Saturday, December 31, 2011

இந்தியாவின் டாப் 10 ட்வீட்டர்ஸ் -2011

 இந்தியாவின் டாப் 10 ட்வீட்டர்ஸ் யார் என ஒரு தேர்தல் நடந்தது,அதில் ஓட்டு போட விரும்புபவர்கள் ட்விட்டர் அக்கவுண்ட் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், மற்ற தேர்தலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால் இந்த எலக்‌ஷனில் ஒருவரே பலருக்கு ஓட்டு போடலாம், உதாரணத்துக்கு நீங்கள் 10 பேருக்கு ஓட்டு போட நினைத்தாலும் ஓட்டு போடலாம்.. 

கடந்த ஒரு மாதமாக  இந்த தேர்தல் நடந்தது, இது பற்றி ஒரு கட்டுரை எழுத அப்போதே நினைத்தேன், ஆனால் அப்படி அப்போவே எழுதி இருந்தால் அது மறைமுகமாக எனக்கு நானே ஓட்டு போடச்சொல்லி கேட்கும் கட்டுரை & விளம்பரமாக மாறி விடும் அபாயம் இருந்ததால் அதை தவிர்த்தேன்.. 


இப்போ டாப் டென்னாக வந்தவர்களில் எனக்கு தெரிந்த நபர்கள் கம் நண்பர்கள் பற்றி ஒரு பார்வை .. 
1. கார்க்கி - சாளரம் என்ற வலைப்பூ ஓனர். 1045 ஃபாலோயர்ஸ்,9,70,000 ஹிட்ஸ் ,சென்னையில் பணி, குறும்பட இயக்குநர், ஜாலி ட்வீட்ஸின் சொந்தக்காரர், ட்விட்டரில் ஃபாலோயர்ஸ் 4295,இவர் தன்னைப்பற்றி நக்கலாக தன் வலைப்பூவில் போட்டிருக்கும் வாசகம்  - 29 வருஷத்துக்கு முன்னால, திண்டிவனம் நகரத்துல, செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நைட்டு 11.30க்கு பொறந்தாராமே ஒரு மகான்.அவர பத்தி கேள்விப்பட்டிருக்கிங்களா? என்னது இல்லையா?அப்ப அவர்தான் நான். - மகான் ஸ்ரீலஸ்ரீ கார்க்கியானந்தா சுவாமிகள். அனுஷ்காவின் தீவிர ரசிகர், இன்னும் ஒரு தடவை கூட மேரேஜ் ஆகல.. 


 2. ஆல்தோட்ட பூபதி (தோட்டா) - இவர் கரூரை சேர்ந்தவர், டி பி யில் எம் ஆர் ராதா ஃபோட்டோ வெச்சிருக்கார், கலக்கலான ட்வீட்களுக்கு சொந்தக்காரர், ஆனந்த விகடனில் வலைபாயுதே வில் இவருடய ட்வீட் வராத வாரமே இல்லை.. டைமிங்க் சென்ஸ் , காமெடி சென்ஸ் அதிகம் உள்ளவர், இரு வேறு துருவங்களை, மாறுபட்ட இரு விஷயங்களை  திறமையாக இணைத்து அதில் காமெடி பண்ணும் வித்தகர்.. 
பரிசல்,மீ,ராஜன் ( மொட்டை மாடில நிக்கற ஜிகிடியை பார்க்கறார்)

3. ராஜன் லீக்ஸ்  - ட்விட்டர் உலகின் டபுள் மீனிங்க் தமாக்கா ,நடு நிசி கீச்சு நாயகன். இவர் அவிநாசி வாசி, சமீபத்தில் ஆதிரை எனும் குட்டி தேவதையை பூமிக்கு அளித்தவர் . இவர் கலைஞரை தாக்கி போடும் ட்வீட்கள் மிக பிரபலம். 

4. என் .சொக்கன் - குமுதம், விகடன் உட்பட பல ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளில் பல கட்டுரைகள் எழுதி வரும் பத்திரிக்கையாளர் கம் எழுத்தாளர்..

