Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Saturday, December 20, 2014

கிரேசி மோகன் , எஸ் வி சேகர் இருவரும் இணைந்து ஒரே மேடையில் நாடகம் போட்டா..-கிரேசியைக் கேளுங்கள் 13

இரா முருகன், செ-17.
தனியார் துறை, அரசுத் துறை... உங்கள் பார்வையில்?
அரசுத்துறையில், ஏதாவது குறை இருந்து ஆராய்ச்சி மணி அடித்தால் அடுத்த நிமிடமே ‘குறையொன்றுமில்லை கோவிந்தா’ என்று நாம் பாடும் அளவுக்கு ஆஜர் ஆவார்கள்.
தனியார் துறையில் நாம் நமது குறையை ஒரு நம்பருக்கு போன் செய்து சொன்னால்… அவர்கள் வேறு நம்பர் கொடுத்து பேசச் சொல்வார்கள். பேசினால் ‘நீங்கள் நிரந்தர வாடிக்கையாளர் என்றால் எண் ஒண்ணை அழுத்தவும். இனிமேல்தான் வாடிக்கையாளர் என்றால் எண் இரண்டை அழுத்தவும். இரண்டுமே இல்லை என்றால் எண் மூன்றை அழுத்தவும். பிறகு, என்னை அழுத்தவும்...
அப்பாலே உன்னையே அழுத்தவும்’ இப்படி பதிவு செய்யப்பட்ட பேச்சு ‘அழுத்திப் பிடி’ வைத்தியம் கூறிக் கொண்டேயிருக்கும். கடைசியில் ‘ஊப்ஸ்... உங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்று சொல்லி இணைப்பு கட் ஆகும். இந்த விளையாட்டில் போன் வைத்து பேசிய நம் காது சிவந்து ‘மெட்ராஸ் ஐ’ போல ‘ மெட்ராஸ் EAR’ ஆகிவிடும்!
கி.மனோகரன், பொள்ளாச்சி.
சுஜாதாவுக்கு கிரேசியின் ‘இரங்கல் வெண்பா’!
‘கதையா கவிதையா கட்டுரையா - கேட்போர்க்(கு)
எதையும் அளித்த எழுத்துப் -புதையலே
ஏ ரங்க ராஜரே, ஸ்ரீரங்க தேவதையே
பார்இங்கு நீரின்றி பாழ்’
ஆத்திகம் - நாத்திகம்... ஓர் லேசான அலசல் ப்ளீஸ்?
ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே இறுதி முடிவை நோக்கிச் செல்லும் யாத்ரீகம்.
முருகருக்கு மயில். பிள்ளையாருக்கு மூஞ்சூறு. பெருமாளுக்குக் கருடன். அது மாதிரி, நமக்கும் ஒரு வாகனம் உண்டு. அதுதான் கடவுள். Our Vehicle Is GOD. அதில் நமது பாரத்தை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக நாம் சவாரி பண்ணலாம். Free Will Driving.
சத்தியம், தர்மம், மனிதாபிமானம், போன்ற சிக்னல்களுக்குக் கட்டுப்பட்டு, ஒழுங்காக நாம் ஓட்டினால் We Will Reach The Destination Without Any Accident. இதுதான் என் வீட்டில் எங்க தாத்தா, எங்க பாட்டி, எங்க அப்பா, எங்க அம்மா சொல்லிக் கொடுத்த ‘எங்காத்திகம்!
சிட்டி வேணு, சென்னை.
மதுரை மணி அய்யர் கச்சேரி கேட்டது உண்டா?
மதுரை மீனாட்சி கண்ணுக்கு விருந்தென்றால், மதுரை மணி அய்யர் காதுக்கு விருந்து. ஆறேழு வருடங்களுக்கு முன்பு புனேவுக்கு நாடகம் போடச் சென்றேன். கிளம்பும்போதே வயிறு சரியில்லை. அங்கு போனவுடன் நயாகரா போல வயிற்றுப்போக்கு. என் பால்ய நண்பன் ராம் வீட்டில் தங்கினேன். அவன் மதுரை மணி அய்யரின் தீவிர ரசிகன். இரவு 2 மணி வரை மணி அய்யரின் ஆடியோவைப் போட்டு, எனது வயிற்றெரிச்சலை ‘சாந்தமு லேகு’வாக்கினான். தியாகய்யரின் ‘மா ஜானகி’ கீர்த்தனையை மதுரை மணி அய்யர் ‘காம்போதி’ ராகத்தில் பாடுவதைத் திரும்பத் திரும்ப கேட்டதில், என் பேதி CALMபேதி ஆகி சுத்தமாக நின்றது!
மத்தளராயன், சென்னை-2.
மகாபாரதத்தில் எந்தப் பாத்திரம் உங்க ஃபேவரைட்?
சூரிய பகவானால் கொடுக்கப்பட்டு பாஞ்சாலி பயன்படுத்திய அட்சய பாத்திரம்! பசி என்று சொல்லி வந்த கண்ணன் அந்தப் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கீரையை தின்று ஏப்பம் விட, துர்வாசரின் வாயில் ஏப்பம் வந்ததாம். கண்ணனைப் பஞ்ச, பாண்டவப் பாத்திரங்களுக்கு தோழனாக்கிய அட்சய பாத்திரம்தான் என் ஃபேவரைட் பாத்திரம்!
ராதா ரமேஷ் , சேலம்.
உங்க சினிமா, டிராமா எல்லாவற்றிலும் உங்க ‘ஹீரோயின்’ பெயர் ஜானகியாவே இருக்கே?
‘ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார்’ என்பார்கள். என் வெற்றிக்குப் பின்னால் பல பெண்கள் உள்ளனர். தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் சொல்வது எனது பாட்டி, அம்மா, மனைவி, வகுப்பில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசனத்தை சொல்லித் தந்த ஜானகி டீச்சர் ஆகியோர். நான் வசனம் எழுதப் போகும் படங்களில் ‘சம்பளத்தைக் கூட ரெண்டாம் பட்சமாகத்தான் பேசுவேன். ஆனால், கதாநாயகிக்குக் கட்டாயம் ‘ஜானகி’ என்று பெயர் வைக்க வேண்டும் என்பேன்.
ஆறேழு வயதிலேயே எனக்குள் நாடக வெறியை விதைத்தவர் ’ஜானகி’ டீச்சர். எனக்குக் ‘கட்டபொம்மன்’ வேஷம் போட்டு அட்டைக் கத்தி, கிரீடம் எல்லாம் செய்துகொடுத்து, என்னை எல்லாப் பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்று பரிசு வாங்கித் தந்தவர். அந்த ஜானகி டீச்சருக்கு ‘குரு தட்சணையாக’த்தான் எனது ஹீரோயின்களுக்கு அவர் பெயரைச் சூட்டுகிறேன். சமீபத்தில் பெங்களூர் சென்றபோது 85 வயதான எனது டீச்சரை மேடையேற்றி, சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்!
கார்த்திக்கேயன், மதுரை.
நீங்கள் படித்து ரசித்த புதுக்கவிதை ஒன்று சொல்லுங்களேன்?
‘கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு’ என்ற சிறுகதையில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு கவிதை. கதையில் வரும் விஞ்ஞானி, கதை எழுதும் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்து, ‘கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் கவர்ச்சி,கொஞ்சம் மரபு etc ஆணைகளைக் கொடுத்து, கவிதை எழுதுமாறு பட்டனைத் தட்ட, அது
‘கதவைத் திறந்து கவனித்து வந்த ராஜராஜன் - தங்கப்பதுமைக்கு முத்தம் பதினெட்டுத் தந்த ராஜராஜன்’
என்று பிரின்ட்-அவுட்டைத் துப்பும். நான் ரசித்த சுஜாதாவின் கணினிக் கவிதை இது!
கே.விஸ்வநாதன், சேலம்
ஒரு பஸ்ஸில் நிறைய பாகங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ரொம்பவும் பிடித்த பாகம் எது… ஏன்?
ஒழுங்கா ‘பிடிக்கும் பிரேக்’தான் எனக்குப் பிடிக்கும். அது பிடிக்காவிட்டால் நம் பாகங்கள் நம்மைப் பிடிக்காமல் உதிர்ந்துவிடும். அப்பால ‘அப்பல்லோ’தான்!
கலைமணி, திருச்சி.
இளையராஜா இசையில் உங்களுக்குப் பிடித்த பாடல்?
‘பாரதியார்’ படத்தில் வரும் ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடல்தான் இசைஞானியின் இசையில் எனக்கு ரொம்பப் பிடித்தது. இந்தப் பாடல் எனக்குப் பிடிக்க காரணம் உள்ளது.
‘தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் நின்னைச் சரணடைந்தேன்’
- என்கிற மகாகவியின் வேண்டுதல் வரிகள் எனக்கு கீதை, குரான், பைபிள் எல்லாமே. இதையே ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ‘கடவுள் என்ற எஜமான் வீட்டு வேலைக்காரனாக இரு’ என்றார். அவர் சொல்வது சரணாகதிக்கு ஷார்ட்-கட்!
எஸ்.மதுரா, குரோம்பேட்டை.
எஸ்.வி.சேகருடன் இணைந்து நீங்கள் ஏன் ஒரு நாடகம் போடக் கூடாது?
நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நாடகம் போட்டால் மேடையைக் கலக்கலாம். எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்கள் சபாக்காரர்கள் எல்லோருக்கும் லாபம்தான். ஆனால், இரண்டு நகைச்சுவை நாடகங்கள் போட முடியாமல் போய்விடுமே! அந்த வகையில் நஷ்டம். ‘ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது மாதிரி ‘கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்குக் கொண்டாட்டம்’, இரண்டு டிராமா போடலாம் இல்லியா!
- இன்னும் கேட்கலாம்... 


 thanx -the  hindu


  • ஜானகி டீச்சர்
    ஜானகி டீச்சர்

 

Thursday, March 06, 2014

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -இறங்கி அடிக்கிறீங்களா? -ஆர் பார்த்திபன் பேட்டி @ விகடன்.

 பேட்டியில் நான் கதை பத்தி எதுவுமே சொல்ல மாட்டேன். ஏன்னா, தயாரிப்பாளர்கிட்டகூட நான் கதை சொல்லலை. அட, கதை ஏங்க..? 'க’கூட சொல்லலை!'' - ஆரம்பத்திலேயே பன்ச் வைத்தார், 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தை இயக்கிவரும் பார்த்திபன்.
'' 'இதுவரை நான் யாரையும் காப்பி அடிச்சது இல்லை. என் ஒவ்வொரு படத்தையும் சின்சியரா எடுத்திருக்கேன். காலத்துக்கும் பேசப்படும் படம்’னு சொல்றதெல்லாம் எனக்கான பெருமைதானே தவிர, 'ஓடுச்சா... இல்லையா?’ங்கிறதுதான் இங்கே கடைசியாத் தொக்கி நிக்கிற கேள்வி. அதனால், 'குடைக்குள் மழை’ பட ரிஸ்க் எல்லாம் எடுக்காம, என் அடையாளத்தையும் மிஸ் பண்ணாம, கல்லா நிறைப்பதற்கான கமர்ஷியலைச் கச்சிதமாக் கலக்கியிருக்கேன்!
இந்தப் படத்துக்குள்ளேயே இன்ஃபிலிம் மாதிரி ஒண்ணு பண்ணியிருக்கேன். அதில் ஒருத்தன், 'ஏண்டா... வசனமே இல்லாம கமல் 'பேசும் படம்’ எடுத்திருக்கார். நாம கதையே இல்லாம ஒரு படம் பண்ணா என்ன?’னு கேப்பான். '120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வர்றவன், 'கதை எங்கடா?’னு சொக்காயைப் பிடிச்சுக் கேட்டா, என்னடா பண்ணுவ?’னு சொல்வான் இன்னொருத்தன். 'அப்ப, 'எ ஃபிலிம் வித்தவுட் எ ஸ்டோரி’னு டேக் லைன் போட்டு, ரசிகர்களை ஆரம்பத்திலேயே ட்யூன் பண்ணிக் கூட்டிட்டு வருவோம்’பான். அவ்ளோதான் படம்! மெல்லிய இழைக்கும் அடுத்த ரக மெல்லிய இழை அளவுகூட படத்தில் கதை இல்லை!''
''ஆக, இப்போ கமர்ஷியல் பக்கம் திரும்பிட்டீங்களா?''
''சமீபத்தில்... 82 வயசுப் பெரியவர் ஒருத்தரைச் சந்திச்சேன். 'அப்பப்ப நினைவு தப்புது தம்பி. எதுவும் ஞாபகம் இருக்கிறது இல்லை. உங்க 'ஹவுஸ்ஃபுல்’ பாத்திருக்கேன்’னு சொல்லி சீன் பை சீன் சொல்லிப் பாராட்டினார். நினைவு தப்புதுனு சொல்றவர் நினைவில், நம்ம படம் இருக்கிறது சந்தோஷம்.
நான் சினிமாவுக்காக அம்மா-அப்பாவை விட்டு, ஊரைவிட்டுக் கிளம்பி வந்தவன் இல்லை. சென்னை அரும்பாக்கத்துல வீடு. சினிமா வாய்ப்புத் தேடி தேனாம்பேட்டை லாட்ஜ் ரூம்ல தங்கியிருந்தேன். அந்தப் பிரிவுக்கே தினமும் மூணு தடவை அழுவேன். முதல் வெற்றி, தொடர் தோல்வினு ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாச்சு. இருந்தாலும் நான் விரும்பும் சினிமாவை, நான் ஆசைப்பட்ட மாதிரி எடுத்திருக்கேன்னு ஒரு சந்தோஷம் மனசுல இருக்கு. இப்போ இந்தப் படத்தில் ஒரு டைரக்டர் கேரக்டர், 'இனிஷியல் மட்டும் இல்லை... குழந்தையும் எனக்குப் பிறந்ததா இருக்கணும்’பார். அப்படி என் படங்கள் என் படங்களா மட்டுமே இருந்திருக்கு. அது இங்கே ரொம்பப் பெரிய விஷயம்!''
''படத்துல வேற என்ன புதுமை?''
''தலைப்பே புதுமை... அதுலயும் ஒரு புதுமை வெச்சிருக்கேன். 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’கிற நான்கு வார்த்தைகளை ஆளுக்கொரு வார்த்தையா நான்கு இயக்குநர்கள் எழுதியிருக்காங்க. அந்தக் கையெழுத்தையே டைட்டில் டிசைன் ஆக்கிட்டோம். 'இந்தத் தலைப்பை எழுதித் தந்த அந்த நான்கு மாஸ்டர் இயக்குநர்கள் யார்னு கண்டுபிடிக்கச் சொல்லி ஒரு போட்டி வெக்கலாம்னு யோசனை. பார்ப்போம்!''
''புதுமுகங்களோட களம் இறங்கிருக்கீங்க... ஆனா, விஜய் சேதுபதி, ஆர்யானு பெரிய தலைகளும் தட்டுப்படுறாங்களே!''
''நான் நடிக்காம டைரக்ஷன் மட்டுமே பண்ணும் முதல் படம் இது. 'மைனா’ல ஆரம்பிச்சு 'குக்கூ’ வரை நான் சம்பந்தப்படலைன்னாலும், என்னை இம்ப்ரெஸ் பண்ணின படங்கள், டிரெய்லர் பத்தி முடிஞ்சவரைக்கும் தகவல் பரப்புவேன். இப்படி என் சினிமானு இல்லாம, எனக்குப் பிடிச்ச சினிமாக்களையும் புரமோட் பண்றதை முழு நேர வேலையாவே வெச்சிருக்கேன். அதன் பாசிட்டிவ் சைடு எஃபெக்ட்தான் விஜய் சேதுபதி உள்பட பல பிரபலங்கள் என் படத்தில் நடிக்கிறது. விஜய் சேதுபதிகிட்ட, 'நீங்க அப்படியே விஜய் சேதுபதியாகவே வந்துட்டுப் போற மாதிரி ஒரு சீன்’னு சொன்னதும், 'நான் நாளைக்கே வந்துடவா சார்?’னு கேட்டார். இதேபோல சேரன், ஆர்யா போல சில பிரபலங்கள் நிஜ முகத்தோடவே வர்றாங்க!''

