Friday, February 08, 2013

குறும்பட இயக்குநர்களால் தமிழ் சினிமா சீராகுமா? சீரழியுமா? - ஆடுகளம் வெற்றி மாறன் பேட்டி

இது சினிமாவுக்கு நல்லதா...கெட்டதா ?

எஸ்.கலீல்ராஜா படம்: ஆ.வின்சென்ட் பால் 
தலை எங்கே என்று தெரியாத அளவுக்கு முகத்தைச் சுற்றி முடி வளர்ந்திருக்கும் புறா, ஆளைப் பார்த்ததும் படபடக்கும் பந்தயப் புறா, அச்சு அசலாக கோழியைப் போலவே இருக்கும் ஃபேன்ஸி புறா, பின் வாலைச் சிலிர்த்துக்கொண்டு அலையும் வெண்புறா என இயக்குநர் வெற்றிமாறனின் அலுவலகமே புறாக்களாலும், அதன் சத்தங்களாலும் நிரம்பியிருக்கிறது.''புறா வளர்க்கணும்னு ரொம்ப ஆசை. அதிலும் குறிப்பா பந்தயப் புறா. அப்போ வீட்ல கேட்டப்ப திட்டு விழுந்துச்சு. இப்போதான் சொந்தமா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன்ல... வளர்க்க ஆரம்பிச்சிட்டேன். எல்லாமே செம காஸ்ட்லி புறாக்கள். பார்க்கிறவங்களாம், 'என்ன... பந்தயப் புறா வெச்சுப் படம் எடுக்கப்போறீங்களா?’னு கேட்குறாங்க. இதுகளுக்குச் செலவு பண்ணின பணத்துக்கு, ரெண்டு படம் எடுத்தாத்தான் சம்பாதிக்க முடியும் போல!'' - கறுப்புத் தாடிக்குள் இருந்து பளீரெனச் சிரிக்கிறார் வெற்றிமாறன்.  


''சிம்புவோட சேர்ந்து 'வட சென்னை’ பண்ணப்போறதா சொன்னீங்க... ஒண்ணும் சத்தமே காணோம்?''''எல்லாரும் என்ன பிரச்னைனு கேட்கிறாங்க. எனக்கும் சிம்புவுக்கும் நடுவுல எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ல இருக்கோம். சிம்புவோட டேட்ஸ் கிடைக்கிறதுலதான் பிரச்னை. சீக்கிரமே எங்க காம்பினேஷன்ல படம் ரிலீஸ் ஆகும்.''


