Wednesday, December 07, 2011

டீன் ஏஜ் ஜோக்ஸ் - TEEN AGE JOKS

 
1.காலைல இருந்து கஷ்டப்பட்டு உங்களுக்கு பாடம் நடத்தி இருக்கேன்.. என்ன புரிஞ்சுது?

டீச்சர்.இஷ்டப்பட்டு பாடம் நடத்தலையா? அது ஏன்?

---------------------------------------

2. டியர். நம்ம காதல் ஒரு வெங்காயம் மதிரி..

என்ன உளர்றீங்க?

கட் பண்ணி பாரு.. கண்ல கண்ணீர் வரும் ..

-------------------------------------

3. சாமி!இப்படி ஒரு மொக்கை ஃபிகரை எனக்கு லவ்வரா தந்திருக்கியே.. ஏன்?

டேய்,நாயே, உண்டியல்ல நீ போட்ட எட்டணாக்கு இதுவே அதிகம்டா!

--------------------------------------

4. கண்ணாடியை நாம் கவனமாக கையாள்வது போல மற்றவர்கள் உணர்வுகளை கையாள வேண்டும், சிறு சொல் கூட கீறலை ஏற்படுத்தி விடும்

----------------------------------

5. ஆஃபீஸ்ல எவ்ளவ் பிரஷரை மேனேஜர் என்மேல இறக்கினாலும் நான் கண்டுக்க மாட்டேன்.. ஏன்னா அதிக அழுத்தம் குடுத்துத்தானே கரி வைரம் ஆக்கப்படுது.. ?

---------------------------------

6. கடவுளிடம் நான் கேட்டுப்பெற்ற வரங்கள் நிறைய! ஆனால் கேட்காமலேயே கிடைத்த வரம் நீ!! # SMS

-------------------------------

7. நமக்குக்கிடைக்கும் சந்தோஷங்களுக்கும், நமக்கு வரும் வலிகளுக்கும் நாமே பொறுப்பு

----------------------------

funny and beautiful species pictures1

8. காதல் என்பது ஒருவரை சந்திக்கும்போது வருவதை விட அவரைப்பற்றி நினைக்கும்போதே அதிகம் வருகிறது

---------------------------------

9. அன்பில் தன் அம்மாவுடன் போட்டி போடக்கூடிய தகுதி படைத்த பெண்ணையே ஆண் தன் துணையாக அடைய நினைக்கிறான்

--------------------------------

10. உனக்கு உரிமை இல்லாததை அடைய நினைக்காதே.. முயற்சிக்காதே! உனக்கு உரியதை விட்டுத்தராதே!

---------------------------------

11. ஒரு ஃபிகரை புரிஞ்சுக்கறதுங்கறது 2 KBPS ஸ்பீடுல 1 GB  ஃபைலை லோடு பண்றப்ப 95 % கம்ப்ளீட் ஆகறப்ப கரண்ட் போகுமே அது போல!

---------------------

12.உன்னை நம்பும் இதயத்தை விட அழகானது வேறு எதுவும் இல்லை

-----------------------------------

13. ஆணின் பலவீனம் பெண்ணின் தற்காலிக அழகை நிரந்தரம் என நம்புவது, பெண்ணின் பலவீனம் ஆணின் நிரந்தர அறிவை எதேச்சையானது என நினைப்பது

---------------------------------

14. நீ ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் மரணம் உன்னை விட்டு விலகுகிறது, என் சரணம் உன்னை நோக்கி வருகிறது

-------------------------------

15. நண்பனும், எதிரியும் நமக்குள்ளே. உன் மனதை நீ அடக்கினால் அது உன் நண்பன், அடக்காவிட்டால் அதுவே எதிரி

-----------------------------------

16. அத்தை பையனை மேரேஜ் பண்ணிக்கறதா சொன்னேன், அதிர்ச்சில மயக்கம் ஆகிட்டான்.


ஓஹோ மாமா ஸ்டேஜ்ல இருந்து கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டானா?


-------------------

17. பேங்க்ல ஒர்க் பண்ற பொண்ணைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன் .

