Friday, December 16, 2011

பிரபல பதிவர்கள் சுயம்வரத்தில் செய்த சலம்பல்கள் காமெடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgELqxKulIY4VtpcbADf6Q13TMIc_sVVAku_60QkuVkFt5RCJRsPgk5qprDm9PTHTYLooxGEZ_WCvqKQmle7Xt20h1VFWZFxrQlW3GRSTJSXkaPLBd9ZYI-JQcUqHFMhg6SIq2bUAv7momg/s1600/Amala+Paul+%252813%2529.jpg 

நேத்து டிவில படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது படத்துல ஒரு  சீன்(அட,எல்லாரும் ஏன்ப்பா டென்ஷன் ஆகுறீங்க. இது “அந்த சீன்இல்லை). மாட்டை அடக்குனாத்தான் பொண்ணு தருவேன் ன்னு மாமனாரா நடிச்சவர் வசனம் பேசிக்கிட்டு இருக்குற சீன்.


. எனக்கு அப்போதான் ஒரு ஐடியா ..நம்ம பதிவர்கள்லாம் பொண்ணு பார்க்க போகும்போது மாமனார் இப்படி ஒரு கண்டிஷன் போட்டிருந்தால் நம்ம பதிவர்களுக்கு கல்யாணம் நடந்திருக்குமா?ன்னு டவுட்டு வந்துடுச்சு..,
பொண்ணு ரெடி, மாடு ரெடி, வாங்க எல்லாரும் கிரவுண்டுக்கு போவோம்...

,
1. முதல்ல நம்ம தம்பி லேப்டாப் மனோ, 

ஒரு கையில லேப்டாப், இன்னொரு கையில கத்தி, பிளேடு, அரிவாளோடு மாட்டை அடக்க போறார்.

 பொண்ணு: ஹலோ! ஒரு நிமிஷம். மாடு பிடிக்குறதுக்கு  கையில லேப்டாப் எதுக்கு?

மனோ: லேப்டாப் இல்லைனா என்னை யாரும் மனோன்னு ஒத்துக்கமாட்டாங்கம்மா.

பொண்ணு: சரி, கத்தி, அறுவா, பிளேடுலாம் எதுக்கு? 


மனோ - இதை வச்சுதாம்மா பிளாக்குல இருக்குறவனுங்களை அடக்குறேன். அதேப்போல மாட்டையும் அடக்கிடுவேன்.

மாமனார்: தம்பி,கத்தி, பிளேடு, அரிவாள்லாம் இல்லாம வெறுங்கையால மாட்டை அடக்குங்க.

,மனோ: என்னாது, வெறுங்கையால மாட்டை அடக்குறதா? பிள்ளைப்பூச்சி போல இருக்கறானே சிபி, அவனையே நான் இதல்லாம் வச்சுதான் அடக்குவேன். இதெல்லாம் இல்லாட்டி எனக்கு வீரமே பொங்கி வராதே. எலேய், உன் பொண்ணை நீயே வச்சுக்க. இங்க வேஸ்ட்  பண்ண நேரத்துல எதாவது பிரபலத்தை பேட்டியோ இல்லை முல்லை பெரியாறு அணை பத்தி ஒரு போஸ்ட் ரெடி பண்ணி பிளாக்குல போட்டு நான் கும்மியடிச்சு பொழுதை போக்கியிருக்கலாம். 


2. அடுத்து பக்கி சாரி விக்கி தக்காளி கேமரா,மாடு, துப்பாக்கியோடு களத்துக்கு வரார்.

மாமனார்: தம்பி, தம்பி மாடுல்லாம் எதுக்கு? அதான் இங்கனயே ஒரு மாடு இருக்கே.

விக்கி: நான் என் சொந்த மாட்டைதான் அடக்குவேன். அடுத்தவன் மாட்டை அடக்குற அளவுக்கு நான் மானங்கெட்டவனில்லை. எனக்கு சூடு சுரணை இருக்கு.நான் மானஸ்தன்...

மாமனார்: ம்ஹூம் தம்பி ,இது ஆவறதுக்கில்லை 

பொண்ணு: மாடுக்கு சொன்ன ரீசன் ஓக்கே. துப்பாக்கி எதுக்கு?

