Thursday, December 15, 2011

அய்யோ அப்பா ஐயப்பா, அடி விழுதே ஒதுங்கப்பா ( ஜோக்ஸ்)1. உங்க பையன் சபரி மலை போக மாலை போட்டிருக்கானா?

ஆமா, ஏன்?

இந்தாங்க  ரூ 10,000 , கேரளா கவர்மெண்ட் வழங்கும் முன் கூட்டியே தரும் நிவாரண நிதி

--------------------------------------------------

2. அப்துல் கலாம் எதுக்காக கேரளா போறார்?

கேரளாவில் தமிழர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு அறிக்கை தர.. 

----------------------------------------

3.சபரி மலைல ஏகப்பட்ட பக்தர்கள் இருக்காங்க.. இதுல தமிழர்களை எப்படி அடையாளம் காண்பது?


அடி வாங்கிட்டு இருக்கறது தமிழர்கள், அடி குடுக்கறது மலையாளிகள்

--------------------------------------

4. படு டப்பா படமான இதுக்கு ஏன் டேம்-னு டைட்டில் வெச்சீங்க?

படம் பார்க்கறவங்க டேமிட்-னு திட்ட வசதியா இருக்கட்டும்னு தான்

--------------------------------------------

5. பஸ் ஓனரா இருக்கற நீங்க  ஒரே மாசத்துல  எப்படி லட்சாதிபதி ஆனீங்க?

சபரி மலை டூ சிங்கிரி பாளையம் ஒரு பஸ் விட்டேன், செம வசூல்

----------------------------------------


6. சபரி மலைக்கு போனவங்களுக்கு செம அடியாமே?

ஆமா, பள்ளிக்கட்டு சபரி மலைக்கு, மாவுக்கட்டு சபரி மலைக்கு, சாமியே அய்யய்யோ-னு பாடறாங்களே?

------------------------------------\

7. விஜய்காந்த்  நடிச்சு சபரி மலை-னு ஒரு படம் ரிலீஸ் ஆகி இருக்கா? தகவலே வர்லை?

அது அவர் டாக்டரா நடிச்சு வந்த சபரி படம் தான், சீசனுக்கு ஏற்றபடி ரீ ரிலீஸ் பண்ணி இருக்காங்க..

-----------------------------------------

8.  பிரபு தேவா ஏன் ஜாலி மூடுல இருக்காரு?

கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை முன்னிட்டு கேரளா நடிகைகள் யாரையும் மேரேஜ் பண்ணக்கூடாதுன்னு  நடிகர் சங்கத்துல சொல்லீட்டாங்களாம்

---------------------------------------------

9. தலைவரே, சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு பற்றி என்ன நினைக்கறீங்க?

சில்லறைத்தனமா இருக்கு.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

----------------------------------------------

10. இங்கே ஏ சி ரூம் கிடைக்கும்.. 

ஓஹோ சில் அறை ?? அதான் சில்லரை வியாபாரியா?


---------------------------------------------11. டாக்டர் ஏன் கடுப்பா இருக்காரு?

நோயும் ஜாயும்  பிறர் தர வாரா -னு க்ளினிக் ல யாரோ எழுதி வெச்சுட்டு போய் இருக்காங்களாம்.. 

---------------------------------------------

12. தலைவர் ஃபாரீன் பேங்க்ல ஏன் லோன் வாங்கனும்?

அந்நிய முதலீட்டுக்குத்தானே தடை? அந்நிய கடன் ஈட்டுக்குமா தடை?னு கேட்கறாரு.. 

------------------------------------------

13. நான் காந்தியையும் பின்பற்றுகிறேன், சாந்தியையும் பின்பற்றுகிறேன்-னு தலைவர் சொல்றாரே?

சாந்திங்கறது அவர் சம்சாரம். 

--------------------------------------------

14. தலைவர் பண்ற அலப்பறை தாங்கலை.. 

ஏன்?

முல்லை பெரியாறு பிரச்சனை தீரும் வரை மகளிர் அணித்தலைவிக்கு  முல்லைப்பூ கூட வாங்கித்தர மாட்டாராம்.. 

----------------------------------------------

15  டைரக்டர் சார்.. உங்க சம்சாரத்தை புரொடியூசர் ஆக்கி அவங்க நெற்றில நாமம் போட்டிருக்கீங்களே? ஏன்?

மேரேஜ் ஆன பொண்ணு வெறும் நெற்றில இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க.. அதான்
-----------------------------------------------


16. யோவ், பிச்சை எடுக்கற நீ கைல 6 லட்சம் ரூபா வெச்சிருக்கியே?ஆமாங்க எஜமான், மீதி வீட்ல பாதி, பேங்க்ல பாதி இருக்கு.. 

----------------------------------------

17. தலைவரே. உங்க பையனுக்கு  படிப்பு மண்டைல ஏறலையா?

ஆமா, எப்படி கண்டு பிடிச்சிங்க?

 இளைய தலை முறைக்கு வழி விடனும்னு அறிக்கை  விட்டீங்களே?

------------------------------------------
18. உங்க கட்சில கொ ப செ பதவி இல்லையே?கொள்கையே இல்லை , கொ ப செ பதவி எதுக்கு?


-----------------------------------------

19. தலைவர் சமாளிப்புல கில்லாடி

ஏன்?

பால் விலை ஏறுனதால லோக்பால் சட்டம் அமலுக்கு கொண்டு வர முடியலைன்ட்டாரே?

-----------------------------------------------

20.  கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு.. 

சாரி தலைவரே, கறுப்புப்பணம் எல்லாம் வெச்சிருக்க கூடாது

-------------------------------------

23 comments:

Admin said...

வழக்கம்போல பிரமாதம்..

Admin said...

19 வது பால் காமெடி கிச்சுகிச்சு..

சி.கிருபா கரன் said...

Vada poche

மகேந்திரன் said...

நிலைக்குத் தகுந்த துணுக்குகள்...
அருமை.

சரியில்ல....... said...

மாவுக்கட்டு. ஹிஹிஹி....

சரியில்ல....... said...

வழக்கம் போலவே அட்டகாசம்.

Unknown said...

அண்ணே 6 வது நச்!

Unknown said...

Super Boss! :-)

Yaathoramani.blogspot.com said...

நகைச்சுவை முத்துக்கள் அனைத்தும் மிக மிக இயல்பாகவும்
ரசித்து நினைத்து நினைத்து சிரிக்கும் படியாகவும்
புத்தம் புதியதாகவும் இருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

Unknown said...

அருமையான தகவல் நண்பரே இன்று நம்ம தளத்தில்சீனாவின் கடலாதிக்கம்
http://topsitv.blogspot.com/2011/12/blog-post_15.html

சசிகுமார் said...

//அய்யோ அப்பா ஐயப்பா, அடி விழுதே ஒதுங்கப்பா ( ஜோக்ஸ்)//

என்ன தமிழன் அடிவாங்குறது உனக்கு சிரிப்பா இருக்குதா... ஏலேய் மக்கா கூட்டுங்கடா சங்கத்த.... #தமிழன்

சக்தி கல்வி மையம் said...

ஜோக்ஸ் சூப்பர், காலத்துக்கு ஏற்றபடி..

RAMA RAVI (RAMVI) said...

அருமையாக இருக்கு. 1வது சூப்பர்...

Unknown said...

டேம் படம் டேமிட் சான்ஸே இல்லை அந்த டுபாகூர் இயக்குனர் வெண்ணைக்கு மலையாளத்தில மொழி பெயர்த்து அனுப்பனும்...ஹஹ

K.s.s.Rajh said...

1,2,3,4,8,15

அருமை சிட்டிவேசன் ஜோக்ஸ் என்பது இதுதானோ

இன்று எனக்கு உங்கள் பதிவுக்கு 7வது ஓட்டு போடும் பொண்ணான வாய்ப்பு கிடைத்துள்ளது.அவ்வ்வ்வ்வ்வ்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

காலத்தை ஒட்டிய நகைச்சுவை!

Yoga.S. said...

வணக்கமுங்க!தன்மானத் தமிழனா இருந்துக்கிட்டு இந்த வாரு வாருறீங்களே?சுத்தமாப் புடிக்கலீங்க!

துரைடேனியல் said...

தலைகிழே நின்னுகிட்டே யோசிப்பிங்களோ. எப்புடி இதெல்லாம்.

தமிழ்மணம் வாக்கு 10.

Anonymous said...

8வது சூப்பர்ரப்பு...
சபரி எல்லாமே சூப்பர்...

இன்று என் பதிவு:--

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..-முடிந்தால் முயற்சியுங்கள்...அந்த பொண்ணுகிட்ட எப்பிடி சொல்லுறது??...

சேகர் said...

இந்த தடவ உங்களுக்கு கைல சிக்குனது சபரி மலையா.. கலக்குங்க நண்பரே...

ரிஷபன் said...

எல்லாமே சூப்பர்..

ம.தி.சுதா said...

சீபி 7 வது நகைச்சுவையை சொல்றேன்... அவரும் சீசனுக்கேற்றற் போல் நாம மீண் பதிவு இடுவது பொல இட வெளிக்கிட்டு விட்டாரா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்