Thursday, February 14, 2013

காதல் சினிமாக்களின் காதல் 'கட்’கள்

லவ் ஒன்லி!’ என்று உருகவிருக்கும் காதல் சினிமாக்களின் காதல் 'கட்’கள் இங்கே...

 
 படம்: 'நிமிர்ந்து நில்’
இயக்குநர்: சமுத்திரக்கனி
இடம்: வீடு / மாலை / உட்புறம்
நடிகர்கள்: அரவிந்தன் சிவசாமியாக 'ஜெயம்’ ரவி, பூமாரியாக அமலா பால், ராமாக சூரி.


சூழல்: அரவிந்தன் வீட்டுக்கு பூமாரி வருகிறார். அங்கே அரவிந்தனுடன் நண்பர் ராம் இருக்கிறார். அப்போது தன் காதலை பூமாரி சூசகமாக வெளிப்படுத்தும் காட்சி.

அரவிந்தனைப் பார்த்து பூமாரி பேசுகிறார்.

பூமாரி: இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு நல்லவன் தேவையில்லை. வல்லவன்தான் தேவை. நல்லவனைப் பார்க்கலாம். ரசிக்கலாம். ரோல் மாடலாக்கூட எடுத்துக்கலாம். ஆனா, கூட இருந்து குடும்பம் நடத்த முடியாது.

அரவிந்தனும் ராமும் பூமாரியைப் பார்க்கின்றனர். பூமாரி தொடர்ந்து பேசுகிறார்.

பூமாரி: என்னையே எடுத்துக்குங்க. தினமும் நான் குறைஞ்சது பத்து பொய்யாச்சும் சொல்வேன்.

சூரி: மேக்சிமம்?

பூமாரி: அதைக் கணக்குவெச்சிக்குறது இல்லை
.
ராம்: சூப்பர்... கன்டினியூ!

பூமாரி: நாலு பேர் கிண்டல் பண்ணா, அதுல ஒருத்தனைப் பார்த்து சும்மா சிரிப்பேன். அப்போதான் அடுத்த நாள்ல இருந்து அந்த மூணு பேர்கிட்ட இருந்து அவன் என்னைக் காப்பாத்துவான். நான் சிரிச்சது பொய்தான். ஆனா, சிரிக்கணும்.

ராம்: கரெக்ட். அப்பதான் உன் வண்டி ஓடும்.


பூமாரி: ஒரு பொண்ணு காலையில வீட்டை விட்டுக் கிளம்பிப் போன மாதிரி திரும்ப வீட்டுக்குள்ள வரணும்னா, பார்க்குற எல்லார்கிட்டயும் கொஞ்சம்தான் உண்மையா இருக்கணும். நிறைய நடிக்கணும்.  


ராம்: சுத்தத் தங்கம் வேலைக்கு ஆகாது. கொஞ்சம் செம்பு கலந்துட்டா, நகை நட்டு செஞ்சுப் போட்டுக்கலாம்.


அரவிந்தன் முழிக்கிறார்.

ராம்: கறுத்துரப் போகுது. மேட்டருக்கு வா.

பூமாரி அரவிந்தனிடம்...  

பூமாரி: உன்னை மாதிரி நேர்மையா, உண் மையா வாழ்றது ரொம்பக் கஷ்டம். அட்லீஸ்ட் உன்கூடயாவது வாழலாமேனு நினைக்குறேன்.

அரவிந்தன் இதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சி யாவது...  


ராம்: தென்னிந்தியாவிலேயே 'நான் உன்னைக் காதலிக்கிறேன்’னு இவ்ளோ ஈஸியா எக்ஸ்போஸ் ஆனது நீதான்.


பூமாரி: சாம்பிராணி போட்டாச்சுன்னா, கிளம்பு.


சூரி: யாரு?

பூமாரி: நீதான் பிரதர்.

ராம்: கண்ணைக் காட்டினாலே கிளம்பி இருப்பேன்ல. ஏன் இப்படி அசிங்கப்படுத்துற?


படம்: 'எதிர் நீச்சல்’
இயக்குநர்: துரை செந்தில்குமார்
இடம்: கார்டன் ஹோட்டல் / பகல் / உள்புறம்
நடிகர்கள்: ஹரிஷாக சிவகார்த்திகேயன், கீதாவாக ப்ரியா ஆனந்த்.
சூழல்: கீதாவிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, மொபைல் நம்பர் கொடுக்கும் வரை வருகிறான் ஹரிஷ். அவளிடம் தன் காதலை எப்படிச் சொல்வது என ஹரிஷ் யோசித்துக்கொண்டு இருந்த வேளையில், கீதாவே ஒரு நாள் இரவு ஹரிஷைத் தொலைபேசியில் அழைத்து, மறுநாள் கார்டன் ஹோட்டலுக்கு வரச் சொல்கிறாள். வந்த இடத்தில் இருவருமே எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற தவிப்போடு இருக் கின்றனர்.


தயக்கத்துடன் கீதா: உங்க வீட்ல மொத்தம் எத்தனை பேரு?


ஹரிஷ்: யாரும் இல்லீங்க. நான் மட்டும்தான்.

கீதா: ஓ... எங்க வேலைனு சொன்னீங்க?

ஹரிஷ்: மார்க்கெட்டிங்ல இருக்கேன். மாசம் 15 ஆயிரம் வாங்குறேன். அடுத்த மாசம் இன்க்ரிமென்ட் வேற இருக்கு. இப்பவே கல்யாணம் பண்ணுனாக்கூட ஃபேமிலியை ரன் பண்ற அளவுக்கு வசதியாதான் இருக்கேன்.


கீதா (லேசான புன்னகையுடன்): குட்... ஒண்ணுமில்ல. நாம மீட் பண்ணி கொஞ்ச நாள் தான் இருக்கும்... அதுக்குள்ள இதைச் சொல்ற துக்கு ஒரு மாதிரி இருக்கு.


ஹரிஷ் தான் சொல்ல வந்த காதலை அவளே சொல்லப்போகிறாள் என்ற சந்தோஷத்தில் வேகமாக...


ஹரிஷ்: ஹைய்யோ... இதுல என்னங்க இருக்கு... என்னைக்கு இருந்தாலும் சொல்லித்தானே ஆகணும்.


கீதா: ஆமா... இருந்தாலும் ரொம்ப சீக்கிரமோனு மனசுக்குப் படுது.
ஹரிஷ்: இதுல என்ன இருக்கு... நீங்க சும்மா சொல்லுங்க. நான் எப்படியும் ஓ.கே-ன்னுதான் சொல்லப்போறேன்.


கீதா அப்போதும் தயங்க...

ஹரிஷ்: ஏதாவது உங்க லைஃப் விஷயமா?

கீதா: அதெப்படி கரெக்டா சொல்றீங்க. ஆனா, என் லைஃப் இல்ல. உங்க லைஃப்... என்று கூறி விட்டுத் தன் கைப்பையில் இருந்து எதையோ எடுக்கிறார்.
ஹரிஷ் (தனக்குள்): க்ரீட்டிங் கார்டு, லெட்டர், ரோஸ்...

சில ஃபைல், டாக்குமென்ட்களை எடுத்து டேபிள் மீது வைக்கிறாள் கீதா.

கீதா: ஆக்ச்சுவலி நான் எல்.ஐ.சி-ல ஏஜென்டா இருக்கேன். வேலைக்கு நடுவுல இதை பார்ட் டைமாப் பண்றேன். நீங்க எனக்காக ஒரு பாலிசி எடுக்க முடியுமா?
அந்தத் திகீர் தாக்குதலில் அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் முழிக்கிறான் ஹரிஷ்.

படம்: 'பூலோகம்’
இயக்குநர்: கல்யாண கிருஷ்ணன்
இடம்: டிபன் கடை/ பகல்/ உள்புறம்
நடிகர்கள்: பூலோகமாக 'ஜெயம்’ ரவி, சிந்துவாக த்ரிஷா.
சூழல்: எங்கோ வெளியே சென்றுவிட்டு டிபன் சென்டருக்குத் திரும்பும் சிந்து, 'சாப்பிட வா’ என சைகை மூலம் பூலோகத்தை அழைக் கிறார். பூலோகம் கடைக்கு வருகிறார். வழக்க மான வாடிக்கையாளர்கள் சாப்பிடும் இடத்தில் அமராமல், ஃபேமிலி ரூம் போன்ற இடத்தில் அமர்கிறார். சிந்து பரோட்டா, பாயா பரிமாறு கிறார்.  

பூலோகம்: எதுக்கு இவ்ளோ சீக்கிரம் சாப்பிட வரச் சொன்னே?

சிந்து: இனிமே சீக்கிரமா சாப்பிட வா. உன்னால எனக்கு காலேஜுக்குப் போக லேட் ஆகுது.

பூலோகம்: சரி... சரி... எங்கே போய்ட்டு வர்ற?

சிந்து (குரலில் குழைவு சேர்த்துக்கொண்டு): டாட்டூ வரைஞ்சுட்டு வர்றேன். உன்னோட ஒவ்வொரு பாக்ஸிங் போஸையும் என் உடம்புல டாட்டூவா வரைஞ்சுக்குவேன்.

பூலோகம்: எங்கே டாட்டூ வரைஞ்சிருக்கே?

சிந்து: அதெல்லாம் காட்ட மாட்டேன்பா...

பூலோகம்: சும்மா காட்டு.

சிந்து: எங்கே எல்லாம் இருக்குன்னு கரெக்டா சொன்னா, நானே காட்டுறேன். ஆறேழு இடத் துல உன் படத்தை வரைஞ்சிருக்கேன். எங்கேன்னு சொல்லு பார்ப்போம்?

பூலோகம்: என் படத்தை நான் பார்க்குறதுக்கு உன்கிட்ட ஏன் பெர்மிஷன் கேட்கணும்? நானே பார்த்துக்குறேன்!
சிந்துவை இழுத்துப் பிடித்து டாட்டூக்களைப் பார்க்க முயற்சிக்கிறார். சிந்து கைகளால் தடுக் கிறார்... சிரிக்கிறார். 'வேண்டாம்’ என்றவாறு தள்ளி விலகி நிற்கிறார். பிறகு ஓடுகிறார்.
டூயட் பாடல்....   

படம்: மூன்று பேர் மூன்று காதல்
இயக்குநர்: வஸந்த்
இடம்: உணவகம்/பகல் /உள்புறம்
நடிகர்கள்: வருணாக விமல், ரம்யாவாக லாசினி
சூழல்: ஒரு உணவகத்தில் வைத்து ரம்யாவிடம் தன் காதலை வெளிப்படுத்த முயற்சிக்கிறார் வருண்.
ரம்யா தான் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்து அமர்கிறார். அதுவரை ரம்யாவை தூரத்தில் இருந்து ரசித்துக்கொண்டு இருக்கும் வருண், ரம்யா அமர்ந்ததும் அவரிடம் வருகிறார்.

வருண்: ஹாய் ரம்யா...

ரம்யா: ஹலோ...

வருண்: தனியா உக்காந்து சாப்பிடுறதைப் பார்த்தேன்.

ரம்யா: அதனால உங்களுக்கு என்ன பிராப்ளம்?

வருண்: நானும் தனியாதான் சாப்பிடணும்.

ரம்யா: சாப்பிடுங்க. அதனால என்ன?

வருண்: இல்ல. 'அழகான ரெண்டு பேர் எதுக்கு தனித்தனியா சாப்பிடணும்?’ அப்படினு
உங்ககிட்ட கேட்கலாம்னு பார்த்தேன்.
கேட்கட்டுமா?

ரம்யா: கேட்காதீங்க... வேணாம்!

வருண்: நான் கம்பல் பண்ணலீங்க. இது என் ரெக்வெஸ்ட். நீங்க ஆர்டர் பண்ணதை நீங்க சாப்பிடுங்க. நான் ஆர்டர் பண்ணதை நான் சாப்பிடுறேன். ஒரே டேபிளை ஷேர் பண்ணிக்கலாம்.

ரம்யா: ஒரே ரெஸ்டாரன்ட்டை ஷேர் பண்ணிக்குறோம்ல. அது போதும்!

வருண்: கடைசியா நீங்க சிரிச்சுக்கிட்டே பதில் சொல்ற மாதிரி ஒரு கேள்வி கேட்டுட்டுப் போயிடவா?

ரம்யா: சீக்கிரம்... சட்டுபுட்டுனு கேட்டுட்டுக் கிளம்புங்க!

வருண்: ஒரு நாளைக்கு ஒருத்தரையே 86,400 தடவை நினச்சா என்னங்க அர்த்தம்?

ரம்யா: என்ன அர்த்தம்?

வருண்: ஒவ்வொரு செகண்டும் அந்தப் பொண்ணையே நெனச்சுக்கிட்டு இருக்கேன்னு அர்த்தம். என்ஜாய் யுவர் மீல்!
சொல்லிவிட்டு நடந்து செல்லும் வருண், மீண்டும் ரம்யாவிடம் வருகிறார்.

வருண்: ரம்யா ஹெல்த் மேகசின்ல படிச்ச ஒரு டிப்ஸ் சொல்றேன். கேட்டுக்கோ... இப்படி தனியா உக்காந்து சாப்பிட்டா கிட்னில பிராப்ளம் வருமாம்.
உடனே அடக்க முடியாமல் ரம்யா சிரித்து விட, அந்த நேரத்தில் வருண் நைஸாக ரம்யா வுக்கு எதிர் இருக்கையில் அமர முயற்சிக்கிறார். உடனே ரம்யா சிரிப்பை மறைத்துக்கொண்டு கோப ரியாக்ஷன் காட்டிப் பேசுகிறார்.  

ரம்யா: நான் சிரிச்சது ஜோக்குக்கு!

வருண்: ஜோக் என்னுதுதானே!
ரம்யா மறுபடியும் சிரிக்கிறார். வருண் சிரித்துக் கொண்டே அந்த இடத்தில் இருந்து நகர்கிறார்.
கட் செய்தால் ட்ரீம் சாங்... ரம்யா புல்வெளி, மலைப் பகுதியில் தனியே நடக்கிறார். காதலை நினைத்து ரசிக்கிறார்... சிரிக்கிறார்.thanx - vikatan

0 comments: