Saturday, February 23, 2013

இசை ஞானி இளையராஜா மீதான 18 குற்றச்சாட்டுகள்இளையராஜா மீதான குறைபாடுகள், குற்றச்சாட்டுகள் தாக்குதல்கள் என்று இதுவரை நான் கேள்விப்பட்ட சிலவற்றை கடந்த அரைமணி நேரத்தில் நினைவு கூற முடிந்ததை கீழே தொகுத்துள்ளேன். இவை இப்போதைக்கு எழுதும் போக்கில் நினைவுக்கு வந்தவை மட்டுமே.


1. ஆணவம் மிகுந்தவர்; இவரது ஆணவத்தினாலேயே பல இயக்குனர்கள் இவரை அழைப்பதில்லை. ஒரு இயக்குனரிடம் வாயை கொடுத்து கன்னத்தில் அறை வாங்கினார்; அவரது ஈகோ அடிவாங்கிய அந்த நிகழ்விலிருந்து அவரது சரிவு தொடங்கியது.


2. வைரமுத்து மீது காரணமின்றி தீராத வன்மம் கொண்டிருப்பவர். மாறாக வைரமுத்து இன்னமும் ராஜா மீது அன்பு கொண்டு கவிதை எழுதுபவர். 3. தன் நிகழ்ச்சியின் மேடையில் தன் படம் மட்டுமே இருக வேண்டும் என்று சொன்னார்; தன் நிகழ்ச்சிக்கு முன் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படக்கூடாது என்று நிபந்தனை விதித்தவர்; அதனால் அல்பமானவர். பணத்தை ஆடம்பரமாக செலவழித்தார்; படாடோபமாக பிறர் பணத்தில் வாழ்ந்தார்;


4. வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி தரவில்லை; அது மக்களின் பணம். ஜவுளிக்கடைகள் பலவற்றில் கடன் வைத்து திருப்பித் தரவில்லை. இன்னும் எத்தனையோ பேருக்கு பணம் திருப்பி தரவில்லை. தொலைத்த காசை கண்டு பிடித்து கொடுத்தவருக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. ரசிகர் எழுதிய கடிதத்திற்கு பதில் போடவில்லை.

5. திருவாசகம் சிம்ஃபனியில் ஜெகத் காஸ்பரிடம் நன்றியில்லாமல் நடந்து அவமரியாதை செய்தவர்; திருவாசகம் விற்பனையில் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இருந்தவர். திருவாசகத்திற்காக அரசு உதவியை பெற்று மறைமுகமாக அரசு பணத்தை திருடினார். ஆன்மீகம் பேசுபவர்; போலி ஆன்மிகம் பேசுபவர்; பிரமண அடிவருடி; அசைவம் உண்ணாதவர்;


6. அசைவ உண்ணும் பழக்கத்தை மதிகாதவர். புகழ்மோகம் கொண்டவர்; அதற்காக பல ஸ்டண்டுகளை நடத்துபவர். பாவலர் வரதராஜன், பாப் மார்லெயை குப்பை என்றார்; கதாரை குப்பை என்றார்; அடுத்து பாப் டைலனை கூட குப்பை என்றார். மலையாள கவிஞர் ஒன்வி குருப்பை பற்றி மோசமாக பேசினார்.

7. தன் பாட்டு காப்பியடிக்கப்பட்டதற்கு கோபப்பட்டார். ஆனால் அவரே சில காப்பிகள் அடித்தார். உதாரணமாக 'பா' திரைப்படத்தில் 'கும்சும்..' பாட்டு "இஸ்தான் புல்..' என்ற பாட்டிலிருந்து காப்பியடிக்கப் பட்டது. ஆபா, போனிஎம் இசையை திருடினார். அவர் ஒரு தலித் பார்ப்பனர்; பூணூல் அணியாவிட்டாலும் நரம்பையே பூணுலாக கொண்டவர்.

8. முல்லை பெரியார் நிகழ்வின் போது ஜாய் ஆலுக்காஸ் ஆதரவுடன் இசை நிகழ்ச்சி நடத்தினார். மாவீரர் மாதத்தில் வேண்டுமென்றே சிங்கள அரசிடம் கைக்கூலி பெற்று கனடா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்தார்; பெரியாரை சிலைக்கு மாலையிட மறுத்தார். ரமணரை பற்றி பாடினார்; புருஷசுக்தத்திற்கு இசை வடிவம் தந்தார். இவ்வாறு இந்துத்வ ஆதரவாளராக திகழ்ந்தார்.


9. யுவனுக்கு ஏதோ ஒரு விலை உயர்ந்த கார் வாங்கி தந்தார். ('யுவனுக்கு இந்த கார் வாங்கி தர்ரான்.. திருவாசகம் இசையமைக்க பணம் இல்லைன்றான்..") தன் பழைய வாழ்க்கையை நினைத்து பார்க்காதவர். தான் ஜாதி பற்றிய உணர்வு இல்லாதவர். தலித்களுக்காக குரல் கொடுக்காதவர். ஒரு கழுகின் உயரத்திற்கு பறந்து கழுகாகவே மாறி விட்டவர். சனாதனத்தை அசைக்காமல் இசைத்தவர். தன் ஜாதியை குறிப்பிட்டதற்காக கே ஏ குணசேகரன் மீது வழக்கு தொடுத்தவர்.


