Saturday, January 27, 2018

தனுஷை நினைச்சாதான் பயமா இருக்கு.

தமிழகத்தை தமிழர்கள் தான் ஆளவேண்டும்;ரஜினியை கடுமையாக எதிர்த்து எம் கட்சி அரசியல் செய்யும் - சீமான் உலகம் உங்களை வெச்சு செய்யும்


===========


2 ஆன்மீக அரசியல் என்பது ரஜினியின் குழப்பத்தைக் காட்டுகிறது−வீரமணி # இல்ல.திராவிடக்கட்சிகளின் பயத்தைக்காட்டுது.எதிரியின் பயம் நமக்கு பலம்

==========

3 அதிமுகவுக்கு அறிவுரை கூற தினகரன் ஒன்றும் புத்தனோ, காந்தியோ அல்ல-உதயகுமார்# பலாக்காயைத்தூக்கத்தான் பலசாலி தேவை.கிலாக்காய்க்கு இது போதும்


=============


4 ரஜினியுடன் கூட்டணிக்கு பாஜக முற்பட்டால் கட்சியிலிருந்து விலகுவேன்: சு சுவாமி # இதை சாக்கா வெச்சு சுவாமியை கழட்டி விடப்போறாங்க


=============


5 ரஜினி மூலம் காமராஜர் ஆட்சியை காணலாம் - தமிழருவி மணியன்..# தனுஷை நினைச்சாதான் பயமா இருக்கு.எத்தனை டைவர்ஸ் கேஸ் வரப்போகுதோ?


===========


6 படிப்பறிவு இல்லாததால் ரஜினிக்கு தமிழக பிரச்சனை பத்தி தெரியாது - சு.சாமி

# படிச்சவனுக்கு பாமரனோட கஷ்டம் தெரியும்கறதே பத்தாம்பசலித்தனம்தான்============


7 திராவிட அரசியலை மாற்றும் ஆன்மீக அரசியல்.. ரஜினிக்கு குருமூர்த்தி வாழ்த்து வளைச்சு "தாமரை மலரட்டும்"கறாரா?


==============


8 தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான்.. ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு எச் ராஜா வரவேற்பு! நல்லாருக்கே,வை.கோ வும் வாழ்த்திட்டார்னா சிஸ்டம் சரி ஆகிடும்


=============


9 கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர ரஜினி குரல் கொடுக்க வேண்டும்-விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்# "காலா"காலத்துல குரல் கொடுப்பார்,காத்திருக்கவும்


==============


10 ரஜினி ஏன் பகவத்கீதை பற்றி பேசுகிறார் - சு.ப.வீரபாண்டியன் # பகவதியைப்பத்திப்பேசுனா விஜய் படத்துக்கு மார்க்கெட்டிங்கா?னு கேட்பீங்களே?அதான்


=============

11 அதிமுக வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி உள்பட யாரும் பெற முடியாது - அமைச்சர் ஜெயக் குமார் # தினகரன் பெற்றாரே ?அதுக்குள்ள மறந்தாச்சா?குக்"கர்மா"


===============


12 ரஜினியால் மட்டுமே காமராசர் ஆட்சியை தர முடியும் -தமிழருவி மணியன்

# ராமராஜன் ஆட்சி தந்தாக்கூட ஓகே.ராமராஜ்யம் அமைப்போம்னு இமயமலை கிளம்பிடப்போறாரு==============


13 ரஜினியுடன் கமலும் கைகோர்க்க வேண்டும் - தமிழருவி மணியன்
,இவரா"சொல்றாரா?ரஜினி தூது அனுப்புனாரா?தெரியலயே


==============


14 சிஸ்டம் சரியில்லை எனக்கூறும் ரஜினி அரசியலுக்கு வந்து பார்த்தால்தான் தெரியும்- வைத்திலிங்கம் எம்.பி # அதான் வந்துட்டாரில்ல,அப்டி ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க


=======================15 ரஜினி போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் - இயக்குனர் கௌதமன்
,நமக்கு எதுக்கு இந்த விளம்பரம்?


===============


16 ரஜினி அரசியல்.. நான் எந்த கருத்தும் சொல்ல மாட்டேன்.. வைகோ! # மகிழ்ச்சி ,நன்றி ,எங்கே"ஆதரிச்சிடுவீங்களோனு பயந்துட்டு இருந்தேன்− ரஜினி


=============


17 கட்சியின் பெயரை பொங்கல் பண்டிகையில் அறிவிக்கிறார் ரஜினி # தை பிறந்தா்ல் திராவிடக்கட்சிகளுக்கு் வலி பிறக்கும்...

==============


18 பா.ஜ.க-வின் மாயமான் ரஜினி, திராவிட மண்ணில் வேரூன்ற முடியாது!'-கி.வீரமணி

# மாயமான் ,சீமான் இவங்களால முடியாதது ஒன்மேன் ஆர்மி யால முடியலாம்===============


19 ரஜினி வடிவில் காமராஜரை பார்க்கிறேன்- தமிழருவி மணியன்
மைக்கேல் மதனகாமராஜன்"வடிவில்"பார்க்கிறேன்"னா ஒத்துக்கலாம்,இது"ஓவரா இல்ல?


===========


20 நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன் - ஜெ.தீபா # வை"கோ வோட லேடி வெர்ஷன் தான் தீபா போல


============

0 comments: