Monday, December 05, 2011

புரட்சிப்பதிவருடன் ஒரு நேர் காணல் - காமெடி கும்மி கலாட்டா

சார்.. இங்கே புரட்சிப்பதிவர் எங்கே குடி இருக்கார்? நான் அவரை பார்க்கனும்... 

அதோ நேரா போனா ஒரு காஃபி கஃபே வரும் பாருங்க.. அந்த கடைக்கு எதிர்ல தான் குடி இருக்கார்..

சபாஷ், பலே ,காபி பேஸ்ட்டுக்கு எதிரானவர்ங்கறதால காஃபி ஷாப்க்கு எதிர்லயே குடி இருக்கார் போல..

அக்கா, வணக்கம்க்கா ..அண்ணன் இருக்காருங்களா?

அவர் தூங்கிட்டு இருக்காருப்பா.. 

என்னது? தூங்கறாரா? அவர் ஒரு விழிப்புணர்வுப்பதிவர் ஆச்சே? எதுக்கு தூங்கறாரு?எழுப்புங்க.. 

தம்பி.. மதியாதார் தலை வாசல் மிதியாதேன்னு பழமொழி தெரியுமில்ல.. என் வீட்டுக்கு எதுக்கு வந்தே?

அண்ணே, அக்காவை கேட்டுப்பாருங்க.. நான் வாசப்படியை மிதிக்கலை, தாண்டித்தான் வந்தேன்.. 

சரி சொல்லு இன்னா மேட்டரு?

நீங்க தான்னே சொல்லனும்.. உங்க பிளாக்ல உங்க ஃபோட்டோ பார்த்தேன், சூப்பரா இருக்குண்ணே.. அது உங்க 25 வயசுல எடுத்ததுங்களா?

ச்சே, ச்சே  அது என் சொந்த முகம் கிடையாது.. கூகுள் ல போய் காபி பண்ணி என் பிளாக்ல பேஸ்ட் பண்ணிக்கிட்டேன்.

அடடா.. என்னண்ணே.. ஓப்பனிங்க்லயே டக் அவுட் ஆகி சொதப்பறீங்க? நீங்கதான் காபி பேஸ்ட்க்கு எதிரானவர் ஆச்சே.. சொந்த முகத்தையும், உங்க ஃபோன் நெம்பர் , அட்ரஸ் எல்லாம் போடலாமே? அதானே வீரனுக்கு அழகு? இப்போ பாருங்க நான் ஒரு டம்மி பீசு.. நானே என் ஃபோட்டோ , ஃபோன் நெம்பர் எல்லாம் தில்லா போட்டிருக்கேன், நீங்க ஏண்ணே பம்பறீங்க? ஆமா, இதானே உங்க டைரி.. என்னமோ எழுதி இருக்கே?

அகர முகர எழுத்தெல்லாம் ஆதி பகவன்  முதற்றே உலகு-

இது திருக்குறள் ஆச்சே.. ஆல்ரெடி திருவள்ளுவர் எழுதிட்டாரே, நீங்க ஏன் மறுபடி அதை எழுதினீங்க?

லூஸ் ,மாதிரி பேசாதேப்பா.. நம்ம முன்னோர்கள் எழுதுன நல்ல விஷயங்கள் எல்லாருக்கும் போய்ச்சேர வேண்டாமா?

என்னண்ணே, உங்களுக்கு ஒரு நியாயம்  ஊருக்கு ஒரு நியாயம்.. வேடந்தாங்கல் கருணையும், கவிதை வீதி சவுந்தரையும் திட்டி  8 போஸ்ட் போட்டிருக்கீங்களே? அது ஏன்?

ஹி ஹி எல்லாம் ஒரு வயிற்றெரிச்சல் தான்.. ஈசியா ஹிட்ஸ் வாங்கறாங்க..மற்ற பதிவர்கள் எல்லாம் நல்ல போஸ்ட் எழுதியும் ஹிட் ஆக மாட்டேங்குது.. 

சரி... இதென்ன நோட்டு?

அதுவா? எங்க மேரேஜ்க்கு சொந்தக்காரங்க மொய் வெச்சாங்க இல்லையா அந்த நோட்டு, யார் யார் எவ்வளவு மொய் வெச்சாங்க?ன்னு கணக்கு.. நான் அவங்க வீட்ல விசேஷம் நடக்கறப்ப பதில் மொய் வைக்கனும் இல்லையா? அதுக்குதான்..