10. 'ஆசை நூறுவகை..' பாட்டை தான் அனுமதித்ததை விட அதிகமாக பயன்படுத்தியதற்காக ராம் கோபால் வர்மா மீது வழக்கு போட்டவர். விஞ்ஞானம் என்றால் என்னவென்று அறிவில்லாதவர்.

11. அதை முடம் மூடம் என்பவர். எஸ்பிபி மீது பொறாமை கொண்டவர். அவரை ஒழித்துக் கட்ட முயற்சித்தவர். பிள்ளை பாசத்தால் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் யுவனை பாடவைத்தவர்.

12. பாரதிராஜாவை பற்றி மோசமாக பேசியவர். ரஹ்மானை மதிக்காதவர். ரஹ்மானின் சாதனைகளை அங்கீகரிக்காதவர். ரஹ்மானுக்கு பத்மபூஷன் கிடைத்த போது பாராட்டாமல்' 'I can only feel for myslelf' என்றவர். தன் சிம்பனியை வெளியிடவில்லை; சிம்ஃபனி எழுதினாரா என்பதே சந்தேகம்; எழுதியதற்கான ஆதாரம் இல்லை. சிம்ஃபனி எழுதியதாக பொய் சொல்லி ஃப்ராடு வேலை செய்தவர்.


13. அவரது திருவாசகம் உண்மையில் ஆரட்டோரியா இல்லை. ஹிந்தி இசையமைப்பாளர்கள் பற்றி தவறான செய்தியை மேடையில் சொன்னவர். மலேசியா வாசுதேவனை அவரது கடைசி காலத்தில் போய் பார்க்காதவர்; மலேசிய வாசுதேவனுக்கு உதவாதவர். தம்பி கங்கை அமரனுடன் கோபம் கொண்டு பேசாதவர். அவரையும் அவர் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்திருப்பவர். கங்கை அமரனுக்கு தர வேண்டிய காம்பையர் வேலையை பார்திபனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் தன் நிகழ்ச்சிகளில் கொடுத்தவர்.


14. தன்னிடம் வேலை பார்க்கும் இசை கலைஞர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தராதவர்; தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் பற்றி அவர்களின் முதுகுக்கு பின்னால் கேவலமாக பேசுபவர். கேஸட்டுகளில் சிடிக்களில் வாத்தியங்களை இசைத்தவர்களின் பெயர்களை (ரஹ்மான் செய்வதுபோல்) குறிப்பிடாதவர். பாட்டுக்கு மெட்டு என்று இல்லாமல் தன் இசைக்கு பாட்டு போடும் வழக்கத்தை கொண்டு வந்தவர். திருவாசகத்திலேயே முதலில் மெட்டை தேர்ந்தெடுத்து விட்டு, பின்பு அதற்கு ஏற்ப பாடல்களை கண்டுபிடித்தவர்.


15. பல பாடல்களை பவதாரிணியை பாடவைத்து கெடுத்தவர். மேலும் பல பாடல்களை சுருதி இல்லாமல் தான் பாடி கெடுத்தார். மாண்டு ராகம் ஒரு கர்நாடக ராகம் என்று தவறான தகவலை தந்தவர்; அவருக்கு கர்நாடக இசை ஒழுங்காக தெரியாது. இன்றய திரை இசை தரம்குறைந்தது என்றார்; ஆனால் யுவன் சங்கர் ராஜா இசை பற்றி குறை சொல்லவில்லை.


16. திரையிசையில் ஆன்மா இல்லை என்றார். அவரது பல பாடல்களுக்கு உண்மையில் இசையமைத்ததே ரஹ்மான்தான். 'How to name it' 25வது ஆண்டு விழாவிற்கு நரசிம்மனை அழைக்கவில்லை; அதன் ஒரிஜினல் கேஸட்டில் நரசிம்மன் பெயரை போடவில்லை. அற்பமான மனிதர்; மனிததன்மை இல்லாதவர். மூகாம்பிகை கோவிலுக்கு காசு கொடுத்தார்; ஆனால் திருவாசகத்திற்கு காசு இல்லை என்றார்.


17. எம் எஸ் விஸ்வநாதன் இசை குறிப்புகள் எழுதி இசையமைப்பதில்லை என்று குறை சொன்னார். நவபார்ப்பனர்; தன்னை பார்பனர்களை விடவும் உயந்தவராக கருதிக்கொள்பவர். கவிதையைவிட இசையே சிறந்தது என்று நினப்பவர். அதை நிறுவ படாதபாடுபடுபவர்.


18. "தாமரை மலரில் மனதினை வைத்து.." என்ற கண்ணதாசனின் வரிகளில் அர்த்தமில்லை என்று சொன்னார். கவிதை என்பதே குப்பை என்று நிறுவ படாதபாடு பட்டார். அதனால் மனப்பிறழ்வு கொண்டவர்…. இன்னமும் ஏகபலது உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவுக்கு வந்தது.இதற்கெல்லாம் விரிவான பதில் சொல்வதும், விமர்சன பூர்வமாக அணுகுவதும் சாத்தியம். ஆனால் அதுவல்ல விவேகமான அணுகுமுறை. நாம் கேட்க வேண்டியது, உலகின் எந்த மூலையிலாவது, எந்த சமுகத்திலாவது ஈடு இணையற்ற தங்களின் மேதையை பற்றி இப்படி பேசி கேட்க முடியுமா? அப்படி இளையராஜாவை விட தமிழகம் தந்த மேதை என்று வேறு யாராவது இருக்கிறார்களா?

இந்திய அளவில் யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு மேதையை, அதுவும் எந்த வாய்ப்பும் வசதியும் அற்ற, இளையராஜா என்று ஒருவர் பிறந்திருக்காவிட்டால் ஏனையோர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு கிராமத்தில், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, தமிழகம் முழுக்க அலைந்து, கடின உழைப்பில் முன்னேறி, பட்டினி கிடந்து, வாய்ப்புக்காக காத்திருந்து, வாய்ப்பு வந்த பின் பிரபஞ்ச கூத்தாடிய (இதை எழுதும் போது கண்ணீர் வருகிறது) ஒருவனை வெறும் வம்புகளாலும், வசைகளாலும் எதிர்கொள்ளும் சமூகம் உருப்பட ஏதேனும் துளி சாத்தியம் உள்ளதா? உள்வாங்க முடியாத விஷயத்தை, அளவிட முடியாததை, ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியாததை பற்றி இவ்வளவு தன்னம்பிக்கையுடன் சின்னதனமாக விமர்சனங்களால் அணுகும் ஒரு சமூகம், தன்னை பற்றி மற்றவர்களின் முன்முடிவுகள் குறித்து கழிவிரக்கம் கொள்வதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? 

 நன்றி -

rozavasanth (@rozavasanth)

27 comments:

காரிகன் said...

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எல்லா சங்கதிகளுமே ராஜாவின் வீழ்ச்சிக்கு காரனமாகிப்போயின. இதையும் தாண்டி மற்ற சில சேஷ்டைகளையும் இவர் செய்ததாலேயே இவர் ஒதுக்கப்பட்டார் என்று சொல்கிறது ஒரு கூட்டம். மேற்கத்திய செவ்வியல் இசையை அப்பட்டமாக காப்பி அடித்து அதை தமிழ்நாட்டின் நாட்டுப்புற இசை என்று மக்களை நம்ப வைத்தவர் இந்த ராஜா. இவரை பற்றி சொல்ல இன்னும் நிறையவே இருக்கிறது. இந்த பதினெட்டு காரணங்களும் உண்மையே என்பதை விஷயமறிந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.

thekkadu mangutty said...

ilayarajavukku arugileye irunthu pathivu seithathu polirukirathu

Anonymous said...

உமக்கு ஏன் இசைஞானி மீது இவ்வளவு காழ்ப்புனர்ச்சி?

Anonymous said...

இவற்றில் உண்மை இல்லை. ஆனால் உங்களுடைய அந்த அரைமனி நேரத்தில் அவரின் மீதான கோபமும், பொறாமையும் & ரஹ்மான் மீதான அன்பும் இருக்கிறது.

Unknown said...

இவ்வளவு மோசமாக இளையராஜாவை விமர்சிக்க வேண்டியதில்லை. திரை இசையில் அருமையான பாடல்களை கொடுத்தவர் என்பதில் ஐயமில்லை. எந்த மனிதனும் (காந்தி, புத்தன் முதல் ) 100க்கு 100 நல்லவன் என்பது கிடையாது. திறமை இருக்கின்ற இடத்தில் கர்வமும் அகந்தையும் இருக்கலாம். 20 ஆண்டு காலமாக தமிழ் திரை இசையில் உச்சத்தில் இருந்த ஒருவரை இப்படி விமர்சிப்பது சரியல்ல. நல்லதையும் சேர்த்து சொல்லுங்கள்.

”தளிர் சுரேஷ்” said...

இளையராஜா மீது இத்தனை குற்றங்களா? சுவாரஸ்யம்!

Onemanarmy said...

super da pulsepazhani

Yoga.S. said...

இளையராஜாவுக்கு வக்காலத்து வாங்கிய கண்மணிகளே,ரஹ்மானும் நம்மிடையே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!அவருடன் வாழ்ந்த காலத்தை ரஹ்மான் மறந்து விடவில்லை.ஒரு சிஷ்யன் பெயர் வாங்கினால் பெருமைப்படும் குணம் கூட இல்லையே உங்கள்'ராஜாவிடம்'?இவரின்பாடல்கள் சிறந்தவை,ஜனரஞ்சகமானவை.அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.ஆனாலும்,கடந்த காலத்தை மறந்து வாழ்பவன்......................!

VSKumar said...

1. Adi kodutha Director yar?
2. Ningal Vairamuthu ezhuthiya intha kulathil kal erinthavargal engira bookai padithathu illai endru ninekkiren. Raja sir innum vairamuthu pathi ondrum sollavillai.
3. Recenta nadantha oru Rajasirin book release functionil kamal kalanthu kondar, athil raja sirukku iniyaga Kamal sir flexum irunthathu. Avar selavalitha vidhyangalai accounts preparation seithu Income tax ningal than kattineergala? Padodapagama engeyellam suthinar...aprum eppadi 1000 padangal padalgal and background music seiyamudinthathu.
4. Idhu adipadayattra kutrasattu. Entha bankum idhu naal varai avar veetu vasalil poi nintrathillai. vendum endral avar veetu securitykitta kettu therinthukollavum.
5. Intha kutrasattum adipadayattrathu. Jegath kaspar oru thirudan. avanai pathi pona aatchiyil nadanthavai ellam makkal arivar.

6. Bavalar varatharajan avar annan. Bob marley patri sonnathu unmai. ningal avar music kettathunda?, ONV group pathi ondrum thavaraga ondru sollavillai. Atharku pin avargal inainthu padalgal koduthullanar, ungalukku theriyuma?VSKumar said...

6,7,8,9 Moondrum avar jathi pathi pesi avarai idhai vida keel tharama yarum pesiyathillai.

10. Sonnathu onnu seirathu onnu avarai kutra solla mattum thana?

11. Netru kooda SPBai thannodaya concertil pada kooti poyullar. Yuvanai pada vaithathu Goutham vasudev menon..idhai avarai neraya nigalchiyil kooriyullar.

12. BR and raja sir nanbargal. Eppothu BR pathi thappaga pesinar. appa BR mattum ivarai pesalam appadithaane? ARR pathi avargal ketta kelvikku antha mathiri than pathil sollavendiyathirukkum. Idhai kelviyai yen ARRidam yarum ketkavillai. Symphony ezhuthi, isaiyamakkavillai enpatharkku ungalidam aatharam irukka?

13. Thiruvasagam Aroteria illai endral, Aratoria enna endru ningal ezhuthungal. Hindi isaiyamaipalargal pathi avarai vida ingu athigam pesiyavargal yarum illai. Ningal kooram ARR ethanai Hindi isaiyamaipalargal pathi ethanai pettiyil kooriyirukkirar, proof kattungal? MV sir indru ulagam arithirukkirathu endral athu Raja sir mattum than. athu MV sir familyukku nandraga theriyum, avar irappatharkku mun partha orey aal isaignani mattume, athu theriyuma? idahi avar magal oru pettiyil koori kanneer vadithar. compairing velaiku avar pidithamanavargalidam kodupathu avar ishtam. ARR mattum yen Chinmayikitta mattum eppathum kodukkirar.

14. Sambalam ozhunga tharavilli yendral ippothu raja siridam last 30 varudam velai parpavargal innum iruppargala? aduthavargalin isaiyai vangi athai arrangement seivargal ellam nallavargal appadithane ungal karuthu. Isaiyil mettukku pattu, pattukku mettu endru iruppathu ulagathirukku therinthathu ungalukku theriyavillai enpathu ungal ariveenam.

15. Bhavatharini pada vaithathil enna thavaru. avar padiyathil enna kurai kandeer? Sindhu bairavi padathukku ningal than isaiyamaitheergala? Illai ningal potrum ARR isaiyamaithara? Indru thirai isai tharam kurainthu poga karanam ARR vantha pin than. 20 varudangal Tamil cinema musicai aatchi seitha isai methai Raja sir.

VSKumar said...

16. Neengal kutra sattum kelviyil migavum nagaisuvaiyana kelvi idhu than. NEPVku, nandalala, Nankadavul, Azhagi, Kathalukku Mariyathai padathukkelam isai yamaithathu ARR endru sonnal eppadi ellorum siripargalo athai pondru irukkirathu ungal kutra sattu. Ningal HTNI casette, LP parthathillai endru idhai vida unmaiyai othukolgireergal enpatharkku satchi yethum illai. Narahiman avarey than kaipada varamudiyatharkku karanam andray therivithu vittar. Yes, Thiruvasagathirukku kaasu illai endru ungalidam than mudhalil kettu vanthar, i accept this statement.

17. MSV ayya pathi ARR eppozhuthavathu vaya thiranthirukkara? anuthinamum MSV ayya pathi pesum orey manithar Raja sir than..athu MSV ayyavukku nandraga theriyum. avarai pathi ippadiyellam orunalum pesiyathillai.

18. Kavignar pathi indru pesikondu irukkum orey nandriyullavar isaignani mattume. athai ariyathavargal ellam manasatchi illathavargal.

ningal kooriya anaithu kutrasattukku AATHARAM ethum irukka?

Intha ulagathil Nandri maranthavargalil mudhalidam Vairamuthukuthan.

VSKumar said...

Cibi sir, Yar intha Rozavasanth?

காரிகன் said...

இளையராஜாவுக்கு இப்படி வக்காலத்து வாங்கும் நண்பர் அதை தமிழில் எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன செய்வது?இளையராசாவைபற்றி நிறைய குற்றசாட்டுகள் உள்ளன. அவை எல்லாவற்றிக்கும் இப்படியே மேம்போக்காக எதையாவது சொன்னால் போதுமா? குமார் என்பவர் சொன்ன எந்த பதிலிலும் உண்மை இல்லை. இதை நான் உறுதியாக சொல்வேன்.முடிந்தால் தமிழில் பதில் சொல்லவும்.

Unknown said...

ஏட்டிக்கு போட்டி பேசாம போய் புள்ளகுட்டிய படிக்க வைங்க. (உங்கள இல்ல authorர்) ராஜா தப்பேபண்ணமாட்டாருனும் கிடையாது, இந்த எல்லா குற்றச்சாட்டும் உன்மைய்னும் சொல்ல முடியாது. முதல்ல அவன் சொன்னான் இவன் சொன்னானு போஸ்ட் எழுதாதீங்க.பாதிக்க பட்டவர் பேட்டி அளித்தபிறகும் அது பொய்னு எத்தனையோ முறை கண்டுபிடிக்க பட்டிருக்கு.!! அவர் ஒரு சாதாரண மனுஷன் அவ்ளோ தான்.அவரும் எல்லாரை மாறியும் தப்பு பண்ணியிருப்பார்/இல்லாமலும் இருக்கலாம்.அதெற்கெல்லாம் மேல் அவர் ஒரு genius!!ஒருத்தர் இப்படி தான் இருக்கணும் பாராட்டித்தான் ஆகணும்னு நீங்க ஏன் சொல்றீங்க.அவங்களுக்குள் உள்ள உறவு அவங்களுக்கு தான் தெரியும்...
நிறைய பேரை எதிர்த்தால் கெட்டவன் மட்டுமாத்தான் இருக்கனும்னு அவசியம் இல்லை.

இருவருக்குள் இருக்கும் மனஸ்தாபத்தை அருகில் இருந்து பாத்திருந்தா கூட நீங்க சொல்றத ஏத்துக்கலாம்.ஆனா!!!...

இங்கே ஒருத்தரை ஒருவகையில் முத்திரை குத்தினால் அவ்வாறு பேசினால் மட்டுமே மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்ற எண்ணத்தில் பத்திரிக்கை ஆயிரம் சொல்லும்.நீங்கள் ஆராய்ந்த சொல்லுங்கள்.நன்றி.

Inian said...

சில குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக இல்லை என்பது தான் உண்மை. சில விசயங்களில் கொஞ்சம் பிடிவாதமாகவும் கர்வமாகவும் இருப்பவர். spb மேலே பொறாமை என்றால் இளையராஜாவின் இசையில் அதிகமான பாடலை பாடியவர் SPB தான். இடையில் கொஞ்சம் காலம் சண்டை போட்டு பேசாமல் இருந்தார். அது கொஞ்ச காலம் தான் பின்னால் அந்த கோபம் மறந்து சேர்ந்து கொண்டது தான் வரலாறு. NTEP படத்தில் யுவன் பாடியது கௌதமின் டிமாண்ட் தானே தவிர இளையராஜாவின் சாய்ஸ் இல்லை. சில குறைகள் இருக்கலாம் ஆனால் இளையராஜா தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிசம். அவருடைய படைப்பை மட்டுமே பாருங்கள் சாதனையை பாருங்கள். அவரால் தமிழர்களுக்கு எவ்வளவு பெருமை இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் சேறு வாறி இறைப்பது சீப் பப்ளிசிடி.

FITNESS said...

இளையராஜா ரசிகர்களே... ஹிந்தி மூவிஸ் சாங்க்ஸ் { குறிப்பாக நதீம் ஸ்ரவனுடைய} கேளுங்கள், உருது கசல்ஸ் {குலாம் அலி, பங்கசுதாஸ், சாஜித்சிங் போன்றவர்கள்} கேளுங்கள், கவாலிப்பாடல்கள் கேளுங்கள், வெஸ்டர்ன் சாங்க்ஸ் கேளுங்கள், இப்படி பலதரப்பட்ட இசையை கேட்டீர்களென்றால் உலகம் எவ்வளவு பெரியது என புரிந்துக்கொள்வீர்கள். இதை எல்லாம் மீறி ரஹ்மான் எப்படி ஜொலிக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வீர்கள். உழைப்பு, தரம் இல்லாபாடள்கல்தான் உலகம் என்று கண்ணை மூடிக்கொள்ளாதீர்கள். நன்றி....

Easy Learning said...

இளைய ராஜா நாட்டு புற பாடல்களுக்கு வடிவம் கொடுத்து சினிமா வில் வர செய்தாரே தவிர வெறும் ஒன்றும் அவர் பெரிதாக புடுங்க வில்லை. புதுமை என்று எதையும் செய்த தில்லை, ஹிந்துஸ்தானி , வெஸ்டன் என்றால் கிலோ என்ன விலை என்று கேப்பார். அரைத்த மாவையே அரைத்தவர்.

இசையை புரிந்து படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். ரஹ்மான் போல் ஒரே பாடலில் பல ராகங்கள், கர்நாடிக் ஹிந்துஸ்தானி , ஸூபி இசையை ஒரே பாடலில் கொண்டு வரும் வல்லமை ஒப்பிட்டு பார்க்கும் பொது ரஹ்மான் மலை இளைய ராஜ குப்பை.

இளைய ராஜ பாடல்களில் ஒரு பல்லவி, ஒரு அனுபல்லவி , கொஞ்சம் பீஜியம் , அடுத்து சரணம் , இதை போல் இரண்டு முறை அதன் இளையாராஜா இசை,இதில் தாளமும், பீஜியமும் எல்லாம் ஒன்றை போலவே எல்லா பாடலிலும் இருக்கும். இளையாரவின் மிக்சிங் மட்டமாக இருக்கும். நிறைய நல்ல பாடல்களை தானே பாடி கொலை செய்தவர். அதனாலேயே சில நல்ல பாடகளை இன்று கேக்க முடியவில்லை.

இளையராஜாவிடம் tune மேகிங் பவர் இருக்கிறது, அதை புதுமையாக பட்டை தீட்டும் திறமை இல்லை, அந்த tune கள் ரஹ்மான் சார் கையில் கிடைத்தால், இந்நேரம் உலக புகழ் பெற்றி ஜொலிதிருக்கும் வைரம் போல.

ரஹ்மானின் "முன்பே வா என் அன்பே வா , பூ பூவாய் பூ பூவாய் என்ற பாடலை கவனித்து கேட்டவர்கள் , இளைய ராஜாவை ரஹ்மானோடு ஒப்பிடவே மாட்டார்கள்.

இளைய ராஜ இசை கை நிறைய கிடைக்கும் கழுதை விட்டை போல, ரஹ்மான் இசை அரிதாக கிடைக்கும் வைரம் போல.

இசையை சுவாசிப்பவன் நான். இளைய ராஜா ரஹ்மானைவிட சிறந்தவர் என்பது வேறு நல்ல இசைகளை கேக்காத வர்களின் கருத்து. ஆனால் பெரும்பான்மை ரஹ்மானே சிறந்தவர் என்பதாகும் அதற்கு சான்று. பேஸ் புக்கில் கோடிகளை தாண்டி சேர்ந்து கொண்டிருக்கும் ரசிகர் கூட்டமே. ரஹ்மானுக்கு இந்திய மட்டும் இல்லாமல் உலகம் முழுவது பெரும் ரசிகர் கூட்டம் இருக்கு, குமிடி பூண்டியை தாண்டினால் இளைய ராஜாவை யாருக்கும் தெரியாது. ரங்கீலா , தாளம் , லகான் இந்தி இசை உலகையே குலுங்க வைத்ததெல்லாம் உங்களுக்கு தெரியாதா.? ரஹ்மான் இளைய ராஜாவை விட நூறுமடங்கு சிறந்தவர்.

ராஜாவின் பழைய தொலைக்காட்சி பேட்டிகளை பார்த்தவர்கள் சற்று சிந்த்தித்து பாருங்கள், அந்த பேட்டிகளில் தன்னை பெரிய ஞானி போலவும், தான் தான் இசைக்கு இலக்கணம் வகுத்தவர் போலவும், மும்மூர்த்திகளுக்கு அடுத்ததாக தன்னை நாலாவது மூர்த்தியாக நினைத்து கொண்டு ஆன்மிகம் பேசுவார் , பழைய வாழ்கையை மறந்து வானத்தில் இருந்து குதித்த இசை அவதாரம் போல பேசுவார் பார்க்கவே கடுப்பாக இருக்கும்.

என்னை பொறுத்த வரை இளையாராஜா புதுமைகள் என்று ஒன்றுமே செய்யாதவர், மிக எளிமையாக இசை அமைத்து சம்பாதித்தவர், அதனாலதான் அவர் பாடல்கள் குமிடி பூண்டியை தாண்டியது இல்லை, இந்தி பாடல்கள் பற்றி அறிவில்லாதவர்கள் தான் இளைய ராஜாவின் இசையை மெச்சி கொள்ளவேண்டும், இளைய ராஜ ஸ்டைலில் இந்தியில் வைரம் போல் ஜொலிக்கும் பாடல்கள் உள்ளன. புதுமை என்று பார்த்தல் ரஹ்மானுக்கு நிகர் ரஹ்மானே அதனால் தான் உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருகிறது.

ரஹ்மானுக்கு உலகம் பாராட்டு விழ நடத்துகிறது. ராசா தனக்கு தானே நடத்தி கொள்கிறார். மேடையில் வைத்து இவரை முகஸ்துதி பாட ஒரு கூட்டம் அதை கேட்டு அப்படியே போதையில் மிதப்பார் . எப்படி தான் அப்படிலாம் பேசுறாங்களோ எப்படி தான் வெக்கம் கேட்டு கேக்குரான்களோ கருமம் கருமம்.தனக்கு மற்றவர்கள் முகஸ்துதி பாட தனக்கு தானே ஒரு பாராட்டு நிகழ்ச்சி

இங்கே இளைய ராஜாவை வாயார புகழும் நண்பர்களே அப்போ நீங்க இந்தி பாடல்கள் கேட்டதே இல்லை போலும் அது போல் இசைக்கு இந்தியில் நதீம் சரவன், ஆர்டி பர்மன்,லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால் , அணு மாலிக் ஜட்டின் லலித் , நஸ்ரத பதே அலிகான் என்று நிறைய பேர் உள்ளனர் அவர்கள் இசையை விட மனதுக்குள் செல்லாத இசையா ?முதலில் இந்தி பாடல்கள் கேளுங்கள் குறுகிய வட்டத்திற்குள் நிண்டு உளறாதீர்கள்.

ahamad said...
This comment has been removed by the author.
Unknown said...

அடுத்தவன் குற்றத்தை எப்போதும் கண்டுபிடிப்பவதான் தமிழன். தமிழ் இனி மெல்ல மெல்ல சாகும் என்பது பொய். தமிழ் இனம் மெல்ல அழியும் என்பது தான் உண்மை. இதற்கு சான்று தான் இலங்கை

Unknown said...

இதை எழுதியவருக்கு கீழ்பக்கத்தில் ஒரு ரூம் புக் பண்ண சொல்லுங்க
ஏன்டா டேய் வேலை இல்லாதவன் மகளை பிடிச்சி மொட்ட அடிச்சனாம்
போய் வேலைய பருட முடிஞ்சா உன்னோட குடும்பத்தில நடக்குற பித்தலாட்ட வேலைய பத்தி எழுதுட அதுவே 10,000 பக்கம் வரும்

Unknown said...

rosa vasanth avarkale neengal irukkum thurayai sonnal naan ungalai patri visarikka vasathiyaka irukkum ena ninaikkiren .

Anonymous said...

antha kuppaiyellam neye kelu

Nalliah said...ஒரு பட்டப்படிப்புடன், ஒரு தொழிலுடன், ஒரு திறமையுடன், ஒரு குணநலனுடன், ஆணவம் தன்னை அடையாள படுத்திக் கொள்கின்றது. . ஒருவர் வைத்தியர், ஒருவர் விவசாயி, ஒருவர் பேராசிரியர், ஒருவர் இசையமைப்பாளர் என இருந்தால் அவை யாவும் செயல்கள். நாங்கள் செய்பவை அவை, நாங்கள் அல்ல.

யாராவது ஒருவர் நீங்கள் யார் என எங்களிடம் கேட்டால் நீங்கள் உடனே நான் ஒரு பொறியியலாளர் என்று பதில் சொன்னால் அந்தப் பதில் மிகவும் தவறானது. நாங்கள் எப்படி எப்படி பொறியியலாளராக முடியும். அது நீங்கள் செய்யும் தொழில். நாங்களல்ல. உங்களது தொழில்களுடன் மிகவும் ஆழ்ந்த தொடர்பு கொள்ளாதீர்கள். ஏனெனில்
அந்தத் தொழில் எங்களை அடிமைபடுத்திக் கொண்டு விடும். நாங்கள் ஒரு வைத்தியராகவோ, ,
வீடு கட்டுபவராகவோ, இசையமைப்பாளராகவோ தொழில் செய்யலாம். ஆனால் அதனால் அதுதான் நாங்கள் என்றாகிவிடாது. நாங்கள் சாரதி வேலையை விட்டுவிட்டு ஒரு சிப்பந்தி ஆகலாம், சிப்பந்தி வேலையை விட்டுவிட்டு ஒரு தெரு கூட்டுபவராக மாறலாம்.

ஒரு குழந்தை பிறக்கும் போது இருக்கும் அளவற்ற ஆற்றல் மெது மெதுவாக குறைந்து, அது ஒரு குறிப்பிட்ட திசையில் நின்று விடுகிறது. ஒரு குழந்தை பிறக்கும் போது பல்வேறுபட்ட ஆற்றலுடன் இருந்தாலும் விரைவில் அது குறிப்பிட்ட வழியை தேர்ந்தெடுக்க துவங்கி விடுகிறது. நாம் அது அதுபோல தேர்ந்தெடுக்க துணை புரிகிறோம். அப்போதுதான் குழந்தை புகழடைய முடியும்.

அளப்பரிய ஆற்றலுடன்தான் எல்லோரும் பிறக்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டுமே அளப்பரிய ஆற்றலுடன் இறக்கின்றனர் என்ற ஒரு சீனப் பழமொழி உண்டு. மனிதன் அளவற்ற ஆற்றலுடன் பிறந்தாலும் இறக்கும்போது குறுகி விடுகிறான். நாங்கள் பிறக்கும்போது பிரபஞ்சமாக இருக்கின்றோம்., இறக்கும்போது ஒரு வைத்தியராக, ஒரு விரிவுரையாளராக, ஒரு நகரசபை ஊழியனாக இறக்கின்றோம். வாழ்வை நாங்கள் இழந்து விடுகின்றோம்.. எல்லா சாத்தியங்களும் உள்ள திறந்துள்ள நிலையில், எல்லா ஆற்றல்களும் கிடைக்கக் கூடிய நிலையில் நாங்கள் பிறக்கின்றோம்.. ஒரு விரிவுரையாளராகவும், ஒரு விஞ்ஞானியாகவும், ஒரு
கவிஞனாகவும், மாறலாம். கோடிக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. எல்லா கதவுகளும் திறந்துள்ளன.
பின் மெதுமெதுவாக, ஒரு விரிவுரையாளராக – இலத்திரனவியல் பேராசிரியராக, ஒரு தேர்ச்சி பெற்ற பேராசிரியராக, அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறி விடுகின்றோம்.. நாங்கள் குறுகி கொண்டே சென்று விடுகின்றோம்.. நாங்கள் குறுகி கொண்டே செல்லும் ஒரு குகை வாயில் போல மாறி விடுகின்றோம்.. ஆகாயத்தை போல பிறந்து ஒரு குகை போல மாறி, பின் அதிலிருந்து நாங்கள் வெளியே வருவதேயில்லை.

அந்த குகைதான் ஆணவம். அது செயலுடன் அடையாளப்படுத்திக் கொண்டு விடுகிறது. மனிதன் தன்னை ஒரு வீடு விற்பவராக நினைத்துக் கொள்வது மிகவும் அவமானமானது. எங்களை நாங்கள் ஒரு வீடு விற்பவராக நினைத்துக் கொள்வது எங்களை நாங்களே தாழ்த்திக் கொள்வது, எங்களை நாங்களே அவமானப்படுத்திக் கொள்வது. எங்களது ஆற்றல் அளப்பரியது, எங்கள் சாத்தியக்கூறு அளவில்லாதது..

எங்களது முழு திறமையையும் எங்களால் வெளிக்கொண்டுவர முடியாமல் இருக்கலாம். – யாராலும் முடியாது. ஏனெனில் அது மிகப் பரந்து விரிந்தது. அதனால் யாராலும் அதை செய்ய முடியாது. ஆனால் சில திறமைகள் வெளிப்படலாம். ஒரு மொழியை கற்றுக்கொண்டு அதில் பேச்சாளராக மாறலாம். அதில் புலமை பெறலாம். வார்த்தைகளைப் பற்றிய உணர்வு அதிகமாக இருக்குமானால் கவிஞனாகலாம். உனக்கு இசையை உணரக் கூடிய இயல்பு இருக்குமானால், இசையை பிரித்து கேட்கக் கூடிய செவிப்புலன் இருந்தால் இசைக் கலைஞனாகலாம். ஆனால் இவையெல்லாம் மிகமிகச் சிறிய சாத்தியக்கூறுகள்தான். அதனுடன் நமது வாழ்வு முடிந்துவிட்டது என எண்ணவேண்டாம். . யாரும் எதனுடனும் நின்று போய் விடுவதில்லை..

ஆணவம் என்பது செயலுடன் அடையாளப்படுத்திக் கொள்வது. ஒரு கவர்னருக்கு தான் கவர்னர் என்ற ஆணவம் இருக்கும். அவர் உயர் நிலையை அடைந்து விட்டதாக அவர் நினைக்கிறார். ஒரு பிரதம மந்திரிக்கு நான் உள்ளது.அவர் உயர்ந்து விட்டதாக அவர் நினைக்கிறார். இதற்கு மேல் என்ன இருக்கிறது என அவர் நினைக்கிறார். இது மடத்தனம். முட்டாள்தனம். வாழ்க்கை மிகப் பெரியது, அதைக் கடக்க வழியேயில்லை. வழி கிடையாது. நீ அதில் நுழைய நுழைய அதிகமான வாய்ப்புகள் தங்களது கதவுகளை திறக்கும். ஆம் – நீ ஒரு மலை உச்சியை அடையும்போது திடீரென மற்றொரு மலை உச்சியை காண்பாய். – முடிவேயில்லை. மனிதன் தனது இருப்பு ஆற்றலோடு இருக்கும்


நல்லையா தயாபரன்

kavikathir said...

Dai unaku vera Velaya ilaya da. Yapo pathalum. Ir va pathi research pandrathu tha velaya.

kavikathir said...

Vera onum ila friend. Jathi veriyar kaluku matum than ir ah pidikathu

Unknown said...

Please give the phone number of who posted this nonsense. Let all the people commented on these will go to this person's house and see what he and his family did for the development of the people of tamil nadu and to the nation. Please post your phone number and adress. Let us see what your family doing.what you have posted is just a personal difficulties everybody face in any businesses. This is just a shit what you eat of illayaraja. Mandu ragam is Tamil isai. Carnatic raga. If i prove it can you hang yourself?

Anand.

Anand

Sivappadai said...

தங்கத்தை
என்ன பண்ணினாலும் தரம். குறையாது தரம் கெட்ட உன் போன்ற பிளளப்பு பிழைக்கும் ஜாதிமத வெறி பிடித்த நாய்களால் தான் தமிழனின் அடையாளம் அழிகிறது என்பது உன் பதிவு மூலம் தெளிவாகிறது.