''இளைஞர்களின் குறும்பட டிரெண்டுக்கு ஏத்த மாதிரி நீங்களும் இறங்கி அடிக்கிறீங்களா?''
''என் மகன் ராக்கி, விஸ்காம் படிக்கிறார். நான் 100 வார்த்தை பேசினா, மூணு வார்த்தையில பதில் சொல்வார். அவர்கிட்ட, 'நீ வந்து ஒருதடவை என் படத்தைப் பார்த்துட்டு போ...’னு சொன்னேன். 'விச் ஃபிலிம்?’னு கேட்கிறார். அவங்க வேவ்லெங்த்துக்கு நான் இல்லைங்கிற ஃபீலிங்ல இருக்காரோ என்னவோ!
சமயங்கள்ல அவரை கார்ல லாங் டிரைவ் அழைச்சுட்டுப் போய், இம்ப்ரெஸ் பண்ண முயற்சி பண்ணுவேன். ஆனா, அவர் வெளியே பார்த்துட்டே இருப்பார். ஒருதடவைகூட அவர் என்னை இம்ப்ரெஸ் பண்ண முயற்சி பண்ணதே இல்லை. அவருக்கு போட்டோகிராஃபியில் ரொம்ப இஷ்டம்.
சமீபத்துல, ஒரு ஆள், ஒரு நாய், ஒரு பாட்டில் சேர்ந்து இருக்கும் போட்டோ எடுத்து, அதுக்கு 'தேவதாஸ்’னு கேப்ஷன் வெச்சு ஃபேஸ்புக்ல போட்டிருந்தார் ராக்கி. 'உனக்கு தேவதாஸ் பத்தி எப்படித் தெரியும்?’னு கேட்டேன். 'சும்மா பழைய படங்களை கோ-த்ரூ பண்ணேன். அதில் இருந்து பிடிச்சேன்’னு சொன்னார். இதெல்லாம் எதுக்குச் சொல்றேனா, இன்றைய இளைஞர்கள் எதிர்காலம் குறித்த எந்த அச்சமும் அவசரமும் இல்லாமல் இருக்காங்க. ரொம்பத் தெளிவாவும் இருக்காங்க. அவங்கவங்களுக்கு அவங்கவங்க ஸ்டைல்!
என்ன கேட்டீங்க இறங்கி அடிக்கிறீங்களானுதானே? நான் இறங்கவே இல்லை. இன்னும் இளைஞனாவே இருக்கிறதுனால அவங்க எதிர்ப்பார்ப்பை ஈடு செய்யிறது ஒண்ணும் கஷ்டமா இருக்காது. அதை இந்தப் படம் மூலம் நீங்க புரிஞ்சுப்பீங்க!'


thanx - vikatan

Wednesday, July 25, 2012

அச்சக்காடு -கிருஷ்ணா டாவின்ஸி-சிறுகதை ( ராஜபக்சேவுக்கு மரண பயத்தை காட்டிய கதை )

கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால், ஒரு சில ஃபோகஸ் விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டு இருந்தன. அப்போது காற்றில் கலந்து ஒலித்த மெல்லிய ஓசை, சற்று தூரே இருந்த கடல் அலைகளின் ஓசையா அல்லது கோடை இரவின் தணியாத தணலின் ஓசையா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் புதிரான சத்தம் மகிந்தாவை மிகவும் தொந்தரவுபடுத்தியது. அருகே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மனைவியைப் பார்த்தார். தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு தோன்றியது.


படுக்கையிலிருந்து எழுந்து, கதவைத் திறந்து வெளியே வந்தார். வாசல் கதவுக்கு வெளியே ராணுவக் காவல்காரர்கள் தோளில் துப்பாக்கியுடன் பாரா நடந்த காட்சி ‘சில்-அவுட்’ ஆகத் தெரிந்தது. அந்த நள்ளிரவிலும் கொழும்பு நகர வீதிகளில் எங்கோ ஒரு வாகனம் சக்கரங்களைத் தரை யுடன் தேய்த்தபடி செல்லும் ஓசை. ராணுவ வண்டியாக இருக்கக்கூடும். மகிந்தா ஃபிரிஜ் ஜைத் திறந்தார். தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குளிர்ந்த நீரைக் கொஞ்சம் பருகினார்.


இப்போதெல்லாம் தூக்க தேவதை அவரிடம் கொஞ்சமும் கருணை காட்டுவதில்லை. அவர் நிம்மதியாகத் தூங்கிப் பல காலம் ஆகிவிட்டது. கண்ணை மூடினால், குண்டடி பட்டுக்கிடக்கும் பிணங்கள் முன்னே எழுந்து வந்து தொந்தரவுபடுத்தும். ராணுவ உடை அணிந்த, வரிசையான பிணங்களும் எழுந்து நின்று, ‘நாங்கள் சாக வேண்டிய பருவமா இது?’ என்று கேள்வி கேட்கும். அதற்காகவே, அவருடைய கண்கள் மூட மறுக்கும். விடியற்காலையில்தான் உடல் அசதியில் கண்கள் மெள்ளச் செருகும். இரவு சரியாகத் தூங்காததன் விளைவு, அடுத்த நாள் முழுக்க எதிரொலிக்கும். எரிச்சல் கலந்த கடுமையான சில முடிவுகளையும் எடுக்கவைக்கும்.


மகிந்தா மீண்டும் படுக்கையறையை நோக்கி நடந்தார். அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது. ‘மகிந்தா, நாம் கொஞ்சம் கதைப்போமா?’

மகிந்தா திகைத்தார். உண்மையிலேயே அப்படி ஒரு குரல் கேட்டதா? அல்லது மனப்பிரமையா? பல பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி, அந்தக் குரல் எங்கிருந்து வந்திருக்கும் என்று யோசித்தபடி சுற்றிலும் பார்த்தார். எதுவும் விசேஷமாகத் தென்படவில்லை. அப்போது மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது.

‘மகிந்தா, சோபாவில் பார், உனக்காக நான் அமர்ந்து காத்திருக்கிறேன்.’

மகிந்தா சோபாவைப் பார்த்தார். அவர் ரத்தம் உறைந்தது. வெள்ளி நிற மெல்லிய ஒளிப் பின்னணியில் தகதகக்கும் தோற்றத்தில் அந்த உருவம் அமர்ந்திருந்தது. அந்த உடல், முகம், தலைமுடி, எல்லாவற்றுக்கும் மேலாக, என்றுமே மறக்க முடியாத அந்தச் சிரிப்பு. இது… இது… எப்படிச் சாத்தியம்? லசந்தவா? லசந்த விக்ரமதுங்கவா? கொல்லப்பட்ட லசந்தவா?

”ஓய மகிந்தா! நான்தான் லசந்த விக்ரமதுங்க… பத்திரிகை ஆசிரியன். உங்களுடைய பழைய நெருங்கிய நண்பன். பிற்காலத்தில் நீக்கப்பட வேண்டிய எதிரியாகவும் மாறியவன். என்னை அதற்குள் மறந்துவிட்டீர்களா? உங்களை ‘ஓய’ என்று நம் சிங்களத்தில் உரிமையுடன் அழைக்கக்கூடிய ஒரு முன்னாள் நண்பனை அதற்குள் மறந்துவிட்டீர்களா மகிந்தா?” என்றது புகையால் செய்யப்பட்ட அந்த உருவம்.

மகிந்தாவுக்கு நா வறண்டது. கால்கள் நடுங்கின. ”லசந்த… நீ… நீயா? இது எப்படிச் சாத்தியம்? நீ இறந்துவிட்டாய் அல்லவா?”

”இறக்கவில்லை மகிந்தா. இறப்பு என்பது இயற்கையில் நிகழ்வது. நான் கொல்லப்பட்டேன். என் அலுவலகத்துக்குக் காலையில் காரில் வரும்போது, இருபுறமும் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த சில கொலையாளிகள் என்னை வழிமறித்து, கத்திகளாலும் துப்பாக்கிக் குண்டுகளாலும் தாக்கியதால் ரத்தம் பீறிடக் கொல்லப்பட்டேன். அதற்குள்ளாகவா மறந்துவிட்டாய்?”


உயிரற்ற லசந்தவின் உருவம் இந்தக் கேள்வியைப் புன்னகைத்தபடிதான் கேட்டது. அந்தக் கண்களில் கருணையும் ஞானமும் நிரம்பி வழிந்தன. ஆனால், அந்த அமானுஷ்யமான புன்னகையும், அந்தக் குரலில் நிலவிய அன்பும் மகிந்தாவை நிலைகுலையவைத்தன. லசந்த எதற்கு வந்திருக்கிறான்? பழி வாங்கவா? டிராகுலா போல் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சவா? ஏற்கெனவே பல குடைச்சல்களைக் கொடுத்தவன், செத்தும் மீண்டும் வந்திருப்பது எதற்காக?


”பயப்பட வேண்டாம் மகிந்தா… என்னிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை. மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் கிளஸ்டர் குண்டுகள் இல்லை. எதிர்க் கருத்து கொண்டவர்களைத் தீர்த்துக்கட்ட என்னிடம் கூலிப் படை களும் இல்லை. முக்கியமாக என்னிடம் கொலை வெறி என்பது இல்லவே இல்லை. நான் வெறுமனே பேச வந்திருக்கும் வலிமையற்ற ஓர் இறந்த கால மனிதன். நான் உயிரோடு இருந்தவரை அமைதியிலும் சமாதானத்திலும் நம்பிக்கை உள்ளவனாக, அதைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தவனாக இருந்தேன். அதற்காகத்தான் கொல்லப்பட்டேன். இப்போது இறந்த பிறகும் என் கொள்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் அப்படியேதான் இருக்கிறேன். பயப்படாமல் என் எதிரே வந்து அமருங்கள். அச்சம் என்பதே வாழ்க்கையாகிப் போனால், எல்லாமே பயங்கரமாகத்தான் தெரியும் மகிந்தா… வாருங்கள், பயப்படாதீர்கள்.”


எதிரே இருந்த நாற்காலியில் தயக்கத்துடன் அமர்ந்தார் மகிந்தா. லசந்தவின் கண்களை அவரால் நேருக்கு நேர் சந்திக்க இயலவில்லை. கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.

”இன்றைய ராணுவச் செய்தி என்ன மகிந்தா, வழக்கம் போல் வெற்றிச் செய்தியா?” என்றார் லசந்த.

அப்போது அந்த முகத்தில் தெரிந்த சிரிப்பில் ஒருவித கேலி இருப்பது போல் மகிந்தாவுக்குத் தோன்றியது. உடனே மனதில் இயல்பான எதிர்ப்பு உணர்ச்சி எழுந்து, பெரிய எரிச்சலைக் கிளப்பியது. அதனால், உயர்ந்த குரலில் வாய் திறந்தார் மகிந்தா.

”வெற்றி… வெற்றி… இதைத் தவிர, வேறெந்தச் செய்தியும் எப்போதும் இல்லை. லசந்த… நீ உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுதான் செய்தி. புதுக் குடியிருப்புக்குள் புகுந்துவிட்டது ராணுவம். முழு வெற்றி மிகச் சமீபத்தில் இருக்கிறது. நீதான் தோற்றுவிட்டாய். எல்லாப் பத்திரிகைகளும், இங்குள்ளவை மட்டும் அல்ல… இந்தியாவின் பல முன்னணி தினசரிகளும் எங்களால் கொடுக்கப்படும் வெற்றிச் செய்திகளை மட்டுமே பிரசுரிக்கும்போது, உனக்கு மட்டும் என்ன கேடு வந்தது லசந்த? ஏன் தேவைஇல்லாமல் பல விஷயங்களைத் தோண்டினாய்? கொடுமையாகக் கொல்லப்பட்டு இப்படி ஓர் அருவமாக நீ என்னைச் சந்திக்கத்தான் வேண்டுமா?” என்றார் மகிந்தா கோபமாக.

”நான் எப்போது, யாரால் கொல்லப்படுவேன் என்று எனக்கு முன்பே தெரியும் மகிந்தா. அதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. இதோ, இதே அறையில் நீங்களும் நானும் தேநீர் அருந்தியபடி முன்னொரு காலத்தில், பின் இரவுகளில் எத்தனை கதைத் திருக்கிறோம். அப்போது நீங் கள் மனித உரிமைக்காரராக வும், இடதுசாரிச் சிந்தனை யாளராகவும் கதைத்ததெல் லாம் எப்படிப் பொய்யாகிப் போனது மகிந்தா?” என்ற லசந்தவின் குரலில், ஆதங்கமும் வருத்தமும் கலந்து ஒலித்தது.