ஓஹோ.. இதே ஃபார்முலாவை அவங்க ஃபாலோ பண்ணுனா மட்டும் ஏன் திட்டறீங்க? பிளாக் உலகம் ல 10 பேர் பிளாக் போய் நாம கமெண்ட் போட்டாத்தான் அவங்க நம்ம பிளாக் வருவாங்க.. நாம ஓட்டு போட்டாத்தான் அவங்க ஓட்டு போடுவாங்க.. இதுல என்ன தப்பு கண்டு பிடிச்சீங்க?

அதில்லை, 1689 பேர் பிளாக் உலகத்துல இருக்காங்க, ஆனா இந்த 3 பேர் மட்டும் டாப் 20 ல வந்துடறாங்க, அதான் வயிற்றெரிச்சலா இருக்கு.. அதுவும் காபி பேஸ்ட் போஸ்ட்டா இருக்கு.. 

சரி, காபி பேஸ்ட் சரியா தப்பா?ங்கற விவாதம் அப்புறம் வெச்சுக்கலாம், உண்மைத்தமிழன் அண்ணன் கூட ஜூனியர் விகடன் போஸ்ட்டை ரெகுலரா போடறார்..  ஆரூர் மூனா செந்தில் கூட ஒரு போஸ்ட் சொந்த போஸ்ட், ஒரு போஸ்ட் காபி பேஸ்ட் போடறார்.. அவங்களை எல்லாம் எதுவுமே சொல்லாம ஏன் குறிப்பிட்ட இந்த 3 பேரை மட்டும் குறி வைக்கறீங்க?

நீ லூஸாப்பா.. அவங்க 2 பேரையும் பார்க்கவே பயமா இருக்கு.. எனக்கு பயந்த சுபாவம் வேற.. ஆனா கருண், சவுந்தர் எல்லாம் புள்ளப்பூச்சிங்க.. பயந்துக்குவாங்க.. அதான்

சரி.. நீங்க இதுவரை எத்தனை  போஸ்ட் போட்டிருக்கீங்க?

23

அதுல மக்கள்க்கு யூஸ் ஆகற மாதிரி போஸ்ட் எத்தனை?

ஹி ஹி  எல்லாமே அடுத்தவனை குறை சொல்லி போட்ட போஸ்ட் தான் 

சரி, என் போஸ்ட் இதுவரை எத்தனை தெரியுமா? 912.. அதுல ஆனந்த விகடன் , ஜூனியர் விகடன், அவள் விகடன்  காபி பேஸ்ட் பதிவு மொத்தம் 230.. மீதி எல்லாமே சொந்தப்பதிவுதான் ஜோக்ஸ், சினிமா விமர்சனம் , கட்டுரைன்னு போகுது..இதுல உங்களுக்கென்ன கஷ்டம்? சொல்லுங்க?

அதாவது ஒருத்தனே நெம்பர் ஒன்னா வர்றது எனக்குப்பிடிக்கலை... எல்லாருக்கும் வாய்ப்பு வேணும்.. 

அண்ணே, ஓட்டப்பந்தயத்துல முதலாவதா வரனும்னா முதல்ல ஓடி வர்றவனை விட வேகமா ஓடனும்.. அதை விட்டுட்டு அவன் காலை வாரக்கூடாது.. எங்களுக்கும் குடும்பம் இருக்கு, ஆஃபீஸ் வேலை இருக்கு.. எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு பிளாக் வேலையையும் பண்றோம்.. சும்மா திடீர்னு யாரும் ஜெயிக்க முடியாது.. இதுலயும் உழைப்பு இருக்கு.. 2010 ஜூலை 17 ல பிளாக் உலகத்துக்கு வந்தேன்.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு எழுதிட்டு இருக்கேன்.. அடுத்தவங்க வம்பு தும்புக்கு போறதில்லை.. நீங்க ஏண்ணே இப்படி இருக்கீங்க? ஏதாவது மன வியாதியா? டாக்டரை போய் பாருங்கண்ணே?

ஆங்க்.. ஒரு குறை கண்டு பிடிச்சுட்டேன்,,.. டைட்டில் ஏன் கிளாமரா வைக்கறே?இதுக்கு பதில் சொல்லு.. 

அண்ணே.. ஒரு சினிமாக்கு டைட்டில் எப்படி முக்கியமோ.. போஸ்டர் டிசைன் எப்படி முக்கியமோ அதே மாதிரி ஒரு பதிவுக்கு டைட்டில் ரொம்ப முக்கியம், மக்களை சுண்டி இழுக்கற மாதிரி டைட்டில் வைக்கனும்.. இது எல்லாம் பேசிக் லெசன்.. அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமாண்ணே. கருண், கவிதை வீதி சவுந்தர் 2 பேரும் ஆவரேஜ் பிளாக் ஹிட்ஸ் 1000 டூ 2000 தான், நீங்க அவங்களை தாக்கி போஸ்ட் போட்ட அன்னைக்கெல்லாம் 3000 ஹிட்ஸ் ஆகிடுச்சாம்.. 

அய்யய்யோ.. எனக்கு வயிறு எரியுதே.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் அவங்களை தாக்கியே இருக்க மாட்டேனே..

இன்னும் சொல்றேன் கேளுங்க . ஒரு பிரபல பதிவர் தன்னோட பஸ்ல என் போஸ்ட் லிங்க் குடுத்து எவ்வளவு மோசமா விமர்சனம் எழுதி இருக்கான் பாருங்க.. அப்டினு கமெண்ட் போட்டாரு.. உடனே அதுல அப்படி என்ன இருக்குன்னு பார்க்க அவரோட ஃபாலோயர்ஸ் 2000 பேரும் வந்து என் ஹிட்ஸ்ஸை ஏத்துனாங்க.. ரொம்ப நன்றிண்ணே அப்டின்னு நான் கமெண்ட் போட்டேன் , உடனே உங்களை மாதிரியே அவரும் பதறி அந்த லிங்க்கை அவர் பஸ்ல இருந்து தூக்கிட்டார்..

என் நல்ல எண்ணத்தை புரிஞ்சுக்காம பேசாதே.. நல்ல நல்ல பதிவுகள் அடையாளம் காணப்படாமலேயே இருக்கு.. உன்னை மாதிரி குப்பை ஆளுங்கதான் திரும்ப திரும்ப சூடான இடுகைல வர்றீங்க.. அதை தடுக்கனும்..

ரைட்டு.. அதுக்கு ஒரு ஐடியா இருக்கு.. உங்களூக்குன்னு ஒரு வாசகர் வட்டம் இருக்கு.. நீங்க நல்ல இடுகைகளை மக்களூக்கு அடையாளம் காட்டுங்க.. எதெல்லாம் நல்ல இடுகையோ அதுக்கு லிங்க் கொடுத்து வலைச்சரம் மாதிரி செயல்படுங்க, 4 பேருக்கு நல்லது நடக்கும், அவங்களூக்கும் ஹிட்ஸ் கிடைக்கும்..

சாரி , அது என் வேலை  இல்லை.. எனக்கு யாரையாவது ஏதாவது குறை சொல்லிட்டே இருக்கனும்.. இப்போ உன் பிளாக்ல சினிமா விமர்சனம் போடறப்ப எதுக்கு கூகுள்ல போய் நடிகைங்க ஃபோட்டோவை போடறே?


அண்ணே, இதுக்காக நான் சென்னையோ, மும்பையோ  போயா ஃபோட்டோ எடுக்க முடியும்.. கூகுள்ல தான் எடுக்க முடியும்..


சரி.. எல்லாரும் வாரம் 5 போஸ்ட்  போடறாங்க, நீ மட்டும் ஏன் டெயிலி 2 போஸ்ட் போடறே? உன்னால பல தரமான பதிவர்கள் வெறுத்துப்போய் பிளாக் எழுதறதையே விட்டுட்டாங்க..

அண்ணே.. லூஸ் மாதிரி பேசாதீங்க.. ராமநாராயணன் மாசம் ஒரு  படம் எடுத்து ரிலீஸ் பண்றதால ஷங்கரோ, மணி ரத்னமோ சினி ஃபீல்டை விட்டு போய்ட்டாங்களா? அவங்கவங்களுக்கு உள்ள மரியாதை அப்படியே தான் இருக்கும்.. டெயிலி 2 போஸ்ட் போடறதால ஒருத்தன் நல்ல பதிவர்னு பேர் வாங்கிட முடியாது.. குறிஞ்சி மலர் போல் அரிதாக பதிவு போடுவதால் ஒரு நல்ல பதிவரை யாரும் குறை சொல்லவும் முடியாது

ஓஹோ, இத்தனை வியாக்கியானம் பேசறியே.. அப்புறம் ஏன் தமிழ்மணம் ரேங்கிங்க் வேணும்னு அலையறே.. அதை விட்டுட்டு நீ பாட்டுக்கு இருந்தா எனக்கு வயிறு எரியாதுல்ல?


அண்ணே.. ஸ்கூல்ல படிக்கறப்பதான் ஒழுங்கா ரேங்க் எடுக்க முடியல.. இங்கயாவது எடுக்கலாம்னுதான் , இதெல்லாம் ஒரு ஜாலிதான்.. இதுனால யாருக்கும் 10 பைசா லாபம் இல்ல.. அப்படி ஏதாவது வருமானம் இருந்தாலாவது உங்க குய்யோ முறையோ அரற்றலுக்கு ஒரு  காரணம் சொல்லலாம்..

சரி.. என் பிளாக்ல ஒரு எதிர் பதிவு போடறேன்.. அங்கே சந்திக்கலாம்..

59 comments:

rajamelaiyur said...

என்ன நடக்குது இங்கே

பால கணேஷ் said...

எக்ஸலண்ட் செந்தில்! உங்க பக்கத்து நியாயங்களைச் சொல்லி அழகா கும்மியிருக்கீங்க... சூப்பரு...

rajamelaiyur said...

உங்களையும் கடுப்பு எத்திடங்களா ?

Unknown said...

பயபுள்ள இதுக்கு பதில் சொல்லுமா...
சொன்னா ஆம்பளை இல்லையினா?
ஆருர் மூனா செந்திலை பார்த்தா பயமா இருக்கா...நீங்களும் நல்லா பெருசா ...மீசை வெச்சுக்குங்க..ஹஹஹ

Unknown said...

அடங்கொன்னியா கட்சீல சிங்கம் களம் இறங்கிடுச்சா!

rajamelaiyur said...

ஆயிரம்( களவாணிகள் ) கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை

நிரூபன் said...

வணக்கம் பாஸ்..

காமெடியில பின்னியிருக்கிறீங்க.

ரொம்ப சூப்பரா ஒவ்வோர் கேள்விக்கும் ஒவ்வோர் விளக்கம்!

rajamelaiyur said...

யாரு அந்த டம்மி பீசு ..?

கும்மாச்சி said...

சி.பி. நீங்களும் இந்த ஜோதியில ஐக்கியம் ஆகிட்டிங்களா?

காட்டான் said...

அட சிபியுமா?
ஹி ஹி நீங்க சொல்லுறது உண்மைதான் மாப்பிள.. கவிதை வீதி அவரை பற்றி எழுதினா பிறகுதான் நான் முதல் முதலா அந்த பிளாக்குக்கு போனேன்... உங்களுக்கு அவர் விளம்பரம் செய்கிறார் விட்டு தள்ளுங்க...

Anonymous said...

ஹா ஹா

MANO நாஞ்சில் மனோ said...

நாங்க டைட்டில் இப்பிடி கூட வைப்போம்...

"அது" இருந்தாதான் "இது" பண்ண முடியும்...

"இது" இருந்தாதான் "அது" பண்ண முடியும்...

ஹி ஹி நான் சொன்னது எண்ணெய் மற்றும் பப்படத்தை ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே என்ன பயங்கரமா அமைதியா பொங்கு பொங்குன்னு பொங்குறியே ஹி ஹி..

MANO நாஞ்சில் மனோ said...

இனி என்னெல்லாம் நடக்கப்போகுதோ, எலேய் விக்கி அருவாளை எடுத்து ஒளிச்சி வையிலேய் மக்கா...

Unknown said...

என்ரா இது என்னைக்கும் இல்லாம இந்த பய இப்படி பொங்கி இருக்கானே!..இன்னும் என்னென்னெல்லாம் நடக்கப்போகுதோ....சண்டை வைடிங்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இப்படியும் பதிவு, எப்படி?
செம வாரல்.

முத்தரசு said...

இப்பவரைக்கும் நல்லாதாம்ல போச்சி - என்னாச்சி ஏதாச்சி ஒரு மண்ணும் புரியலையே..

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா.பாஸ் நெத்தியடி
உங்கள் விளக்கங்கள் அருமை.....

சக்தி கல்வி மையம் said...

மாப்ள எதுக்கு இதெல்லாம், நான்கூட அந்தப் பதிவரைப் பற்றி எதிர் பதிவு போடலாம்ன்னு இருந்தேன். ஆனா பதிவுலகில் நம் நலம் விரும்பிகள், போட வேணாம்ன்னு சொல்லிட்டாங்க, நான் சொல்லியும் கேட்காம சௌந்தர் போட்டார், இப்ப நீங்களுமா?

Unknown said...

@MANO நாஞ்சில் மனோ
அண்ணாச்சி..அருவா எதுக்கு விக்கியை ரிவால்வரை எடுத்து வைக்க சொல்லுங்க புரட்சியா சண்டை போடலாம்...

ப.கந்தசாமி said...

என்ன சிபி, என்னை ஒண்ணும் கலாய்க்கிலியே?

Unknown said...

அன்பரே!
வேடந்தங்கல் சொன்ன
கருத்தே என் கருத்தும் ஆகும்.
விட்டுத் தள்ளுங்கள்! தானே அடங்கி
விடும்.


புலவர் சா இராமாநுசம்

Mohamed Faaique said...

பிரிச்சு மேஞ்சுட்டீங்க பாஸ்...
பதிவு செம இண்ட்ரஸ்ட்...

நாய் நக்ஸ் said...

ஆகா ஆகா ...இதை தான் எதிர்பார்த்தேன் ....
வாங்க அடிச்சி விளையாடலாம்....
வாப்பா புரட்சிகார----நீ போஸ்ட் போட்ட பிறகுதான் ....
நான் சொம்பு-ஐ தூக்கிகிட்டு வரணும்....

இப்படிக்கு,,,

பஞ்சாயத்து தலைவர்கள்....
விக்கி,,
மனோ,,,
நாய் நக்ஸ்,,,,

(ஒரு விளம்பரம் தான்..ஹி ஹி )

Admin said...

இந்த சூழ்நிலையில் தேவையான பதிவு தான்..

Admin said...

இந்த சூழ்நிலையில் தேவையான பதிவு தான்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்தரப்பு நியாயங்கள்...


இந்த பதிவுலகத்தில் ஆயிரக்கணக்கான பதிவர்கள் இருக்கிறார்கள். இதுவரையில் யாரையும் தரக்குறைவாகவே மற்றப்பதிவர்களை விமர்சித்தோ, பிரபதிவுக்கு சென்று குறைச் சொல்லியோ, வரம்புகள் மீறியோ நடந்ததில்லை.

தொடர்ந்து நாங்கள் வஞ்சிக்கப்படுவதில் விளைவுதான் இந்த பதிவுகள். தவறு என்று சொல்வதற்கும, அதை சுட்டிக்காட்டுவதற்கும் ஒரு பதிவு போதும் அதற்காக 10 பதிவுகளா போடுவார்கள்.

யாருடைய மனதையும் எந்த ஒரு சகபதிவரையும் தாக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது.

ஆனால் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லை இருக்கிறது.

இங்க இது வேண்டாம் என சொல்லும் எந்த ஒரு பதிவரும் எங்களுக்கு எதிராக பதிவிடும்பேர்து வாய் மூடிக்கொண்டிருந்தது ஏன் என்று எங்களுக்கு தெரியவில்லை.

தலைப்பு, பதிவின்கரு, பதிவின் போக்கு போன்றவற்றை மற்றவரின் நிர்பந்தத்திற்காக எங்களது சுயமரியாதையை விட்டு நாங்கள் செயல்பட எங்கள் தன்மானம் தடுக்கிறது.

தமிழ்மணம் என்பது எங்களது கட்டுப்பாட்டில் இருப்பது அல்ல. ரேங்க் போன்றவற்றிலும் எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை. அப்படியிருக்க டாப் 20 வருகிறார்கள் என்றால் ஏதோ அதில் எங்களது உழைப்பு இல்லாமல் வந்துவிடுவதில்லை.

இந்த பதிவுலகில் வாழ்வதற்க்கு எங்கள் தன்மானத்தையும் சுயமரியதையும் விட்டால் தான் முடியும் என்றால் அப்டியொரு பதிவுலமே எங்களுக்கு வேண்டாம்.

தனிமனித சுதந்திரம் பறிக்கப்படும்போது பாமரர்களே கேள்வி கேட்கும்போது நாம் படித்தவர்கள். அமைதியா இருந்தால் அதை விட அசிங்க வேறு ஏதிருக்கிறது.

ராஜி said...

ஓட்டு போட்டாச்சு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இப்போதாவது தெளிந்த சிபிக்கு என் வாழ்த்துக்கள்...


இது திருப்பி அடிக்கும் முயற்சி அல்ல தொடர்ந்து தாக்கப்டுவோரின் எதிர்குரல்.

முன்பனிக்காலம் said...

கொன்னுட்டீங்க!

Rathnavel Natarajan said...

அருமை செந்தில்குமார்.
வாழ்த்துகள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மலையே அசைஞ்சிடுச்சே? கருனுடைய கருத்தே என்னுடையதும்....!

Anonymous said...

Cool down...

உங்களுக்கு யாருடைய அத்தாட்சியும் தேவை இல்லை...தொடர்ந்து கலக்குங்கள்...வாழ்த்துக்கள் சி பி...

Unknown said...

பாருடா அட்ரா சக்கைக்கு வர்ற கோவத்த!!!
அப்ரம் நானும் ஒரு பயலுக்கும் ஓட்டு போடுறது கிடையாது..எனக்கும் ஒரு பயலும் ஓட்டுப்போடுறது இல்ல:)

ஹேமா said...

சிபி...இப்போ குளிர்காலம்தானே !

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நான் சும்மா ஜாலி க்காக தான் தமிழ் மணம் ரேட்டிங் என் ப்ளாக் ல போட்டு இருக்கேன். 40 ரேங்க் குறைக்க நாலைந்து நாள் பாடுபட வேண்டி இருக்குது. அதே ரெண்டு நாள் லீவு விட்டா கிச்னு ஏறிருது தமிழ் மணம் ரேங்க் 1 என்பது சாதாரண விஷயம் இல்லை. எப்போவும் போல கூல்லாவே இருக்கலாமே why tension ?

Yoga.S. said...

வணக்கமுங்க!தேவையில்லாம யார் வம்புக்கும் போக மாட்டீங்கன்னு தெரியும்.இந்த அளவுக்குப் பொங்கியி ருக்கீங்கன்னா....................................!இத்தோட விட்டுத் தள்ளுங்க.

கோகுல் said...

தல இது என்ன பொங்கலு?

கோகுல் said...

நாம யாரு வம்புக்கும் போறதில்ல.யாரு தும்புக்கும் போறதில்ல.ஆனா நம்ம சும்மா சீண்டினா சும்மா விடக்கூடாதுடான்.

ஆனா உங்க பொங்கலும் நையாண்டி பொங்கல்தான்.அதான் தல.

கடம்பவன குயில் said...

வெரி நைஸ். எதிராளி ஹார்ட்டை ஹர்ட் பண்ணாமல் அதே சமயம் நக்கலும் நையாண்டியுடன் பதிலடி கொடுக்க உங்களால் மட்டும்தான் முடிகிறது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது. இது உண்மைதான் போல.

கடம்பவன குயில் said...

பதிலடி கொடுக்கிறேன், எதிர்பதிவு பேடுறேன்னு தேவையில்லாமல் அந்த ஜீரோவை ஹீரோவாக்கிவிட்டுடாதீங்க சிபி சார். உங்க வேலையை சரியாய் செய்துகொண்டே போங்கள்.

Philosophy Prabhakaran said...

சிங்கம் களத்துல இறங்கிடுச்சு...

Philosophy Prabhakaran said...

// சொந்த முகத்தையும், உங்க ஃபோன் நெம்பர் , அட்ரஸ் எல்லாம் போடலாமே? அதானே வீரனுக்கு அழகு? //

உங்க குருநாதர் ஜாக்கி சொல்லிக்கொடுத்த மாதிரியே பேசுறீங்க...

Philosophy Prabhakaran said...

அண்ணன் உண்மைத்தமிழனையும், ஆரூர் மூனா செந்திலையும் தாக்கி பதிவெழுத சொல்றாரு... நோட் பண்ணுங்கப்பா...

Philosophy Prabhakaran said...

@ கவிதை வீதி செளந்தர்
தல... நீங்க யாரையுமே கிள்ளியதில்லைன்னு சொல்றீங்க... சாம் மார்த்தாண்டன் ப்ளாக்குல நீங்க போட்ட பின்னூட்டங்களை screenshot எடுத்து காட்டட்டுமா...??? பதிவுலகம் உங்களை உற்று நோக்குகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்...

உங்களுடைய தனி மனித சுதந்திரம் எங்களுக்கு புரிகிறது... அதே சமயம் பதிவின் தலைப்பு, கரு, போக்கு போன்ற விஷயங்களில் உங்கள் சுயமரியாதை, தன்மானம் ஆகியவை மெய்சிலிர்க்க வைக்கிறது...

Philosophy Prabhakaran said...

ஆங்... சொல்ல மறந்துட்டேனே சாட்டையடி பதிவு...

சுதா SJ said...

அண்ணே.... இது யாருக்குன்னு புரியல்லையே..... ( நம்ம அறிவு அவ்ளோ சின்னனா??? அவ்வ)

சுதா SJ said...

ஆனா காமெடி சீரியஸ் என்று கலந்து கட்டி அடிச்சு இருக்கீங்க... சூப்பர்

காங்கேயம் P.நந்தகுமார் said...

இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்பா

குட்டித் தம்பி said...

நானும் சிரிச்சேன் தெரியுமா?? (மை 1 கொமண்ட்ஸ் உங்களுக்குதான்னே....)

Unknown said...

c.p annanukku kovam vandhuduchudoi.

வைகை said...

ஒருவரின் மூக்கை தொடாதவரை யாரும் யாரையும் கேள்வி கேக்கும் உரிமை இல்லை... தனிமனித சுதந்திரமும் உரிமையையும் அனைவருக்கும் பொதுவானதுதான்.. புடிச்சா படிக்க போறோம்.. ஏதாவது சொல்ல நினைச்சா சொல்ல போறோம்... பதிவுலகத்தை எந்த ஒரு தனி மனிதனும் தூக்கி நிறுத்தவும் முடியாது தூக்கி எறியவும் முடியாது :-)

Unknown said...

விடுங்க பாஸ்! கண்டுக்காம கலக்குங்க! :-)

சீனுவாசன்.கு said...

புரட்சிக்காரா சும்மா உடாதா!உன்னையவே வம்புக்கு இழுக்குறாரு பாரு!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, செம தாக்கு பதிவு.... கலக்குங்க

சசிகுமார் said...

மாப்ள இப்ப தான் பாக்குறேன் இந்த பதிவை.... குனிய குனிய குட்டும் காலம் இது... காந்தி சொன்னது போல ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டாதீங்க அதிலும் அடிசுடுவாங்க..... திருப்பி கேட்டா தான் பயம் வரும்..... சூப்பர் மாப்ள... நேத்தே பார்த்து இருந்தால் கும்மி இருக்காலாம்... மிஸ் ஆகிடுச்சி....

சாம் ஆண்டர்சன் said...

ஜால்ரா சத்தம் இன்னிக்கு ரொம்ப அதிகமா இருக்கு

சாம் ஆண்டர்சன் said...

கவிதா விதி சந்தர் பாஸ் நீங்க எல்லாம் என்ன வாத்தியார் Notificationக்கும் Spamக்கும் வித்தியாசம் தெரியல.ஆமா உங்க கம்பியூட்டர் அப்படியே நின்னுட்டதா சொல்லிருந்திங்க ரொம்ப மரியாத தெரிஞ்ச கம்பியூட்டர் போல இப்போவாவது உக்காந்துருச்சா

துரைடேனியல் said...

SIBI!
Kalakkitteenga ponga. Summa Nachunu irukku.
TM 27.