Monday, December 05, 2011

பெண்களும், பொசஸிவ்னெசும் ( ஜோக்ஸ்)

1.அளவுக்கு மீறி அணுவளவும் கூடப் பேசினால் பெண்களுக்குப் பிடிப்பதில்லையாமே?

அப்டி இல்ல.. அனு கூட பேசினா பிடிக்காது, பொசசிவ்னெஸ்

-------------------------------

2. அளவுக்கு மீறிப் பேசினால் பெண்களுக்குப் பிடிப்பதில்லையாமே?

சொல்றதை மட்டும் கேட்டுக்கனும், எதிர்ப்பேச்சு பேசாம இருந்தா பிடிக்கும்

-------------------------------------

3. கீச்சுகளை கோர்ப்பதற்கான தளம் எதுவென சொல்லமுடியுமா? ஏன்?

இன்னும் என்ன கோர்த்து விடப்போறீங்க? அவ்வ்வ்

------------------------------------

4.வர்மக்கலையைப்பற்றி ஒரு லூசுப்பையன் பார்வைல கதை சொல்லி இருக்கீங்களே? என்ன டைட்டில்?பேக்கு வர்மம்

--------------------------------------------

5. ஹர்பஜன்சிங்க் - சித்தி ராதிகா என்ன ஒற்றுமை?

அவர் சரத்பவார்க்கு அறை விட்டவரு, இவர் சரத் குமார்க்கு ... ஹி ஹி

--------------------------------

6. படத்தோட ஹீரோவை ஏன் பாட்டெழுத சொல்றீங்க? 

இல்லைன்னா அவர் ஹீரோயின் கூட கடலை போட்டுட்டு இருக்காரே?

-----------------------------------

7. உங்க படத்தை ஏன் வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்றீங்க?  

சனி, ஞாயிறு 2 நாள் லீவ் வருதே, அந்த அளவாவது ஓடட்டும்னுதான்

-----------------------------------

8. என் சம்சாரம் கிழிச்ச கோட்டை  நான் தாண்டவே மாட்டேன்..

ஏன்?


  தாண்டினா அப்புறம் அவ ருத்ர தாண்டவம் ஆடிடுவா

-----------------------------------------

9. ஸ்வீட்ஸ்டால்காரர் சினிமா பைத்தியமாம்.. 

அதுக்காக அமலா பால் கோவா செண்ட்டர்னு கடைக்கு பேர் வைக்கனுமா?

--------------------------------------

10. கோவிலில் எப்போது ஃபிகர்  உள்ளே நுழைந்ததோ அப்போவே  என் பக்தி  வெளியே போய்விட்டது

----------------------------------

11. ஒரு திருமணம்  உங்க லைஃபையே மாத்திடும்.. ரெண்டு திருமணம்  உங்க ஒயிஃபையே மாத்திடும்

-----------------------------------

12. இளவரசர் ஏன் சிங்கத்தை கட்டிப்பிடிச்சு போஸ் தர்றார்?

அரியணை ஆசை வந்ததை சிம்பாலிக்காக  அரியை ( சிங்கத்தை) அணைச்சு காட்றார்..

------------------------------------------------

13. பிரியாணில சரக்கு வாசம் அடிக்குதே?

டியர், நீ தானே கொஞ்சம் பட்டையை போடச்சொன்னே?

----------------------------------


14. பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும் சரித்திர வெற்றி பெறும்கறாரே? அது  கொடி காத்த திருப்பூர்க்குமரன் வரலாறா?


--------------------------------------


15. கரண்ட் இருக்கும்போதே நெட்டில் பிட்டுப்படம் பார்த்துக்கொள் # நாங்களும் எதிர் ட்வீட் போடுமோமில்லை

---------------------------------

16. ஒன் சைடு லவ் தெரியும், அதென்ன ஒன் சைடு சைட்டு?  ஹி ஹி மாப்ளைக்கு ஒரு கண் தான் தெரியும் # டோரிக்கண்ணாயிரம்

------------------------------


17. மூணாறில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன் கடைசியாக கேட்ட பாடல் - ஒய் திஸ் கொலை வெறி கொலைவெறி டி?

---------------------------------


18. மாஸ் ஹீரோ , மாஸ்க் ஹீரோ என்ன வித்தியாசம்? 

மாஸ் ஹீரோன்னா செட்டப்பை மட்டும் மாத்துவாரு, மாஸ்க் ஹீரோன்னா கெட்டப்பை மாத்துவாரு

---------------------------------------


19. கூட்டுக்குடித்தன தம்பதிகள் கூடலுக்கான அழைப்பிற்கு சங்கேத வார்த்தைகளை பரிமாறிக்கொள்வதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள் # அவதானிப்பு

---------------------------------

20. நான் வாயைத் திறந்தால் பலர் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் - ஆ ராசா #  என் மனசை திறந்தா பலரும் காம்ப்ரமைஸ்க்கு வர வேண்டி இருக்கும் - சோனா 

--------------------------------

21.எனக்குப் பிடிச்ச கிளாமர் நடிகை நான்தான்! - நமிதா # எனக்குப்பிடிச்ச சிறந்த முதல்வர் நான் தான் - கலைஞர்


----------------------------------------

22. சென்னை வருகிறார் கனிமொழி: பலமான வரவேற்பு காத்திருக்கிறது # சென்னை வரும் வெண்ணையே!195 நாட்கள் ஜெயிலில் களி தின்னியே! ஊழல் அன்னையே!

---------------------------------------

23. பார் இருட்டா இருந்தா அது சாதா டாஸ்மாக், பிரைட்டா  ஒரு டியூப்லைட் எரிஞ்சா அது எலைட் ஒயின் ஷாப் ?

--------------------------------

24. கேரளாவுக்கு புத்தி கூறும்படி பிரதமருக்கு ஜெ வேண்டுகோள்  # அவருக்கே புத்திமதி சொல்ல ஆயிரம் பேர் Qல, அவர் எங்கே அடுத்தவங்களுக்கு சொல்ல?

---------------------------------

25. வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்டால் நம் உடம்புக்கு நல்லது, வாழை இலையையே சாப்பிட்டால் வாழை விவசாயிக்கு நல்லது # கோக்குமாக்குதத்ஸ்

-----------------------------------

26. இப்பலாம் ஏன் படங்கள் வியாழக்கிழமை ரிலீஸ் பண்றாங்க?

வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனா 3 நாள் தான் ஓடுது, வியாழன் ரிலீஸ் செஞ்சா 4 நாள் ஓடுமே? அதான்

-------------------------------------

27. அங்காடித்தெரு அஞ்சலியின் நிஜ பெயர் பாலா திரிபுர சுந்தரி # பொது நலன் கருதி வெளியிடுவோர் ஜி கே கோவிந்தசாமி

-------------------------------------

28. பெண்கள் வாகனம் ஓட்டினால் கன்னித்தன்மை இழந்துவிடுவார்கள்- சவூதி அரேபியா மத சபை # புருஷன் பேரு மயில்வாகனமா இருக்கும்யா லூசே!

-----------------------------------------

29. ஒரு நல்ல படைப்பை உருவாக்குவது மிக எளிது,அந்த படைப்பை நம் பெற்றோர்களிடமும் காட்டி பெருமைப்படத்தக்கதாய் இருந்தால் போதும்---------------------------------------

30. ஒரு நகைச்சுவை எழுதுவது என்பது மிக எளிது.. யார் மனதையும் புண் படுத்தாமல் கவர வைப்பதே அரிதானது ,அழகானது

--------------------------------

31. உன்னை மறக்க நினைப்பதை மறந்துவிடுகிறேன் அடிக்கடி..


அப்டியா? உருப்பட்ட மாதிரிதான் - பாட புத்தகம்

------------------------------------------


32. யார் எந்த கருத்தை சொன்னாலும் அதை அப்படியே ஏத்துக்கிட்டா அவன் சுய புத்தி இல்லாதவன், எதையும் ஏத்துக்கலைன்னா அவன் சொல்புத்தி இல்லாதவன்

----------------------------------

33. 24 மணிநேரமும் மக்களுக்காக யோசிக்கிற ஒரே தலைவர் கலைஞர் - குஷ்பூ # ஆமா, மேடம் , பல மக்களைப்பெற்ற மகராசர் ஆச்சே?

------------------------------------

34. ஆள்மாறாட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் 300 கேள்விகள்! # கடைசிக் கேள்வி! , XQS மீ! நீங்க கல்யாணசுந்தரம்தானே?! ( ப .பி)

--------------------------------------------

35. சமையல் கலையின் வெற்றி என்பது நாக்கின் துணை இல்லாமல் நாசியின் மூலம் வாசம் நுகர்ந்தே ருசியின் தரத்தை உணர்வதே

--------------------------------------


24 comments:

Unknown said...

முதல் பெஞ்ச்...

Unknown said...

கோவிந்தசாமி யாரு அஞ்சலி புருசனா?
ஹஹஹஹ

முத்தரசு said...

எல்லாமே நச்

Mathuran said...

//கோவிலில் எப்போது ஃபிகர் உள்ளே நுழைந்ததோ அப்போவே என் பக்தி வெளியே போய்விட்டது //

ஹா ஹா இது நல்லா இருக்குதே

Mathuran said...

எல்லாமே சூப்பர் பாஸ்

Unknown said...

கலக்கல்! 22 நச்!

கோகுல் said...

இவ்வளவு நாளா மக்களை பற்றி எப்பவும் சிந்திப்பவர் கேப்டன் ன்னு தான் நினைச்சிருந்தேன்.மக்கலே.மக்கலே ன்னு அவரு தான சொல்லுறாரு.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

RAMA RAVI (RAMVI) said...

30-- ரொம்ப சரியாக சொல்லியிருக்கீங்க..

படமே இல்லாத பதிவா?என்னாச்சு உங்களுக்கு?

பாட்டு ரசிகன் said...

பதிவுலகில் ஒரு புரட்சி...

தெரிந்துக் கொள்ள இந்த பதிவை வாசியுங்கள்..

http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post.html

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, கடைசி தத்துவம் அனுபவமா?
அஞ்சலி பத்தி நாங்களும் ஒரு பதிவு போட்டிருகோம்ல....


வாசிக்க:
நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

K.s.s.Rajh said...

அனைத்தும் அருமை

Yoga.S. said...

வணக்கம்!அருமை.சூப்பர்.பிகருங்க ஸ்டில்லு போடாம பதிவு போட்ட சி.பி.செ. ஒழிக!!!!

ராஜி said...

அங்கா டித்தெரு அஞ்சலி பெயர் பாலா திரிபுரசுந்தரியா? இல்லை பால திரிபுரசுந்தரியா? டவுட்டு

ராஜி said...

இன்னிக்கு ஜோக்லாம் கலக்கல்

MANO நாஞ்சில் மனோ said...

சரத்குமாருக்கு பளார் விட்ட ராதிகா, இப்பிடி தலைப்பு போடுடா அண்ணா...

MANO நாஞ்சில் மனோ said...

ஒ அரியணை ஆசை வந்தா இப்பிடி சிங்கம் கூட போஸ் குடுத்தா போதுமா, தேர்தல்ல நிக்க வேண்டாமா, அண்ணே நீ சொல்லவே இல்லை...!!!

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாம் சூப்பரா இருக்கு அண்ணே...!!!

சசிகுமார் said...

நல்லா இருக்கு தல....

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கும்மாச்சி said...

எல்லாமே சூப்பர் செந்தில்.

rajamelaiyur said...

super

நிரூபன் said...

வழமை போலவே அசத்தலான ஜோக்ஸ் & ருவிட்ஸ் பாஸ்..

சென்னை பித்தன் said...

அசத்தல்.