மகிந்தா எதிரே இருந்தஉரு வத்தை வெறித்துப் பார்த்தார். ”நீ எப்போதுமே பயங்கரவாதிகளின் பக்கமே இருந்திருக்கிறாய் லசந்த. அதனால்தான் இப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாய். உன்னை இப்படிப் புகை வடிவத்தில் பார்ப்பதற்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா? தேநீர் அருந்துகிறாயா?”


”வேண்டாம் மகிந்தா. நான் எதையும் இப்போது உண்பதில்லை. பேய்களும் பிசாசுகளும் ரத்தத்தை உறிஞ்சும் என்றெல்லாம் எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறேன். அதெல்லாம் பொய். உயிரோடு இருக்கும் மனிதர்கள்தான் சக மனிதர்களின் உயிர்களைப் பருகுகிறார்கள். நண்பர்களின் ரத்தத்தைப் பருகும் மனிதர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.”

மகிந்தாவிடம் சங்கடமான மௌனம் நிலவியது. அதை உடைக்க, தொண்டையைச் செருமிக்கொண்டு, ”கவலைப்படாதே லசந்த… உன்னைக் கொன்ற கொலையாளிகளை எப்படியும் பிடித்து அவர் களுக்குத் தண்டனை வாங்கித் தருவேன். விசாரணை தொடங்கிவிட்டது தெரியுமா?” என்றார்.

லசந்த சிரித்தார். மெலிதாக ஆரம்பித்த அந்தச் சிரிப்பு, அடக்க முடியாமல் பெருஞ்சிரிப்பாக மாறியது. அந்தச் சிரிப்பு மகிந்தாவுக்கு மறுபடியும் எரிச்சலைக் கிளப்பியது. ஏற்கெனவே அமைதியற்றுக்கிடக்கும் அவருடைய மனத்தை அந்தச் சிரிப்பு மேலும் கூறு போடுவது போல் இருந்தது.

”நிறுத்து உன் சிரிப்பை லசந்த. இந்த அருமையான கோடை இரவின் அமைதியைக் கெடுப்பது போல் சிரிக்காதே” என்று எரிந்து விழுந்தார்.

”சிரிக்காமல் எப்படி இருக்க முடியும் மகிந்தா. ‘கொலையாளிகளைப் பிடிப்போம், விசாரணையைத் தொடங்குவோம். நீதி வழங்குவோம்’ போன்ற வார்த்தைகளைக் கேட்டால், முன்பு கோபம் வரும். ஒரு நிலைக்குப் பிறகு இதெல்லாம் அங்கதம் ஆகிவிடுகிறது. என்னைக் கொன்ற கொலையாளிகளை யார் அனுப்பியது என்று எல்லோருக்குமே தெரியும். அவர்கள் இப்போது எப்படிப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதும் எல்லோரும் அறிந்ததே. என் மரணத்தில் உங்களுடைய அரசாங்கத்துக்குப் பொறுப்பு இல்லையா மகிந்தா?” என்றார் லசந்த.


மகிந்தா அந்தக் கேள்வியைச் சந்திக்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டார். அந்த அமைதியான இரவில் லசந்தவின் குரல் கம்பீரமாக ஒலித்தது. ”கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் இருபது பத்திரிகையாளர்கள் நம் நாட்டில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் மகிந்தா. எனக்கு முன்னால் இசைவிழி செம்பியன், தர்மலிங்கம், சுரேஷ், சிவமகாராஜா, சந்திரபோஸ் சுதாகர், ரஜிவர்மன், பரநிருப சிங்கம் என்று எத்தனையோ பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். உயிரோடு இருப்பவர்களில் பாதிப் பேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்குத் தப்பிவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் வாழப் பாதுகாப்பற்ற நாடுகளில் உலகிலேயே முதல் இடம் இராக்குக்கு. அடுத்த இடம் இலங்கைக்குத்தான். என்ன மகத்தான சாதனை மகிந்தா?” லசந்தவின் குரலில் எள்ளல் இருந்தது.


”சும்மா புள்ளிவிவரங்களை அள்ளி வீசாதே லசந்த. பயங்கரவாதிகளும்தான் எத்தனையோ பத்திரிகையாளர்களைக் கொன்றிருக்கிறார்கள். நான் ஒவ்வொரு வாரமும் கூட்டும் பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்துக்கு நீ வந்ததே இல்லை லசந்த. வந்திருந்தால் உண்மை என்ன என்பது உனக்கும் புரிந்திருக்கும். ‘நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள்? பயங்கரவாதிகளுடனா அல்லது மக்களுடனா?’ என்கிற கேள்விக்கு, ‘நாங்கள் மக்களுடன்தான்’ என்று பதில் சொல்லியவாறு எத்தனை பத்திரிகையாளர்கள் என் பக்கம் திரண்டு வந்தார்கள் தெரியுமா? திமிர் பிடித்த நீயும் வேறு சிலரும்தான் வரவில்லை” மகிந்தா கோபமாகச் சொன்னார்.


”நான் மட்டுமா, எத்தனையோ நேர்மையானவர்கள் உங்களைப் புறக்கணித்தார்களே… சண்டே டைம்ஸ்கூட நீங்கள் கொடுத்த விருதைத் தூக்கி எறியவில்லையா? உங்கள் ராணுவத் தரப்புச் செய்திகளை மட்டுமே பல காலம் எழுதி வந்த விசுவாசி இக்பால் அத்தாஸ்கூட வெளிநாடு போய் விட்டார். அவர் இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா?”


மகிந்தா ”என்ன சொல்கிறார்?” என்றார் ஆத்திரத்துடன்.

”போரில் தினமும் பலியாகும் ராணுவத்தினரின் எண்ணிக்கை அரசாங்கம் சொல்வதைக் காட்டிலும் மிக அதிகம். ஆனால், உண்மையான எண்ணிக்கையை என்னால் குறிப்பிட்டு எழுத முடியவில்லை. எழுதினால் எனக்கு என்ன கதி நேரும் என்பதை வாசகர்கள் அறிவார்கள்’ என்று அவர் எழுதிய ஒரே காரணத்தால் பயமுறுத்தப்பட்டார் மகிந்தா. ஏற்கெனவே அவர் வீட்டுக்கு, மலர்வளையத்தை அனுப்பிவைத்தார் சந்திரிகா. அது உண்மையாகிவிடுமோ என்று அஞ்சி, இப்போது வெளிநாட்டுக்குப் போய்விட்டார். ‘இவ்வளவு மோசமான ஒரு சூழ்நிலையை நான் எப்போதுமே சந்தித்ததில்லை. இவ்வளவு பயங்கரமான உயிர் அச்சத்துக்கும் நான் ஆட்பட்டதில்லை’ என்று சொல்லியிருக்கிறார். ஒரு பத்திரிகையாளனுக்குக் கொழும்பில் உள்ள பாதுகாப்பு இதுதான்.”மகிந்தா நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டார். இப்போது தன் பழைய நண்பன் லசந்தவுடன் விவாதிப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. லசந்தவைக் கண்டு பெருமூச்சுவிட்டார். ”பயங்கரவாதிகளைவிட ஆபத்தானவர்கள் பத்திரிகையாளர்கள். அவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதை நான் அறிவேன். நீ ஒரு முட்டாள் லசந்த. எப்படிப்பட்ட வாழ்வு உனக்காகக் காத்திருந்தது? நீ படித்த படிப்புக்கு ஒரு புகழ்பெற்ற வக்கீலாகி இருக்கலாம். சிரீமாவோவிடம் உதவியாளனாக இருந்தவன் நீ. பிறகு பத்திரிகை ஆசிரியனாக மாறினாய். உன் தொடர்புகள் எத்தனை பெரிது! உனக்கு மந்திரி பதவிகூட கொடுப்பதற்குத் தயாராக இருந்தது. வெளிநாட்டில் குடும்பத்துடன் வசதியாக வாழ்ந்திருக்கலாம். நீ எல்லாவற்றையும் தூக்கி எறிந்தாய்… இது தேவைதானா?””வேறு என்ன செய்வது மகிந்தா? நான் என் மனச்சாட்சிக்குப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. இந்த யுத்தம் தவறு என்று உரக்கக் கத்த வேண்டும் போல் இருந்தது. என் முன்னாள் நண்பன் தன் சொந்த மக்களின் மேலேயே குண்டுகள் வீசிக் கொல்வதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. அதைக் கண்டித்து எழுத எனக்குப் பத்திரிகை தேவைப்பட்டது. அப்பாவி மக்களை, நம் சக குடிமக்களைக் கொல்வது மட்டுமல்லாது, ஆயுதம் வாங்குவதில் இருந்து இந்த ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஊழலைப்பற்றி நான் மக்களிடம் சொல்ல விரும்பினேன். அது என் மரணம் மூலம் பாதியில் தடைபட்டதுதான் ஒரே வருத்தம்.””ஆனால், என்னிடத்தில் எந்த வருத்தமும் இல்லை லசந்த. வெற்றி, எல்லாத் தவறுகளையும் மறைத்துவிடும். அந்த வெற்றிக்கான விலை, பல உயிர்கள். போரில் அதைத் தவிர்க்க முடியாது. இப்போது பயங்கரவாதிகளை ஒடுக்கிவிட்டோம். அடுத்த யுத்தம் யாருடன் தெரியுமா? உங்களைப் போன்றவர்களுடன்தான். அந்த யுத்தமும் ஆரம்பித்துவிட்டது. அதிலும் நான் வெற்றி பெறுவேன்.”

லசந்த ஏதும் சொல்லாமல் அவரையே பார்த்தார்.

”என்ன லசந்த, மௌனமாகிவிட்டாய்? வாயடைத்துவிட்டதா?” என்றார் மகிந்தா ஏளனமாக.

”இல்லை மகிந்தா, எத்தனை மாயைகளில் நீங்கள் எல்லாம் வாழ்கிறீர்கள் என்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. குண்டு போட்டு, குண்டு போட்டு மக்களை அழித்தால், புதிய போராளிகளை உருவாக்கத்தான் முடியுமே தவிர, அமைதியைக் கொண்டுவர முடியுமா? நம் வாழ்வில், கலாசாரத்தில் வன்முறை அழிக்கவே முடியாதபடிக்கு அழுத்தமாகப் படிந்துவிட்டதை நீங்கள் இன்னும் உணரவில்லை. பயம்! அதைத்தான் நீங்கள் இங்கே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் விதைத்திருக்கிறீர்கள். வெள்ளை வேன் வருமோ என்று பயம், குண்டு வெடிக்குமோ என்று பயம், ஆர்மி உள்ளே வருமோ என்று பயம், பாலியல் பலாத்காரம் செய்யுமோ, கழுத்தில் டயரை மாட்டி எரிக்குமோ, நிற்கவைத்துச் சுடுமோ என்று பயம்… சிறைச்சாலை, சித்ரவதைக் கொட்டடிகளைக் கண்டு பயம். இப்படி முழுச் சமூகத்தையும் பயம் என்னும் சாக்கடையில் மூழ்கவைத்த உங்கள் மனதிலும் பயம் இருக்கிறது மகிந்தா. உங்களுடைய வெற்றிச் சிரிப்பு ஒரு முகமூடி… அதற்குப் பின்னால் இருப்பது பயம் தெரியும் முகம்.”

”நீ முதலில் இங்கேயிருந்து வெளியேறு லசந்த. உன் முட்டாள்தனமான பேச்சை இனியும் என்னால் அனுமதிக்க முடியாது. எங்களுக்குப் பயம் என்பதே இல்லை. எங்களுடைய எதிரிகளுக்குத்தான் பயம். உன்னைப் போன்ற புத்திஜீவிக்களுடன் கதைப்பது வீண் வேலை. வெளியே போ லசந்த… என் கண் முன்னால் இருந்து காணாமல் போ!”

உச்சக் குரலில் கத்திய மகிந்தாவைப் பார்த்துப் புன்னகைத்தார் லசந்த. ”நான் போகிறேன் மகிந்தா. ஆனால், நான் சொன்னது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். நான் கொல்லப்பட்டாலும், மனச்சாட்சி உறுத்தலின்றி, கடைசி வரை நேர்மையாக வாழ்ந்தேன் என்கிற இறுமாப்புடன் இருக்கிறேன் மகிந்தா. என் மூன்று பிள்ளைகளுக்கும் அப்பாவாக நான் இருக்க முடியாவிட்டாலும், அவர்களுக்கு நான் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் விட்டுச் சென்றிருக்கிறேன். ஆனால், நீங்கள் விட்டுச் செல்லப்போவது என்ன? பயம்… ஒவ்வொரு நொடியும் பயம்… எந்த நேரத்தில்… எது நேருமோ என்கிற பயம்தான் நீங்கள் விட்டுச் செல்லப்போவது. அது இன்றைக்குப் பெரும் காடாக வளர்ந்திருக்கிறது மகிந்த. அந்த அச்சக் காட்டில் நீங்கள் எல்லோரும் காணாமல் போவீர்கள்!” லசந்தவின் உருவம் மெதுவாக அங்கிருந்து மறையத் தொடங்கியது.


மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் மகிந்தா அப்படியே நின்றிருந்தார். லசந்தவின் குரல் அவர் தலைக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. எல்லாம் கனவு போல் இருந்தது. மீண்டும் தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. திரும்பி நடந்தார்.

அப்போது திடீரென்று மின்சாரம் தடைபட்டது. எரிந்துகொண்டு இருந்த சில விளக்குகளும் அணைந்தன. இருட்டு வேகமாகப் பரவியது. ‘உடனே பதுங்குங்கள்’ என்கிற குறிப்பை உணர்த்தும் ஆபத்துக் கால சைரன் ஒலித்தது. வாசலில் சென்ட்ரிக்கள் ஓடும் சத்தமும், ‘பதுங்கு… பதுங்கு’ என்கிற சத்தமும் கேட்டது.

மகிந்தா சோபாவின் அடியில் போய்ப் பதுங்கிக்கொண்டார். உடலெங்கும் வியர்த்தது. ஜன்னலுக்கு வெளியே வானத்தில் சின்ன வெளிச்சத்தை உமிழ்ந்தபடி ஒரு விமானம் கடந்து செல்வதைப் பார்த்தார். அப்போது அவர் முகத்தில் தெரிந்த பயத்தை இருட்டு முழுமையாக மறைத்திருந்தது!


நன்றி - அமரர் கிருஷ்ணா டாவின்ஸி , சிறுகதைகள்


அண்மையில் மரணம் அடைந்த அவரைப்பற்றிய ஒரு கட்டுரை மைக்கேல் ஜாக்ஸனின் இறுதிச் சடங்குகள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன்”. 2009 ஜூலையில் ட்விட்டரில் கிருஷ்ணா டாவின்ஸி எழுதினார். அதன்பின் அதிகமாக கிருஷ்ணா டாவின்ஸியின் எழுத்துக்களை நான் பார்த்ததில்லை. அவரது பெயர் கைபேசியின் திரையில் ஒளிரும்போதெல்லாம் உற்சாகமடைந்திருக்கிறேன். உலக இசையைப் பற்றி புரிதலோடு பேசக்கூடிய மிகக்குறைவான இலக்கிய நண்பர்களில் ஒருவராக அவர் இருந்திருக்கிறார். 2008ல் தொடங்கி மூன்று நான்கு முறைதான் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால் பலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். சிலமுறை மணிக்கணக்காக! அவ்வப்போது இசை சார்ந்த குறுஞ்செய்திகள் அனுப்புவார். சென்ற வாரம் மும்பையில் ஒரு இசைப்பதிவில் இருக்கும்போது கிருஷ்ணா டாவின்ஸியின் கைபேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. கிருஷ்ணா டாவின்ஸி நேற்று மாலையில் காலமானார்’. அதிர்ந்துபோனேன். தொடர்ந்து பலமணிநேரம் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.


 
ஏ ஆர் ரஹ்மான் இசைக்கான உலக விருதுகளை வாங்கி குவித்துகொண்டிருந்த காலத்தில், முன்பு நான் அவரைப்பற்றி எழுதிய ஆர் கே சேகரிலிருந்து ஆஸ்கார் வரைஎன்கிற கட்டுரையை வாசித்து முதலில் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் கிருஷ்ணா டாவின்ஸி. ‘நான் உங்கள் வாசகன்என்று ஆரம்பித்த அந்த உரையாடலே கிட்டத்தட்ட ஒருமணிநேரம் நீண்டது. பின்னர் ஒருமுறை என் வீட்டுக்கு வந்தார். அந்த சந்திப்பு ஆறு மணிநேரத்துக்குமேல் நீண்டு நள்ளிரவையும் தாண்டிச்சென்றது! இசை, இலக்கியம், இதழியல், வரலாறு, அரசியல், சினிமா, தத்துவம், பகுத்தறிவு என எண்ணற்ற விஷயங்களைப்பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுமளவுக்கு விஷயமுள்ளவராக அவரை நான் கண்டறிந்தேன். எங்களது உரையாடல்கள் எப்போதுமே நிறைவுபெறாமல் முடிந்தது. பலமணிநேரம் பேசிய பின்னரும் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை என்ற உணர்வு தான் அவரிடம் பேசும்போது எப்போதுமே இருந்தது. விகடனில் ஒரு கனவின் இசை என்கிற தலைப்பில் ஏ ஆர் ரஹ்மானைப்பற்றி பலவாரங்கள் விரிவாக எழுதினார் கிருஷ்ணா டாவின்ஸி. அக்கட்டுரைகளில் எனது பெயரையும் வரிகளையும் மேற்கோளாக அவ்வப்போது குறிப்பிட்டார். ஆனால் என்னிடம் அதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை. வேறு யாரெல்லாமோ படித்து சொன்னபோதுதான் நான் அதை அறிந்துகொண்டேன். ஆனால் அவரது வேறுசில கட்டுரைகள் பிரசுரமானபொழுது அதைப்பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். இணையத்தில் பிரசுரமாகியிருந்தால் அதன் சுட்டியை அனுப்பிவைப்பார். அவரது எழுத்துமுறை எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. 


அகிலன் சித்தார்த் என்கிற புனைபெயரில் இளையராஜாவின் சகாப்தம் முடிந்து விட்டதா?என்கிற அவரது இசைக் கட்டுரை ஒன்றை எனக்கு அனுப்பி வைத்தார். வலுவான பல அவதானிப்புகள் இருந்த அந்த கட்டுரையின் தொடக்கமே அற்புதமாக அமைந்திருந்தது. சில நாட்களுக்கு முன்னால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தங்க நேர்ந்தது. மஞ்சப்பரப்பு என்கிற மலைக்கிராமத்தில் முழுவதும் தேக்கு மரத்திலேயான ஒரு காட்டுப் பங்களா. மின்சாரம் அவ்வப்போது வரும். இரவு நேரத்தில் நிச்சயம் வராது. முதல் ஒரு சில நாட்கள் அந்தக் குளிரும் இரவும் பயமாக இருந்தது. ஒரு இரவில் கும்மிருட்டிலும் குளிரிலும் தூக்கம் வராமல் புரண்ட போது எங்கிருந்தோ அந்த இசை கேட்க ஆரம்பித்தது. ஏதோ ஒரு மலைகிராமத்தில் நடக்கும் திருவிழாவில் போடப்படும் பாடல்களாக இருக்க வேண்டும். ஆழமான பல விஷயங்களை சொல்லப்போகும் ஒரு கட்டுரைக்கு எவ்வளவு சுவாரசியமான துவக்கம்!எனது இசை சார்ந்த கட்டுரைகள் விகடனிலும் குமுதத்திலுமெல்லாம் வரவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். முதலில் அவரது தூண்டுதலினாலும் பின்னர் அவரது நண்பர் நா கதிர்வேலனின் கோரிக்கையினாலும்தான் நான் விகடனில் சில கட்டுரைகளை எழுதினேன். குமுதத்திற்காகவும் கட்டுரைகளை கேட்டிருக்கிறார் கிருஷ்ணா டாவின்ஸி. பல காரணங்களினால் எழுதமுடியவில்லை. 


கிருஷ்ணா டாவின்ஸியிடம் ஒருபோதும் அவரது தனிமனித வாழ்க்கையைப்பற்றியோ அவரது குடும்பத்தைப்பற்றியோ நான் பேசியதில்லை. இசை, இலக்கியம், சினிமா என நில்லாமல் தொடரும் பேச்சுக்களுக்கிடையில் அதைக்கேட்க சந்தர்பமே கிடைக்கவில்லை. ஆனால் எனது சில கட்டுரைகளின் வழியாக என் குடும்பத்தைப்பற்றியும் மகளைப்பற்றியும் தெரிந்து வைத்திருந்த கிருஷ்ணா ஒவ்வொரு மின்னஞ்சலிலும் என் குடும்பத்தின் நலனைப்பற்றி விசாரிப்பார். கிருஷ்ணா டாவின்ஸி மறைந்து இரண்டு நாட்கள் கழித்து அவரது மனைவியை தொலைபேசியில் அழைத்தேன். என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினேன். 


முடிவற்ற காலம் நம்முன் பரந்து கிடக்கிறது என்றுதான் நமது அசையாத நம்பிக்கை. அன்பு செலுத்த, அக்கறை காட்ட, நலன் விசாரிக்க, கருணையுடன் செயல்பட...எல்லாவற்றுக்கும் இன்னும் காலம் நிறைய இருக்கிறது என்று நாம் கருதுகிறோம். ஒவ்வொருநாளும் செய்துமுடிக்க வேறு ஆயிரம் இருக்கு என்று இதையெல்லாம் முக்கியத்துவமற்றவையாக நாம் தள்ளிவைத்துக் கொண்டேயிருக்கிறோம்! எல்லாவற்றுக்கும் காலமிருக்கிறது என்பது ஒரு விருப்பக்கனவு மட்டுமே என்று சொல்லியவண்ணம் தனது 46ஆவது வயதிலேயே கிருஷ்ணா டாவின்ஸி சென்று விட்டார். ‘மீண்டும் சந்திப்போம்என்கிற சொல்லாடல் எவ்வளவு அர்த்தமற்றது!
நன்றி : புத்தகம் பேசுது மாத இதழ் (ஏப்ரல் ’12)ஷாஜி

Tuesday, July 10, 2012

நாளைய இயக்குநர் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள்- விமர்சனம் (8.7..2012)


நாளைய இயக்குநர் நிகழ்ச்சி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் படைப்பளிகளை ஊக்குவிக்கும் ஒரு தரமான நிகழ்ச்சி.. காதலில் சொதப்புவது எப்படி? குறும்படம் பெரும்படம் ஆகி வசூல் தரும் படம் ஆன பிறகு இந்த நிகழ்ச்சிக்கான மதிப்பு உயர்கிறது . வாரா வாரம் ஞாயிறு காலை 10.30  டூ 11.30 கலைஞர் டி வியில் காணலாம்.. 


இன்னைக்கு ஆர்த்தி பெருசா பூப்போட்ட நைட்டி அணிஞ்சு வந்தாங்க.. ஜட்ஜஸ் 2 பேர் கிட்டேயும் கேள்வி கேட்டாங்க.. அதுக்கு அவங்க பதில்// 


ஆர்த்தி - சார், சமீபமா நீங்க என்ன படம் பண்ணிட்டு இருக்கிங்க? அது பற்றி சொல்லுங்க


 பிரபு சாலமன் -  நான் எடுத்து வரும் கும்கி படம் யானைகளை மையமா எடுத்து சொல்லப்படும்  டாக்குமெண்ட்ரி என நிறைய பேரு நினைக்கறாங்க, ஆனா அது உண்மை அல்ல,கதைக்கான பின்னணி யானை.. மற்றபடி ஒரு காதல் கதை,.. யானைப்பாகனின் கதைன்னும் சொல்லலாம்.. சிவாஜியின் பேரன்க்காக இந்த கதை எடுக்கறேன். 


விக்ரமன் - இளமை நாட்கள்னு ஒரு  படம்  பாதி எடுத்தாச்சு, இப்போ ஸ்டாப் பண்ணிட்டோம்.. புதுமுகங்களை வெச்சு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன்


1. குறும்பட இயக்குநர் பெயர் - குகன் , குறும்படத்தின் பெயர் - H2O ( தண்ணீர் )


இது அக்மார்க் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை.. 2050ல கதை நடக்குது..  ஒரு பாலைவனம்.. அதுல ஒரு ஆள் பயணம் பண்றாரு. நடராஜா சர்வீஸ் தான்.. இடுப்புல வாட்டர் கேன், முதுகுல ட்ராவலிங்க் பேக்.. போற வழில 3 பேர் செத்தோ, மயக்கமாவோ கிடக்கறாங்க.. அவங்களை குனிஞ்சு செக் பண்றப்போ 3 பேர்ல ஒருத்தன் அவன் கிட்டே இருக்கும் வாட்டர் கேனை பிடுங்க பார்க்கறான். சண்டைல ஹீரோ அவனை கொன்னே போட்டுடறான்.. தண்ணீருக்காக கேரளா,கர்நாடகா, தமிழ் நாடு அடிச்சுக்குதே அதுதான் குறியீடு போல.. எதிர்காலத்துல உலகப்போர் வந்தா அது தண்ணீருக்ககவோ, பெட்ரோலுக்காகவோதான் இருக்கும்னு யாரோ சொன்னாங்க. .


ஹீரோ கழுத்துல காயத்தோட தனது பயணத்தை தொடர்றான்..  சாகற நிலைமை.. தனது கடைசி மூச்சு விடறப்போ  ஒரு செடிக்கு அந்த தண்ணீரை ஊற்றிட்டு சாகறான்.. 


விக்ரமன் - என்வயரோமெண்ட்ல அக்கறை வேணும், பொல்யூஷன் வராம பார்த்துக்கனும்னு சொல்ல வந்திருக்கீங்க.. குட்.. ஓப்பனிங்க் ஷாட்ல 1000 ரூபாய் நோட்டால வியர்வையை துடைக்கற சீன் கிளாசிக்.. அவனுக்கு பணம் ஒரு பொருட்டல்ல.. ஆனா தண்ணீர் தான் அத்தியாவசியத்தேவைன்னு சொல்ல வந்தது நல்லா வந்திருக்கு.. பதியுது..  அந்த  இடத்துல இசை சூப்பர்.. ஒரே ஒரு கேரக்டரை வெச்சு தண்ணீர் பிரச்சனையை பேஸ் பண்ணி படம் பண்ணி இருக்கீங்க.. குட்..


பிரபு சாலமன் - ஹீரோவோட சிந்தனை பூரா  தண்ணீர்ல ஊறி கிடக்கு என்பதை அவன் சாகற சீரியஸ் நிலைல கூட ஸ்விம்மிங்க் பூல்ல விழுந்த நினைவை காட்டுவதுல இருந்து உணர்த்திடறீங்க.. . எதிர் காலத்துல இப்படித்தான் நடக்கப்போகுதுன்னு சொல்ல வந்திருக்கீங்க.  நல்லாருக்கு


சி.பி - முன்னுக்குப்பின் முரணான பாத்திரப்படைப்பா  ஹீரோவை காட்டறீங்க.. ஒரு 100 மிலி தண்ணீருக்காக கொலை செய்யும் அளவுக்கு வக்கிரமான , குணம் கொண்ட ஹீரோ தன் உயிர் போறப்பக்கூட தன் தாகத்துக்கு தண்ணீரை குடிக்காம செடிக்கு தண்ணீர் ஊற்றுவது சூட் ஆகலையே.. சக உயிரை ஆறறிவு மனிதனை காப்பாற்றாமல் செடிக்கு ஊற்றுவது ஏன்?இயற்கையை பாதுகாக்க என்றால் மனிதனும் இயற்கையின் படைப்பு தானே?

இந்தப்படம் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு..

மன்மோகன் ஆட்சியில் எவ்வளவு ஊழல் சாதனைகள் நடந்துருக்கு.. அதெல்லாம் சாதனை இல்லையா..


2. குறும்பட இயக்குநர் பெயர் - சந்ரு , குறும்படத்தின் பெயர் -ஆருயிரே

இந்தப்படத்தோட கதை , திரைக்கதை எல்லாம் நம்ம ஆளு அதிஷாவுடையது,, புதிய தலைமுறை உதவி ஆசிரியர்.. பிரபல ட்விட்டர்.. பிரபல பதிவர் என பன்முகம் கொண்டவர்..

