Wednesday, December 07, 2011

ரஜினி-ன் கோச்சடையான் - பஞ்ச் டயலாக்ஸ் - காமெடி கும்மி

http://www.teluguwave.com/wp-content/uploads/2010/07/Soundarya-Rajinikanth-getting-engaged-to-Ashwin.jpg

ரஜினியின் ராணா படம் எடுக்க கால அவகாசம் தேவைப்படுவதால் ரஜினி அதுவரை என்ன செய்யலாம்னு யோசிச்சிருக்கார்..என்ன தான் ரஜினி குணம் ஆகி விட்டாலும் அவரது பழைய உடல் பொலிவு இல்லை.. ரொம்ப இளைச்சுட்டார்.. இந்த கெட்டப்பில் வீரமான கேரக்டரும், குதிரை சவாரி செய்யும் மன்னர் கேரக்டருமான  ராணா கேரக்டரில் நடிக்க அவருக்கு தயக்கம் ஏற்பட்டதில் வியப்பு இல்லை.. 


 இந்த சமயத்துல தான் ரஜினிக்கு ஒரு ஐடியா , அவரோட பொண்ணு எடுத்த படமான சுல்தான் தி வாரியர் பிஸ்னெஸ் ஆகாம பொட்டில தூங்குது.. காரணம் அது ஒரு அனிமேஷன் படம்.. ஆனானப்பட்ட டின் டின் கூட தமிழ் நாட்டில்  பிரமாதமாக ஓடலை.. ஜூராசிக் பார்க் எடுத்து ஹிட் ஆக்குன ஸ்பீல்பெர்க்காலயே முடியாதது சவுந்தர்யா ரஜினியால முடியுமா?னு ஒரு கேள்விக்குறி.. 

அதனால எப்படி எம் ஜி ஆர் நடிச்ச கடைசி படத்தோட சில காட்சிகளை வெச்சு கே பாக்யராஜ் அவசர போலீஸ் 100-னு ஒரு படம் குடுத்தாரோ அந்த மாதிரி சுல்தான் த வாரியர் படத்தோட கொஞ்சம் காட்சிகள் ரஜினி நடிச்சா ஒரு படம் ரெடி ஆகிடும்.. ஒரே கல்லுல 2 மாங்கா.. ராணா ரெடி ஆவதற்குள் ரெஸ்ட் எடுத்த மாதிரியும் ஆச்சு.. மகளோட படத்தை முடிச்சுக்கொடுத்த மாதிரியும் ஆச்சு..

http://4.bp.blogspot.com/_b8GEWBCzJHY/TUkmbT47moI/AAAAAAAABSI/fY97VxN5nAc/s1600/Rana-Rajinikanth.jpg

இது நம்ம ஆளு படம் பாலகுமாரன் டைரக்‌ஷன் என இருந்தாலும் டைரக்‌ஷன் மேற்பார்வை கே பாக்யராஜ் என போட்டால் தான் வாங்குவோம்னு விநியோகஸ்தர்கள் அடம் பிடிச்ச மாதிரி மகள் படத்துக்கு எந்த தடையும் வந்து விடக்கூடாது என்று ரஜினி கே எஸ் ரவிக்குமார் பெயரை கதை வசனம் டைரக்‌ஷன் மேற்பார்வை என போட ஐடியா செஞ்சிருக்காங்க..

 ஹீரோயின் அனுஷ்கா, தங்கை கேரக்டர்ல சிநேகா என பேச்சு வார்த்தை நடந்துட்டிருக்கு.. 

அந்த கோச்சடையான் படத்துல ரஜினி என்ன பஞ்ச் டயலாக் பேசுவார்? கற்பனை

http://2.bp.blogspot.com/-RBFr35G1GB4/ThiDcEDE00I/AAAAAAAABrQ/04Fjn_b9UA4/s400/soundarya+wedding+photos+2.jpg1. கோச் (COACH) ச்சை பகைச்ச ப்ளேயர் கூட டீம் ல இருந்துடலாம், இந்த கோச்சடையானை பகைச்சுக்கிட்டா பூமிலயே இருக்க முடியாதுடா கண்ணா!


-----------------------------------
2. டானா (DON) இருந்தவன் தான் இந்த ராணா! அந்த ராணாவுக்கே நைனாடா இந்த கோச்சடையான்

-------------------------------------

3. கால தேவனுக்கே  டைம் குடுத்தவன் நீ.. மரண தேவனுக்கே டேக்கா கொடுத்தவன் நான் 

-----------------------------------------

4. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது ஸ்டைலு.. இரண்டெழுத்தில் என் பேச்சிருக்கும்  - ராணா

------------------------------------------------

5. என் பேரு ராணா…. என்னை எதிர்க்க யாராவது இருக்காங்களா ஆணா? என்னை பகைச்சுக்காதே வீணா…என் பேரை கேட்டாலே பேதி ஆகிடும் தானா

-------------------------------------

http://www.hdwallpapers.in/walls/beautiful_anushka-normal.jpg

6.  அரசாங்கமே எனக்கு எதி”ரானா.”லும் … அரசியல் வாழ்வு ஒரு புதி”ரானா”லும் …கலங்க மாட்டான் இந்த ராணா.


-----------------------------------------

7. சபரி மலை போனா தமிழர்களை தாக்கறாங்க.. இந்த அண்ணாமலை மறு அவதாரம் எடுத்து வரனும்னு ஆளாளுக்கு கேக்கறாங்க

---------------------------------

8. அரசியலுக்கு வந்தவங்க சாதிக்காததை அரசியலுக்கு வராம  சாதிக்கறவன் தான் நாட்டுக்கு தேவை

--------------------------------------

9. இகழ்ச்சி அடையான் ஒரு முயற்சி உடையான்.. வீண் புகழ்ச்சி விரும்பான் இந்த கோச்சடையான்

------------------------------------------

10. என் இமேஜ் டேமேஜ் ஆனாலும் எனக்கு கவலை இல்லை, முல்லை பெரியாறு டேம் ஏஜ்டு-னு சாக்கு சொல்லி இடிக்க விட மாட்டேன்

---------------------------------------

http://files.whiteapple4u.webnode.com/200000402-3aaad3ba45/Sneha_blue.jpg

11. இரட்டை இலைக்குத்தான் ஜனங்க ஓட்டு போட்டாங்க.. இரட்டை விலைக்கு இல்ல

------------------------------------

12. கோர்ட்டுக்குப்போறதுக்கே நேரம் இல்லாதவங்க கோட்டைக்கு வந்து என்ன செய்யப்போறாங்க?

----------------------------------------------


26 comments:

ம.தி.சுதா said...

I cp மாட்டிக்கிட்டார்டி...

எங்க நம்ம அனஸ்கா சினேகாவுக்கு பஞ்சு...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)
நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record
சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

ம.தி.சுதா said...

6 வதற்கு..

நம்ம ரஜனி சாருக்கு அப்படியொரு சம்பவம் வாழ்க்கையில நடக்கவே நடக்காது ஏன்னா அவரு வாழ்க்கையில அரசியலுக்கே வர மாட்டார்..

வந்தால் ?????

ம.தி.சுதா said...

அது சரி இப்பத் தான் 8 வது படிச்சேன்...

அதைத் தான் அவரே சாதிச்சிட்டாரே...

ம.தி.சுதா said...

யோவ் திரட்டிக்கு குடுமையா...

Anonymous said...

சீக்கிரமே ரஜினி போன் பண்ணி உங்களை படத்துக்கு டயலாக் எழுதச் சொல்லப் போகிறார் பாருங்கள்...

கும்மாச்சி said...

சி.பி. உங்கள் பஞ்சுக்கு காபி ரைட்ஸ் வாங்கி வச்சிடுங்க, பின்னால் ஏதாவது சுட்டால் கேஸ் போட வசதியாயிருக்கும்.

பால கணேஷ் said...

ஆக்ஷன் ஹீரோக்களுக்கு ஒரு புது வசனகர்த்தா ரெடி. (அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ்.. நோட் பண்ணுங்கப்பா... பின்றார்ப்பா...)

K said...

haaaa haaaaa awsome! :)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எப்படி சிபி இப்படி ??

சுதா SJ said...

பாஸ் கலக்கல்...

சுதா SJ said...

எனக்கும் என்னவோ ரஜனி அரசியலுக்கு வர மாட்டார் என்றுதான் தோணுது..... ஆனா வரணும் என்று ஆசைப்படுறேன்... அவ்வ்

Unknown said...

நான் ரானாவுக்கே பஞ்ச் எழுதினவன்
எங்கிட்ட வேணா பஞ்சராயிருவே...

இப்படி பஞ்ச் எழுதரமாதிரி வருமா?

சென்னை பித்தன் said...

சூப்பர் பன்ச்.

KANA VARO said...

அது சரி, ஏன் அனுஸ்கா முகத்திலை கவலை தெரியுது?

கோவை நேரம் said...

பன்ச் டயலாக் பேசியதால்
நீங்க ஒருபன்ச்சர்..ஹி..ஹி..ஹி..
டிரைவ் பண்ணினா டிரைவர் ...டீச் பண்ணினா டீச்சர் ..எப்பூடி .....

ராஜி said...

பஞ்ச் டயலாக்குலாம் சூப்பர்

Yoga.S. said...

வணக்கமுங்க!பஞ்ச் டயலாக் நல்லாருக்கு!பஞ்சராவாம இருந்தா சரி!

கடம்பவன குயில் said...

ஹா...ஹா...விஜய் உங்க அட்ரஸ் கேட்டுட்டு இருக்கார் அடுத்த படத்துக்கு உங்களை வசனகர்த்தாவாக புக் பண்ண.

கோகுல் said...

என்னங்க எனக்கு வெறும் டைட்டில் மட்டும் தான் தெரியுது.அதுக்கப்புறம் ஒட்டுப்பட்டைகள் தான் இருக்கு.என் கம்பியூட்டர் பிரச்சினையா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணன் சிபி அவர்கள் ரஜினியை வைத்து விரைவில் ஒரு படம் இயக்குவார்... தயாரிப்பு முதல் லைட் பாய் வரை எல்லாம் அவரே,,,வாசிக்க:
சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி

ஹேமா said...

சிபி...உங்க கற்பனையே கற்பனைதான்.அசத்தல் !

நிரூபன் said...

பாஸ்...
கொஞ்சம் பிசி! நான் நேரம் உள்ள போது இந்தச் சுவையான பதிவினைப் படிக்கின்றேன்!

சமாதானக் காற்று உங்க பக்கம் அடிக்குது போல இருக்கே! வாழ்த்துக்கள்!

Jaganathan Kandasamy said...

CPS - Number 11 and 12 - film la villan illa poliruku. villiaya...?

சீனுவாசன்.கு said...

koochada-sibi-poochada-aakkidivaaru-paththaram!

சீனுவாசன்.கு said...

koochada-sibi-poochada-aakkidivaaru-paththaram!