விக்கி: நான் இந்திய ராணுவத்துல இருந்தவன் ,எல்லாரும் நினைக்கற மாதிரி நாட்டுப்பற்றுக்காக மிலிட்ரில சேரலை, மிலிட்ரி சரக்கு டெயிலி குடிக்கறதுக்ககவே ராணுவத்துல சேர்ந்தேன்,அதனால எனக்கு துப்பாக்கியில சண்டை போட்டுதான் பழக்கம். இப்ப கூட நான் ஆப்பிரிக்கா போய் வந்தேன். அங்கயும் மாட்டை அடக்க துப்பாக்கிதான் யூஸ் பண்றாங்க.

பொண்ணு: கேமரா எதுக்கு?

விக்கி: மாட்டை அடக்குறதை வீடியோ எடுத்துக்கிட்டால், இதை வச்சு கிச்சளிக்காஸ் போட்டு பதிவை தேத்துவேன். இப்படித்தான் இனி நான் எல்லாத்தையும் வீடியோ எடுத்து பதிவா தேத்த போறேன் ,இனி ஒரு பயலும் என்னை சொந்தமா வீடியோ போட்டியான்னு கேட்க முடியாது.

பொண்ணும் மாமனாரும்: என்னாது இனி நடக்க போறதெல்லாம் வீடியோ எடுத்து போடப்போறியா? கல்யாண முஹூர்த்தத்தை வீடியோ எடுத்தா பரவால்ல, சாந்தி முகூர்த்தத்தை வீடியோ எடுத்தா?  நீ ஆணியே புடுங்க வேணாம். கிளம்பு ராசா.


3. அடுத்து தமிழ்வாசி பிரகாஷ் கையில, பேடு நோட்டு, பென்னோடு வரார்

பொண்ணு: (வரவனுலாம் கையில எதாவது எடுத்து கிட்டு வரானே). 

 எதுக்கு இந்த பேடு, நோட்டு,பென்?
பிரகாஷ்: அதுவாம்மா, மாடு பிடிக்குறதுல எனக்கு கிடைக்கும் எக்ஸ்பீரியன்ஸ வச்சு  பதிவு போட்டேன்னா வருங்காலத்துல மாட்டை அடக்குறவங்களுக்கு யூஸ் ஆகுமே. அதான்.
பொண்ணு: நல்ல எண்ணம்தான்..
\
மாட்டுக்கிட்ட போய்.. 
பிரகாஷ்: எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?
பொண்ணு: யோவ் மாட்டுக்கிட்ட போய் ஏன்யா பழமொழிலாம் சொல்லிக்கிட்டு இருக்கே.
பிரகாஷ்: எனக்கு பழமொழி சொன்னாதான் அந்த காரியம் ஜெயமாகும்னு நம்பிக்கை.
மாமனார்: நாசமா போச்சு.
பிரகாஷ்: நான் ஒரு விடுகதை சொல்றேன். அதுக்கு பதில் சொன்னா மாடு ஜெயிச்ச மாதிரி, பதில் சொல்லலைன்னா நான் ஜெயிச்ச மாதிரி எப்பிடி டீலிங்க.
மாமனார்: இப்படியே நீ விடுகதை போட்டுக்கிட்டிருந்தால் என் பொண்ணு வாழ்க்கை வெளங்குன மாதிரிதான். நீ ஆளை விடு ராசா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUhINJGAdrJGa5WEJUjRm2HCdmvD83h-VCyru6VP66BxeSmjwY7XBcn9M-9CRsVq3z3EbwX1Gabpcz-G_1ZoC_Zs3-ynRc9AXiTqzGgxT0G6PpkN5y3Yl75UReiIF7dKFCrErHp8LLo_3G/s1600/Anushka-12.jpg

4. அடுத்து சூர்ய ஜீவா வரார்..., வந்தவர் நேரா மாட்டை அடக்க போனவர், திரும்பி வந்துடுறார்
மாமனார்: என்னப்பா, மாட்டை அடக்காம திரும்ப வந்துட்டே.
சூர்ய ஜீவா: கூடங்குளத்துல அணு மின் நிலைய பிரச்சனையும், முல்லை பெரியார் அண பிரச்சனையும் தீராம இரண்டு தரப்பிலும் அடிச்சு குத்திக்குறானுங்க.
மாமனார்: அதுக்கு?
சூர்ய ஜீவா: கோர்ட்டு, கேசுன்னு போய் பிரச்சனையை இழுக்காம இதுப்போல ஒரு போட்டி வச்சால், ஈசியா முடிஞ்சு போயிடுமே. இந்த யோசனையை நான் பிரதமர், முதல்வர், கவர்னருக்குலாம் லெட்டர் அனுப்பிச்சுட்டு வரேன். இந்த பிரச்சனைலாம் ஓய்ஞ்சாதான் கல்யாணம்.
மாமனார்: கடல்ல அலை எப்போ ஓயுறது? நாம எப்போ தலை முழுகுறது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

5. அடுத்து ஐ.ரா. ரமேஷ்பாபு
 
பொண்ணு: வேகமா வரானே இவனாவது மாட்டை அடக்குவானா?
மாமனார்: தெரியலியேம்மா.
ஐ.ரா ரமேஷ்பாபு மாட்டுக்கிட்ட போய்..

..,
ஒரு காட்டுல 4 மாடுங்க ஃப்ரெண்டா இருந்துச்சாம். அப்போ அந்த வழியா பசியோட வந்த சிங்கம் அதுங்களை வேட்டையாட அதுங்க மேல பாய்ஞ்சுச்சாம்.....
மாமனார்: ஐயையோ மாட்டுக்கிட்ட ஏம்பா கதை சொல்லிக்கிட்டு இருக்கே
.
ஐ.ரா ரமேஷ்பாபு: இல்ல நான் எப்பவுமே நீதிக்கதைகள் சொல்லுவேன். அதன் மூலமாதான் என் காரியத்தை நான் சாதிச்சுக்குவேன். அப்புறம் ஒரு லொள்ளு ஒண்ணு சொல்வேன்.
பொண்ணு: அப்பா, இவன் என்னை கதை சொல்லியே சாவடிப்பான் போல இவனை போகச்சொல்லுப்பா.

6. அடுத்து கோகுலத்தில் சூரியன் வெங்கட்:
வந்தவர் நேரா பொண்ணோட அப்பாக்கிட்ட போய்...,
வெங்கட்: இந்த மாட்டை இதுக்கு முன்னாடி யாருலாம் அடக்க வந்தாங்கன்னு எனக்கு லிஸ்ட் வேணும்.
மாமனார்: எதுக்கு தம்பி, 
வெங்கட் - இல்லை நான் ஒரு கவுரவமான , கண்ணியமான பதிவர். எனக்கு முன்னாடி இந்த மாட்டை அடக்க வந்தவங்க இந்த மாட்டை தொட்டிருப்பாங்க. அப்படி தொட்டவங்கள்ல கில்மா படம் பார்க்குறவங்க, தண்ணி அடிக்குறவன், பான்பராக் மெல்லுறவன் இருந்து அவன் அந்த மாட்டை தொட்டு நானும் அந்த மாட்டை தொட்டால் என் கவுரவம் என்னாகுறது.அதான் கேட்குறேன்.

பொண்ணு: அப்பா இவனை கட்டிக்கிட்டால், வீட்டுக்கு வரவன், கறிகாய் விக்குறவன், பால்காரன், சிலிண்டர்காரன் ஹிஸ்டரிலாம் கேட்டே என்னை கொண்ணுடுவான். அதனால இவனும் வேணாம்பா,

7.  அடுத்து நல்ல நேரம் சதீஷ்: 
மாட்டை அடக்க வந்தவர், மாட்டுக்கிட்ட போகாமல் நேரா பொண்ணோட அப்பாக்கிட்ட...,
நல்ல நேரம் சதீஷ்: சார், இந்த மாட்டோட ஜாதகம் தந்தால் நல்லா இருக்கும்..,
மாமனார்: என்னது மாட்டுக்கு ஜாதகமா?! அதெல்லாம் இல்லை தம்பி.
 நல்ல நேரம் சதீஷ்: சரிங்க, மாடு பொறந்த நேரம், இடம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்..,
பொண்ணு கடுப்பாகி, யோவ் லூசாய்யா நீ? மாடு எங்க பொறாந்துச்சு, டைம் என்ன்ன்னு கேட்டுக்கிட்டு இருக்கே. விட்டா அதுக்கு யார் பிரசவம் பார்த்தாங்கன்னு கூட கேட்பே போல இருக்கே. ஆமாம், அதெல்லாம் உனக்கெதுக்கு  இப்போ?
நல்ல நேரம் சதீஷ்: அது மாட்டோட ராசியும், என் ராசியும் ஒத்து போகுதான்னு பார்க்க.
பொண்ணு: புரியலையே.
 நல்ல நேரம் சதீஷ்: மாட்டோட ராசியும், என் ராசியும் ஒத்துவந்துச்சுன்னா நான் ஜெயிச்சுடுவேன். இல்லாட்டி அது என் விலாவில் குத்தி அது ஜெயிச்சுடுமே அதுக்குதான் ஜாதகம் பார்க்கனும்ன்னு சொல்றேன்.
பொண்ணு: நீ ஜாதகத்தையே பார்த்துக்கிட்டு இருந்தால் எனக்கு கல்யாணம் ஆனமாதிரிதான். நீயும் கெளம்பு ராசா. 

8. சிரிப்பு போலீஸ் ரமேஷ்:
நீயும் ரொம்ப நாளா பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கியே, எந்த பொண்ணும் செட்டாகலியே. பேசாம அந்த மாட்டை அடக்குனா அந்த பொண்ணை உனக்கு கல்யாணம் நடந்துடும்னு பேசி சரிக்கட்டி அவன் ஃப்ரெண்டுங்க கிரவுண்டுக்கு கூட்டிக்கிட்டு வராங்க. வந்ததும் மாட்டை பார்த்துட்டு ஓன்னு அழ ஆரம்பிச்சுடுறாரு
பொண்ணு: மாட்டை அடக்க போயிருந்தாலாவது அடிகிடி பட்டிருக்கும். அப்போ வலியில அழுவுறது சரி. இப்போ ஏன் அழுவுறீங்க.
ரமேஷ்: அந்த மாட்டை பாரு எம்மாம்பெருசாஇருக்கு. என்னையும் பாரு நான் எப்படி இருக்கேன். இந்த மாட்டை அடக்குறது. ஒட்டகத்தை புடிக்குறதுலாம் என்னால முடியுமா? அதான் அழறேன்.
பொண்ணு: அதுக்கா அழுவுறீங்க. சரி நான் வேணும்னா அப்பாக்கிட்ட பேசி 1 மாசம் அவகாசம் வாங்கி தரேன். அதுக்குள்ள நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்திக்கிட்டு. மாட்டை அடக்க வாங்க. என்ன நான் சொல்றது சரியா?
இதை கேட்டவுடன் மீண்டும் ஓன்னு அழ ஆரம்பிக்குறார்.


பொண்ணு ரொம்ப கடுப்பாகி- இப்போ ஏன்யா அழுகுறே.
ரமேஷ்: எனக்கு சொந்த காசுல சாப்பிட்டால் உடம்புல ஒட்டாதே. ஒரு மாசம் யார் ஓசி சாப்பாடு வாங்கி தருவா. எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது போல
பொண்ணு????!!!!!!


- தொடரும் 


http://www.funrahi.com/photos/tollywood/rwx/iniya-tamil-actress-hot-photoshoot-july-25-2011-006.jpg

32 comments:

Unknown said...

எலேய் இருடி உனக்கு இருக்கு!

Unknown said...

room poddu yosippingkaloo

Admin said...

ம்..கற்பனையை அள்ளி விடுங்க..

ராஜி said...

மாட்டை அடக்க நீளும் வரிசையில் நின்னுட்டு இருந்த சிபி, பொண்ணோட அப்பாக்கிட வரார்...,
சிபி: சார், இன்னிக்கு வெள்ளிக்கிழமை
மாமனார்: அதுக்கு என்ன இப்போ,
சிபி: இன்ன்னிக்கு புதுப்படம் 4 ரிலீஸ். நாலு படத்தையும் பார்த்து விமர்சனம் போடனும்.அதுக்கு என்னை முதல்ல அனுப்பினா நான் மாட்டை அடக்கிட்டு போயிட்டு சிமர்சனம்லாம் போட்டுட்டு வருவேன்.
மாமனார்: ஏம்பா, ஒருவேளை நீ மாட்டை அடக்கிட்டால் எப்போ கல்யாணம்?
சிபி: நாளைக்கும் நான் ரெண்டு போஸ்ட் போடனும். அதுக்கு டைப் பண்ணனும், படம் இணைக்கனும், மொய் வைக்கனும். எனக்கு நிறைய வேலைலாம் இருக்கு. சோ ஞாயிற்று கிழமை கல்யாணத்தை வச்சுக்கலாம்.
பொண்ணு: கிர்ர்ர்ர்ர்ர் டமால்

Unknown said...

" ராஜி said...
மாட்டை அடக்க நீளும் வரிசையில் நின்னுட்டு இருந்த சிபி, பொண்ணோட அப்பாக்கிட வரார்...,
சிபி: சார், இன்னிக்கு வெள்ளிக்கிழமை
மாமனார்: அதுக்கு என்ன இப்போ,
சிபி: இன்ன்னிக்கு புதுப்படம் 4 ரிலீஸ். நாலு படத்தையும் பார்த்து விமர்சனம் போடனும்.அதுக்கு என்னை முதல்ல அனுப்பினா நான் மாட்டை அடக்கிட்டு போயிட்டு சிமர்சனம்லாம் போட்டுட்டு வருவேன்.
மாமனார்: ஏம்பா, ஒருவேளை நீ மாட்டை அடக்கிட்டால் எப்போ கல்யாணம்?
சிபி: நாளைக்கும் நான் ரெண்டு போஸ்ட் போடனும். அதுக்கு டைப் பண்ணனும், படம் இணைக்கனும், மொய் வைக்கனும். எனக்கு நிறைய வேலைலாம் இருக்கு. சோ ஞாயிற்று கிழமை கல்யாணத்தை வச்சுக்கலாம்.
பொண்ணு: கிர்ர்ர்ர்ர்ர் டமால்"

>>>>>>>>

ஹாஹா..இத இத இததான் எதிர் பார்த்தேன்!

ராஜி said...

மாட்டை அடக்குனா இந்த பொண்ணுலாம் கிடைக்குமான்னு மனோ அண்ணா கேட்க சொன்னார்.

வெளங்காதவன்™ said...

:-)

Unknown said...

Super Boss! :-)

சரியில்ல....... said...

ஹாஹாஹாஹா...... வழக்கமா இந்தமாதிரி வேலையெல்லாம் ஜீவன் தானே பண்ணுவாரு..... எனிவே, சூப்பரா இருக்கு.

சரியில்ல....... said...

நீங்க ஏன் கருத்தை ஆவலோடு எதிர்பார்க்குறிங்க? ஆவலோடு ஆவது அன்லோடு ஆவது?????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட்வான்ஸ் பிறந்தநாள் ச்சீ மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@Raji

ROFL

நாய் நக்ஸ் said...

Ha....ha..ithai...ithai than
ethirparthen....
Super.....
Ippadiye thodaravum......
Jokes kuraikkavum.....
Noe ..ur blog...is going top...
Nice...pl. Continue like this

Yoga.S. said...

வணக்கம்,சி.பி.சார்!தொடருமா??????

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி கையில ஒரு பாட்டலையும் குடுத்து டர்ர்ர் பண்ணி இருக்கலாம் ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

ராஜி said...
மாட்டை அடக்க நீளும் வரிசையில் நின்னுட்டு இருந்த சிபி, பொண்ணோட அப்பாக்கிட வரார்...,
சிபி: சார், இன்னிக்கு வெள்ளிக்கிழமை
மாமனார்: அதுக்கு என்ன இப்போ,
சிபி: இன்ன்னிக்கு புதுப்படம் 4 ரிலீஸ். நாலு படத்தையும் பார்த்து விமர்சனம் போடனும்.அதுக்கு என்னை முதல்ல அனுப்பினா நான் மாட்டை அடக்கிட்டு போயிட்டு சிமர்சனம்லாம் போட்டுட்டு வருவேன்.
மாமனார்: ஏம்பா, ஒருவேளை நீ மாட்டை அடக்கிட்டால் எப்போ கல்யாணம்?
சிபி: நாளைக்கும் நான் ரெண்டு போஸ்ட் போடனும். அதுக்கு டைப் பண்ணனும், படம் இணைக்கனும், மொய் வைக்கனும். எனக்கு நிறைய வேலைலாம் இருக்கு. சோ ஞாயிற்று கிழமை கல்யாணத்தை வச்சுக்கலாம்.
பொண்ணு: கிர்ர்ர்ர்ர்ர் டமால்//

ஹா ஹா ஹா ஹா மாட்டுனான் சிபி ராஸ்கல்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே, அந்த போட்டோவுல இருக்குற பொண்ணுங்கன்னா, சிங்கத்தையே அடக்கலாம்...!!!

rajamelaiyur said...

தொடரட்டும் உங்கள் அதிரடி ...

rajamelaiyur said...

நண்பர்களே ..
மாணவர்களுக்காக ஒரு சிறு முயற்சி இது ..
உங்கள் கருத்துகளையும் , ஆதரவையும் எதிர்பார்கிறேன் .


மாணவர்களுக்காக கைகோர்க்கலாம் வாருங்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

ராஜி said...
மாட்டை அடக்குனா இந்த பொண்ணுலாம் கிடைக்குமான்னு மனோ அண்ணா கேட்க சொன்னார்.//

ஆஹா தங்கச்சின்னா தங்கச்சிதான்...!!!

rajamelaiyur said...

மனோ அண்ணனுக்கு ஒரு சிங்கம் please

Yoga.S. said...

MANO நாஞ்சில் மனோ said...

ராஜி said...
மாட்டை அடக்குனா இந்த பொண்ணுலாம் கிடைக்குமான்னு மனோ அண்ணா கேட்க சொன்னார்.//

ஆஹா தங்கச்சின்னா தங்கச்சிதான்...!!!/////ஆஹா!மனோவுக்கு இந்த பொண்ணுல்லாம் தங்கச்சியாயிட்டா!!!!!!!!!!!!!!!!!!!

SURYAJEEVA said...

நல்ல வேலை என் பொண்டாட்டி இந்த பதிவ படிக்கல... யோவ் உனக்கு சுயம்வரம் வேற கேக்குதான்னு பின்னி பெடல் எடுத்து இருப்பார்கள்... அண்ணே பிரபல பதிவர்னு போட்டுட்டு உங்கள பத்தி போடாம ஏமாத்தி போட்டீங்களே...

RAMA RAVI (RAMVI) said...

ha ha..nice.

தொடரும் போட்டிருக்கீங்க?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ராஜி said...
மாட்டை அடக்க நீளும் வரிசையில் நின்னுட்டு இருந்த சிபி, பொண்ணோட அப்பாக்கிட வரார்...,
சிபி: சார், இன்னிக்கு வெள்ளிக்கிழமை
மாமனார்: அதுக்கு என்ன இப்போ,
சிபி: இன்ன்னிக்கு புதுப்படம் 4 ரிலீஸ். நாலு படத்தையும் பார்த்து விமர்சனம் போடனும்.அதுக்கு என்னை முதல்ல அனுப்பினா நான் மாட்டை அடக்கிட்டு போயிட்டு சிமர்சனம்லாம் போட்டுட்டு வருவேன்.
மாமனார்: ஏம்பா, ஒருவேளை நீ மாட்டை அடக்கிட்டால் எப்போ கல்யாணம்?
சிபி: நாளைக்கும் நான் ரெண்டு போஸ்ட் போடனும். அதுக்கு டைப் பண்ணனும், படம் இணைக்கனும், மொய் வைக்கனும். எனக்கு நிறைய வேலைலாம் இருக்கு. சோ ஞாயிற்று கிழமை கல்யாணத்தை வச்சுக்கலாம்.
பொண்ணு: கிர்ர்ர்ர்ர்ர் டமால்///

டபுள் ரிப்பீட்டு....
மாட்டுனார்யா சிபி.... இங்கிட்டும் எஸ்கேப் ஆக முடியாதுல...

குறையொன்றுமில்லை. said...

ம்ம்ம் நடத்துங்க, நடத்துங்க.

karthikkumar.karu said...

//மாட்டை அடக்க நீளும் வரிசையில் நின்னுட்டு இருந்த சிபி, பொண்ணோட அப்பாக்கிட வரார்...,
சிபி: சார், இன்னிக்கு வெள்ளிக்கிழமை
மாமனார்: அதுக்கு என்ன இப்போ,
சிபி: இன்ன்னிக்கு புதுப்படம் 4 ரிலீஸ். நாலு படத்தையும் பார்த்து விமர்சனம் போடனும்.அதுக்கு என்னை முதல்ல அனுப்பினா நான் மாட்டை அடக்கிட்டு போயிட்டு சிமர்சனம்லாம் போட்டுட்டு வருவேன்.
மாமனார்: ஏம்பா, ஒருவேளை நீ மாட்டை அடக்கிட்டால் எப்போ கல்யாணம்?
சிபி: நாளைக்கும் நான் ரெண்டு போஸ்ட் போடனும். அதுக்கு டைப் பண்ணனும், படம் இணைக்கனும், மொய் வைக்கனும். எனக்கு நிறைய வேலைலாம் இருக்கு. சோ ஞாயிற்று கிழமை கல்யாணத்தை வச்சுக்கலாம்.
பொண்ணு: கிர்ர்ர்ர்ர்ர் டமால்///vachangala aapu......

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

செண்பகமே செண்பகமே......

மகேந்திரன் said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...
முடியல...
ஆனாலும் சுயம்வரம் கலக்கலா தான் இருந்துச்சு.