சமீபத்தில் நடந்த  போலீசின் எண்கவுண்ட்டர் பற்றிய படம்..அதாவ்து  பேங்க் கொள்ளை நடந்தப்ப  இவங்க தான் பேங்க் கொள்ளையர்ஸ்னு வட மாநில ஆட்களை போட்டுத்தள்ளுச்சே போலீஸ் அதை கிண்டல் செய்யும் ப்டம்.. ஆனா காமெடி  கதை அல்ல. சீரியஸ்..

ஓப்பனிங்க் ஷாட்ல  லவ்வர்ஸ் ஜோடியை காட்ட்டறாங்க.. வழக்கம் போல ஊரை விட்டு ஓடி வந்தவங்க.. காதலன் தன் நண்பனை நம்பி வந்துடறான்.  ஆனா அவன் இவனை கண்டுக்கலை. செல் ஃபோன்ல நோ ரெஸ் பான்ஸ்.. கடைசில எப்படியோ கண்டு பிடிச்சு அந்த நண்பனோட ரூமுக்கு போறான்.. தனியாத்தான்.. காதலியை அவன் சாப்பிட்ட மெஸ்ல வெயிட் பண்ண வெச்சு இவன் மட்டும் போறான்.  ஆனா அந்த ரூம்ல அவனோட நண்பன் இல்லை.. சரின்னு அந்த ரூமை விட்டு வெளீல வர்றப்போ போலீஸ் கும்பல் அவனை , அந்த ரூம்ல இருக்கறவங்களை எந்த விசாரணையும் இல்லாம  போட்டுத்தள்ளிடுது..

 ஹீரோயின் அங்கே ஹீரோவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா.. அவ்லவ் தான் படம்மனம் கவர்ந்த வசனங்கள்


1. போலீஸ் நம்மளை ட்ரேஸ் அவுட் பண்ணிட்டா என்ன பண்றதுனு செல் ஃபோனைக்கூட எடுத்துட்டு வராம வந்துட்டோம்..


2. எனக்கு பயமா இருக்கு.. நம்மை நிம்மதியா வாழ விட மாட்டாங்க..


3. ஃபிரண்ட் செல் நாட் ரீச்சபிள்.. அவனை நம்பி இங்கே வந்திருக்கக்கூடாதோ? எதுக்காக செல்லை ஆஃப் பண்ணிட்டான்னு தெரியலையே?


விக்ரமன் - காதல் பட இன்ஸ்பிரேஷன் அங்கங்கே தெரியுது,.,. ஹீரோ ஃபிரண்ட் கிட்டே பேசறப்போ காதல் சுகுமாறன் மாதிரியே என்னடா மச்சான் என்ரெல்லாம் கூப்பிடாம இருந்திருக்கலாம்.. காதலை நினைவு படுத்துது..பிரபு சாலமன் -போலீஸ் ஸ்டோரிக்கான மூடு படத்துல மிச்சிங்க்.. அவங்க திடீர்னு வர்றாங்க, சுடறாங்க போயிடறாங்க.. படத்துல அவங்க வரப்போறாங்க என்பதற்கு ஒரு லீடு குடுத்திருக்கலாம்.. அது ஆடியன்ஸிடம் ஒரு டெம்ப்போ ஏத்தி இருக்கும்.. யூ ஸி.. சோகம் வேற , பாதிப்பு வேற.. வர்ற ஆடியன்சை சோகத்தோட அனுப்பக்கூடாது.. ஆனா நம்ம படம் அவங்க மனசை பாதிக்கனும்.. இதுதான் ஃபார்முலா..


சி.பி - போலீஸ் ஸ்டோரி கேட்டகிரில படம் எடுத்ததால கதையோட ஓப்பனிங்க் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஸ்டார்ட் ஆகி இருந்தா நல்லார்ந்திருக்கும்.. ஹிட்சாக்கின் தியரிப்படி சஸ்பென்ஸ் என்பது திடீர்னு ஒரு எதிர்பாராத சம்பவத்தை காட்டி பார்வையாளனை திகைக்க வைப்பது அல்ல.. ஒரு வெடி குண்டு வெடிக்கப்போகுதுன்னு  ஆடியன்ஸ்க்கு சொல்லி அதை எப்போ எப்படி வெடிக்காம காப்பாத்தறாங்க என டெம்ப்போ ஏத்துவதே சஸ்பென்ஸ்க்கான இலக்கணம்.. போலீஸை ஓப்பனிங்க்லயே காட்டி இருந்தா இன்னும் கிராண்டா வந்திருக்கும்..

 படத்துல ஹீரோ, ஹீரோயின் 2 பேர் நடிப்பும் எதார்த்தம்.. பெஸ்ட் ஆக்டிங்க் அவார்டு 2 பேருக்கும் சமமா பகிந்து கொடுத்தாங்க.. ( அதை எப்படி 2 பேரும் ஷேர் பண்ணிக்குவாங்க? ஆளுக்கு ஒரு வாரமா? )

இந்தப்படம் பற்றி ட்விட்டர்ல நடந்த கலந்துரையாடல்


கி.கோ - ஆருயிரே' குறும்படம் யாராச்சும் பார்த்தீங்களா? இந்த அளவுக்கா நம்மூர்ல படைப்பு சுதந்திரம் இருக்குது ~ நம்பவே முடியல!


சி பி - டி வி க்கு சென்சார் இல்லை, அதுவும் இல்லாம போலி என்கவுண்ட்டர் பற்றி படம் எடுத்து இப்படி போடுவாங்கன்னு ஜெ அரசு எதிர்பார்த்து இருக்காது


கி கோ -ஆமாங்க.. ஆனாலும்.. சந்துருவின் கற்பனை கொஞ்சம் அதிகமா படுது.. சாத்தியக் கூறுகளையும் மறுப்பதற்கில்லை தான்..


3. குறும்பட இயக்குநர் பெயர் - மித்ரன் , குறும்படத்தின் பெயர் -பொல்லா வினையோன்
ஊஞ்சல்ல ஒரு பொண்ணு உக்காந்து ஆடிட்டு இருக்கு.. பேப்பர்ல ஒரு பறக்கும் தட்டை வரைஞ்சு அதை பார்த்துட்டு இருக்கு.. திடீர்னு ஒரு பறக்கும் தட்டு வந்து இறங்கி அந்த பாப்பாவை கூட்டிட்டு போயிட பாக்குது..


பாப்பாவோட மம்மி ஷாப்பிங்க் போறப்போ அந்த வேற்றுக்கிரக வாசிகள் அவளை அப்ரோச் பண்றாங்க.. இந்த உலகத்தை அழிச்சுட்டு புதுசா ஒரு உலகத்தை உருவாக்கப்போறோம்கறாங்க. கடைசில அந்த லேடி தன் குழந்தையை அவங்களோட அனுப்பி வைக்குது..

 எந்த ஊர்ல அப்படி ஒரு அம்மா குழந்தையை அனுப்பி வைக்குமோ தெரியலை.. சாமார்த்தியமா கதைக்களன் நியூ ஜெர்சிலன்னு காட்டிடறாங்க.. ஆனா எந்த ஒரு தேசத்திலும் பெற்ற அம்மாவே தன் குழந்தையை அப்படி அனுப்பி வைக்க மாட்டாங்கன்னுதான் தோணுது..

 வழக்கமா உள்ளத்தை தொடும் சமூக கருத்தை சொல்லும் மித்ரன் இந்த டைம் சரியான திரைக்கதை அமைக்காம சொதப்பிட்டார்னு தோணுது.. .பிரபு சாலமன்  - புது உலகத்தை உருவாக்க நினைப்பது ஓக்கே.. ஆனா அதுக்காக ஏன் பழசை அழிக்கனும்?கான்செப்ட் ஈஸ் நாட் ஓக்கே. விக்ரமன்  - SOME TIMES CREATIONS WILL FAIL ,BUT THE CREATORS NEVER FAIL - சில சமயம் சில படைப்புகள் தோல்வி அடையலாம், ஆனால் படைப்பளிகள் தோற்பதில்லை


சி.பி - இவரோட படைப்புகள் எல்லாமே ஹை கிளாஸ் ஆடியன்ஸுக்கானவை.. மணிரத்னம், கவுதம் மாதிரி,. இன்னும் எளிமையா சொல்லலாம்


 பெஸ்ட் சி ஜி ஒர்க்குக்கான விருது கிடைச்சுது..

Monday, July 02, 2012

புரட்சி எழுத்தாளரின் கதாநாயகி - கு.அழகிரிசாமி - சிறுகதை

https://www.nhm.in/img/100-00-0000-186-6_b.jpg 


கதை ஆசிரியர்: கு.அழகிரிசாமி.

ராமநாதனுக்குப் பட்டண வாழ்க்கை அலுத்துவிட்டதாகச் சொல்ல முடியாது. வெறுத்து விட்டது. அதுதான் உண்மை. அவன் சென்னைக்கு வந்து அதிகமாய்ப் போனால் நாலு வருஷங்கள்தான் ஆகியிருக்கும். இப்போது அவன் குடியிருப்பது இரண்டாவது வாடகை வீடுதான். ஆபீஸில் பற்றாக்குறைச் சம்பளம் என்றும் சொல்வதற்கில்லை. இத்தனையும் இருந்தும் சென்னை நகரை அவன் விஷமாக வெறுத்தான். ‘ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் விழுந்த அணுகுண்டுகள் இந்தப் பாழாய்ப்போன பட்டணத்தில் விழுந்து ஊரைத் தரை மட்டமாக்கியிருந்தால் வேறு எங்காவது தலைநகரை மாற்றியிருப்பார்கள் அல்லவா ?


மாற்றாவிட்டாலும் சுடுகாட்டிலாவது நிம்மதியாகக் குடியிருந்திருக்கலாமே ‘ இப்பொழுது சென்னையில் அல்லவா குடியிருக்கவேண்டியிருக்கிறது ? ‘ –இப்படி ஒரே வெறுப்பு. நண்பர்களிடம் பலதடவை தன் வெறுப்பைக் கொட்டி மனக் கொதிப்பை ஆற்றியிருக்கிறான். அவர்களுக்கு ராமநாதனுடைய பேச்சையும் ஆவேசத்தையும் பார்க்க வியப்பாக இருந்தது. ‘யாரையும் எதையும் வெறுத்துப் பேசுகிறவன் அல்லவே ‘ சிரித்த முகத்துடன் சுமுகமாகப் பழகுபவன்; உல்லாசப் போக்குடையவன்; அப்படிபட்டவன் இந்த மாதிரி பேசுகிறானே ‘ ‘ என்று அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.


ராமநாதனுக்கு இப்படி வெறுப்பும் கசப்பும் சிரசு முட்டிப் போனதற்குக் காரணம் அற்பமான ஒரு விஷயம்தான். சொன்னால் நம்புவது கூடக் கஷ்டமாக இருக்கும். பட்டணம் அல்லவா ? உண்மையை நம்பத் தோன்றுமா ? அவன் குடியிருந்த மாடிவீடுதான் இத்தனைக்கும் காரணம். மனித குணங்களை, குடியிருக்கும் வீடும் உருவாக்குகிறது என்று பிரெஞ்சு நாவலாசிரியர் பால்ஸாக் ஓரிடத்தில் சொன்னது சரியோ தப்போ, இவன் விஷயத்தில் முற்றிலும் சரியாகவே இருந்தது.


அந்த மாடி வீட்டுக்கு அவன் குடித்தனம் வந்து ஒரு வருஷம் ஆகிறது. அதற்கு முன் போதிய காற்றும் வெளிச்சமும் இல்லாத ஒரு சிறு வீட்டில் மனைவியோடும் மைத்துனனோடும் பெற்றோர்களோடும் அவதிப் பட்டுக் கொண்டிருந்தான். கல்யாணமான புதிதில் அந்த இருட்டுக் கொட்டடியில் முன்று வருஷங்களைத் தள்ளினான். பிறகு இந்த மாடி வீட்டுக்குக் குடியேறினான். இந்த வீட்டில் காற்று இருந்தது; வெளிச்சம் இருந்தது; இடவசதி இருந்தது. வீடு பிடிக்கும் சமயத்தில் வீட்டுக்காரனின் பேச்சில் கற்கண்டும் இருந்தது. கேட்கவா வேண்டும் ? குடிவந்து விட்டான். அப்போது அவனுக்கு ஒரு கைக் குழந்தை இருந்ததுடன் மனைவி கர்ப்பிணியாகவும் இருந்தாள்.


இந்த மாடி வீட்டில் ஒரு பெரிய அசெளகரியம்; அதாவது தண்ணீர்க் கஷ்டம். தண்ணீரை வரவழைப்பது. உதைக்கிற மாட்டில் பால் கறக்கும் கதைதான். ‘பம்ப் ‘ அடிக்க வேண்டும். கீழே ஐந்தாறு குடித்தனங்கள்; குடும்பங்கள். காலை நாலரை மணியிலிருந்து, தண்ணீர் சப்ளை நிற்கும்வரை –அதாவது பத்தரை மணிவரை — ஒருவர் மாற்றி ஒருவர் குழாயடியிலேயே காரியம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களே ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுத்தான் காலா காலத்தில் குளிக்கவேண்டி யிருந்தது.


இந்த நிலையில் குழாயை மூடுவதற்கு எங்கே சமயம் வாய்க்கும் ? மூடாவிட்டால், மேலே எவ்வளவு அடித்தாலும் தண்ணீர் வராது என்பது வெளிப்படை. எனவே ஒரு வாளித் தண்ணீருக்கும், கீழே குழாயை மூடச்சொல்லி மாடியிலிருந்து கெஞ்ச வேண்டும். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தும், ராமநாதன் ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று மாதங்கள் வரை அவற்றை அவ்வளவாக உணராமல் இருந்ததற்குக் காரணம், அவனுடைய மைத்துனன் நடராஜனின் உதவிதான். அவன் வேலைத் தேடிப் பட்டணத்துக்கு வந்து அக்காள் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்தான். ராமநாதன் காலையில் ஒன்பது மணிக்கே அவசர அவசரமாகக் குளித்துச் சாப்பிட்டுவிட்டுத் தன் காரியாலயத்துக்கு வேலைக்கு போய்விடுவான். அதிலிருந்து நடராஜன் பம்ப் அருகில் ஒற்றைக் காலில் நின்று, சமயம் வாய்க்கும்போதெல்லாம் தண்ணீர் அடித்து வைத்துவிடுவான். வீட்டுத் தண்ணீர் தேவை பூர்த்தியாகிவிடும். சாயங்காலமும் இதே கதைதான்.


மூன்று மாதங்களுக்குப் பிறகு நடராஜனுக்கு சேலத்தில் வேலை கிடைத்துவிட்டது. உடனே அவன் புறப்பட்டுப் போய்விட்டான். அப்பொழுதுதான் ராமநாதன் தண்ணீர்க் கஷ்டத்தை உணர ஆரம்பித்தான். ஒன்று ஆபீசுக்குப் போக வேண்டும்; இல்லையென்றால் தண்ணீர் அடிக்க வேண்டும். இரண்டு வேலைகளையும் செய்வது என்பது விடுமுறை நாட்களில் மட்டுமே சாத்தியமாக இருந்தது. என்ன செய்வது ?


‘வீட்டில் பண்ட பாத்திரங்களைத் தேய்த்து வைத்து, துணி துவைத்துப் போடும் வேலைக்காரியைத் தண்ணீர் அடிக்கும்படி சொல்லி, அவளுக்கு மேற்கொண்டு இரண்டோ மூன்றோ கொடுக்கலாம்; அவளும் பிள்ளைகுட்டிகாரி; பிழைத்துப் போவாள்; வேறொருத்தியை வேலைக்கு வைத்து அவளுக்கு பணத்தைத் தூக்கிக் கொடுப்பானேன் ? ‘ என்று நினைத்து, ராமநாதன், கமலாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். கமலா என்பவள் வேலைக்காரி.


அன்றைய தினம் அவள் குறித்த காலத்திஒல் வராமல் அரை மணி நேரம் தாமதித்து வந்தாள். வந்தவள் விறுவிறு என்று சமையலறையை நோக்கி நடந்து சென்றாள். மீனாவை –ராமநாதனின் மனைவியை –அழைத்தாள். அப்புறம் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அது இந்தப் பக்கத்திலிருந்த ராமநாதனின் காதில் சரியாக விழவில்லை. ஐந்து நிமிஷத்துக்குப் பிறகு மீனா நேரே ராமநாதனிடம் வந்தாள். வந்து ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாள். ராமநாதன் அதிர்ச்சியினால் அப்படியே நாற்காலியில் சாய்ந்து விட்டான்.


‘கமலா வேலையைவிட்டு நின்றுகொள்கிறாளாம். ‘

‘ஏன் ? ‘

‘அவளால் தண்ணீர் அடிக்க முடியாதாம். இந்த இரண்டு நாள் தண்ணீர் அடித்ததிலேயே கையும் நெஞ்சும் நோகிறதாம். அதனால் வேலைக்கு வரமுடியாதாம். ‘

‘இத்தனை நாளும் எப்படி தண்ணீர் அடிக்க முடிந்ததாம் ? இதுவரையிலும் நோகாத கை இப்பொழுது நோவானேன் ? ‘

‘அவள் எங்கே தண்ணீர் அடித்தாள் ? நடராஜன் அடித்து வைப்பான். அந்தத் தண்ணீரில் அவள் பத்துத் தேய்த்து, துணிகளையும் அலசிப் போட்டு விட்டுப் போவாள். ‘


‘அப்படியா சமாச்சாரம் ? சரி சரி; கமலாவை இப்படிக் கூப்பிடு ‘ என்றான் ராமநாதன்.

‘அதிகச் சம்பளத்துக்குத்தான் இந்த விதமாகக் கிராக்கி பண்ணி அடிப் போடுகிறாள்; நாம்தான் இரண்டோ மூன்றோ சேர்த்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறோமே ‘ என்ற எக்களிப்போடு கமலாவைப் பார்த்து,


‘நீ என்ன இப்படிச் சொல்றே ? இரண்டு வாளித் தண்ணீர் அடிப்பது அவ்வளவு கஷ்டமா ? ‘ என்று அவன் ஆரம்பித்தான்.


வேலைக்காரி பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டும், ஒரு நகத்தை மற்றொரு நகத்தால் சுரண்டிக் கொண்டும் சுவரை ஒட்டி நின்றாள்.

‘என்ன கமலா, என்ன சொல்றே ? என்னிடத்தில் விஷயத்தைச் சொல்லேன் ‘ என்றான் ராமநாதன்.

‘என்னாலே முடியாதுங்க. வேறே யாரையாவது வச்சிக்கோங்கோ ‘ என்று தலையைக் குலுக்கினாள் கமலா.

வீட்டுத் தேவை முழுவதற்குமே தண்ணீர் அடிக்க அவளை ஏற்பாடு செய்ய– அதிலும் கருணையுள்ளத்தோடு ஏற்பாடு செய்ய— நினைக்கப் போய், அவள் மாமூல் வேலையையே செய்ய முடியாது என்று மறுத்துவிட்டாள்.


ராமநாதன் என்னன்னவோ சொல்லிப் பார்த்தான். அவனுடைய மனைவியும் தாங்கினாள். ராமநாதனின் வயது முதிர்ந்த பெற்றோர்களும் கேட்டுப் பார்த்தார்கள். பருப்பு வேகவில்லை. கடைசியில், ‘இரண்டு ரூபாய் கூடத் தருகிறேன். வீட்டுக்குத் தண்ணீர் அடித்து வைத்துவிடு; நித்யப்படி வேலையையும் செய் ‘ என்று ராமநாதன் கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்துப் பார்த்தான்.


‘நூறு ரூபா கொடுத்தாலும் சரி, தண்ணீர் அடிக்க முடியாதுங்க. ‘

இதுவே கமலாவின் பதில்; ஆணித்தரமான கடைசிப் பதில்.


அதற்குமேல் அவளைக் கட்டாயப் படுத்துவதில் கெளரவமில்லை என்று, கொடுக்கவேண்டிய பாக்கியைக் கொடுத்து அனுப்பிவைத்தான் ராமநாதன்.

‘இப்படிப் பிடிவாதமாக முடியாது என்று சொல்லி விட்டுப் போய் விட்டாளே ‘ இனி தண்ணீருக்கு என்ன செய்வது ? ‘ என்று தன் கவலையை வெளியிட்டாள் மீனா. தன் நோஞ்சான் உடம்பையும் கைக்குழந்தையையும், வயிற்றுப் பிள்ளையையும் வைத்துக் கொண்டு, ஒரு செம்புத் தண்ணீர்கூட அடிக்க முடியாதே என்ற கவலை அவளுக்கு.


‘நீ ஒரு பைத்தியக்காரி, மீனா ‘ ஒரு நேரக் கஞ்சிக்கு வழி இல்லாமல் எத்தனையோ பேர் தெருதெருவாய் அலையிறாங்க. நீ பேசாமல் இரு. நாளையே வேறு ஒரு வேலைக்காரியைக் கொண்டு வந்து நிறுத்துறேன், பார் ‘ என்று மனப்பூர்வமாகவே சொன்னான் ராமநாதன்.

அதிலிருந்து இரண்டு மூன்று நாள் நண்பர்களின் வீடுகளில் சொல்லி, ஒரு வேலைக்காரியை வலை போட்டுப் பிடித்துக் கொண்டு வந்தான்.


புது வேலைக்காரியின் பெயர் மங்களம். நல்ல வாலிப வயது. அவளுக்கு நாலு வயதில் ஒரு பெண் குழந்தை. தோற்றத்தில் ஒரு மாதிரி அழகாகவே இருந்தாள். நல்ல நிறம். கட்டுறுதி கொண்ட உடம்பு. எந்த வேலையையும் சளைக்காமல் செய்யக்கூடியவள் என்று பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி விடலாம். அவளுடைய புருஷன் அவளை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டானாம். மூன்று வருஷங்களாகத் தன் குழந்தையோடு கஷ்ட ஜீவனம் செய்து வருகிறாளாம். இதை அவளே சொன்னாள்.


‘ஐயோ பாவம் ‘ இந்தக் காலத்து ஆண் பிள்ளைகளுக்கு மனசு கல்மனசு ‘ என்று தன் அனுதாபத்தை தெரிவித்தாள் ராமநாதனின் தாயார்.


‘இந்த இளம் வயதில், இவ்வளவு அழகான மனைவியையும், லக்ஷணமான குழந்தையையும் விட்டுவிட்டு எப்படித்தான் அவன் போனானோ ‘ என்று ஆச்சரியப்பட்டான் ராமநாதன்.


எப்படி போனானோ ? போய்விட்டான். இவளும் வேலைக்கு வந்துவிட்டாள்.

அன்று ராமநாதன் நிம்மதியோடு ஆபீசுக்குப் போனான்.

* * *
மங்களம் சுமார் ஒரு வாரம் வரையிலும் எல்லோரும் மெச்சும்படியாக மிகவும் சூட்டிகையாக வேலை செய்து வந்தாள். கீழே குடித்தனம் இருப்பவர்களில் ஆண்கள்— வயது முதிர்ந்தவர்கள், வாலிபர்கள், எல்லோருமே— அவள் பம்ப் அடிக்க வரும்போது, கீழே குழாயைத் திறப்பதில்லை. மேலே அவள் பம்ப் அடிப்பதை அவ்வப்போது ஏறிட்டுப் பார்த்துக் கொள்ளுவதும், அதைக் தத்தம் மனைவிமார் கவனிக்கிறார்களோ என்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்ளுவதுமாகக் கீழே குழாயடியில் உலாவிக்கொண்டிருப்பார்கள்.

மங்களம் மேலே தண்ணீர் அடித்து முடித்த பிறகுதான் கீழே குழாயைத் திறப்பார்கள். எனவே ராமநாதன் வீட்டில் தண்ணீர்த் தரித்திரம் நீங்கிவிட்டது. இந்தச் சந்தோஷத்தில் மங்களத்துக்கு ஒரு கிழியாத பழைய புடவையையும், அவளுடைய நாலு வயதுப் பெண்ணுக்கு புதுப் பாவாடை, சட்டையும் வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.


இந்தச் சமயத்தில் மங்களத்துக்கு எப்படியோ ‘ஞானோதயம் ‘ ஆகிவிட்டது. பட்டணத்து வேலைக்காரிகள், ஆயிரம் கொடுத்தாலும் செய்யாத — ‘செய்யக்கூடாத ‘ —- வேலையைத் தான் மட்டும் செய்துவரும் விபரீதம் எப்படியோ அவள் மனசுக்குப் புலனாயிற்று. அவ்வளவுதான். மாடு சண்டித்தனத்துக்குத் தயாராகிவிட்டது. பழைய வேலைக்காரியைப்போல இவளும் ஓடிவிடக்கூடாதே என்று, சாப்பாடு போடுவதிலிருந்து சகல் விஷயத்திலும் மீனா தாராளமாக நடந்துகொண்டு வந்தாள். இதைக் கண்டு வேலைக்காரி ஏமாந்து விடுவாளா, என்ன ?


ராமநாதன் பார்த்தான். சம்பளத்தைக் கூட்டித் தருவதாகச் சொன்னான். மங்களம் உடனடியாகச் சம்மதிக்கவில்லை. கடைசியில் மூன்று ரூபாயை அதிகப்படியாகக் கொடுப்பதாக அவன் திட்டவட்டமாகச் சொல்லவே, அவள் வேண்டா விருப்புடன் சம்மதித்தாள்.


இந்த மூன்று ரூபாய்க் கவர்ச்சியும் ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கவில்லை. ஒரு நாள் பழைய வேலைக்காரி கமலா அவளைத் தெருவில் சந்தித்து, வலிய வந்து பேசி, ‘நீ என்ன இந்த வேலையெல்லாம் செய்யிறே ? உன்னைப் போலப் பொம்மனாட்டிங்க இருக்கப் போய்த்தானே எங்களையும் கண்ட கண்ட வேலையெல்லாம் செய்யச் சொல்லி உசிரை வாங்குறாங்க. நீ தண்ணி அடிக்கிறயே, எத்தனை நாளைக்கு அடிப்பே ? எத்தனை நாளைக்கு உன் ஒடம்பு தாங்கும் ? அப்படி உனக்கு எவ்வளவுதான் அள்ளிக் கொடுக்கிறாங்களாம் ‘ ‘ என்று மனசைக் கலைத்தாள்.

அவ்வளவில் மங்களம் விழித்துக் கொண்டாள். மறுநாளே ராமநாதனின் மனைவியிடம் வந்து, ‘தண்ணீர் அடிக்க முடியாது ‘ என்று அந்த பட்டணத்துப் பல்லவியைப் பாடினாள்.


பழையபடியும் ராமநாதன் அதிர்ச்சிக்குள்ளானான். மங்களத்தின் காலில் விழுந்து கும்பிடாத குறையாக வீட்டோடு எல்லோரும் கெஞ்சிப் பார்த்தார்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா ? வேலைக்காரி தண்ணீர் அடிப்பாளா ?


பாக்கி சாக்கியை கணக்குப் பண்ணி வாங்கிக் கொண்டு மங்களமும் போய்விட்டாள்.


அவள் போய், அதற்குப் பிறகு குப்பம்மாள் என்ற வேலைக்காரி வந்து சேரும் வரையில், அந்த இரண்டு வார இடைக்காலத்தில் ராமநாதன் பட்ட துன்பம் சொல்லும் தரத்ததல்ல. நான்கு நாட்கள் அவன் குளிக்கவில்லை. இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு தண்ணீர் அடித்தான். இரண்டு நாள் ஆபீசுக்கு காலதாமதமாகப் போய், மேலதிகாரியால் கடுமையாக எச்சரிக்கப் பட்டான். ஒரு நாள் கீழே குடித்தனம் இருந்த ஒரு குடும்பத்துடன் சண்டையும் போட்டு விட்டான்.


தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும் என்பார்கள். ராமநாதனோ தண்ணீருக்காக மூன்று பிழை பொறுப்பது என்று மூன்றாவது வேலைக்காரியை ஏற்பாடு செய்தான். இவளும் கிராக்கி பண்ணினாள், வீட்டை மாற்றி மாட்டுத் தொழுவுக்காவது போய்க் குடியேறுவது என்று முடிவு கட்டிக்கொண்டான்.


குப்பம்மாள் என்கிற பெயரைப் பார்த்து அவளைக் கிழவி என்று நினைத்து விடக்கூடாது. அதிகமாகப் போனால் நாற்பது வயதுதான் இருக்கும். பரம ஏழை. முக்கால்வாசி நாள் கந்தலைக் கட்டிக்கொண்டே வேலைக்கு வருவாள். அப்படிப்பட்டவளும் எண்ணி இரண்டு மாதங்களே வேலை செய்தாள்; மூன்றாவது மாதம் இரண்டாம் தேதி சம்பளம் வாங்கியதும், அன்றோடு நின்று கொள்வதாக அறிவிப்புக் கொடுத்துவிட்டாள்.

காரணம், அதே காரணம்தான். ‘தண்ணீர் அடிக்க முடியாது. ‘ அத்துடன் வேறொரு சாக்கையும் சொன்னாள். அவள் தண்ணீர் அடிப்பது அவள் புருஷனுக்கும் பிடிக்கவில்லையாம்; கோபித்து கொள்ளுகிறானாம்; அடிக்கிறானாம்; பிடிக்கிறானாம்; ‘தண்ணீர் அடிப்பதாயிருந்தால் வீட்டை விட்டே போய்விடு ‘ என்றே துரத்துகிறானாம் ‘


ராமநாதனுக்கு உள்ளுக்குள் ஒரே எரிச்சல். அவள் பேச்சைக் கேட்கக் கேட்க ஆத்திரம் பொங்கியது. ‘இந்தா, அதையும் இதையும் சொல்லிக்கொண்டு நிற்காதே. இஷ்டமிருந்தால் வேலை செய்; கஷ்டமிருந்தால் போய் விடு ‘ என்று வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகச் சொன்னான்.

குப்பம்மாள் மேற்கொண்டு அங்கே நிற்கவில்லை.

‘புருஷனுக்கு பிடிக்கவில்லையாமே ‘ வேண்டியதுதான் ‘ இவள் இங்கே வாங்கிக்கொண்டு போகும் பழஞ்சோற்றை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு ஜீவனம் பண்ணுகிற அழகில் இவனுக்கு இந்த ஜம்பம் வேறு கேடா ? ‘குடிக்கிறது கூழ்; கொப்பளிக்கிறது பன்னீர் ‘ ‘ என்று தெரியாமலா சொன்னார்கள் ? ‘


அன்று முழுவதும் ராமநாதனுக்கு எதைக் கண்டாலும் ஆத்திரம் பொங்கியது. பட்டணத்தையே சுட்டு எரித்துக் கரிக்கோட்டையாக்கிப் பார்க்கவேண்டும்போல ருத்ராவேசம் பிறந்து வீட்டைவிட்டே வெளியே போய் விட்டான். நல்ல வெயில் நேரம். எங்கே போவது என்ற குறிக்கோள் எதுவுமின்றிப் போய்க்கொண்டிருந்தான்.


‘பட்டணத்துக்கு உத்தியோகம் பார்க்க வந்ததற்குப் பதில். கிராமத்திலேயே பிச்சை எடுத்துப் பிழைத்திருக்கலாம். இன்னும் முப்பது வருஷம் உத்தியோகம் பார்த்தாலும் கூட, என்னத்தை அள்ளிக் குவித்துவிடப் போகிறோம் ? காசு செலவாகியும் நிம்மதியான வாழ்க்கையைக் காணோம். கேவலம், வேலைக்காரிக்கு உள்ள மனத்திராணிகூட நமக்கு இல்லை.

தனக்கு அசெளகரியம் என்றால் ஒரே நிமிஷத்தில் ஓடிவிடுகிறாள். நாமோ தினந்தினமும் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இந்த உத்தியோகத்தையும், இந்தப் பட்டணத்தையும் கட்டி அழுகிறோம். மகா மானங்கெட்ட பிழைப்பு… ‘ என்று மனம் கசந்து கொண்டே கண்ணில் தட்டுப்பட்ட ஒரு சினிமாக் கொட்டகைக்குள் நுழைந்தான். கவலையைக் கொஞ்ச நேரமாவது மறந்திருக்கலாம் என்று உத்தேசம். இரண்டு மணிநேர ஆங்கிலப் படம். பார்த்து முடித்து வெளியே வந்ததும், நேரே ஒரு ஹோட்டலுக்குப் போய் வயிறாரச் சாப்பிட்டுக் காபி குடித்தான். நிலாக் காலமானதால் அரை மணி நேரமாவது கடற்கரையில் உட்கார்ந்திருந்துவிட்டு வரலாம் என்று பஸ்ஸில் ஏறினான்.


கடற்கரை மணலில் உட்கார்ந்து சுகமான காற்றை அனுபவித்தான். எட்டு மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பி வரும்போது, பக்கத்திலேயே தன் நண்பர் ஒருவருடைய வீடு இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. அங்கே போய்ச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வரலாம், அந்தப் பக்கத்தில் தண்ணீர் வசதியுடன் வீடு ஏதாவது கிடைக்குமா என்று விசாரித்து விட்டும் வரலாம் என்று எண்ணிப் போனான் ராமநாதன்.


நல்ல வேளையாக இவன் போய்ச் சேர்ந்த நேரத்தில் நண்பர் இருந்தார். அந்த நண்பர்தான் புரட்சிகரமாக எழுதும் பார்த்தசாரதி; பிரபல நாவலாசிரியர்; சிறு கதைகளும் எழுதுவார். ‘பார்த்தன், ‘ ‘தேரோட்டி ‘ என்ற புனைப்பெயர்களும் அவருக்கு உண்டு.


ராமநாதன் போய் உட்கார்ந்ததும், முதலில் சம்பிரதாயமாக ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக ‘என்ன ஸார், இப்போது ஏதாவது நாவல் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா ? ‘ என்று கேட்டான்.


‘ஆம ‘ என்றார் பார்த்தசாரதி.

‘என்ன நாவல் ? ‘ என்று அர்த்தமில்லாமல் கேட்டான் ராமநாதன்.

‘எல்லாம் நம் வாழ்க்கையில் தினம் தினமும் காணும் நாவல்தான் ‘ என்று பதிலளித்தார் எழுத்தாளர்.

‘எப்படி ஸார் உங்களுக்கு கதை தோன்றுகிறது ? எங்களுக்கெல்லாம் ஒரு கதைகூடத் தோன்றுவதில்லையே ‘ ‘

‘கதை தோன்றுவதாவது ? தானே எப்படித் தோன்றும் ? நெருப்பில்லாமல் புகையுமா ? நாம் வாழ்க்கையில் கண்ணாரக் காணும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிதான் கருவாக இருக்கும். அதுதான் சிறு கதையாக, நாவலாக உருவாகும். என்னைப் பொறுத்த மட்டிலும் நான் எதார்த்த வாழ்க்கையை அப்படி அப்படியே சித்தரிப்பவன் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே ?

பாருங்கள், இப்பொழுது நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலுக்குக்கூட இந்தத் தெருவிலேயே விஷயம் கிடைத்தது. ஏறக்குறைய கதை முழுவதுமே உண்மையாக நடைபெற்றுக்கொண்டிருப்பதுதான். அந்தக் கதைக்கு உருவம் கொடுத்து, சுவாரஸ்யம் குன்றாமல் சித்தரிப்பதுதான் என் வேலை. ‘

‘அப்படி இந்தத் தெருவில் என்ன நடக்கிறது ? ‘ என்று ராமநாதன் கேட்க, பார்த்தசாரதி நாவலையே சுருக்கமாகச் சொல்லத் தொடங்கி விட்டார்.

அது ஒரு சோகக் கதை. உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு மாதின் கதை. அதனால்தான் நாவலுக்கு ‘வழுக்கி விழுந்த சகோதரி ‘ என்று பெயர் கொடுத்திருந்தார்.

கதாநாயகியான அந்த ‘வழுக்கி விழுந்த சகோதரி ‘க்கு ஒரு பெண் குழந்தை. தாயையும் குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டான் காதலித்துக் கைவிட்ட காதகன். யாருமற்ற அனாதையாக உலகில் தத்தளிக்கிறாள் அபலை. ஊரெல்லாம் சுற்றியும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. தாயும் குழந்தையும் பல நாள் பட்டினி கிடக்கிறார்கள். கடைசியில் குழந்தையின் பொருட்டு உடலை விற்றே சம்பாதிக்கத் துணிகிறாள். சம்பாத்தியத்திற்காக அவள் வெளியே போய்விடும்போதெல்லாம் தனியாக விடப்பட்ட குழந்தை, தாயைக் காணாமலும் பசிக்கொடுமை தாங்க முடியாமலும் அழுது துடிக்கிறாள்…..

இப்படியே அவர் கதையைச் சொல்லிக்கொண்டு வரும்போது ராமநாதனுக்கு மூளையில் ஏதோ தட்டுப் பட்டதுபோல் இருந்தது. உடனே ‘சட் ‘டென்று, ‘உங்கள் கதாநாயகி இந்தத் தெருவில்தான் இருக்கிறாளா ? ‘ என்று கேட்டான்.

‘இந்தத் தெருவில்தான், அதுவும் எதிர் வீட்டிலேயே இருக்கிறாள். ‘

‘அப்படியா ‘ எவ்வளவு நாளாக இங்கே இருக்கிறாள் ? ‘


‘வந்து ஒரு மாதமாகியிருக்கும். ‘

‘அவளுடைய பெயர் தெரியுமோ ? ‘

‘தெரியாது. ‘

‘ஆள் எப்படி இருப்பாள் ? ‘

பார்த்தசாரதி வர்ணித்தார். வர்ணனை முடிந்தது.

‘சரி சரி ‘ என்றான் ராமநாதன்.


‘ஏன், என்ன விஷயம் ? நீங்கள் இப்படியெல்லாம் பேசுவதைப் பார்த்தால், அவளைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரியும் போல் அல்லவா தோன்றுகிறது ? ‘

‘அது இருக்கட்டும், அவளை நான் பார்க்கவேண்டுமென்றால் எப்படிப் பார்ப்பது ? ‘

ராமநாதனுக்குத் திகைப்பாகவும் இருந்தது; சிரிப்பாகவும் இருந்தது.

‘அவளிடத்தில் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ? ‘ என்று எழுத்தாளர் கேட்டார்.

‘அதை அப்புறம் சொல்லுகிறேன். நீங்கள் மீதிக் கதையையும் சொல்லுங்கள் ‘ என்றான் ராமநாதன்.


எழுத்தாளருக்கு மேற்கொண்டு கதையைச் சொல்லுவதற்கு உற்சாகமில்லாமல் போய்விட்டது. எனவே ராமநாதனை சாப்பிட அழைத்துக்கொண்டு போனார். இருவரும் சாப்பிட்டுவிட்டு வந்து பழையபடியும் மாடியறையில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கும்போது, நிமிஷத்துக்கு ஒரு தடவை ஜன்னல் வழியாகத் தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் பார்த்தசாரதி.


ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். தனக்கு ஒரு வீடு தேவை என்று ராமநாதன் சொன்னதும் ‘ஏன், இப்போது இருக்கும் வீட்டில் என்ன அசெளகரியம் ? ‘ என்று கேட்டார் எழுத்தாளர்.


அவன் தன் துன்பக் கதையைச் சொல்லத் தொடங்கினான். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஒரு வேலைக்காரி அகப்படாத கஷ்டத்தைச் சொன்னான். ஒவ்வொரு வேலைக்காரியும் கிராக்கி பண்ணியதையும், உடம்பை வளைத்து வேலை செய்ய இஷ்டமில்லாமல் ஓடிவிட்டதையும் விவரித்துக்கொண்டு வந்தான். பார்த்தசாரதிக்கும் அந்த வேலைக்காரிகள் மேல் கடுங்கோபம் வந்தது. இருந்தாலும், ‘எல்லா வேலைக்காரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள். வேலை செய்யாமல் சாப்பிடத்தான் எல்லோருக்கும் ஆசை. அவர்கள் காலமும் ஓடிவிடுகிறது ‘ என்றார்.ராமநாதன் சொந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பார்த்தசாரதி குறுக்கிட்டு, ‘அதோ, அங்கே பாருங்கள், ரிக்ஷாவிலிருந்து இறங்குகிறாளே, அவள்தான்…. ‘ என்றார்.


எட்டிப் பார்த்த ராமநாதனுக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. தான் நினைத்தது சரியாக இருந்துவிட்டதை எண்ணி அவனுக்குச் சந்தோஷமாகத்தான் இருந்தது. அவளை ரோடு விளக்கின் வெளிச்சத்தில் நன்றாகக் கவனித்துப் பார்த்தான். அவளேதான்.


‘இவளைப் பற்றித்தான் நாவல் எழுதுகிறீர்களா ? ‘ என்று ராமநாதன் கேட்டதற்கு, ‘ஆம் ‘ என்று எழுத்தாளர் ஒப்புக்கொண்டார்.


‘உங்கள் கதாநாயகி யார் தெரியுமா ? என் இரண்டாவது வேலைக்காரி மங்களம் ‘ இவள்தான் ‘வழுக்கி விழுந்த சகோதரி ‘ ‘ இவளுக்காகத்தான் கண்ணீர் விட்டுக் கரைகிறீர்கள் ‘ அரை மணி நேரம் தண்ணீர் அடிப்பதற்கு மாட்டேன் என்று நல்ல சம்பளத்தையும், சாப்பாட்டையும் உதறிவிட்டு வந்து, குழந்தையையும் தனியாகக் கதற விட்டுவிட்டுச் சம்பாத்தியத்துக்குப் போய்விடுகிறாளே, இவளுக்கு நாவலும் எழுதவேண்டியதுதான்; நாடகமும் எழுதவேண்டியதுதான் ‘ ‘ என்று ராமநாதன் ஒரு போடு போட்டான்.


எழுத்தாளர் பார்த்தசாரதி என்ன சொல்லுவதென்று புரியாமல், ‘அப்படியா ? ‘ ‘நிஜம்தானா ? ‘ ‘இவள்தானா ? ‘ என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்.


ராமநாதன் பேச்சை முறித்து, ‘ஏன் சும்மா அங்கலாய்க்கிறீர்கள் ? அது எப்படியும் போகட்டும், நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்; எனக்கு ஒரு வீடு பிடித்துத் தருகிறீர்களா ? இல்லை, இந்த நாவலைக் கிழித்துத் தூரப் போடுகிறீர்களா ? இந்த இரண்டில் நீங்கள் எதைச் செய்தாலும் அந்த உதவியை மறக்க மாட்டேன் ‘ என்றான். உடனே ‘கடகட ‘வென்று சிரித்தான்.


புரட்சி எழுத்தாளரும் சேர்ந்து சிரித்தார்.Thursday, June 21, 2012

நாளைய இயக்குநர் - செமி ஃபைனல் - விமர்சனம் ( 17 .6.2012)

வாரா வாரம் ஞாயிறு அன்று கலைஞர் டி வி ல காலை 10.30 மணிக்கு  3 குறும்படங்கள் ஒளிப்பரப்பறாங்க.. மிஸ் பண்ணாம பாருங்க.. 

இந்த வாரம் நடுவர்களா இயக்குநர் விக்ரமன், மைனா இயக்குநர் பிரபு சாலமன்..

பிரபு சாலமன்...  -. எங்களுக்கு நாளைய இயக்குநர்  மாதிரி ஒரு பிளாட் கிடைச்சிருந்தா 12 வருஷங்கள் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்.என்னோட அடுத்த படம் கும்கி. அதாவது பயிற்சி கொடுக்கப்பட்ட யானைகள் வாழ்க்கை பற்றி. பின்னணில ஒரு காதல் கதை .. கிராமத்துல நடக்கும் பிரச்சனைகள்.. இப்படி போகும்.. 


விக்ரமன் - இந்த வாரம் டாபிக் போலீஸ் ஸ்டோரிஸ், சயின்ஸ் ஃபிக்சன்#
என்னடா பிரச்சனை உங்களுக்கு ?-kovai mani1. இயக்குநர் பெயர் - பாரதி பாலா , குறும்படத்தின் பெயர் - சத்தியப்பிரமாணம்


1960 களில் வந்த பழைய படங்களை கிண்டல் பண்ற மாதிரியும், புதிய தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு ஞாபகமூட்டலுமா இந்தப்படம் எடுத்திருக்காரு.. பின்னணி இசை , உடை வடிவமைபு, உடல் மொழி, வசனம் எல்லாமே அப்படியே அந்தக்காலம்.. ஐ திங்க்.... இதுதான் முதல் பழைய கால பிரதிபலிப்பு முதல் குறும் படம்./.

போலீஸ் உயர் அதிகாரி அண்ணன் தம்பி 2 பேரையும் கூப்பிட்டு ஒரு பொறுப்பை ஒப்படைக்குது.. அவங்க 2 பேரும் போலீஸ் தான்.. ஒரு கடத்தல் கும்பலை பிடிக்கும் வேலை.. 

 இப்போ ஒரு ஃபிளாஸ்பேக்.. ஸ்கூல்ல படிக்கும்போதே டீச்சர் “ நீங்க என்னவாகனும்னு ஆசைப்படறீங்கன்னு கேட்டப்பவே 2 பேரும் ஒரே மாதிரி போலீஸ் ஆகனும்னு ஆசைப்பட்டவங்க,.. 

பழைய பட சஸ்பென்ஸ் மாதிரியே அண்ணன் தம்பி ராமு- குமார்ல ராமுதான் வில்லன்.. ஆனாலும் அவனை பிடிச்சு போலீஸ்ல ஒப்படைக்கறதுதான் கதை.. 

 மேலோட்டமா பார்த்தா அல்லது எழுத்து வடிவில் இதை படிக்கும்போது அரைச்ச மாவுதானே என்ர சலிப்பு வரும்.. ஆனாலும் இந்த 8 நிமிட குறும்படத்துக்காக எடுத்துக்கொண்ட உழைப்பு அதிகம்.. 

 ஆனாலும் உழைப்பு அதிகம் என்பதற்காக யாரும் படங்களை ரசிப்பதில்லை.. அப்படி ரசிச்சிருந்தா கமல் ஹாசன் ரஜினியை பீட் பண்ணி இருப்பாரே?விக்ரமன்  கமெண்ட் பண்றப்போ  “ ஸ்பூஃப் ட்ரை பண்ணி இருக்கீங்க. ஆனா அதிகம் ஒர்க் அவுட் ஆகலை.. 1960 டூ 75 அப்படியே கண் முன்னால் நிறுத்தினீங்க அப்டினு பாராட்னாரு.. 

சாலமன் - ஈஸ்ட்மென் கலர், டைட்டில் டிசைன்,  பின்னணி இசை எல்லாம் அபாரம்.. ஏன்னா அந்தக்காலத்துல ஈஸ்ட்மென் கலர்ல படம் எடுக்கறது அபூர்வம்.. அதனால அதை பெருமையா டைட்டில்ல போட்டுக்குவாங்க , அதைக்கூட மிஸ் பண்ணாம  கரெக்டா நோட் பண்ணி டைட்டில்ல யூஸ் பண்ணி இருக்கீங்க.. குட்.. நேர்த்தியான, உண்மையான உழைப்பு.. 


ஒளிப்பதிவுக்கு  பரிசு வாங்குச்சு.. Prime Minister Manmohan Singh today left for Rio De Janeiro to attend the Rio+20 summit, the three-day meeting to be attended by 193 nations.

Singh was here in this Mexican resort to participate in the seventh summit of the Group of developed and developing countries(G-20).


2,இயக்குநர் பெயர் -ஸ்ரீகணேஷ் , குறும்படத்தின் பெயர் - ஒரு கோப்பை தேநீர்

 எஸ் ராம கிருஷ்ணனின் சிறுகதையை பேஸ் பண்ணி  மகேந்திரன் பாணில அழகிய படம்.. 
ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு கைதி .. 2 பேரும் லேடீஸ்.. கோர்ட்டுக்கு போற வழில அவங்களுக்கு இடையில் நடக்கும் சம்பாஷனைகள் தான் படம்.. 

 படத்தோட கதைப்போக்கு அன்பே சிவம் டைப் தான்.. அதாவது மாறுபட்ட 2 கேரக்டர்களை வெச்சு இயக்குநர் தான் சொல்ல விரும்பும் கருத்தை மக்களுக்கு சொல்வது ..

கைதி சின்ன விஷயத்துக்காக திருடி மாட்டிக்கறா.. அவளை கோர்ட்ல ஒப்படைக்க லேடி போலீஸ் கூட்டிட்டு போறாங்க,.,. அவங்க அன் மேரீடு.. வழில அவங்க மாமா கிட்டே பேசும்போது அந்த மேட்டர் தெரிய வருது.. போலீஸ்னாலே மாப்பிள்ளைங்க பயப்படறாங்க. அதனால லேடி போலீஸ்க்கு வருத்தம்.. 

 இதுல என்ன காண்ட்ரவர்சின்னா போலீஸ் வேலைல இருந்தும் அந்த லேடி டென்ஷனா இருக்காங்க, கைதியா இருந்தும் அந்த லேடி ஜாலியா , எதைப்பற்றியும் கவலை இல்லாம இருக்காங்க.. வழி பூரா தொண தொணனு பேசிட்டே வர்றா.. 

 திடீர்னு அந்த லேடிக்கு மென்சஸ் ஆகிடுது. போலீஸ் கிட்டே மெடிக்கல் ஷாப்ல நாப்கின் வாங்கித்தாங்கனு கேட்கறா.. போலீஸும் வாங்கித்தருது.. இதே ஒரு ஆண் போலீஸா இருந்தா கிண்டல் தான் பண்ணுவாங்க.. ஒரு பொண்ணா  இருப்பதால் தான் வலி உங்களுக்கும் தெரியுதுன்னு சொல்லி படத்தை செண்ட்டிமெண்ட்டா முடிக்கறாங்க

 இதுல முக்கியமான 2 கேரக்டர் நடிப்பும் கிளாஸ்.. போலீஸா வரும் நடிகை முகத்தில் கவலைச்சுருக்கங்கள் அப்படியே கண் முன் ... கைதியின் தெனாவெட்டுப்பேச்சு கலக்கல்.. 

மனம் கவர்ந்த வசனங்கள்


1. கில்மா லேடி - போற வர்றவங்க எல்லாம் யூஸ் பண்ண நான் என்ன குப்பைத்தொட்டியா? 


2. இங்கே பாருங்க மேடம், போலீஸா இருந்தாலும், திருடியா இருந்தாலும் ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்கன்னா ஒரே பார்வை தான் ( எவன் சொன்னது? யூனிஃபார்ம்ல இருந்தா பம்முவோம் ஹி ஹி )


3. சாஃப்ட்வேர் கம்ப்பெனில ஒர்க் பண்றவன் எதுக்கு போலீஸ் லேடி மேரேஜ் பண்ணனும்னு இருக்கு? அவனுக்கு தோசை சுட்டுப்போடும் மனைவி போதாதா?


4. போலீஸ் - யார்டி அவன், உனக்கு ஹாய் சொல்லிட்டுப்போறான்?

 சும்மா. இப்போ ஜெயிலுக்கு போனா வெளில வர எப்படியும் 6 மாசம் ஆகும்.. அதான் அனுபவிக்கலாம்னு.. 


5. லீஸா இருந்தாலும், திருடியா இருந்தாலும் பெண்களுக்கு இந்த மாதாந்திர வலி பொதுவானது.. எல்லாருக்கும் வலிக்கும். 

6. நான் 1 கேட்பேன், பதில் சொல்லு.. நீ ஏன் திருடி ஆனே?


 நீங்க ஏன் போலீஸ் ஆனீங்க? 


7. உங்களை அக்கான்னு கூப்பிடவா?

 வேணாம்.. 

சரி ஏட்டம்மான்னு கூப்பிட்டுக்கறேன்.. 


ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் நல்லா இருந்தது.. 


சாலமன் - டைட்டில் சரி இல்லை, இன்னும் கிரிப்பா வெச்சிருக்கலாம் ( எப்படி? ஸ்ட்ராங்க் டீ 1 அப்டின்னா? )


விக்ரமன்  - மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்துல ஒரு தீம் மியூசிக் வரும்.. படம் முடிஞ்ச பின்னாலும் நம்ம மனசுல தங்கும் இசை அது.. அதே மாதிரி இந்தப்பட தீம் மியூசிக்கும் இருந்துச்சு வெல்டன். இந்தப்படம் இந்த வாரத்தின் சிறந்த படமா செலக்ட் ஆச்சு. சிறந்த நடிப்புக்கு 2  ஹீரோயின்ஸ்க்கும் கிடைச்சுது


ரெடி....1....2.....3. இயக்குநர் பெயர் -செந்தில்   , குறும்படத்தின் பெயர் -ரெட்டைக்குழல்

 ரிட்டயர் ஆகப்போகும் ஒரு போலீஸ்காரரின் கடைசி பணி நாள் தான் கதை.. 
எல்லாரும் 5 வருஷத்துல அமோகமா சம்பாதிச்சு செட்டில் ஆகறாங்க.. ஆனா 58 வயசு வரை வேலை பார்த்தும் உருப்படியா ஒண்ணும் சேர்த்து வைக்கலை..அப்டின்னு மனைவி புலம்பறாங்க.. பொதுவா இந்த சம்சாரங்களே புலம்பல் பார்ட்டிங்க தான்.. போலீஸ்காரர் ஸ்டேஷன் போறாரு./..அவரோட துப்பாக்கியை மிஸ் பண்ணிடறாரு.. கடைசி நாள் எல்லாம் ஒப்படைக்கனும்

 யார் எடுத்திருப்பாங்க? அவர் லிஸ்ட் அவுட் பண்ணி பார்க்கறார்.. அவரோட எதிரிகள் யார் எல்லாம் இருக்காங்க.? சமீபத்திய கேஸ்கள்ல மாட்டுனது யார்? ஒவ்வொருவரா விசாரனை பண்றாரு.. யாரும் எடுக்கலை.. 

 கடைசில பார்த்தா ஒரு லேடி கான்ஸ்டபிளே  அதை எடுத்து ஒளிச்சு வெச்சு அதுவே கண்டு பிடிச்சுத்தர்ற மாதிரி ஷோ காட்டி நல்ல பேர் வாங்குது.. என்ன ட்விஸ்ட்னா  அவர் பையன்  இந்த லேடியை லவ்விங்க். மாமனார்ட்ட நல்ல பேர் எடுக்க இப்படி ஒரு டிராமா...


மலைக்கிராமம் அப்படியே கண் முன் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ்.. 


லாஜிக் மிஸ்டேக்கா  சாலமன் சொன்னது -நானும் சினி இண்டஸ்ட்ரில பல தடைகளை தாண்டி வந்ததால உங்க மனசை புண்படுத்த விரும்பலை, அதனால . சில குறைகளை சாஃப்ட்டா சொல்றேன்.


1.  ஒரு ரைபிளை இப்படி அசால்ட்டா ஒரு போலீஸ் வெச்சுட்டு போக மாட்டார். அதை வைக்க ஒரு லாக்கர் இருக்கு.. அதுல தான் வைப்பாங்க


2. துப்பாக்கியை காணோம்னா ஒரு பதட்டம், பரபரப்பு வேணும்.. எதையும் அந்த போலீஸ் காட்டலை. மெத்தனமா இருந்தா பார்க்கும் ஆடியன்ஸ்க்கு மட்டும் எப்படி ஒரு ஆர்வம் வரும் ?

 பாராட்டு பெறும் வசனங்கள்

1.  என் 33 வருஷ சர்வீசை வெறும் 7 மணி நேரம் மாத்திடும் போல இருக்கே?


2. எல்லாரும் 5 வருஷத்துல அமோகமா சம்பாதிச்சு செட்டில் ஆகறாங்க.. ஆனா 58 வயசு வரை வேலை பார்த்தும் உருப்படியா ஒண்ணும் சேர்த்து வைக்கலை.
நிகழ்ச்சித்தொகுப்பாளர் கீர்த்தி கிட்டே ஒரு முன்னேற்றம்.. முதல்ல எல்லாம் ரொம்ப  கேவலமான நைட்டியை போட்டுட்டு வருவார்.. இப்போ கொஞ்சம் டீசண்ட்டா நைட் கவுன் போட்டுட்டு வர்றார்.. ( ஒரு வேளை ஷூட்டிங்க் நைட்ல நடக்கறதால  மேட்சுக்கு மேட்சா நைட் டிரஸ்ல வர்றாரோ?)