Tuesday, February 26, 2013

MURDER 3 - சினிமா விமர்சனம்மல்லிகா ஷெராவத் கிளாமரை நம்பி  ஹாலிவுட் கில்மா கம் சஸ்பென்ஸ் படமான UNFAITHFULL  படத்தை ரீமேக்கி மர்டர் பாகம் 1 எடுத்தாங்க , THE CHASER என்ற கொரியன் மூவியை  உல்டா பண்ணி மர்டர் 2 எடுத்தாங்க , இப்போ  The Hidden face   படத்தை ( கொலம்பியா) உல்டா பண்ணி  மர்டர் 3 எடுத்திருக்காங்க . மற்ற இரு பாகங்களை விட இது சஸ்பென்ஸ் , த்ரில்லிங்க் ஜாஸ்தி .

  ஹீரோ ஒரு ஃபேமஸ் ஆன ஃபோட்டோ கிராஃபர். அவரோட காதலி அவரை விட்டுப்போன சோகம் தாங்காம சரக்கு சங்கர லிங்கம் ஆகிடறாரு  .தண்ணி அடிக்க ரெகுலரா வர்ற பார்ல ஒரு ஃபிகரைப்பார்க்கறாரு, பார்ல ஒர்க் பண்ணுது . 


 ஹீரோ   கட்டதுர மாதிரி கடலை போட்டே  தன் சொந்தக்கதையை அள்ளி விட்டே அதை கரெக்ட் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து மேட்டரை முடிச்சிடறாரு .

இப்போ புதுக்காதலி ஹீரோ வீட்ல யாரோ பேய் அல்லது ஒரு தீய சக்தி நடமாட்டம் இருப்பதா உணர்றா. ஆனா போலீஸ் ஹீரோ மேல சந்தேகப்படுது. அவரோட முதல் காதலி காணாம போனதுக்கு காரணமே அவர் தான்னு நினைக்குது , கொலை பண்ணிட்டாரோன்னு சந்தேகப்படுது 


ஆனா சஸ்பென்ஸ் முடிச்சுகள் அவிழ அவிழ திரைக்கதை பட்டாசைக்கிளப்புது . எதிர்பார்க்காத திருப்பங்கள் படத்தின் பின்பாதியில் அசர வைக்குது .


 
 ஹீரோவா  ரன் தீப் , அண்ணனுக்கு முக்கிய வேலையே 2 ஃபிகர்களையும் கரெக்ட் பண்றதுதான். இதுக்கு லட்சக்கணக்குல சம்ப்ளம் வேற . கரும்பு தின்னக்கூலி . ஸ்டொமக் பர்னிங்க் . நடிக்க வெல்லாம் தேவை இல்லை, சும்மா வந்து நின்னாலே போதும்.


 ஹீரோயின்கள் 2 பேரு . 2 வது காதலியா வர சாரா லோரன்  தேங்காய் பர்பி மாதிரி இருக்குது . கடிச்சுப்பார்த்தியா?ன்னு எல்லாம் லாஜிக் கேள்வி கேட்கக்கூடாது . வழு வழுன்னு வெண்ணெய் தடவிய தேகம் . செம கலர் , லக்கி நெம்பர் 38.படத்தின் முன் பாதி பூரா இவர் ராஜ்ஜியம் தான் . பேய் இருக்கோன்னு நம்மையே நம்ப வைக்கும் அளவு இவர் ரீ ஆக்‌ஷன் இருக்கு. நல்லா வருவாங்க பிற்காலத்துல


 அடுத்த ஹீரோயின்அதிதிராவ் .ஒல்லியா இருக்கும் தர்பூசணிப்பழம் மாதிரி கலரு,பால்கோவா மாதிரி உடம்பு .( சரியான சாப்பாட்டு ராமண்டா நீ) இவர் நடிப்புதான் படத்தின் ஆணிவேர். படத்தின் மெயின் கேரக்டரே இவர் தான் ,அறைக்குள் மாட்டிக்கொண்டு துடிக்கும் துடிப்பென்ன? தன் கண் முன்னே காதலன் வேறொரு பெண்ணுடன் கில்மா பண்ணும்போது அடையும் வலி ,  என  அவர் காட்டும் முக பாவனைகள் அற்புதம் . தமிழ் சினிமா இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்தின் பின் பாதியில் பிரமாதமான சஸ்பென்ஸ் காட்சிகள் இருக்கு என்ற தைரியத்தில் முன் பாதியில் அசால்ட்டாக கதை சொல்லாமல் ஏதோ கில்மாப்படம் போல் காட்சிகள் வைத்தது . ஒரிஜினல் அளவுக்கு இல்லைன்னாலும் ஹிந்திக்கு இது நெம்ப ஓவருங்கோ


2. ஹீரோயின்  செலக்‌ஷன்ஸ் பிரமாதம் , தொப்பை இல்லாம , அதே சமயம் ஒல்லிப்பிச்சானாக இல்லாம நச் ஃபிகர் 2 பேரை புக் பண்ணி  முடிஞ்சவரை இருவரையும் பேலன்ஸ் பண்ணி ஐ மீன் காட்சிகளில்  பிரமாதப்படுத்தி இருப்பது


3.  படத்தின் பின்னணி இசை எனப்படும் பி ஜி எம்  பின் பாதியில் கலக்கல் ரகம் , ஒளிப்பதிவும் பக்கா


4. கதைக்களம் சவுத் ஆஃப்ரிக்கா அப்டினு சொல்லிக்கிட்டாலும்  படம் முழுக்க ஒரே வீட்டில் முடிச்சது லோ பட்ஜெட்டுக்கான இலக்கணம் , குறைந்த முதலீடு , நிறைந்த லாபம்


5. திகில் , சஸ்பென்ஸ் படங்கள் என்றால் பி ஜி எம் டொம் டொம்னு  அடிக்கனும் என்றில்லாமல் தேவையான இடங்களில் மட்டும் அதை யூஸ் பண்ணி பெரும்பாலான இடங்களில் அமைதியாய் அப்படியே விட்டது . அமைதியும் ஒரு இசையே என உணர்த்தியது


6. பாலிவுட்டின் டாப் 10 சஸ்பென்ஸ் த்ரில்லர் என ஒரு லிஸ்ட்  எப்போ எடுத்தாலும் இந்தப்படத்துக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. என்னோட முத கேள்வியே என்னோட ஜி கே வை வளர்த்துக்க , சும்மா தெரிஞ்சு வெச்சுக்க.. அதாவது முதன் முதலா அப்போதான் மீட் பண்ணும் ஒரு ஃபேமிலி ஃபிகரை பேசியே கரெக்ட் பண்ணி அன்னைக்கு  நைட்டே மேட்டரை முடிக்க முடியுமா?2. அறையில் மாட்டிய ஃபிகர் கண்ணாடி வழியே எல்லாத்தையும் பார்க்க முடியுது , ஆனா அவங்க கூப்பிடும் குரல் வெளில கேட்காது என்ற வரை ஓக்கே , அந்த கண்னாடியை உடைக்கக்கூட முடியாதா?  ரூம்ல சேர் டேபிள் இருக்கு . உடைக்க முடியாத கண்ணாடி என்பதை காட்டிக்கவாவது ஹீரோயின் முயற்சி பண்ணி தோற்பது போல் ஒரு காட்சி வெச்சிருக்கலாம் .


3. ஹீரோ மேல சந்தேகப்படும் போலீஸ்  ஹீரோ வீட்டை தரோவா செக் பண்ணி இருந்தா அந்த ரகசிய அறையை கண்டு பிடிசிருக்கலாமே?  அட்லீஸ்ட் வீட்டை செக் பண்ற மாதிரி கூட சீன் வெக்கலையே?


4. அறையில் மாட்டிக்கொண்ட ஹீரோயின் சாப்பிட , குடிக்க ஏதும் இல்லாம  எப்படி அத்தனை நாள் உயிரோட இருக்க முடிஞ்சுது?5. பல நாட்கள் பட்டினி கிடந்த ஹீரோயின் நெம்பர் 1  கொழுக் மொழுக் ஹீரோயின் நெம்பர் 2 வை திடீர்னு அவ்வளவு ஆவேசமா எப்படி தாக்கி வீழ்த்த முடியும் ? அவளே சொங்கிப்போய் இப்பவோ அப்பவோன்னு கிடக்கா


6. நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாத பாதாள அறைக்கு முதன் முறையா ஹீரோயின் 1 போகும்போது  சுத்தமா ரூம் இருக்கு , சிலந்தி வலை கட்டி  தூசும்  குப்பையும் இருக்கற மாதிரி காட்டி இருக்க வேணாமா? 


 மனம் கவர்ந்த வசனங்கள் 


 படத்துல வசனத்துக்கு வேலையே இல்லை , கொஞ்ச நஞ்ச வசனமும் ம் ம் ஹா ஹேய் அப்படி முக்கல் முனகல் வசனம் தான்
 ரேட்டிங்க் - 7 /10


 சி பி கமெண்ட் - சஸ்பென்ஸ் , திகில்  ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பிரமாதமான திருப்பம் உள்ள படம், இந்தப்படத்துக்கு தமிழ் நாட்டில் சரியான ஓப்பனிங்க் இல்லாததுக்குக்காரணம் மார்க்கெட்டிங்க் சரி இல்லாததே.. இந்தப்படம் கண்டிப்பா தமிழ்ல யாராவது ரீ மேக்குவாங்க ..

 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்

Film: Murder 3

Cast: Randeep Hooda, Aditi Rao Hyadri, Sara Loren, Rajesh Shringapure, Shekhar Shukla, Bugs BhargavaDirector: Vishesh BhattProducer: Vishesh Films, Fox Star Studios


Writer: Mahesh