Monday, February 18, 2013

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்ற வாளிக் கூண்டில் சி.பி.ஐ. வழக்கறிஞர்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நீரா ராடியா, சி.ஏ.ஜி., கலைஞர் டி.வி. என வந்த அத்தியாயங்களுக்கு மத்தியில், சி.பி.ஐ. வழக்கறிஞர் ஒருவரே குற்ற வாளிக் கூண்டில் நிற்பது புதிய அத்தியாயம்!


2ஜிஅலைவரிசை உரிமத்தை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவும் தொலைதொடர்புத் துறை தனியார் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து லாபம் அடைந்தாக புகார்கள். ஓர் ஆண் டாக நடந்த விசாரணையில் திடீர் திருப்பம். குற்றம் சாட்டப்பட்ட யுனிடெக் டெலிகாம் அதிபர் சஞ்சய் சந்திராவும் குற்றம் சாட்டும் சி.பி.ஐ. வழக்கறிஞர் ஏ.கே.சிங்கும் பேசும் ஆடியோ டேப் வெளியாகி இருக்கிறது.
சுமார் 1,651 கோடி ரூபாய்க்கு அலைவரிசை உரிமத்தை வாங்கிய யுனிடெக் நிறுவனம், அதை அதிக விலைக்கு டெலிநார் என்ற நார்வே நாட்டு டெலிகாம் கம்பெனிக்கு விற்றது. ரியல் எஸ்டேட் பிசினஸில் பதிவுபெற்ற யுனிடெக் நிறுவனம், டெலிகாம் உரிமங்களைப் பெற தகுதியற்றதாகவும் இருந்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளில்தான் தொலைத்தொடர்பு அமைச்சர் ராசாவோடு கூட்டு சதியில் ஈடு பட்டதாகச் சொல்லி கைது செய் யப்பட்டார் சஞ்சய் சந்திரா. இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க இவர் சி.பி.ஐ. வழக்கறிஞரோடு  சதித் திட்டங்கள் தீட்டியதற்கான ஆதாரம் என்று  இந்த ஆடியோ டேப் காட்டப்படுகிறது.
ஏராளமான இரைச்சல்கள். அருகே இருப் பவர்களின் பேச்சுக்கள் எல்லாம் பதிவாகி இருக் கின்றன. இவர்கள் ஓர் அறையில் சந்தித்து பேசும்போது தொலைவில் இருந்து மைக் மூலமோ அல்லது மறைத்து வைக்கப்பட்ட ரெக்கார்டர் மூலமாகவோ பதிவு செய்யப்பட்டதைப் போல ஒலியாக இருக்கிறது. சிறப்பு நீதிமன்றத்தின் வளா கத்தில் உள்ள சி.பி.ஐ. அறையில் இந்தச் சந்திப்பு நடந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், இருவருடைய பேச்சுக்களின் வேகத்தை வைத்துப் பார்த்தால் இது தொலைபேசி உரையாடலாகவும் இருக்கலாம்.  
இந்த ஆடியோ சி.டி-யை தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட பிறகே, சி.பி.ஐ. தரப்பு நடவடிக்கையில் இறங்கியது. 2ஜி வழக்கில் இருந்து ஏ.கே.சிங்கை நீக்கிவிட்டு, இந்த ஆடியோவை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பியது.
ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற கடைசி தேதி என்று முதலில் குறிப்பிட்டது...2007,அக்டோபர் 1-ம் தேதி. ஆனால், இந்த தேதி செப்டம்பர் 25 என்று பின்னர் மாற்றி அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு  வந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. யுனிடெக் நிறுவனத்தின் விண்ணப்பங்கள் கிடைத்தவுடன், அதன் பின்னர் வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க இந்தச் சதி நடந்ததாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க சி.பி.ஐ. வழக்கறிஞர் ஏ.கே.சிங்கும் யுனிடெக் அதிபர் சந்திராவும் பேசிய பல தகவல்கள், அந்த ஆடியோவில் உரையாடலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பவர் ஏ.கே.ஸ்ரீவத்சவா. இவர் தொலைத்தொடர்புத் துறையில் வயர் லெஸ் பிரிவு துணை இயக்குநர் ஜெனரல். இவர் மூலமாக இந்தத் தேதி மாற்ற விவகாரங்கள் நடந்ததாக சொல் லப்படுகிறது. இவரை ராசாவுக்கும் சஞ்சய் சந்திராவுக்கும் எதிராக சாட்சியம் அளிப்பவராக சி.பி.ஐ. நிறுத்தியுள்ளது. ''நாங்கள் ஸ்ரீவத்சாவை உங்கள் வசதிக் காகவே நிறுத்தி இருக்கிறோம். நீயே குற்றவாளிதான் என்று அவரை மடக்கினால், பிறகு அவரது சாட்சியம் பயன் இல்லாமல் போகும்'' என்று, சஞ்சய் சந்திராவுக்கு ஏ.கே.சிங் ஆலோசனை கூறுகிறார். இவ்வாறு வழக்கு சம்பந்தப்பட்ட பல யோசனைகளை சஞ்சய் சந்திராவுக்கு கூறுகிறார் அவர்.  


சி.பி.ஐ-யில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்து, பல அரசியல் வழக்குகளை கையாண்டவர் ஏ.கே.சிங். ஹவாலா டைரி வழக்கு விவகாரம் முதல் சிபுசோரன் கொலை வழக்கு வரை சி.பி.ஐ. சார்பில் ஆஜரானவர். இந்த விவகாரத்தில் சிங் திட்டமிட்டு கவிழ்க்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.


நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு முதல்நாள் இந்த ஆடியோ லீக் செய்யப்பட்டது. கூட்டுக் குழு விசாரணைக்கு ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களை அழைக்கும் பி.ஜே.பி-யின் கோரிக்கையை திசைதிருப்ப இந்த ஆடியோ வெளியிடப்பட்டதா என்ற சந்தேகமும் இருக்கிறது.


இந்த உரையாடல் விவகாரத்தால் ஏ.கே.சிங் பதவி பறிபோவதோடு, குரல் பரிசோதனையில் உண்மை வெளியாகும் பட்சத்தில், கிரிமினல் வழக்கு பதிவாகி ஜெயிலுக்குப் போவதும் நடக்கலாம். சஞ்சய் சந்திராவின் ஜாமீன் ரத்தாகி, ஜெயிலுக்குப் போவதிலும் சந்தேகம் இல்லை என்கின்றனர். விசாரணையில் நடந்த தில்லுமுல்லுகளை ஒட்டி, 2ஜி வழக்கை உச்ச நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.


சி.பி.ஐ. வழக்கறிஞரே சிக்கி இருப்பதால் இந்த வழக்கின் விசாரணை எவ்வளவு தூரம் நியாயமாக நடக்கும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது!


- சரோஜ் கண்பத்

thanx - vikatan 


1.
2g வழக்கில் இதை விட மிகப் பெரிய காமெடி 200 கோடி லஞ்சம் கொடுத்த சாஹிட் பால்வா சிறை மற்றும் அவனது நிறுவனங்களுக்கு சீல், லஞ்சம் வாங்கிய கலைஞர் டிவி சீரும் சிறப்புமாக இன்னும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் 60% பங்குதாரர் மற்றும் நிர்வாக இயக்குனர் மீது ஒரு வழக்கு கூட இல்லை !! உலகத்திலேயே லஞ்சம் கொடுத்தவன் சிறையிலும் லஞ்சம் வாங்கியவன் சுதந்திரமுமாக திரிவது இந்தியாவில் மட்டுமே!! ஒன்று 2G வழக்கு மற்றொன்று இத்தாலியில் இருந்து வாங்க விருந்த ஹெலிகாப்டர் ஊழலில்.

இத்தனை நல்லவர்களான காங்கிரஸ் மற்றும் திமுக உடன் வியஜகாந்த் கூட்டணி ஏற்படுத்தினால் நாப்பதும் நமதே நாமமும் நமக்கே!! காவிரிக்கும் கரன்ட்டுக்கும் வழக்கம் போல உச்சநீதிமன்றத்தையே நாடலாம்2. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்குதாம். என்னத்த கண்காணிக்குது? கே.ஜி.பாலகிருஷ்ணன், தின்னகரன் மாதிரி நிறையா பேரு இருப்பாங்க போல். அந்த டிவி சேனல் மட்டும் இந்த ஆடியோ டேப்ப வெளியிடாடிட்டி இதையும் முடி மறைச்சுருப்பானுங்க. கூடிய சீக்கிரம் எல்லா ஆவணட்திஅயும் அழிச்சு கேசை ஒண்னும் இல்லாம பண்ணப்போறாங்க. திருட்டு பசங்க3. என்றைக்கு ராசாவை மட்டும் உள்ளே தள்ளி விட்டு, சிதம்பரம் அவர்கள் மீது குற்றம் இல்லை என்று நீதிபதி சைனி தீர்ப்பு அளித்தாரோ, அன்றே இந்த வழக்கை ஊத்தி மூடும் வேலை துவங்கி விட்டது.....ஆனாலும், உண்மை ஒரு நாள் வெளியே வந்தே தீரும் என்று நம்புவோமாக... 


1 comments:

Naanjil Peter said...

Good analysis. New information. Thanks