?
லேடி− Life partner சரி இல்லீங்க.
sleeping partner
working partnerனு நினச்சேன்.


==============


4 சார்,மொக்கை போடப்போறேன்னு சொல்லீட்டே டெய்லி Fb வர்றீங்களே எதுக்கு?
சில அதிபுத்திசாலி கொலம்பஸ்ங்க "இது மொக்கை"னு குறுக்க நெடுக்க வராம இருக்க


==============


5 ஒரு ஆன்ட்டிய உசார் பண்ண ஐடியா தேவை..
ஓஹோ,குறிப்பிட்ட ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணனுமா?ஏதோ ஒரு ஆண்ட்டியையா?

===========

6 தலைவரே!சர்க்கரை விலையை உயர்த்துனதே மக்களோட நன்மைக்குத்தானா?எப்டி?
விலை டபுள் ஆகிட்டா வாங்கமாட்டாங்க.சர்க்கரை நோயை கட்டுப்படுத்திடலாம்

=============


7 சார்,நான் ஒரு விஜய் ரசிகர்ங்கறதால இண்ட்டர்வ்யூல செலக்ட் ஆகலையா?ஏன்?
ஏன்னா உங்க கிட்டே "விசுவாசம்" எதிர்பார்க்க முடியாதே?


==============


8 சார்,டைட்டில் பிரமாதமா ஒண்ணும் இல்லையே?
என்ன சார் நீங்க?போக்கிரி ,கத்தி,கப்டா,கட்டிங்ப்ளையர் னு வெச்சா அட்டகாசம்னு சொல்ற ஆளா நீங்க?


=============

9 சார் உங்க மொக்கை ஜோக்ஸ் எல்லாம் சுமாராத்தானே இருக்கு?
ஆமாங்க,நீங்க சூப்பர்னு கொண்டாடனும்னா தெலுங்கு ரீமேக் ஜோக் தான் சொல்லனும்


=============

10 சார்,முன்னே பின்னே அறிவிக்காம பட டைட்டில் அறிவிச்ட்டீங்களே,ஏன்?
ஏன்னா ஆளுங்களை செட் பண்ணி பொய்யா ட்ரெண்ட் பண்ணனும்கற அவசியம் இல்லை


===============

11 பேப்பர்ல அஜித்,ரஜினி ,சிவகார்த்திகேயன் மூவரையும் ரசிப்பவர் தேவைனு ADVT தந்திருக்கீங்களே ஏன்?
"விசுவாசம்" உள்ள "வேலைக்காரன்" வேணும்


================


12 பரீட்சைக்கு படிக்காமலேயே சென்ட்டம் எடுப்பது எப்படி ?னு ஒரு புக் பாத்தேன்,வாங்கிட்டேன்.
பின் ஏன் பெயில் ஆனே?
அதையும் படிக்க டைம் இல்ல

===============


13 சந்தானம் மாதிரியே,புரோட்டா சூரி சொந்தப்படம் நடிச்சா என்ன டைட்டில் வைப்பாரு?
மொக்க போடு போடு ராஜா


==============
14 "காவல்துறை உங்கள் நண்பன்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி தர்றீங்களா?

சரி,மாமூல் வெட்டுங்க


===========

15 எப்பவுமே பிசியா இருப்பது யாரு?
"பிசி"யோதெரபிஸ்ட்தான்


===============


16 ரெய்டுகள், இரட்டை இலை சின்னம்.. சசி குடும்பத்தை ஒரு வேளை ஜெ. ஆவி பழி வாங்கிருச்சோ??
இது ஆவி வேலை போல் தெரில,காவி வேலை மாதிரி தோணுது


==============


17 டாக்டர்,டெய்லி 3 தடவை காபி குடிச்சா என் உடல் ஆரோக்யத்துக்கு நல்லதா?
காபிக்கடைக்காரருக்கு ,டாக்டருக்கு நல்லது


==============


18 சார்,நம்ம 2 தளபதிங்களுமே தமிழ்நாட்டை ஆள வாய்ப்பு கம்மி னு எப்படி சொல்றீங்க?
ஆட்சி,அரியாசனம் ராசி உள்ள "மன்னன்" கூட வர்றது டவுட்தான்


==============


19 சார் பேங்க் லோன் வேணும்
என்ன தொழில் பண்ணப்போறீங்க?
கந்துவட்டிதான்.உங்க கிட்டே 80 பைசா வட்டிக்கு கடன் வாங்கி வெளில 10 ரூ வட்டிக்கு விடுவேன்

==============


20 சார்,கோயில் பின் பக்கமா கோபுரத்துல 18 வது அடி உயரத்துல ஒரு கில்மா சிலை இருக்கு
ங்கொய்யால.முதல்ல முன்பக்கம் போய் சாமி கும்பிடுங்கய்யா

============


0 comments: