Sunday, December 18, 2011

GHOST PROTOCOL -MISSION IMPOSSIBLE -4 -4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 http://im.in.com/media/read/content/2011/Dec/mission-impossible-ghost-protocol-poster2_20111216085915_300x400.jpg

ஜேம்ஸ்பாண்ட்  படங்களுக்கு சமமாக கலக்கலான பிரமாண்டத்தோடு, மிக ஸ்டைலிஷாக  ஆக்‌ஷன் செய்வது, அலட்டிக்கொள்ளாமல் நடிப்பது டாம்க்ரூஸ் படங்களில் உள்ள மிகப்பெரிய பிளஸ்.. ஒரு சீன் கூட போர் அடிக்காமல் விறு  விறு திரைக்கதையில் படம் செம ஸ்பீடுதான்..

படத்தோட கதை என்ன? அமெரிக்காக்கும் ,ரஷ்யாக்கும் போரைத் தூண்ட சதி பண்ணி ஒரு ஏவுகணையை அமெரிக்கா மேல போட ஒரு தீவிரவாத கும்பல் சதி பண்ணுது ..... அத தடுக்கற வேலை ஹீரோ & டீம் கிட்ட ஒப்படைக்கறாங்க. இதுக்கு இடைல ரஷ்யா ல  க்ரெம்லின் அப்டீங்கற இடத்துல குண்டு வெடிக்குது. அதுக்கு காரணம் ஹீரோ &  டீம் தான்னு பழி விழுது.... அத எப்படி ஹீரோ & டீம் போக்கறாங்க.... அந்த ஏவுகணையை  வெடிக்க விடாம தடுத்தாங்களா ? இல்லையா?... என்பதை பர பர விறு விறுன்னு சொல்லி இருக்கற படம்...

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு ஏஜெண்ட் அந்த ராக்கெட்டின் லாஞ்சிங்க் கோடு உள்ள ஃபைலோட ஓடறார்.. 2 பேர் துரத்தறாங்க.. அவர் அப்படியே மொட்டை மாடில இருந்து ஜம்ப் பண்ணி அப்படியே ஒரு யு டர்ன் அடிச்சு அந்த  2 பேரையும் ஷூட் பண்றதும், அவர் தரைல விழறப்ப பாரசூட் மாதிரி ஒரு ஸ்பாஞ்ச் மெத்தை அவரை காப்பதும் அப்ளாஸோ அப்ளாஸ் தியேட்டர்ல.. 

ஜெயில்ல இருந்து ஹீரோ தப்பிக்கற சீன் செம கலக்கல்.. அப்புறம் அந்த ஆஃபீஸ் ரிசப்ஷன் ஆளை டைவர்ட் பண்ண ஹீரோ & கோ  ஒரு மாயத்திரையை உருவாக்கி கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுவது விஞ்ஞான வித்தையின் உச்சம்.. 

ரஷ்ய ஆஃபீசர்ஸ் போல யூனிஃபார்மில்  அவங்க ஆஃபீஸ்க்கே போகும் ஹீரோ வேலை முடிந்ததும் அதே யூனிஃபார்மை கழட்டி திருப்பி போட்டு ஜெர்கின் கோட்டாக மாற்றுவது , போகிற போக்கில் பிளாட்ஃபார்ம் கடையில் வைக்கப்பட்ட ஷூவை லபக்குவது  செம டைமிங்க்..

http://www.filmofilia.com/wp-content/uploads/2011/11/ghost_protocol_cp_1.jpg
இப்போ நான் சொல்ற சீன் அஜித் நடிக்கும் பில்லா -2 படத்துல அப்படியே சுடப்போறாங்க, எல்லாரும் நோட் பண்ணிக்குங்க.. 

ஒரு ஹோட்டல்ல தீவிரவாத கும்பலின் பரிவர்த்தனை நடக்குது..அதாவது ஹோட்டல்ல ரூம் நெம்பர் 189-ல வில்லி ராக்கெட் கோடு லாஞ்ச் சீக்ரெட் கோட் கொண்ட ஃபைலை கொண்டு வர்றா.. வேற 2 டெரரிஸ்ட் டைமண்ட்ஸ் கொண்டு வர்றாங்க. இவங்க ஒருவரை ஒருவர் முன்னே பின்னே பார்த்ததே இல்ல..

ஹீரோ & டீம் பிளான் என்னன்னா ரூம் நெம்பரை மாத்திடறாங்க..டம்மி ரூம் இப்போ 189. வில்லியை ஹீரோவும், நண்பரும் சந்திக்கறாங்க.. அவ கிட்டே நீங்க முதல்ல உங்க டாக்குமெண்ட்ஸை காட்டுங்க, செக் பண்ணிட்டு வைரம் எக்ஸேஞ்ச்னு சொல்றாங்க.. அவ காட்டறா.. ( டாக்குமெண்ட்ஸை)

ஹீரோவோட ஒரு கண்ல எக்ஸ்ரே மாதிரி ஒரு காண்டாக்ட் லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கு. அது அப்படியே வில்லி காட்டுன் 13 பக்கங்களையும் ஜெராக்ஸ் எடுக்குது.. 

இன்னொரு ரூம்ல ஹீரோயின் அந்த 2 தீவிரவாதிங்களை சந்திக்கறா .அவங்க கிட்டே நீங்க உங்க வைரங்களை முதல்ல காண்பிங்க, நான் அப்புறம் டாக்குமெண்ட்ஸ் தர்றேன்கறா.. அவங்க வைரங்களை காட்றாங்க.. அப்போ ரூம்க்கு ஹீரோவோட ஆள் சர்வர் கம் ரூம் பாய் மாதிரி வந்து அந்த டைமண்ட்சை எடுத்து வேற டைமண்ட்ஸை அங்கே மாத்தி வெச்சுடறா.. 

இங்கே ஹீரோயின் வெச்சிருக்கற சூட் கேஸ் ல அங்கே ஹீரோ குரூப் ஸ்கேன் பண்ணி அனுப்புன ஜெராக்ஸ் ஆஃப் த டாக்குமெண்ட்ஸ் அப்படியே பிரிண்ட் அவுட் ஆகுது.. 

என்ன ஒரு பிரில்லியண்ட் ஐடியா .. படத்தில் பார்க்கும்போது வாவ் என பாரட்டத்தோன்றும்.. 

இடைவேளைக்குப்பிறகு கதை துபாய்க்கும், இந்தியாவில் மும்பைக்கும் பயணிக்குது.. 

http://www.hollywoodnews.com/wp-content/uploads/2011/12/2011-mission-impossible-ghost-protocol-tom-cruise-paula-patton-600x300.jpg
துபாய் பாலைவனத்தை ஏரியல் வியூவில் காட்டும் அந்த சீன் செம..  மும்பை பார்ட்டியில் அனில் கபூர்  ஒரு சீன்ல வர்றார்.. அவரை மயக்க ஹீரோயின்  செய்யும் சரச சல்லாபங்கள் நம்ம ஊர் நமீதா மாதிரி..

136 அடுக்கு மாடியில் ஹீரோ செய்யும் சாகசங்கள் என்னதான் கிராஃபிக்ஸ் கலந்து இருந்தாலும் மெய் சிலிர்க்க வைக்கிறது..


காமெடியான சில வசனங்கள்

1. ஒரு முக்கியமான ஃபைலை தொலைச்சாச்சு, அதை தேடிட்டு இருக்கேன்..

ம், நீதானே தொலைச்சே, நீயே தேடு.. 

2.  என்ன? இங்கே இருந்தா குதிக்கப்போறே? எலும்பு கூட தேறாது.. குதி கண்ணா குதி..

 இல்ல, அங்கே இருந்து பார்த்தப்ப ஹைட் கம்மியா இருந்தா மாதிரி தோணுச்சு.. 

3.  அட, நீயா? நீ செத்துடேன்னு நினைச்சோம்.. 

இன்னும் இல்ல. இனிமே தான் சாகனும்.. 

4.  தேவையானதை மட்டும் எடுத்துக்குங்க, கிளம்பலாம்.

அப்படியா?

ஆமா, ஆனா எந்த நேரத்துலயும் எது வேணாலும் தேவைப்படலாம்

5. நான் இந்த டீம் ஒர்க்ல என்ன வேலை பண்ண?

இதென்ன கேள்வி? எடுபுடி வேலை தான்.. 

ரொம்ப சந்தோஷம்.. \

 http://www.blackfilm.com/read/wp-content/uploads/2011/06/Mission-Impossible-Ghost-Protocol-44.jpg


6. இந்த கிளவுசை போட்டுக்கோ, ஸ்பைடர் மேன் கிளவுஸ் மாதிரி, சுவர்ல பல்லி மாதிரி போலாம், இதுல நீலக்கலர் லைட் எரிஞ்சா பேட்டரி பலமா இருக்குன்னு அர்த்தம்.. 

ம் ம் , ஓக்கே, சிவப்பு கலர் லைட் எரிஞ்சா?

உனக்கு ஆப்புன்னு அர்த்தம்.. 

7. இன்னும் 28 நிமிஷம் தான் இருக்கு..

டேய், என் வாட்சும் ஓடுது, நானே டென்ஷன்ல இருக்கேன் , நீ வேற கவுண்ட் டவுன் குடுத்து கடுப்பைக்கிளப்பாதே..

8.  அடடா, உயரத்துல இருந்து ஜம்ப் பண்ண ட்ரை பண்னேன், இந்த ரோப் நீளம் பத்தலை.. 

அதான் பார்த்தாலே தெரியுதே, அந்தரத்துல தொங்கறியே.. 

9. ஒரு கண்ல காண்டாக்ட் லென்ஸ் பொருத்தறோம், அட்ஜஸ் பண்ணிக்க,

ஹூம், இந்த ஒத்தை கண்ணை வெச்சுக்கிட்டு என்ன பண்னப்போறோமோ?

10.  அப்பாடா, தாங்க் காட்( GOD)

iஇப்போ உன்னை சுடறேன், அந்த நன்றியை கடவுள்ட்ட நேர்ல நீயே போய் சொல்லிக்கோ.. 

11.  நான் விக்க வந்திருக்கேன்
எதை?


என் எதிர்காலத்தை

புரியலை

அணு ஆயுதப்போருக்கான அடிப்படையை

12.  என்னால எந்த ஆபத்தும் உனக்கு இல்ல.. 

இப்போ இல்ல.. 

13. ஹீரோயின் - உலகத்துலயே பெஸ்ட்  ஆர்ட்ஸ் கலெக்‌ஷன் உங்க கிட்டே இருக்குன்னு சொன்னாங்க 

வில்லன் - என் கூட தனியா வந்தா  மட்டும் காட்டறேன் ( அடேய்)

14.  அடுத்த தடவை ஆக்‌ஷன் ல ஆளை மயக்கர வேலையை நான் செய்யறேன், அதுதான் ஈஸி, இது ரொம்ப ரிஸ்க் பிடிச்ச வேலைப்பா

http://hotnewshome.com/wp-content/uploads/2011/12/mission-impossible-ghost-protocol-uk-20111213-115229-486.jpg

படத்துல 2 கிளாமர் குயினுங்க, ஹீரோயின் லோகட் காட்டி மயக்குது, வில்லி எதையுமே காட்டாத மயக்குது. ஹி ஹி ஹி 

ஹீரோயின் ஜாக்கிசான் மாதிரி ஃபைட் எல்லாம் போடுது அவ்வ்வ் 

ஹீரோவுக்கு வயசானது முகத்துல அப்பட்டமா தெரிஞ்சாலும், அவரோட சுறு சுறுப்பு கொஞ்சம் கூட குறையல.. 

கல்ல்கலான ஆக்‌ஷன் படம் டோண்ட் மிஸ் இட்.. ஃபேமிலியோட பார்க்கலாம்.. டீசண்ட்டா தான் இருக்கு..

ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன்

http://www.shockya.com/news/wp-content/uploads/mission-impossible-ghost-protocol-blue-dress.jpg

டிஸ்கி -  1.

உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்தின் கண்ணீர் கவிதை -சினிமா விமர்சனம்

 

2.

மௌனகுரு - நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

3.

மம்பட்டியான் - சினிமா விமர்சனம்

15 comments:

முத்தரசு said...

மொத வெட்டு

சம்பத் said...

நல்ல விமர்சனம் பாஸ்..

Unknown said...

செம ஆக்சன் பிலிம்!!!கட்டாயம் பார்க்கலாம்!

Pulavar Tharumi said...

இன்று காலையில் தான் ஐமேக்ஸில் பார்த்துட்டு வந்தேன். விருவிருப்பான படம். ஆனால் நீளத்தை குறைத்திருக்க வேண்டும். குறிப்பாக க்ரெம்ளின் இடிந்தவுடன் கதாநாயகன் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிக்கும் காட்சியை வெட்டி இருக்கலாம்.

மற்றபடி இங்கிலாந்து ஜேம்ஸ் பாண்டிற்கு சவால்விடும் ஹாலிவுட்டின் ஈதென் ஹண்ட் படம்.

என்ன இருந்தாலும் இந்த மாதிரி படத்தை நம்ம ஊர்ல தாங்க பார்க்கனும். நம்ம மக்கள் கைதட்டி விசிலடிச்சு உடனடி பாராட்டு தெரிவிப்பார்கள். வெளிநாட்டில் பாப்கார்னை மொக்கிற சத்தம் மட்டும் தான் வரும்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

Jerome said...

இதே சண்டை காட்சிகளை தமிழ் படத்துல எடுத்தா யதார்த்தம் இல்லாத சண்டை என்பீர்கள், அதுவே ஆங்கில படம் என்றால் வாவ் செம என்பீர்கள்

Admin said...

விமர்சனம் அருமை..

சரியில்ல....... said...

அடடா உடனே படம் பாக்கனும் போலே இருக்கே. ரெண்டு ஹீரோயின்னு வேற சொல்லுறீக... உடனே பாக்கனும்.

சரியில்ல....... said...

இப்போ எல்லாம் சிபி பதிவுல பட்டைய கெளப்புறாப்ல.....

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா! அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."

Jay said...

அட உங்களூரில் தமிழிலேயே வெளியாகின்றது. நாங்கள் என்ன செய்வது அரைகுறையாகத் தெரிந்த ஆங்கிலத்தில் பார்க்கவேண்டிய கட்டாயம். :)

கோஸ்ட் புரடாகோல் விமர்சனம்

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது அஜித் படத்துக்கு இதுல இருந்து உருவுராங்களா அவ்வ்வ்வ்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

விமர்சனம் அருமை அண்ணே...!!!

சேகர் said...

இந்த படத்துல காட்டுறது பாதி இந்தியாவே இல்ல.டெக்ஸ்ஆக்ஸ் ல பிரம்மாண்டமா செட் போட்டு எடுத்து டானுங்க..காரணம் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அப்படி...

Mad Scientist said...

நான் உங்கள் தளத்துக்கு பழையவனாயினும், கமென்ட் போடுவது இதுவே முதல் முறை.

பில்லா 2 ஷூட்டிங் கிட்டத் தட்ட முடிஞ்சிருச்சு. மிஷன் இம்பாசிபிள் படம் இப்போ தான் ரிலீஸ் ஆகியிருக்கு. சோ, பில்லா 2 டீம் எப்படி குறிப்பிட்ட சீன சுட்டிருக்க முடியும்?

விமர்சனம் அருமை.