Saturday, December 03, 2011

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் -ஹை க்ளாஸ் ஃபிகர் ( ஜோக்ஸ்)

رقص سنتي


1. டைரக்டர் சார் , ஹீரோ , ஹீரோயின் எல்லோருமே 16 ஆம் வாய்ப்பாடு ஒப்பிக்கறாங்களே , ஏன்?

இது ஒரு மல்ட்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே--ன்னு சொன்னேனே? அதான் மல்ட்டிப்ளிகேஷன் மேட்டர் வருது... 

--------------------------------------

2. சார் , உங்க பட  ஹீரோயினுக்கு ஏன் நடிப்பே வர்லை?

என்னைக்கேட்டா? அதை அவங்க கிட்டே தான் கேட்கணும்..

-------------------------------------------

3. படத்தின் ஆரம்பக்கட்ட காட்சியை காணத்தவறாதீர்கள் -னு விளம்பரம் பண்றீங்களே,, எதுக்கு?

அப்போதானே டைட்டில்ல என் பேரு வருது?

-------------------------------------------

4. படத்துல செகண்ட் ஆஃப் ரொம்ப ஸ்லோவா போகுது சார்..

தியேட்டர் ஆபரேட்டர்கிட்டே சொல்லி இடைவேளைக்குப்பிறகு வேகமா ஓட்ட சொல்லவா?

-----------------------------------------

5. என் படத்துல 3 சூப்பர் ஹிட் பாட்டு இருக்கு.. அதுக்காகவே படம் ஓடிடாது?

லூஸா சார் நீங்க? யூ டியூப்லயே அதை நாங்க பார்த்துக்க மாட்டோமா?

----------------------------------------


Excellent Weekly Shots pictures
سيل

6. டைரக்டர் சார் , உங்க சம்சாரத்துக்கு ஏன் மொட்டை போட்டீங்க?

இல்லையே?

டைட்டில்ல தயாரிப்பு -னு உங்க சம்சாரம் பேருதானே வந்தது?

---------------------------------------------------

7. மேடம் , தமிழ்க்காலாச்சாரத்துக்கு பங்கம் விளைவிக்கற மாதிரி இந்தப்படத்துல நடிச்சிருக்கீங்களே , ஏன்?


அப்டியா? கலாச்சாரம்னா என்ன?

----------------------------------------------------------

8. போராளி பாண்டி-ன்னு தலைவர் பட்டப்பேரு வெச்சுக்கிட்டாரே, ஈழப்போராளியா?

அட நீங்க வேற.. போராளி படத்துல தலைவர் ஒரு சீன்ல வர்றாராம்.. 

----------------------------------------------------------------

9.  சி.பி ஐ இவ்ளவ் கெடுபிடியா இருப்பாங்கன்னு யாரும் எதிர்பார்க்கலை.. 

ஏன்?

டெயிலி ஆஃபீஸ்க்கு 2ஜி பஸ்ல போனவங்களைக்கூட விசாரிக்குதே?

------------------------------------------

10. டாக்டர் .. சீக்கிரம் என்னை டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. நான் வாயைத்திறந்தா பல பேரு கேஸ்ல மாட்டுவாங்க..

டோண்ட் ஒர்ரி.. ஆபரேஷனுக்குப்பிறகு நீங்க கண்ணையே திறக்க மாட்டீங்க.. 

------------------------------------------

بدون شرح

11.  அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

ஓ +VE  ரத்தம் எடுக்கனும், இந்தாங்க ஏ டி எம் கார்டு , போய் எடுத்துட்டு வாங்கங்கறாரே?

-------------------------------------------

12.  டாக்டர்.. எனக்கு நாளம் இல்லா சுரப்பிகள் ஃபெயிலியர் ஆகிடுச்சு..... 

சுத்தம்.. நலம் இல்லா சுரப்பிகளா.. எல்லாமே  ? அவ்வ்வ்

---------------------------------------------------

13.  ஈரோடு ரயில்வே ரிசர்வேஷன் கவுண்ட்டர்ல என்ன கலாட்டா?

லோயர் பர்த் கிடைச்ச பொண்ணு “ நான் ஹை கிளாஸ் ஃபிகர்.. அப்பர் பர்த் -தான் வேணும்” -னு கேட்குதாம்..

--------------------------------------------------

14.  டாக்டர்.. கை முறிஞ்சிடுச்சு-னு மாவுக்கட்டு போட்ட பேஷண்ட்க்கு இப்போ இடுப்பு முறிஞ்சிடுச்சு

அடடா... மாவு கிராக்கி இப்போ சாவு கிராக்கி ஆகிடுச்சா?

-------------------------------------------------------

15. தலைவர் அரிச்சந்திரனோட கொள்ளுப்பேரன் போல.. 

ஏன்?

தனக்குப்பொய்யே பிடிக்காதுங்கறதுனாலதான் டிரைவிங்க் (LIE )லை சென்ஸ் கூட எடுக்கலைன்னு சொல்லி சமாளிக்கறாரே?

-------------------------------------------------


بدون شرح

27 comments:

ராஜி said...

Erode ku mudhal varugai

chinnapiyan said...

ரசித்தேன்.நகைச்சுவை துணுக்குகளும் , தேர்ந்தெடுத்த புகை படங்களும் அருமை.

Unknown said...

சனி நீராடு !

ராஜி said...

20/20

முத்தரசு said...

கலக்கல் நகைச்சுவையுடன் அசத்தல் படங்கள்

ராஜி said...

20/20 cricket match pola unga tweets sema viruviruppu CP sir.

சசிகுமார் said...

சூப்பர் மாப்ள....

Unknown said...

லெல்லுக்கு
நான்
லோலாயத்திக்கு
என் பதிவு
படிப்பதற்க்கு
நீ...
சிரிப்பதற்க்கு
மக்கள்
பிகருக்கு
கோவை
டுவிட்டுக்கு
சிபி

அய்யா...அய்யா...அனைத்து டுவிட்டுகளும் எனக்கா...

வெளங்காதவன்™ said...

:)

arul said...

nice

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்தும் அசத்தல...

காங்கேயம் P.நந்தகுமார் said...

காமெடி அசத்தல்

Yoga.S. said...

சுமார்!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கட்சி படம் வௌவாலா ? அது கூட உங்க ட்வீட்ல சொக்கி போய் நிக்குது

MANO நாஞ்சில் மனோ said...

குருவி போட்டோ சூப்பர் அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

டைரக்டர் போண்டாட்டிகளுக்கும் மொட்டை போட ஆரம்பிச்சாச்சா ம்ஹும்.

MANO நாஞ்சில் மனோ said...

வாட் இஸ் த மீனிங் ஆஃப் கலாச்சாரம்...ஹி ஹி...

rajamelaiyur said...

கலக்கல் ...கலக்கல் ...கலக்கல் ...கலக்கல் ...

rajamelaiyur said...

இன்று ...

நாஞ்சில் மனோ நேர்மையானவரா? இல்லையா ?

ஹேமா said...

படங்கள் நாலும் ஒன்றுக்கொன்று மிஞ்சுகிறது சிபி !

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா..ஹா...

Ramya Parasuram said...

/படங்கள் நாலும் ஒன்றுக்கொன்று மிஞ்சுகிறது சிபி !/
இப்படங்கல நேரே http://www.asriran.com வெப்சைட்டிலிருந்து திருடியிருக்கார்.தூ! இது வெல்லாம் பொழைப்பு. திருட்டுக்கு பாராட்டு வேர

குறையொன்றுமில்லை. said...

கலக்கல் காமெடிகள்.

சென்னை பித்தன் said...

மல்டிலேயர் ஸ்க்ரீன் ப்ளே என்றால் என்ன?

Admin said...

நகைச்சுவையில் நனைந்தேன்..

கடம்பவன குயில் said...

பரவாயில்லை. சிரிப்பு வர மாதிரிதான் தெரியுது. அதுக்காக 20/20 எல்லாம் தரமாதிரி ஃபர்பெக்ட் ஆக இல்ல.

ஃபிகரு, கில்மா இந்த வார்த்தைகளெல்லாம் இல்லாம ஒரு பதிவாவது எழுதுவீங்கன்ன நானும் பார்த்துக்கிட்டிருக்கேன்...ம்ஹூம்...

கடம்பவன குயில் said...

ஏதோ இப்போதான் நல்ல நல்ல படங்களாக கூகுள் செர்ச்சிலிருந்து எடுத்து போடுறீங்கன்னு பார்த்தோம். அதுவும் தப்புன்னு சிலர் கொடிபிடிக்கறாங்களே...கூகுள் வாய்ப்பை பயன்படுத்தக்கூடாதென்றால்...அடுத்து நீங்க எழுதப்போற ஒஸ்தி பட விமர்சனத்திற்கு மல்லிகா ஷெராவத்தின் ஸ்டில்ஸை நேரே மும்பை போய் உங்க சொந்த காமிராவில் கிளிக்கித்தான் போடணுமா?? அய்யோ ராமா ...பரசுராமா...மும்பைக்கு இப்பவே டிக்கட் புக் பண்ணிவையுங்க..