Monday, February 25, 2013

ஹரிதாஸ் - சினிமா விமர்சனம்பாலுமகேந்திரா வின் வீடு , சந்தியாராகம் மாதிரி  கலை அம்சம் பொருந்திய படங்கள் வருவது அபூர்வம் , அதே போல்  மகேந்திரன் -ன் உதிரிப்பூக்கள் மாதிரி பிரமாதமான ஆர்ட் ஃபிலிம்  கம் கமர்ஷியல் படங்கள் வருவதும் குறைவே. தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப்பின் மனதை கனக்க வைக்கும்  கதைக்கருவுடன் களம் இறங்கி இருக்கும் இயக்குநருக்கு வாழ்த்துகள் .

 அமீர்கான் -ன் தாரே ஜமீன் பர் ( ஆகாய நட்சத்திரம் பூமியின் மேல் )  ஹிந்திப்பட கதைக்கருவான ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை  வளர்ப்பு பற்றிய கதை ஒரு டிராக். அப்படி எடுத்தால் படம் டாக்குமெண்ட்ரி ஆகி விடக்கூடிய அபாயம் இருப்பதால் கமர்ஷியலுக்காக சூர்யாவின் காக்க காக்க , அப்புறம் தெலுங்கு ப்படமான ஹிட் லிஸ்ட் இரண்டின் கதைக்கருவான என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் கதை  இன்னொரு டிராக்கில் . இரண்டையும் பிரமாதமாக இரட்டைத்தண்டவாளமாக ( தண்ட வாளம்னாலே இரட்டை தானே? ) கொண்டு போவதில் இயக்குநருக்கு வெற்றி .


ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர். என்கவுன்ட்டர் ஸ்பெஷ;லிஸ்ட். மனைவியை இழந்தவர் . அவருக்கு ஒரு பையன் . தான் என்ன செய்யறோம், என்ன செய்யனும் என்பதை அறியாத  ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை அவன்.  அவனை எப்படி அவர் வளர்க்கறார்  என்பதே திரைக்கதை .
 
 ஹீரோ கிஷோர் . ரகுவரன், பிரகாஷ் ராஜ்க்குப்பின் தமிழ் சினிமாவின் பிரமாதமான கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.  இயல்பாகவே இவர் ஜிம் பாடி என்பதால் பெரும்பாலும் இவருக்கு கோச் , போலீஸ் ஆஃபீசர் ரோல் தான் கிடைக்குது . இந்தப்படத்தில் குணச்சித்திர நடிப்பில் மனிதர் பிய்ச்சு உதறிட்டார் . போலீஸ் ஆஃபீசராக வரும்போது அவர் பாடி லேங்குவேஜ் , குழந்தை அருகில் இருக்கையில் ஒரு அப்பாவாக குழையும் நடை என  பின்னிப்பெடல் எடுக்கிறார் . 


ஹீரோயினாக சினேகா . மேரேஜ் ஆகி விட்டதால் தமிழனின் அடிப்படை நாகரீக குணப்படி ( அதாவது மேரேஜ் ஆன பொண்ணை வர்ணிப்பதோ , சைட் அடிப்பதோ கூடாது , வீ வாண்ட் ஒன்லி ஃபிரெஸ் )  சினேகாவை வர்ணிக்கலை . டீச்சர் ரோலில் ஆல்ரெடி தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் படத்தில் பிரமாதமாய்  நடிச்சிருந்தாலும் இதிலும் அழகாக நடிச்சிருக்கார் . ரீ எண்ட்ரி பிரசன்னாவாக சாரி பிரசன்னமாக வாழ்த்துகள் 


அந்தக்குட்டிப்பையன் பிரிதிவிராஜ் தாஸ் செம ஆக்டிங்க் . ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் முக பாவத்தை உள் வாங்கி ஹோம் ஒர்க் பண்ணி நடிச்சிருக்கான் . அவனுக்கும் , அவனை இயக்கிய இயக்குநருக்கும் ஒரு ஷொட்டு ( பையனின் பெற்றோர் திருஷ்டி சுற்றிப்போடவும் , 2013ன் சிறந்த குழந்தை நட்சத்திர விருது உறுதி ) 


 இந்த 3 கேரக்டர்கள் போக யாருமே எதிர்பார்க்காத வகையில் ஸ்கூல் ஹெச் எம்மாக வரும் புது முகம் பிரமாதப்படுத்தி விட்டார் , சிடு சிடு வென்ற பேச்சு , ஓங்கி உயரும் குரல் என எல்லோருக்கும் அவரவர் மனைவியை  நினைவுபடுத்தி பயப்படுத்தும் கேரக்டர் . வெல்டன்

