Thursday, December 08, 2011

ஒஸ்தி - நாஸ்தி - காமெடி கும்மி கலாட்டா விமர்சனம்

http://vannimedia.com/wp-content/uploads/2011/12/Osthi-Movie-Wallpapers-51.jpg

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்  டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய் டேய்
ஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்  டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய் டேய்
ஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி

யாரும் பயந்துடாதீங்க.. படம் போட்டதுல இருந்து முடியறவரை ஹீரோ வர்றப்ப எல்லாம் இதுதான் பின்னணி இசை..சும்மாவே சிம்பு ஓவர் அலட்டல் பேர்வழி.. இதுல இன்ஸ்பெக்டர் ரோல் வேற.. பின்னே கேட்கவா வேணும்?விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்து சிம்புவோட நடிப்பை வியந்தவங்க எல்லாம் இந்தப்படம் பார்த்து வாழ்க்கையை வெறுப்பது உறுதி..

குருவி எனும் குப்பை படத்தை கொடுத்த தரணியைப்பார்த்து உலகம் வியந்தது.. தில் , தூள்,கில்லி என மெகா ஹிட் படங்கள் கொடுத்தவரா இப்படி ஒரு அட்டர்ஃபிளாப்பை கொடுத்தார்?என சந்தேகம், ஆனால் இந்தப்படத்தின் தோல்வி குருவியின் தோல்வியையும் தூக்கி சாப்பிட்டு விடும் போல இருக்கு.. 

படத்தோட கதை என்ன? ஹீரோவுக்கு ஒரு தம்பி.. அவர் நேரடி தம்பி இல்லை.. அம்மாவோட 2வது கணவரோட மகன்.. 2 பேருக்கும் ஆகாது...எல்லாரும் அண்ணனை கரிச்சு கொட்டறாங்க.. தம்பியை புகழ்றாங்க.. ஆனா அண்ணன் இன்ஸ்பெக்டர் ஆகறார், தம்பி வெத்து வேட்டு..

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/richa-14.jpg


ஹீரோ இருக்கற ஊர்ல எலக்‌ஷன்ல நிக்க வில்லன் வேட்பாளர்கள்க்கு பணம் பட்டுவாடா பண்ண ட்ரை பண்றாரு.. அதை எல்லாம் ஹீரோ தடுத்து தன் வீட்டு பீரோல வெச்சுக்கறாரு..ஏன்னா அந்த மாவட்டத்துல பேங்க்கே இல்லையா?னு கேக்கக்கூடாது.. வீட்லயே வெச்சிருந்தாத்தான் கதை நகரும்.. வில்லன் ஹீரோவோட அம்மாவை கொலை செஞ்சுடறாரு.. ஆனா பாருங்க இந்த சஸ்பென்ஸ் சீன் க்ளைமாக்ஸ்ல தான் இயக்குநருக்கே தெரியுது. ஆனா படம் பார்த்த சின்ன பசங்க கூட சொல்லிட்டாங்க அந்த  மேட்டரை..

அம்மாவை கொன்ன வில்லனை ஹீரோ எப்படி பழி வாங்கறாருங்கறதுதான் மிச்ச கதை.. தம்பி வில்லன் கூட சேர்றதும், க்ளைமாக்ஸ்ல திடீர்னு திருந்தி அவர் அண்ணாங்கறதும் இவரு தம்பிங்கறதும்.. எம் ஜி ஆர், சிவாஜி காலத்துலயே எங்கப்பா பார்த்துட்டாருங்கோவ்..

போலீஸ் யூனிஃபார்ம்க்கே புது கம்பீரம் கொடுத்த படங்கள் என இது தாண்டா போலீஸ், வைஜயந்தி ஐ பி எஸ் ..னு ஒரு லிஸ்ட் சொல்ற மாதிரி போலீஸ் பேரையே கெடுக்கற படமா ஒஸ்தியை சொல்லலாம்..

சாமி படத்துல விக்ரம் செஞ்சதை எல்லாம் தூக்கி சாப்பிடனும்கற உத்வேகத்தோட சிம்பு பண்ற அலம்பல்கள் தாங்கலை.. அவர் பல்லை கடிச்ச படி நெல்லைத்தமிழ் பேசும்போது பாவமா இருக்கு.. 


இதுல பிரமாதமா ஒரு ஸ்டைல் பண்றாரு.. அதாவது கூலிங்க் கிளாசை தூக்கி மேலே போடறாரு.. அது கரெக்டா அவரோட சட்டை காலர் பின்னால நச்னு சொருகிக்குது.. படத்துல ஒரு வில்லன் அமைச்சரா வர்றார்.. அவர் ஹீரோ கிட்டே இதுக்கு விளக்கம் கேக்கறார்.. அதுக்கு நம்ம அண்ணன் சிம்பு - எதிரிங்க பின்னால இருந்து குத்த வரும்போது தெரிஞ்சிக்க.. அடேய் அடேய் அண்ணே.. அது என்ன ரிவர்யூ மிரரா? அவ்வ்வ் 


 ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்பாய், மயக்கம் என்ன ஹீரோயின்.. தனுஷ் ஜோடியா நடிச்சவர்ங்கற ஒரே காரணத்துக்காக இதுல சிம்புவுக்கு ஜோடி.. பாப்பா பானை விக்கற பரம ஏழை, ஆனா பாருங்க 24 மணி  நேரமும் அவரோட இடுப்புல 15 பவுன்க்கு ஒரு ஒட்டியாணம் இருக்கு.. உலகத்துலயே பானை பிடித்தவள் பாக்ய சாலிங்கற பழ மொழிக்கு அர்த்தம் சொன்ன ஒரே கேரக்டர் இவர் தான் அடங்கொன்னியா..

ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் காதல் வர்ற சீன் செம காமெடி.. பானை விலை என்ன?னு கேக்கறார்.. ரூ 250னு ஹீரோயின் சொல்ல ரூ 500 குடுத்து ஒரு பானை வாங்கிட்டு மீதி சில்லறை அப்புறமா வாங்கிக்கறேன்னு ஹீரோ சொன்னதும் ஹீரோயின் இன்னொரு பானை கொடுத்து சில்லரையை கழிச்சுட்டு எனக்கு நேர்மை தான் முக்கியம்கறார். உடனே சிம்புவுக்கு காதல் வந்துடுது ஹய்யோ அய்யோ..

சந்தானம் இருக்கறதால ஏதோ கொஞ்சமாவது ஜாலியா படம் பார்க்க முடியுது.. இன்னொரு முக்கியமான விஷயம், இதுவரை எந்த ஒரு தமிழ்ப்படத்திலும்  ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு குத்தாட்டம் போட்டு காக்கிச்சட்டையை இப்படி கேவலப்படுத்துனதே இல்லை..

ஆனா ஒரே ஒரு விஷயம் பாராட்டலாம். சிம்பு ஸ்டில்களில் பார்க்க அழகாக ஹிந்தி பட ஹீரோ மாதிரி ஜம்முனு இருக்கார்.. ஆனா படத்துல அவர் டயலாக் பேசறது மகா கொடுமை..

http://www.thedipaar.com/pictures/resize_20111126060151.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. மல்லிகா ஷெராவத்தை புக் பண்ணி அவரை ஹீரோ கூட ஆட விடாமல் வில்லன் கூட ஆட வைத்து சிம்புவை கடுப்பேற்றியது.. ( அப்புறம் போனாப்போகுதுன்னு 4 லைன்க்கு சான்ஸ்.. )

2. ஹீரோயினை கொடுத்த சம்பளத்துக்கு சரிக்கட்ட படம் பூரா முதுகு முழுக்க, இடை முக்கால் வாசி தெரியும் படி உடை வடிவமைத்தது..


3. சந்தானத்தை புக் செஞ்சு காமெடி வசனங்கள் சேர்த்து ரசிகர்களை ஓரளவு காப்பாற்றியது..

4. பாடல்கள் ஆல்ரெடி சூப்பர் ஹிட் என்றாலும் படத்தில் பார்க்கும்போது நடன அசைவுகள் பல இடங்களில் வெல்டன் சொல்ல வைத்தது..

5. ஜித்தன் ரமேஷை முடிஞ்சவரை கேவலப்படுத்தியது ( பாவம் சிம்புவுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனையோ?)

http://suriyantv.com/wp-content/uploads/2011/11/osthi-simbu-5.jpg

ஹீரோயின் போட்டிருக்கும் 15 பவுன் ஒட்டியாணம் ஹி ஹி
இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், ஆலோசனைகள்

1.  ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர் எப்படி எல்லா கேசுக்கும் மீடியாக்களிடம் பேட்டி தர்றார்? அட்லீஸ்ட் அவரை ஏ சி யாகவாவது காட்டி இருக்கலாம்.

2.  சிம்புவின் அம்மாவாக வரும் ரேவதி அவ்வளவு தத்தியா? சிம்பு கொண்டு வரும் கட்டுக்கட்டான பணத்தை எல்லாம் ஏது? எப்படி இவ்ளவ் பணம் என்றெல்லாம் கேட்காமல் பீரோவில் வைப்பது எப்படி?

3. ஒரு இன்ஸ்பெக்டரின் அம்மா இறந்ததும் அவர் அப்போதே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பண்ணீ இருக்க மாட்டரா? தலையணையால் தலையை அமுக்கி கொல்லப்பட்ட ரேவதி பிணத்தில் மூக்கில் ரத்தம் வந்திருக்குமே?

4. நாசர், ஜித்தன் ரமேஷ் இருவரும் அவர்கலது சம்பாத்யத்தை அனைத்தையும் பீரோவிலேயே தான் வைப்பாங்களா? அதென்ன போயஸ் தோட்டமா? வில்லன் அந்த பங்களாவை எரிச்சதும் நடுத்தெருவுக்கு வந்துடுவாங்களா?

5. எல்லா பணமும் போனதும் ஜித்தன் ரமேஷ் ஏன் வில்லனிடம் வேலைஆளாக சேர்கிறார்? சிம்புவிடம் போய் சொன்னால் தீர்ந்தது மேட்டர்..

6. க்ளைமாக்ஸில் எந்த வித டர்னிங்க் பாயிண்ட்டும் நடக்காமல் ஜித்தன் ரமேஷ் திடீர் என திருந்துவது எப்படி? படத்தை முடிக்கவா? அதே போல் சிம்பு 15 ரீல் வரை தன் அப்பாவை கரித்துக்கொட்டிட்டு இருந்தவர் திடீர்னு பாசம் பொங்க பேசுவது எப்படி?

7. ஜித்தன் ரமேஷ்  கல்யாணம் நடக்கும் சமயத்தில் சிம்பு தன் ஜோடியுடன் வந்து நான் தான் அண்ணன், எனக்குத்தான் முதல்ல மேரேஜ் நடக்கனும்னு தன் ஜோடியோட வர்றார், ஓக்கே, அவர் மணடபத்தை விட்டு போனதும் ரமேஷ் மேரேஜை நடத்தலாமே? ஏன் எழவு வீடு போல் எல்லாரும் எந்திரிச்சு போறாங்க?

http://www.freedownloadpond.com/wp-content/uploads/2010/10/richa_gangopadhyay_hot_navel_stills_01.jpg

படம் சிம்பு ரசிகர்கள் கூட பார்க்க முடியாது..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஈரோடு ஸ்ரீலட்சுமியில் படம் பார்த்தேன்

இந்தப்படம் 15 நாள் ஓடும் எல்லா செண்ட்டர்லயும்..

http://surfingall.files.wordpress.com/2010/12/richa-gangopadhyay-hot-in-black1.jpga


டிஸ்கி - வசனத்துக்கு தனி காமெடி கும்மி பதிவு இருக்கு ஹி ஹி

டப்பா படமான ஒஸ்தியில் சந்தானம் பேசும் டாப்பான காமெடி வசனங்கள்

 

Beauty and the Beast - ஹாலிவுட் பட விமர்சனம்

 

43 comments:

Anna Nagar said...

super

Unknown said...

சூப்பர்

குணா said...

சந்தோஷம்.இது போதும் இனி நான் நிம்மதியா தூக்குவேன் :)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நடிகைகள் உங்களுக்குனு ஸ்பெஷலா போஸ் கொடுப்பாங்களோ ? இந்த படம் வெள்ளி ரிலீஸ் இல்லையா?

Anonymous said...

அண்ணே ஒரு விஷயம், நீங்க இங்க மொக்கைன்னு(பின் பக்கம் கண்ணனடி போடுறது, அதுக்கு ஒரு காரணம் சொல்றது etc)சொல்ற எல்லா விசயங்களும், அப்புறம் உங்க கேள்விகளும், சந்தேகங்களும், எல்லாமே ஹிந்தி படத்துல சல்மான் செஞ்சது...இங்க சும்மா ஆள மட்டும்தான் மாத்தி இருகாங்க... ஹிந்தி படம்னா எல்லாரும் பாராட்டுறாங்க(including பெரிய தமிழ் விமர்சகர்கள்), அதையே தமிழ்ல செஞ்சா இப்புடி கரிச்சு கொட்டுறாங்க...வை திஸ் கொலவெறி?

btw சந்தானத்தால் படம் தப்பிக்கும், 100% உண்மை,,,,

Anna Nagar said...

superinu சொன்னது தப்பு

சி.பி.செந்தில்குமார் said...

@மொக்கராசு மாமா

அண்ணே, யூ ஆர் மிஸ்டேக்கன் மீ.. ஹிந்திப்படத்தை நான் பார்க்கலை.. இதுல சிம்பு பண்ற அலப்பறைகள் சிம்பு ரசிகர்களாலேயே தாங்க முடியல.. சந்தானம் மட்டுமே ஒரே ஆறுதல்ல் நாளை அவரது களை கட்டும் வசனங்கள் போடறேன், கூல்

Sen22 said...

நான் இந்த வாரம் படத்துக்கு போகலாமுன்னு இருந்தேன்..

எனக்கு காசு மிச்சம் பண்ணீங்க பாஸ்...:)

Thanks a lot....!!!

Napoo Sounthar said...

ஹி.. ஹி..

jroldmonk said...

விமர்சன ஆரம்பமே சூப்பரு..

jroldmonk said...

"பானை பிடித்தவள் பாக்கியசாலி.." ஹா ஹா செம..

jroldmonk said...

"பிணத்தின் மூக்கில் ரத்தம் வந்திருக்குமே.." என்ன ஒரு ஆராய்ச்சி #யூ ஆர் இன்டெலிஜென்ட் ஃப்ரூட் பாஸ்.. மொத்தத்தில் ஒஸ்தி செம நாஸ்தி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

டோட்டல் டேமேஜ்....

நளைக்கு காமெடி கும்மியில் மீட் பண்ணலாம்..

Lali said...

அய்யோ! சிரிப்புன்னா சிரிப்பு.. என்னால நிறுத்தவே முடியல. ஆரம்பிக்கும் போதே டேய் டேய் ஏய் ஏய் ஒஸ்தி குஸ்தி அப்படின்னு பார்த்ததுல ஆரம்பிச்சி பதினஞ்சி பவுன் ஒட்டியாணம் வரை.. :)
நீங்க ஏன் ஒரு படம் டைரக்ட் பண்ணகூடாது சி பி சார்?! :)

கும்மாச்சி said...

படம் அவ்வளவு மோசமா, அப்போ டவுன்லோட் பண்ண வேண்டாம். நன்றி சி.பி.

சக்தி கல்வி மையம் said...

உங்களையே கடுப்பேத்திடாறா சிம்பு..

Unknown said...

விமர்சனம் நல்லா இருக்குங்க அண்ணே...என்ன இருந்தாலும் ஹிந்திலையும் இதே அலும்பல்தான்னே..!

Thangasivam said...

அருமையான பதிவு நன்றி....

Anonymous said...

@சி.பி.செந்தில்குமார் அண்ணே நோ மிஸ்டேக்கு, இத நானும் நேற்றைய பதிவுல சொல்லி இருந்தேன், ////ஆனா ஓவரா மாஸ் ஆக்குறேன் பேர்வழின்னு எதாவது கிறுக்குத்தனம் பண்ணிடுவாரோன்னும் சின்னதா ஒரு பயம் இருக்கு, ஏன்னா அந்த கேரக்டர் ஸ்கெட்ச் அந்த மாதிரி, கொஞ்சம் பிசகுனாலும் நம்ம மிர்ச்சி சிவா நடித்த தமிழ்படம் ஆகுவதற்கு சான்ஸ் அதிகம் உள்ள படம். ////


அப்ப நம்ம தலைவர் சந்தானம் புண்ணியத்துல எதோ கொஞ்ச நாள் ஓடும்ன்னு சொல்றீங்க, ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும், நாளைக்கு மறக்காம வசனங்கள போட்டுருங்க....

Anonymous said...

இது நேற்றைய எனது பதிவின் லிங்கு ஒஸ்தே வேலனும் சல்புல் பாண்டேவும்: (வெ.மு)
அப்புடின்னா என்னோட எதிர்பார்ப்பு நிறைவேறலன்னு சொல்றீங்க....ஓகே டீல்

கடம்பவன குயில் said...

வசனங்கள் இல்லா உங்கள் விமர்ச்னம் மையிடப்படாத கண்கள் போல் வெறுமையாய் உள்ளது. வசனங்களுக்கு நாளைவரை காத்திருக்கணுமா??

Thamizh Maaran said...

எங்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிச்சு இருக்கு நாங்கள் பார்த்து இருக்கிறோம் நீங்கள் தயவு செய்து உங்களுக்கு ஏற்றது மாதிரி எழுத வேணாம்....
புள்ளி 100/80

Admin said...

Adra sakka, soopra post,

Chutte puduva )-

Unknown said...

ஒஸ்தி- படம் திருப்பூர்ல ரிலீசே ஆகலை !
தி டர்ட்டி பிச்சர் இஸ் பெட்டெர் தன் திஸ் விமர்சனம் !
(அதை பார்த்ததினால்தான்னு சொல்லவரேன் !)

மகேந்திரன் said...

கலக்கல் விமர்சனம் ....
இயக்குனரை மண்டையில கொட்டுகொட்டுன்னு
கொட்டிடீங்க...

Philosophy Prabhakaran said...

தல... நீங்களே இவ்வளவு கேவலப்படுத்தி எழுதியிருக்குறத பார்த்தா படம் ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கும் போல...

Philosophy Prabhakaran said...

ஓ... இப்பல்லாம் விமர்சனத்துக்கு ஒரு பதிவு, வசனங்களுக்கு ஒரு பதிவா... சூப்பர்... சீக்கிரம் ஆயிரம் பதிவை தொடுங்க...

Philosophy Prabhakaran said...

வரவர இயக்குனர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் படுமொக்கையாக இருக்கிறது... ப்ளீஸ் நிறுத்திக்கோங்க...

N.H. Narasimma Prasad said...

Padam Sema Mokkaiya?

சசிகுமார் said...

பாவம் சிம்பு ரொம்ப எதிர் பார்த்து இருப்பார்....

பால கணேஷ் said...

சரிதான்... சிம்புவோட வம்பு ஃபுல் கியர்ல இருக்கா..? தியேட்டர் பக்கம் போகாம நான் எஸ்கேப்! நன்றி செந்தில்!

Anonymous said...

அண்ணே விமர்சனத்தை நேற்று பகலிலேயே எதிர்பார்த்தேன். ஏன் இவ்வளவு லேட் ஆகிவிட்டது. நான் நேற்று காலை தான் ஊரிலிருந்து சென்னை வந்தேன். அதான் காலைக்காட்சி பார்க்க முடியவில்லை, அதன் பிறகு போகலாம் என்றால் அதற்குள் நீங்கள் விமர்சனம் எழுதி விடுவீர்கள் என்பதனால் தான் செல்லவில்லை. ஆனால் நீங்கள் விமர்சனம் எழுத லேட் செய்து விட்டீர்கள்.

அசோக்ப்ரியன் said...

என்ன தல விமர்சனம் இவ்வோளோ லேட்டு. நல்லவேளை நா போகலை

கோவை நேரம் said...

படம் பார்க்கும் போது வசனத்தை எழுதிக்கிட்டு இருந்தா இப்படிதான் விமர்சனம் இருக்கும்.முதல் விமர்சனம் போடணும் அப்படிங்கிறதால சரியா படம் பார்க்கிறது இல்லைன்னு தெரியுது.படம் கோவையில் சூப்பர் ஹிட் ...

Unknown said...

எங்களுக்காக இம்புட்டு கஸ்டப்படுறீங்களே!!!ஈரோட்டு சிங்கமே!!
உங்களை நினைச்சா அழுவாச்சிஅழுவாச்சியா வருது!!
விமர்சனம் சூப்பரு...
ஹாய்ஓய்ஹேய்...ஹிஹிபேக்ரவுண்டு மியூசிக்

arul said...

good review

MANO நாஞ்சில் மனோ said...

பணத்தை வைக்கிறதுக்கு இதென்ன போயஸ்தோட்டமா..?

டேய் அண்ணா நடப்பது அம்மா ஆட்சி நியாபகம் இருக்கட்டும்...

MANO நாஞ்சில் மனோ said...

போலிசை கேவலப்படுத்த வந்த படமா...??? சிரிச்சி முடியலைடா அண்ணே...!!!

sweet said...

நீங்க தனுஷ் ரசிகரா? நடக்கட்டும் நடக்கட்டும்.. ஹி ஹி

sweet said...

பதிவுலகின் முக்கிய பதிவர்களான ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் படம் நன்றாக டைம் பாஸ் ஆக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்

நானும் படம் பார்த்தேன். மசாலா படம். நல்லா பொழுது போச்சு. உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.

ஆனால் தனுஷ் & ரஜினி ரசிகர்களான அட்ரா சக்க சிபி, அதிஷா, என்வழி வினோ அவர்களது கொலை வெறியை பதிவாக போட்டுள்ளனர்.

பார்க்கலாம். கேபிள் சங்கரோட வசூல் ரிப்போர்ட் என்ன சொல்லுது என்று

பயமா இருந்த கமெண்ட் பப்ளிஷ் பண்ண வேண்டாம்

சி.பி.செந்தில்குமார் said...

@sweet

ஹா ஹா நான் தனுஷ் ரசிகன் என்றால் மயக்கம் என்ன? படத்தை ஆஹா ஓஹோ என புகழ்ந்திருப்பேனே? அந்தப்படம் செகன் ஆஃப் செம போர் எனவும் கலாச்சார சீர் கேடு எனவும் விமர்சனம் பண்ணீ இருக்க மாட்டேனே?

ananthu said...

என்ன இப்படி ஒரேதடியா நாஸ்தி பண்ணிட்டீங்க ...! என்ன பொருத்தவரைக்கும் ஒஸ்தி வொர்ஸ்ட்தி ...!

Arul Kumar P அருள் குமார் P said...

"ஒஸ்தி தே வேஸ்ட்" ன்னு வேணா சொல்லலாம் . நல்ல விமர்ச்சனம் ( எப்படி இப்படி டயலாக் முதல் கொண்டு ஞாபகம் வச்சு எழுதுறீங்க,? ஆசிரியப்பட வைகிறீங்க சிபி)