5. மாய வரத்தான் - தமிழ்பேப்பர் நடத்தி வருபவர். அரசியல் ட்வீட்ஸ் அதிகம் போடுவார், ஜெ ஆதரவாளர் 

6. DKCBE ( தீபக்) - கோவையை சேர்ந்தவர். டி பி யில் தேங்காய் சீனிவாசன் ஃபோட்டோவை வைத்திருக்கார், சரக்கு சண்முகம்.. டாஸ்மாக்ல இருந்தாக்கூட  அதை ஃபோட்டோ எடுத்து அப்டேட் பண்ணுவார்.. 


7.  டாக்டர் ரியாஸ் அஹமத்  - பல் டாக்டர், காமெடி ட்வீட்ஸ் போடுபவர்.  ஒரு டாக்டர் என்ற பந்தா இல்லாமல் பழகுபவர்

 அனைவருக்கும் வாழ்த்துகள்

இந்த லிங்க்கில் போய் பார்த்தால் ஸ்டேட்டஸ் தெரியும் 

http://headlinesindia.mapsofindia.com/hiflyers/addnominations.php?page=1

அட்ரா சக்க  டிவிட்டர் விருதுகள்    


1.பெண்கள்க்கு எங்கே பிரச்சனை என்றாலும் ஆல மர விழுதை பிடித்தாவது ஆஜர் ஆகி விடும் ட்வீட் உலக எம் ஜி ஆர் விருது செளபர்ணிகா வுக்கு
-------------------------------------------------


2. தனது மழலை செய்யும் குறும்புகளையும் ,கேலிகளையும் வைத்தே ட்வீட் தேத்தும் பல்பு வாங்கிய பகவதி விருது @Shanthhi க்கு


--------------------------------------------


3. ஃப்ரீயா விடாதே ஆண்ட்டி போன்ற வித்தியாசமான அக்கவுண்ட் ஓப்பன் ஆக காரணமாக இருந்த @freeyavudu மாமே வுக்கு காமெடி கிரியேட்டர் விருது


------------------------------------------


4. பார்க்கறதுக்கு ஆள் ஒரு மார்க்கமா இருந்தாலும் பழக சொர்க்கமா இருக்கும் எங்க ஊரு பாட்டுக்காரன் விருது @rsGiri கிரி ராமசுப்ரமணியன் -க்கு


--------------------------------


5. ட்வீட் உலகின் குட்டி பாப்பா, வெட்டி பாப்பா  விருது டோரா புச்சி @poonguzhali_ பூங்குழலி :) க்கு ( போறேன், கிளம்பறேன்பார், கடைசிவரைம்ஹூம்)


--------------------------------


6. ஒரே காதல் சோக கவிதைகளாக போட்டுத்தாக்கும் புலம்பல் புனிதவதி விருது @JanuShath க்கு 


----------------------------------


7. வீட்டு வேலைகளை அரைகுறையா அவசர அவசரமா செஞ்சுட்டு 24 மணி நேரமும் டைம்லைனில் இருக்கும் லேடி லயன் மெடிக்கல்ஷாப் மேனகா விருது @soniaarun 


----------------------------------


8. எடக்கு மடக்கு ஏகாம்பரம் விருது @i_am_mano மனோ வுக்கு


--------------------------------


9. எவ்ளவ் அடி குடுத்தாலும் தாங்கும் லேடி கைப்புள்ள விருது திருச்சி வுக்கு

-------------------------------------------- 10. சம்பளமே வாங்காம குறும்பட ஹீரோயின் ஆன ஓ சி நாயகி விருது க்கு

-------------------------------------------

11. ஒன்றரை வரிக்கவிதை மட்டும் தான் போடுவேன் என அழுது அடம் பிடிக்கும் லேப்டாப் வாசுகி விருது sandhyacharu வுக்கு

----------------------------------------
12. ஆஃபீஸ்க்கு மட்டம் போட்டே ட்வீட் போடும் ஓபி ஒலக நாயகி விருது geethu

------------------------------------------

 13. RT போட்டு போட்டு சிவந்த கரம்,திறமை சாலி முத்துக்களை அடையாளம் காட்டும் சிப்பி, ட்வீட் உலக சிற்பி விருது :க்கு
-----------------------------------------

14. கழுவற மீன்ல நழுவற மீனராசி கவிதாயினி விருது கோவை பாவை sowmya க்கு (சவுமிக்கு ஜஸ்ட் ஆப்போசிட்)

--------------------------------------

15. ஈரோட்டுக்காரர் என்றாலும் ஒரு தடவை கூட பார்க்க முடியாத அப்பாடக்கர் ஒசாமா பின் லேடன் விருது க்கு

--------------------------------------Nominations for Best Indian Twitterer of the year 2011
Nominations
Votes
Rank
Share
கார்க்கி
@iamkarki
381
1
Varun Gandhi
@varungandhi80
330
2
ஆல்தோட்டபூபதி
@thoatta
279
3
Ramesh Srivats
@rameshsrivats
257
4
theTrendMaker™
@RajanLeaks
201
5
Yashvir Dalaya
@Yashvir
155
6
என். சொக்கன்
@nchokkan
149
7
SexyBichoo
@Sexybichoo
143
8
மாயவரத்தான்....
@mayavarathaan
139
9
Subramanian Swamy
@Swamy39
134
10
நான்தான்™
@DKCBE
130
11
Dr.Riyaz Ahamed ®
@riyazdentist
126
12

20 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் ஓட்டு...

அனுஷ்யா said...

பூரா பயலும் நம்ம ஊருக்காரைங்கதானா? செம்ம....

MANO நாஞ்சில் மனோ said...

ஓட்டு போட்டால் காசு தருவியா அண்ணே...?

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் எல்லாருக்கும் உன் பாணியிலேயே விருது கொடுத்துட்டியா வெரிகுட்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

அது யாருடா இங்கேயும் ஒரு மனோ இருக்குறார், ஆக நீ எங்கே போனாலும் உன்னை தூக்கி போட்டு மிதிக்க இந்த பெயர் உன் வாழ்நாள் எல்லாம் தொடரும் ஹா ஹா ஹா ஹா...

sutha said...

as always good blogpost - All India level ungaLadhu ranking enna?

K.Arivukkarasu said...

உங்கள் விருது தெரிவுகள் அனைத்துமே அருமை செந்தில்.... :))

தர்ஷன் said...

கடி ஜோக்கா போடுவாரே அவர காணோம்

சி.பி.செந்தில்குமார் said...

@தர்ஷன்

hi hi ஓவரா கடிச்சதால அவருக்கு 26 வது இடம்

சுதா SJ said...

எல்லாமே கலக்கலாதான் இருக்கு..... நாம எப்பவும் பேஸ்புக் பக்கம் மட்டுமே சுற்றும் ஆள் பாஸ் :) இனி உங்கால பக்கமும் வரலாம் போலதான் இருக்கு....

சுதா SJ said...

பாஸ் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

தகவலுக்கு நன்றி தோழரே... கீச்சு வலை தளம் பக்கம் அண்மையில் செல்ல முடியாததால் இந்த தகவல் எனக்கு புதுசு.... மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

'தோட்டா' ட்வீட்களை விகடனில் படித்துள்ளேன். ஆளு பட்டைய கெளப்பராரு!

மன்மதகுஞ்சு said...

அண்ணே என்ன இப்பிடி பம்முறீங்க.. நீங்க மட்டும் இல்லாட்ட டிவிட்டரில ஒரு சினிமா மேட்டர் கிடைக்குமா நம்ம டிவிட்டர்களுக்கு.. அதுசரி உங்கள் எழுத்து பணீக்காக" ஜல்சா ஜலபுல ஜம்புலிங்கம்' என்ற விருதை கொடுக்கலாமே

Yoga.S. said...

வணக்கம்,சி.பி சார்!நன்றி!கூடவே ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
நல்லதோர் தொகுப்பு,
டுவிட்டர் நண்பர்களின் லிங்குகளைக் கொடுத்திருந்தால் நாங்களும் இணைந்து கொள்ளலாம் அல்லவா.
தரப்படுத்தலில் கலந்து கொண்டோருக்கும், முதல் பத்து இடங்களினுள் வந்த உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்!

நிரூபன் said...

அண்ணே, அட்ராசக்க விருது பெண்களுக்கு மாத்திர்மா?

பெரும்பான்மை இடங்களை அவங்களுக்கு கொடுத்திட்டீங்களே?
அப்படீன்னா ஆண் டுவிட்டர்களுக்கு?
ஹி...ஹி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அவர்களுக்கு ஒரு சபாஷ்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

பால கணேஷ் said...

ட்வீட்ஸ் பத்தி நான் இன்னும் தெரிஞ்சுக்காததால... உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் செந்தில்!