 சினேகாவின் தங்கையாக வரும் ஃபிகர் கவனிக்க வைக்கிறார், சினிமாத்தனம் இல்லாத மேக்கப் அதீதம் இல்லாம இயல்பான  முகம்

 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 1. இந்த மாதிரி படங்களுக்கு ஒளிப்பதிவும் , இசையும் இரு கண்கள் . இரண்டும் பிரமாதம் .  குறிப்பா படத்தின் பின் பாதியில் வரும் 30 நிமிடங்கள் பின்னணி இசை பட்டாசு , ஒளிப்பதிவு மத்தாப்பு . அந்தப்பையன் ரேஸ் கிரவுண்டில் குதிரைகளைப்பார்த்து குதூகலிப்பது செல்லுலாயிடு கவிதை


2. அன்னையின் கருவில்  கரையாமல் பிறந்தாயோ  பாடலில் படப்பிடிப்பு , எடிட்டிங்க் , கேமரா கோணம் எல்லாம் அருமை . பீச் மணல் ஓரம் வெள்ளை உடையில் வருவது கண்களுக்கு குளிர்ச்சி . வெள்ளக்குதிரை பாடல் காட்சியும் அதே போல் 3,. யுவன் யுவதி, புத்தகம் பட தயாரிப்பாளரின் 3 வது படம் இது , நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி ஆகிய படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேல் இன் இயக்கத்தில் வரும் 3 வது படம் . மற்ற 2 படங்களில் மற்றவர் கதையை இவர் இயக்கினார், இதுதான் அவர் கதை திரைக்கதை வசனத்தில் இயக்கும் முதல் படம் . இந்த ஒரு படத்தால் அவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் அந்தஸ்து பெற்று விடுவார். திரைக்கதை அறிவு இவரிடம் பிரமாதம்


4. கனமான கதைக்களத்தில் ரிலாக்ஸ்க்காக புரோட்டா சூரியின் காமெடி , டீச்சர் காதல் பிரமாதமாக கை கொடுக்கலைன்னாலும் நாட் பேட்.. 


5. ஓப்பனிங்க்கில் வரும் என்கவுண்ட்டர் சீன் செம . என்ன நடக்குமோ என்ற திகிலை  கூட்டி விடுது . என்கவுண்ட்டர் செய்யப்படும் ஆள் தன் குடும்பத்துடன் இருப்பது சுவராஸ்யத்தை கூட்டி விடுது 


6. க்ளாஸ் ரூமில் ஹீரோ தன் பையனுடன் அமர்ந்த பின் சினேகாவால் முன் போல் இயல்பாக பாடம் நடத்த முடியாமல் போவதும் அடுத்த நாள் சுடிதார் அணிந்து வருவதும் , பசங்க கிண்டல் செய்வதும் கவிதை இயக்குநரிடம் சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள் 


1. வெளீல கூட்டிட்டு வந்த இடத்துல குழந்தையைக்காணோம். இன்சார்ஜ் ஆக இருக்கும் டீச்சருக்கு பதட்டம் இருக்கும், பயம் இருக்கும், பெற்றோர்கள் வந்து கேட்டா என்ன பதில் சொல்வது என்ற பயமும் , மேலிடம் நடவடிக்கை எடுப்பாங்க்ளே என்ற எண்ணமும் வரும் . இவ்வளவுதான் அந்த டீச்சர் கேரக்டர் காட்ட வேண்டிய உணர்ச்சி . ஆனால் அந்தப்பையன் காணாம போனதும் சினேகா காட்டும் முக பாவனைகள் , 13 நிமிட அழுகை ஓவர் டோஸ் . பிரமாதமா  நடிச்சிருந்தாலும் மிகை நடிப்பே .. ஏன்னா ஹீரோ மேல அப்போ அவருக்கு காதல் இல்லை , அந்தப்பையன் மேல அட்டாச்மெண்ட்டும் இல்லை . அதுக்குப்பின் தான் அட்டாச்மெண்ட் வருது . ஆனா அவர் அழுகைல  ஓவர் செண்ட்டிமெண்ட் இருக்கு . கொஞ்சம் லிமிட் பண்ணி இருக்கனும்2.   என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டா வரும் போலீஸ் ஆஃபீசர்கள் எல்லாருமே தாடியுடன் , பரட்டைத்தலையுடன் இருப்பது ஏன்? அவங்களே ரவுடி மாதிரி இருக்காங்க . ஹீரோ மட்டும் தான் போலீஸ் கட்டிங்க் ( இயற்கையாவே அவருக்கு  அப்டி )


3.  போலீஸ் துதி பாடும் உச்சி வெய்யில் பாட்டு எடுபடலை . போலீஸ் மேல மக்கள் செம காண்ட்ல இருக்காங்க . பாடல் வரிகள் ஜெ வை புகழும் ஓ பி எஸ் வார்த்தைகளா ஓவர் உயர்வு நவிற்சியா இருக்கு 


4.  ஹீரோ நீண்ட விடுப்பில் இருக்கும்போது  தினமும் போலீஸ் ஜீப் , போலீஸ் டிரைவர் வந்து பிக்கப் பண்ணிக்கறாரே? எப்படி? சட்டத்துல அதுக்கு இடம் இருக்கா? 


5. ஹீரோ முதன் முதலாக ஹீரோயின் வீட்டுக்கு வரும்போது சினேகாவின் கண்களில் ஓவர் உற்சாகம், பரவசம் ஏன்? அப்போ அவர் மனசுல காதல் இல்லையே?


 


6. சினேகாவுக்கு ஹீரோ பர்சனலா கால் பண்ணும்போது சினேகா தன் அம்மா, தங்கை முன் ஸ்பீக்கர் ஃபோனில் போட்டு விடுவது ஏத்துக்கற மாதிரி இல்லை . 


7. ஹீரோவோட நண்பர் காணாமப்போன விசாரனையில் ஒரு வசனத்தில் பஸ்ல ஒரு சீட்ல ஆள் இல்லாததால் டிரைவர், கண்டக்டர் 2 பேரும் இறங்கித்தேடியதாகவும், பயணிகள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க எனவும் ஒரு வசனம் வருது . எந்த பஸ் டிரைவர் அப்டித்தேடி இருக்கார்? நிஜத்தில் கண்டக்டர் மட்டும் சும்மா குரல் கொடுப்பார் , அப்புறம் விசில் ஊதிடுவார்./. 8. போலீஸ் ஆஃபீசர் கிஷோர்க்கு சல்யூட் அடிக்கும்போது எப்பவும் அந்த 4 பேர்ல 2 பேர் போலீஸ் சல்யூட்டும் 2 பேர் ஆஃபீஸ்ல நாம டேமெஜருக்கு ஒப்புக்கு சப்பாணி விஷ் பண்ணுவமே அப்படி விஷ் பண்றாங்க9. கிஷோர்  வீட்டில் ரிலாக்சா இருக்கும்போதும், நடு ராத்திரிலயும் , எப்பவும் பேண்ட் சர்ட்டோடயே இருக்காரே? காசுவலா  ( CASUAL) இருக்கவே மாட்டாரா?


10. சின்சியர் ஆஃபீசரான கிஷோர் 6 மாசம் லீவ் கேட்கும்போது ஹையர் ஆஃபீசர் மறுப்பதும் , அதுக்காக  வேலையை ரிசைன் பண்ணிடுவேன்னு மிரட்டுவதும்  ஏத்துக்க முடியல . ஹையர் ஆஃபீசர் லீவ் தர்லைன்னா  கோர்ட் உதவியை நாடலாம்.


 மனம் கவர்ந்த வசனங்கள் 


1. ஏற்கனவே ஹீரோவா இருக்கறவங்களைத்தான் எல்லாரும் ஹீரோவா பார்ப்பாங்க, ஆனா நான் எங்கப்பாவை ஹீரோவா பார்க்கறேன்2.  டீ போடப்பா

 எத்தனை?

 ஒரு ஆள் எத்தனை டீ குடிப்பான்?


 சொல்ல முடியாது , சிலர் 3 டீ எல்லாம் குடிச்சிருக்காங்க


3.  என்கவுண்ட்டர் ஆஃபீசர் டூ ரவுடி - உனக்கு பால் தானே? சொல்லியாச்சு


4. திருந்தனும்னு நினைக்கிறவன் மறுபடி மறுபடி மன்னிப்பு கேட்க மாட்டான்”


5. டேய் . நீ திருந்தவே மாட்டியா?

 நாங்க எல்லாம் ஆம்பளைங்க, அப்படித்தான்6.  பகல் கனவு பலிக்காது எப்பவும்


 ம்க்கும், எப்பவும் என் கனவையே என்கவுண்ட்டர் பண்ணுங்க7.  ஒவ்வொரு அரிசிலயும் பேர் இருக்கும்பாங்க , அவன் பேருக்கான தோட்டா என் கிட்டே இருக்கு


8. ஆளைச்சுடறது மட்டும் அவங்க , ஆம்லெட்டைச்சுடுவது மட்டும் நான் 


9. 'நாங்கெல்லாம் ஒரே டீம்...


 கிரிக்கெட் டீமா?


 என்கவுன்ட்டர் டீம்.


இது என் கவுன்ட்டர்',


10.  ஆட்டிசம்கறது டிசீஸ் இல்லை , டிஸ் ஏபிலிட்டி 11.  நீங்க அதை பொம்மையா பார்க்கறீங்க , அவன் அதை குதிரையாவே பார்க்கறான்12.  என்னடா? டீச்சர் துப்பட்டா எல்லாம் போட்டுட்டு வந்திருக்காங்க?


 தெரியலடா


13.  பள்ளிக்கூடத்துலயே மாங்கா அடிக்கறியே , டீச்சர் திட்ட மாட்டாங்க ?

 அடிக்கறதே டீச்சருக்காகத்தான்14,.  எல்லா மூஞ்சியும் காஞ்சு போன பெயிண்ட் டப்பா மாதிரி இருக்கு , ஒரு ஃபிகர் கூட தேறாது15.  சட்டமும் சாமியும் எல்லாருக்கும் ஒண்ணுதான்16.  நம்ம பொழப்பு எட்டிப்பார்த்த நாய் ஏரில விழுந்த கதை ஆகிடுச்சு 17.  டீச்சர் ,  ஹரியோட அப்பா வோட ஃபோன் நெம்பர் நான் வாங்கி வெச்சிருக்கேன் , பேசறீங்க்ளா?

 நீ எதுக்கு அதை வாங்கி வெச்சிருக்கே?


 எல்லாம் ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்திக்கத்தான்18. பார்த்தும் பார்க்காதது மாதிரி இருக்கீங்க்ளே?


 இல்லையே பார்த்துட்டுத்தானே இருக்கேன்


 இதை எப்படி எடுத்துக்க?

 எப்படி வேணாலும்  எடுத்துக்கோ , ஆனா என் உயிரை எடுக்காதே19. வலியும் , வேதனையும்  வெளில இருந்து பார்க்கறவங்களை விட  அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்20. ”விழுந்தாத்தான் எழுந்துக்கிறது எப்படின்னு தெரியும்”


 21. அவர் தான் கோச் இப்படி பேசறவன் வெறும் காக்ரோச்'


22. கோச், டாக்டர் மாதிரி பேசுறாரு.. டாக்டர், கோச் மாதிரி பேசுறாரு..


23.
'நல்லத மட்டுமே நெனைக்கணும்னு சொல்லிட்டு நீங்க ஏன் சார்..?இப்படி...


24. வாழ்க்கைல ஜெயிக்கறதுக்கு தகுதியை விட தன்னம்பிக்கைதான் அதிகம் வேணும்


25.  அந்தாளு கோச்சா? கார் மெக்கானிக்கா?


26.  எல்லாக்குழந்தைகளுக்கும் அவங்கப்பா தான் முத ஹீரோ , முடியாதுன்னு நினைச்ச  என்னை விட முடியும்னு நினைச்ச நீங்க தான் அவனுக்கு பெஸ்ட் கோச் 
 எதிர்பார்க்கப்படும்  ஆனந்த விகடன் மார்க்  - 50
 குமுதம் ரேங்கிங்க் - நன்று
 ரேட்டிங்க் - 8 /10 சி பி கமெண்ட் - 1000 குற்ற வாளிகள்  தப்பிக்கலாம், ஆனா ஒரு நிரபராதி  தண்டனை பெற்று விடக்கூடாது என்பது மாதிரி , படம் ரிலீஸ் அன்னைக்கே ரிசல்ட் கேட்காம போய் 1000 குப்பை படங்களை நாம பார்த்து ஏமாந்திருக்கலாம், ஆனா ஒரே ஒரு நல்ல படத்தைக்கூட பார்க்காம மிஸ் பண்ணிடக்கூடாது , அப்படி ஒரு படம் தான் ஹரிதாஸ் . டோண்ட் மிஸ் இட் . குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் செல்லலாம்., தன்னம்பிக்கை ஊட்டும் வாழ்க்கையைத்தரும் படம் . ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்

டிஸ்கி - இந்தப்படத்துக்கு 1. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது 2. சிறந்த  இயக்கம் 3 , சிறந்த திரைக்கதை   4. சிறந்த மாநிலப்படத்துக்கான ஸ்பெஷல் விருது   என 4 விருதுகள் நிச்சயம்

வீடியோ விமர்சனம்
 

3 comments:

Unknown said...

க‌ட‌ந்த இர‌ண்டு மாத‌ங்க‌ளில் ந‌ல்ல‌ பட‌மாக‌ வ‌ந்து இருப்ப‌து இதுதான்.

வாழ்த்துக்க‌ள் த‌ங்க‌ள் விம‌ர்ச‌ன‌த்திற்க்கு..

Kannada Cinemaas said...

வரவேற்க வேண்டிய படம்..விமர்சனம் பிரமாதம்..

அமலாபாலின் உதட்டு முத்தமும் கவர்ச்சி ஆட்டமும்

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் நன்றாக இருக்கு.
பார்க்க வேண்டிய படம். நன்றி பகிர்வுக்கு.