''தனுஷை வெச்சுத் திரும்பவும் படம் பண்றீங்கபோல?''''ஆமா. 'ஆடுகளம்’ வந்து ரெண்டு வருஷமாச்சு. நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் மூணு வருஷம் பக்கம் ஆச்சு. 'ஆடுகளம்’ முடிஞ்சதுமே நானும் தனுஷ§ம் வேற ஒரு படம் பண்ணிட்டு திரும்ப சேர்ந்து ஒரு படம் பண்றதுன்னு முடிவுபண்ணியிருந்தோம். தனுஷ் இல்லாம ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணேன். பட்ஜெட் செட் ஆகலை. இன்னொரு ஸ்க்ரிப்ட் பண்ண ஆரம்பிச்சதுமே, 'அதுக்கு தனுஷ்தான் ஃபிட் ஆவார்’னு தோணுச்சு. 'நாம நினைச்சது நடக்காதுபோல. நான் பண்ண ஸ்க்ரிப்ட் உங்களுக்குனு பண்ண மாதிரி இருக்கு’ன்னு சொன்னேன். கதை கேட்டுட்டு, 'நாமளே பண்ணலாம்’னு சொன்னார். மே மாசத்துல இருந்து ஷூட்டிங் போறோம்.''''ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் ஏன் இவ்ளோ இடைவெளி எடுத்துக்கிறீங்க?''''முப்பது வருஷம் நாம கத்துக்கிட்ட விஷயங்களை ஸ்க்ரிப்ட்டாப் பண்ணி முதல் படம் இயக்கிருவோம். அதுக்கு அப்புறம் புதுசா ஒண்ணு கத்துக்கணும். புதுசா ஒரு ஏரியா தெரிஞ்சுக்கணும்னா, அதுக்கு ஒரு வருஷம் தேவைப்படுது. அப்புறம் அதைப் படமா எடுக்க இன்னொரு வருஷம் தேவைப்படுது. இது என் ஸ்டைல். இது ஆளுக்கேத்த மாதிரி மாறலாம். என் ஃபிலிம் கேரியர்ல எத்தனை படங்கள் இயக்கினேன்னு சொல்றதைவிட, என்னென்ன படங்கள் இயக் கினேன்னுதான் சொல்ல விரும்புறேன். எனக்கு இன்னும் முப்பது வருஷம் கேரியர் இருக்குன்னா மொத்தமா 15 படங்கள்தான் இயக்குவேன். அது போதும் எனக்கு!'''' 'அதிர்வு’ன்னு ஒரு பதிப்பகம் ஆரம்பிச்சு புத்தகம் வெளியிட்டிருக்கீங்க. வாழ்த்துகள்!''''நான் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பேன். எல்லா மொழிகளிலும் வர்ற புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருவாங்க. அதனால உலகத்தோட விதவிதமான கலாசாரம், மொழி, வாழ்க்கை தொடர்பான சம்பவங்களை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும். நான் படிச்சுட்டு பிரமிச்சுப்போன நாவல்கள் பத்தி என் நண்பர்கள்கிட்ட சொன்னா, அவங்களுக்கு அது தெரியாம இருக்கும். ஏன்னா, பெரும்பாலும் எல்லா ரும் தமிழ்ல நாவல் படிக்கிறவங்களா இருந்தாங்க. அந்த நாவல்கள் தமிழ்ல வந்திருக்கான்னு விசாரிச்சா, அப்படி ஒரு முயற்சி நடக்கவே இல்லைன்னு தெரிஞ்சது. கல்லூரிக் காலத்தில் அலெக்ஸ் ஹேலி எழுதின 'ஸிஷீஷீts: ஜிலீமீ ஷிணீரீணீ ஷீயீ ணீஸீ கினீமீக்ஷீவீநீணீஸீ திணீனீவீறீஹ்’ புத்தகம் படிச்சேன். 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஆப்பிரிக்கன் அமெரிக்காவில் அடிமையா விற்கப்படுவதும் அதைத் தொடரும் சம்பவங்களும்தான் புத்தகம். அந்தக் கதை வாழ்க்கை மீதான என் பார்வையையே மாத்தி அமைச்சது. அந்த மாதிரி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புத்தகம் என்னைச் செதுக்குச்சு. அப்போ எல்லாம் 'ஐயோ... இந்தப் புத்தகம் தமிழ்ல இல்லையே’ன்னு நிறைய வருத்தப்பட்டிருக்கேன். கடைசியா என்னை உலுக்கின புத்தகத்தை 'ஓநாய் குலச்சின்னம்’னு மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கேன். முயற்சிகள் இன்னும் தொடரும்.''''இப்போ தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கு?''  
''வித்தியாசமா இருக்கு. 2002-க்கு முன்னாடி இருந்த சூழல், 2003-க்கு அப்புறம் இல்லை. ஏன்னா, அப்போதான் உலக சினிமாக்களோட திருட்டு டி.வி.டி. பர்மா பஜார்ல சுலபமா கிடைக்க ஆரம்பிச்சது. அதுதான் தமிழ் சினிமா போக்கையே அப்போ மாத்துச்சு. அதுக்கு முன்னாடி ஃபிலிம் சொசைட்டியில மாசத்துக்கு நாலஞ்சு உலக சினிமாக்கள்தான் பார்க்க முடியும். காதல், ஆட்டோகிராஃப் படங்கள் சொல்லப்பட்ட விதத்துக்கு உலக சினிமாக்கள் உண்டாக்கிய தாக்கம்தான் பலமான காரணம். அதே 2008-க்கு அடுத்து வந்த குறும்படக் கலாசாரம் தமிழ் சினிமாவை வேற பக்கம் திருப்பிவிட்டுருச்சு. யார்கிட்டேயும் உதவியாளரா இல்லாத, எந்தப் பயமும் இல்லாத புதுப் புது இளைஞர்கள் உள்ளே வர்றாங்க. பல வருஷமா உதவி இயக்குநர்களா இருக்கிறவங்களுக்கு நிறையப் பயம் இருக்கும். இந்த இளைஞர்களிடம் அது இல்லை. தைரியமா மோதி ஜெயிக்கிறாங்க. இது தமிழ் சினிமாவை நல்ல நிலைமைக்குக் கொண்டுபோகுமா... இல்லை மோசமான இடத்துக்குக் கொண்டுபோகுமானு தெரியலை. நான் அதைப் பத்தி யோசிக்கவும் இல்லை. பேசவும் இல்லை. அமைதியாக் கவனிச்சுட்டு இருக்கேன்!''


 நன்றி - விகடன்

0 comments: