Sunday, January 07, 2018

”சிட்டிசன்"கள் நம்மை ரவுண்ட் கட்டி அடிப்பாங்க

தலைவரே!உங்க அப்பா பெரிய வித்துவானா?


இல்லையே ஏன்?
ஆட்ட வித்து மாட்டை வித்து பனையை வித்து பானையை வித்து தான் என்னைய படிக்க வைச்சார் னீங்களே?==========2 டியர்.உங்கப்பா ஹோட்டல் ஓனரா?


இல்லை,ஏன்?
கவிதைல கூட 2 பில் இருக்கே? அன்"பில"் தொடங்கி அன்"பில்" முடிக்கிறேன்
==========3 சார்,ஆன்லைன் உறவு என்பது நெட்பேக் முடியும் வரை மட்டுமேனு சொல்றாங்களே?நிஜமா?


ஜி மு
அது ஜி ஹாங்
இல்ல.ஜியோ வுக்கு முன் தான் அப்டி============

4 ஆன்லைன்ல எனக்கு 14.5% வாக்கு ,அப்போ நான்தானே கெத்து?


நெட் கனெக்சன் வெச்சிருக்கறவங்க பாதிப்பேர் ஓட்டு போடறதில்ல. அதெல்லாம் வெத்து============


5 விளம்பரத்துல எதுக்குடா ஒருத்தன் காஷ்மீர்ல போய் வெள்ள வேட்டி சட்ட போட்டு புல்லட் ஓட்றான்?


டைரக்டர் எப்போதான் காஷ்மீரை OCல சுத்திபார்க்கறது?
=============


6 தலைவரே!நம்ம கட்சி ஆளுங்க எல்லாம் விஜய்ஆண்ட்டனியை பாக்க போய்ட்டாங்க


எதுக்கு?
"அண்ணாதுரை" க்கு மரியாதை செலுத்தவாம்
===========


7 தலைவரே!3 பேர் எதிர்"முகாம் போய்ட்டாங்க


அது ஆபரேஷன் தனுஷ்
புரியல
உறவாடி கெடுப்பது.எல்லாம் நம்ம ஸ்லீப்பர் செல் தான்
============


8 டியர்,யார் மெசெஜ் பன்னாலும் நீ தானோனு ஆர்வமா எடுத்து பாத்து ஏமாந்து தான் போறேன்


யோவ்.எனக்குனு தனி ரிங் டோன் செட் பண்ணமாட்டியா?
=============


9 நான் இதுவரைக்கும் ஒருதடவ கூட என் போனை சைலண்ட்ல போட்டதே இல்ல

தெரியும்
எப்டீ?
பொண்ணுங்க எப்பவும் அவங்களும் சைலண்ட்டா இருக்கமாட்டாங்க...


==================


10 சங்கதி இல்லாம பாடற பாடகர்கள் யாராவது இருக்காங்களா?

அது தெரில.ஒரு காலத்துல சங்கவி இல்லாம நடிக்க மாட்டேன்னு சொன்னவங்களை வேணா தெரியும்


================


11 சார்,பாகுபலி யை வசூல்ல நம்ம படம் முந்திடுச்சுனு பசங்க பேசிக்கறாங்களே,அது நிஜமா?

சத்தமா பேசாதய்யா,வெளில தெரிஞ்சா நம்மளை பொலி போட்டுடுவாங்க


===============


12 எத்தனையோ வியாபாரம் இருக்கும்போது விளக்குமாறு வியாபாரம் பண்றியே அது ஏன்?

பொண்ணுங்களை "ஈர்க்குமாறு" ஒரு பிஸ்னெஸ்,கடைல கூட்டம் தாறுமாறு


=================


13 அபூர்வ சகோதரர்கள் பாகம்"2 வரப்போகுதா?

அப்டி தெரியலையே?
மெர்சல் 2 வர வாய்ப்பிருக்கா?னு கேட்டியே?


================


14 பெண் அழகு,
கணவன் சொல் கேட்டு நடக்கும் பெண் பேரழகுனு சொல்றாங்களே ,நிஜமா?
மாவட்டத்துக்கு ஒரு பொண்ணு புருசன் பேச்சைக்கேட்டு நடந்தாலே அதிகம்


================


15 கமாலினி முகர்ஜி கமல் கூட இப்போ ஜோடி சேர்ந்தா என்ன டைட்டில் வைப்பாங்க படத்துக்கு?

சபாஷ் நாயுடு ஹால்


================


16 சார்.புடவை அணிவோர் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள்.னு சொல்றாங்களே,நிஜமா?

ஆமா,வாங்கித்தர்ற ஆம்பளைங்கதான் துரதிர்ஷ்டசாலிகள்.செலவு அவனுதுதானே?


=============


17 எப்பவாது போரடிக்கறப்ப மட்டும்தான் நான் சிரிப்பேன்

ஓஹோ,அப்போ நான் அடிக்கடி வந்து மொக்கை போட்டு உங்களை போரடிக்கிறேன்.சந்தோஷமா சிரீங்க


===============


18 சார்,எதுக்காக ஹீரோவோட ஏஜ் சர்ட்டிபிகேட்டை என் கிட்டே காட்டறீங்க?

வயசே தெரியலைனு அடிக்கடி சிலாகிக்கறீங்களே?இதுல பாருங்க தெரியும் .43


==================


19 சார்,உங்க குலத்தொழில் என்ன?

குளத்தொழில்தான்
புரியலை
ஒவ்வொரு ஊர்லயும் மழை நீர் சேகரிப்புக்கு குளம் வெட்றது.


==============


20 சார்.இந்தப்படத்துலயும் "வாழ்க்கை ஒரு வட்டம்"னு பஞ்ச் டயலாக் பேசறீங்க

மாட்டேன் ,நெட்டிசன்கள்
,"சிட்டிசன்"கள் நம்மை ரவுண்ட் கட்டி அடிப்பாங்க


================

0 comments: