Thursday, December 08, 2011

நையாண்டி நாரதரும், நாட்டு நடப்பும் ( ட்வீட்ஸ் & ஜோக்ஸ்)


1.வெளியில் சொல்ல முடியாத அளவு ரகசியம் என் வாழ்க்கையில் இருக்கிறது : சோனியா அகர்வால்! # தயக்கம் என்ன? சொல்லுங்க, பொழுதைபோக்கலாம்

-------------------------------2. கொலைவெறி பாடலை கேட்டு புல்லரித்துப் போன அமிதாப்!  # தமிழ் தெரியாத அண்ணனே புல்லரிச்சுட்டாருன்னா.....

-----------------------------3. ஒய் திஸ்கொலை வெறி பாட்டை  6 நிமிஷத்துலயே ரெடி பண்ணிட்டேன் # அண்ணே, ஒரே லைனை 37 டைம் திருப்பி திருப்பி  சொல்ல எதுக்குன்னே அம்புட்டு நேரம்?

-----------------------------------------4. சோனியா அகர்வால் -ன் ஒரு நடிகையின் வாக்குமூலம் பட ரிலீஸை முன்னிட்டு செல்வராகவன் ஒரு இயக்குநரின் வாக்குமூலம் என ஒரு குறும்படம் எடுக்கறாராம்

-------------------------------------


5. டியர்.என்னை வர்ணீங்க..

இதோ ஆரம்பிச்சடறேன்..

ஆனா ஒரு கண்டிஷன்.என் மனசை மட்டும் தான் வர்ணிக்கனும்.

. அய்யோ நான் லவ்வர் போஸ்ட்டை ரிசைனிங்க்

--------------------------------------

6. கடவுளே! அழகில்லாத பெண்களை ஏன் படைச்சே?

தம்பி.. பெண் என்றாலே அழகுதான், இதுல அழகுள்ள, அழகில்லாத என ஏன் பிரிச்சு பார்க்கறே?

-------------------------------------

7. பெண்களை வர்ணிக்கறப்ப இனிமே உடம்பை வர்ணிக்கக்கூடாதாம்.

.அய்யய்யோ, இனி எப்படி என்ன பொய் சொல்லி லவ்வரை கரெக்ட் பண்றது?அவ்வ்வ்

---------------------------------------

8. தமிழ்நாட்டில் ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாமல் செய்து காட்ட எங்களால் முடியும் - அன்புமணி #  குடிச்சே அழிக்க நீங்க என்ன கேப்டனா?


----------------------------------------------

9.  திராவிடக்கட்சிகள் 45வருடங்களாக வசனங்கள் பேசி மக்களை ஏமாற்றிவருகின்றன-அன்புமணி# பின்னே ,டூயட், குத்தாட்டம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?


-----------------------------------------

10. . இனி வரும் காலங்களில் பாமக ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கும்- அன்புமணி#பகல் கனவுகள் பலிப்பதில்லை டாக்டர் அய்யா

=---------------------------------------
11.  ஜெ. மீது நடவடிக்கை எடுக்க சொன்னால் என்னை மிரட்டுகிறார்கள்-ஸ்டாலின்# லூசாப்பா நீங்க? போலீஸ் ஸ்டேஷன்ல போய் எஸ் ஐ மேல புகார் குடுத்தா? அம்மா ஆட்சி நடக்கறப்ப அம்மா மேலேயே புகார் குடுத்தா?

--------------------------------


12. ப்ரியங்கா சோப்ரா மும்பையில் செய்வதை த்ரிஷா  இங்கே தமிழில் செய்யலாமே? -சாரு நிவேதிதா # செய்யலாம், ஆனா சென்சார் அனுமதிக்கனுமே?

-----------------------------------------

13. . வீட்டை அபகரித்ததாக ஸ்டாலின் மீது புகார் . # பெரிய வீடு தானே? அப்போ சிவில் கேஸ் தான் பிரச்சனை இல்ல.. 

------------------------------------------

14.  மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும், 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்#  தமிழக கஜானா காலி ஆகப்போகுது

------------------------------------------

15.  எனக்கு சம்பளம் முக்கியமில்லை; நல்ல படங்கள்தான் முக்கியம்-  ஜெனிலியா # அக்கா, நான் ஒரு குறும்படம் எடுக்கறேன், ஓ சி ல வந்து நடிச்சு குடுங்க

--------------------------------------16.  கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தேசம்னு கேரளாவை சொல்றாங்க, ஆனா சாத்தானால் சபிக்கப்பட்ட தேசம் ஆகிடுமோன்னு பயமா இருக்கு #FakeCryOfKerala

------------------------------------

17. . சார், ஒரு நல்ல கேரக்டர் இருக்கு , பண்றீங்களா? 

சாரி சார் அட்லீஸ்ட் 140 கேரக்டர் வேணும் # ட்விட்டர் ஆக்டர்

--------------------------------------

18.  கேரளா அரசே! மனசுக்குள்ள ஜெ என நினைப்பா? ஏன் கோர்ட் ஆர்டரை மதிக்கலை?#FakeCryOfKerala

----------------------------------

19. . அத்தான், எதுக்காக என்னை சேலை கட்ட சொல்றீங்க?ஐ ஆல்வேஸ் இன் மாடர்ன் டிரஸ்.. 

அதுவா? சேலை கட்னாலாவது அழகா இருக்கியா?ன்னு பார்க்கத்தான்

------------------------------------------

20.  ஜட்ஜ் - உங்களுக்கு ஆங்கில அறிவு கிடையாதா?

கைதி - எதுக்கு சுத்தி வளைக்கனும்? , எனக்கு அறிவே கிடையாது. இப்போ என்ன செய்வீங்க?

---------------------------------------

21 அழகு நிலையம் செல்வதில், அதற்கு செலவு செய்வதில் உலக அளவில் பெண்களே அதிக நேர விரயம் , பண விரயம் செய்யுறாங்க

---------------------

22 .பசங்க ஒரு நாளுக்கு ஒரு தடவை பவுடர் அடிச்சாலேஅதிகம், இந்த பொண்ணுங்க டெயிலி 13 தடவை பவுடர் அடிக்கறாங்க

-----------------------------------

23 .194 நாள் சிறைவாசத்திற்குப் பின் கனிமொழி ஜாமீன்# அடடா, இன்னும் 6 நாள் இருந்தா வெற்றிகரமான 200வது நாள் போஸ்டர் ஒட்டி இருக்கலாம், வட போச்சே

-----------------------------------------

24. துரோகம் செய்து விட்டது மத்திய அரசு:ஹசாரே மீண்டும் உண்ணாவிரத அறிவிப்பு# தாத்தா! போர் அடிக்குது, வேற வெள்ளாட்டு வெள்ளாடலாம்

--------------------------------------

25.  சில்லரை வர்த்தக அன்னிய முதலீட்டால் விவசாயிகள் பயனடைவர்- பிரதமர் # அன்புள்ள சிங்க், நீங்க விவசாயக்குடும்பமா?

----------------------------------------

26 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் வருகை

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ராஜி said...

Super

செல்ல நாய்க்குட்டி மனசு said...
This comment has been removed by the author.
செல்ல நாய்க்குட்டி மனசு said...

வொய் திஸ் கொலை வெறி பாட்டை பிரிட்னி ஸ்பியர்ஸ் ஸே முனுமுனுக்கிறாங்க னு கேள்வி. சரியான சுக்கிர தசை அந்த பாட்டுக்கு
PL VISIT http://venthayirmanasu.blogspot.com/2011/12/blog-post_07.html

rajamelaiyur said...

Kalakkal. .

சசிகுமார் said...

மாப்ள அது என்ன சிங்க் என்று எழுதி இருக்க.... எப்படி எல்லாம் பேரு வைக்கிராங்கப்பா....

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கீங்களா?

ஆமா இந்தப் பதிவு எதிர் பதிவாக இல்லைத் தானே?

தலைப்பில Any உள்குத்து?

நிரூபன் said...

அந்தாள் பதிவு போட்டு கொஞ்ச நேரத்திலையே நீங்க இப்படி ஒரு தலைப்பில் பதிவா?

பாவம்யா அந்தாளு!

நிரூபன் said...

கொல வெறிப் பாடல் இப்போ எல்லா இடமும் ஒலிக்கிறதே! தமிழ் தெரியாதவர்களுக்கும் பிடிக்கிறது என்றால் சொல்லவா வேண்டும்?

ஹே...ஹே..
அரசியல், சினிமா, கலந்து தந்திருக்கிறீங்க.
அருமையான டுவிட்ஸ் பாஸ். !

Mohamed Faaique said...

எல்லாம் அருமை...23,24 செம குத்து’ண்ணே!!!

குறையொன்றுமில்லை. said...

பூனைப்படம் ரொம்ப நல்லா இருக்கு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தலைவர் ஒஸ்தி படத்திற்க்கு சென்று விட்டார்...

தகவலுக்காக...

Unknown said...

ஆஜர் யுவர்ஆனர்....
உள்குத்து இருக்கிறமாதிரி தெரியலை!!

MANO நாஞ்சில் மனோ said...

கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தேசம்னு கேரளாவை சொல்றாங்க, ஆனால் சாத்தானால் சபிக்கப்பட்ட தேசம் ஆகிடுமோன்னு பயமா இருக்கு....//

இதுதாம் அண்ணே டாப்பு...!!!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அண்ணே அப்பிடின்னா நானும் ஒரு குறும்படம் தயாரிக்கிறேன், ஜெனிலியா அக்கா'கிட்டே சொல்லிரு, தலைப்பு "மொரோக்கோகாரியின் இரவுகள்"

Yoga.S. said...

வணக்கமுங்க!நல்லாருக்கு!கொஞ்சம் பிரசாந்த் மேட்டரையும் சேத்துக்கிறது தானே,ஏன் வுட்டுட்டீங்க?

K.s.s.Rajh said...

1,5,6,17 எனக்கு மிகவும் பிடித்திருக்கு ஏனைய தொகுப்புக்களும் அருமை

துரைடேனியல் said...

Kalakkal Sago.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்து( ட்வீட்ஸு)ம் அருமை.

சக்தி கல்வி மையம் said...

சூப்பர் மாப்ள..

சென்னை பித்தன் said...

வழக்கம் போல் கலக்கல்

Unknown said...

வழக்கம் போல அனைதும்
கலக்கல்!

புலவர் சா இராமாநுசம்

கடம்பவன குயில் said...

குடைக்குள் பூனைகள் படம் டாப். sooooooooo cute.

பூங்குழலி said...

கலக்கல்