Tuesday, December 06, 2011

வெட்டிப்பயல் எழுதிய குட்டி குட்டி ஜோக்ஸ்


1.எனக்குப் பிடிச்ச கிளாமர் நடிகை நான்தான்! - நமிதா # எனக்குப்பிடிச்ச சிறந்த முதல்வர் நான் தான் - கலைஞர்


----------------------------------------

2 .டியர் டேமேஜர், நீங்க ஃபிகர்ங்க கிட்டே கடலை போடறப்ப நாங்க கண்டுக்கறோமா? ஆனா நாங்க அந்த புனிதப்பணியை செய்யறப்ப உங்களுக்கு ஏன் பொறுக்கறதில்லை?------------------------------------------

3 கோவை , திருப்பூர் மக்கள் கிணறு, போரிங்க் பைப் போன்ற நிலத்தடி நீரை பருகுவதை தவிர்க்கவும்.என்புருக்கிநோய் அபாயம், சுகாதாரத்துறை எச்சரிக்கை

------------------------------------

4 நிலம் வாங்க ரூ.6.23 லட்சம் வைத்திருந்த தஞ்சை பிச்சைக்காரர் # நில மோசடி வழக்குல இவரையும் கைது பண்ணிடாதீங்கய்யா பாவம்

-----------------------------------

5  சீதையாக நடித்த ராமராஜ்யம் படம் ப்ளாப் ,  நயன்தாரா அப்செட் # நல்ல வேளை, ஹிட் ஆகி இருந்தா கண்ணகியா ஒரு படத்துல நடிக்க இருந்தாங்களாம்

-------------------------------------


6 கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவேன்: கனிமொழி நம்பிக்கை # அய்யய்யோ, அப்போ அரசியலை விட்டே விலகப்போறீங்களா? மேடம்

-----------------------------------
7. மேனேஜர் சார்! உங்களுக்கு ஒரே ஒரு சம்சாரம் தானா?

ஆமா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை

-------------------------------------


8. நம் காதல் விழாவின் முதல் பந்தியில் உன் மொத்த அன்பையும் பரிமாறி விட்டாயே!எதிர் காலத்திற்கு இருப்பு இருக்குமா?

-----------------------------------------

9. ஒரு நல்ல படைப்பை உருவாக்குவது மிக எளிது,அந்த படைப்பை நம் பெற்றோர்களிடமும் காட்டி பெருமைப்படத்தக்கதாய் இருந்தால் போதும்---------------------------------------

10. ஒரு நகைச்சுவை எழுதுவது என்பது மிக எளிது.. யார் மனதையும் புண் படுத்தாமல் கவர வைப்பதே அரிதானது ,அழகானது

--------------------------------
11. உன்னை மறக்க நினைப்பதை மறந்துவிடுகிறேன் அடிக்கடி..


அப்டியா? உருப்பட்ட மாதிரிதான் - பாட புத்தகம்

------------------------------------------

12. உலகத்துலயே மிக அசுத்தமான சூழலில் பராமரிக்கப்படும் பிரபல கோயில் ஸ்தலம் சபரி மலை தான் # ஐயப்பா சாமியா? ஐயோ அப்பா சாமியா?
----------------------------------

13. 24 மணிநேரமும் மக்களுக்காக யோசிக்கிற ஒரே தலைவர் கலைஞர் - குஷ்பூ # ஆமா, மேடம் , பல மக்களைப்பெற்ற மகராசர் ஆச்சே?

------------------------------------

14. ஆள்மாறாட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் 300 கேள்விகள்! # கடைசிக் கேள்வி! , XQS மீ! நீங்க கல்யாணசுந்தரம்தானே?!

--------------------------------------------

15. சமையல் கலையின் வெற்றி என்பது நாக்கின் துணை இல்லாமல் நாசியின் மூலம் வாசம் நுகர்ந்தே ருசியின் தரத்தை உணர்வதே

--------------------------------------
16.அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தி.மு.க. முடிவு # மானம் மிகு தமிழ் இனத்தலைவர்க்கு நன்றி!அப்புறம் தலைவரே, பொண்ணுக்கு ஜாமீன் கிடைச்சுடுச்சு போல?

---------------------------------

17 தவறான பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண்கள் தயவு செய்து மனசாட்சியுடன் செயல்பட்டு மனைவியுடன் கூடுகையில் காண்டம் உபயோகிக்கவும் # எய்ட்ஸ் தினம்

-------------------------------------

18. ஈரோடு மேயர் மல்லிகா அடியாட்களுடன் காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து அராஜகம்! # NKKP ராஜா, விடாதீங்க, போட்டி ரவுடிய வளர விடாதீங்க

-------------------------------------
19 தமிழ்நாடே ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் இப்போதைய நிலை என்ன ஆச்சு?-கேப்டன் # மப்புல ஓவரா உளறாதீங்கண்ணே, நீங்கதானே போடச்சொன்னிங்க?

----------------------------------------

20 மலையாள படங்களில் நடிப்பது ஈஸி : கனிகா! # ஹி ஹி எஸ் மேடம்,காஸ்ட்யூம் டிசைனருக்குக்கூட வேலை இல்லை

----------------------------------------------

funny pose dog-yoga
Dog In A Lotus Pose Meditating

21 தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தி பேசவில்லை -நடிகர் கார்த்தி #ஆமாமா, நானும் கேட்டேன், ரொம்ப கேவலமா எல்லாம் பேசலை, லேசாதான் தாக்குனாரு

------------------------------------

22  டிச.2 முதல் வித்யாபாலனின் கவர்ச்சி விருந்து!! த டர்ட்டி பிக்சர் #என்னய்யா டைட்டில் இது? பியூட்டி பிக்சர்னு வெச்சு அழகியலை கூட்ட வேணாம்?

---------------------------------------

23 முல்லைப் பெரியாறு பிரச்னையில் மக்கள் அமைதி காக்க வேண்டும்-கலைஞர் # ஆமா, நாங்க எல்லாரும் ஊமையா இருக்கோம், நீங்க ஆமையா புகுந்து கெடுங்க

------------------------------------------

24 கலைஞரும், ஜெயலலிதாவும் என் இரு கண்கள் - நமீதா. # அப்போ மொத வேலையா ஆபரேஷன் பண்ணி நொள்ள கண்ணை மாற்றி  நல்ல கண்ணா வைங்க 

-----------------------------------------

25. தீமைக்கும் நன்மை செய் - போராளி பட பஞ்ச்  # அதனாலதான் நாங்க கலைஞரையும், ஜெவையும் மாற்றி மாற்றி சி எம் ஆக்கறோம்?

--------------------------------------

டிஸ்கி - படங்கள் ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள்

36 comments:

Mathuran said...

கலக்கல் பதிவு

Mathuran said...

ஓவியங்கள் அருமை

Unknown said...

7 நச் அண்ணே!

நிரூபன் said...

வணக்கம் சித்தப்பூஊஊஊஊஊஊஊ


நல்லா இருக்கீங்களா?

நிரூபன் said...

முதலாவது ருவிட்..
நமீதா, கலைஞர் ஒப்பீடு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தாங்க முடியலை பாஸ்.

நிரூபன் said...

என்னது வேறு எங்கும் கிளைகள் இல்லையா?

அந்தப் பரங்கி மலை ஜோதி மேல சத்தியமா சொல்லுங்க பாஸ்..

அவ்வ்...
ஏதோ என்னால முடிஞ்சது!
சிபி வீட்டில சின்னப் பிரச்சினையை உண்டாக்கியாச்சு..

மீ.............எஸ்....
நிரூ ஓடுடா....சிபி உன்னை விரட்ட கிளம்பிட்டாரு;-)))))

நிரூபன் said...

பாஸ்...நாய்க்குட்டி தவம் செய்யும் படம்...செம கலக்கல்!

சீனுவாசன்.கு said...

hi... hi...

நிரூபன் said...

கலக்கலான ஜோக்ஸ் & ருவிட்ஸ் பாஸ்..

கும்மாச்சி said...

ஆமாம் பாஸ் நொள்ளை கண்ணை மாத்தவேண்டியது தான்.

கோகுல் said...

கல்யாண சுந்தரத்திடம் கடைசி கேள்வி-செம சிப்பு வந்துடுச்சு சிப்பு.

இசைஞானி கையில் எது கிடைத்தாலும் ரசிக்கும் படி செய்கிறார்.ராஜா ராஜா தான்.

Anonymous said...

கலக்கல்

Anonymous said...

@கோகுல்

அது இசைஞானி இளையராஜா கிடையாது.. இவர் வேற ஓவியர் இளையராஜா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசத்தல்.

ராஜி said...

கலக்கல் ட்வீட்ஸ்

ராஜி said...

கலக்கல் ட்வீட்ஸ்

சக்தி கல்வி மையம் said...

ஓவியர் இளையராஜா அவர்களின் படைப்பும், உங்கள் நகைச்சுவையும் அசத்தல்..

Admin said...

வழக்கம்போல கலக்கிட்டிங்க..

Mohamed Faaique said...

கலைஞருக்கு செம குட்டு பாஸ்...

சென்னை பித்தன் said...

கூட்டி ஜோக்ஸ்;குட் ஜோக்ஸ்!
யோகா நாய் சூப்பர்!
படங்கள் இளையராஜா என்பவர் வரைந்தவையா?

சசிகுமார் said...

மாப்ள என்னவோ போங்க அடிச்சு ஆடுறீங்க... எங்க போய் முடிய போகுது தெரியல....

குறையொன்றுமில்லை. said...

படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. இளையராஜா ஓவியம்னு நினைக்கிரேன்.

அம்பாளடியாள் said...

அருமையான் பகிர்வு .இந்த யோகா செய்பவர் யார் சகோ?..வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படங்களும் நகைச்சுவைகளும் இன்று போட்டிபோடுகிறது..

அழகிய பதிவு

K.s.s.Rajh said...

அனைத்தும் அருமை பாஸ்
அதிலும் 1,20,17,19 மிகவும் ரசிக்கும் படி உள்ளது

MANO நாஞ்சில் மனோ said...

படங்கள் அருமையா இருக்குடா அண்ணா..!!!

MANO நாஞ்சில் மனோ said...

முதல்ல நமீதா கண்ணை புடுங்குங்க...!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது முல்லைப்பெரியார் விஷத்துல ஸாரி விஷயத்துல அமைதி காக்கனுமா...?? யோவ் நீ இன்னுமா உயிரோட இருக்கே த்தூ மனமில்லா தமிழன் நீ மட்டும்தான் கொய்யால...!!!

RAMA RAVI (RAMVI) said...

6-சூப்பர்.

படங்கள் அழகாக இருக்கு.

yuvatirupur said...
This comment has been removed by the author.
Unknown said...

நமிதான்னால ஒரு கிக்குதான் தலைக்கு... ஞாயிரு சன் டிவில நமிதா டான்ஸ் பார்த்திங்களா? யானை ஆடுன மாதிரியே இருந்தது S.இளையராஜா அவர்களின் ஓவியம் அருமை...

குரங்குபெடல் said...

"ஈரோடு மேயர் மல்லிகா அடியாட்களுடன் காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து அராஜகம்! # NKKP ராஜா, விடாதீங்க, போட்டி ரவுடிய வளர விடாதீங்க "

இதான் தம்பி செந் "தில்லு "

rajamelaiyur said...

//1.எனக்குப் பிடிச்ச கிளாமர் நடிகை நான்தான்! - நமிதா # எனக்குப்பிடிச்ச சிறந்த முதல்வர் நான் தான் - கலைஞர்

//

எனக்கு பிடித்த இடம் திகார் -- கனி

rajamelaiyur said...

இன்று

விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கலக்குறீங்க.

janas said...

pictures r very nice than jokes. nice picture collection friend