ஓக்கே, குடும்ப”பாங்க்”கான பொண்ணா பார்த்துடலாம்

----------------
18. நம் இருவரில் பரஸ்பரம்  யார்  யார் மீது அதீத அன்பு வைத்திருக்கிறோம் என்று பொறாமை அற்ற போட்டி நிலவுகிறது

--------------19. பிளாக்கில் விசிட்டர்ஸ் டுடே ஜீரோ என காண்பித்தால் பிளாக் ஓனரே  அந்த பிளாக் பக்கம் போக வில்லை என்று அர்த்தம்


------------------------


20.  என் உள்ளக்காதலை அவ கிட்டே சொன்னேன், சாரி ஐ ஆம் ஆல்ரெடி மேரீடுன்னா..

அப்புறம்?


என் கள்ளக்காதலை சொன்னேன், ஓக்கேன்னுட்டா..

--------------------------

 21.  உன் வாசம் வீசும் கர்ச்சிப் வேணும் - கல்யாணத்துக்கு முன்

ஏண்டி, ஒழுங்கா ஒரு கர்ச்சீப்பைக்கூட  துவைக்க மாட்டே? -

(கல்யாணத்துக்குப்பின்)


---------------------------

22. பிளாக்கில் உருப்படியாக பதிவை ரெடி பண்ணாமல் வாசகரை மட்டும் ரெடி பண்ணினால் அவர் எதை படிப்பார்?


----------------------------

23. லொள்ளானவனிடம் ஐ லவ் யூ சொன்னாள். ஜொள்ளானவன் ஆனான். கல்யாணம் எப்போ? என்றாள்.தில்லானவன் அல்ல என்றான் # சே! இவனும் எஸ்கேப்பா?


-------------------------

24. சுவரில் ஆணி அடிக்க எதுக்கு உன் மனைவி கையை யூஸ் செஞ்சே?

அவ தான் நக ”சுத்தி”ன்னா


-------------------------------

25.  லாடம் கட்டுனா குதிரை வேகமா ஓடும், படப்பெட்டிக்கு லாடம் கட்டுனா டப்பா படம் பிரமாதமா ஓடிடுமா? டவுட்டு


------------------- 

26 அந்த லேடீஸ் காலேஜ்ல வாலிபால் டீம் 2 இருக்காமே?


ஆமா, வாலிப பால் டீம், வயசான பால் டீம் # ஜூனியர்  VS  சீனியர்

-----------------

27. XQS மீ சார், என் பிளாக் பக்கம் வந்துட்டுப்போக முடியுமா?

படிக்கற அளவு பிரமாதமா மேட்டர் இல்லையே ?

உங்களை யார் படிக்க சொன்னது? ஜஸ்ட் விசிட்

-------------------------


28. கலைஞர் அய்யா, எல்லாரும் கிண்டல் பண்றாங்க,இனியாவது ஊழல் பண்றதை நிறுத்துங்க.


எத்தனை பேர் கிண்டல் பண்ணினாலும் யாராலும் தடுக்க முடியாது.

-------------------------29 பெண்ணின் கஷ்டங்களை ஓரளவுக்காவது உணர ஆண் பெண்ணாக பிறப்பெடுக்க தேவை இல்லை, பெண் உடை அணிந்து ஒரு நாள் வீட்டில் உலாவந்தால் போதும்


------------------

30. வெய்யிலிலும், மழையிலும் எனக்கு உன் நினப்பு,ப்ளீஸ் திருடிட்டுப்போன குடையை மட்டும் திருப்பிக்குடுத்துடு #  SMS


---------------------

31. எதுவுமே சுலபம் இல்லைதான், ஆனால் எல்லாம் பாஸிபிள்தான் # தேவை முயற்சி

-----------------------

32  விக்ரமை காதலிக்கிறேன்! விஷாலை ரொம்ப பிடிக்கும்!! - ஸ்ரேயா # விக்ரம் தொழில் அதிபர் அல்ல,விஷால் எழில் அதிபர் அல்ல,அப்புறம் ஏன்?


---------------------------

33  ஐஸ்வர்யா தனுஷ்இயக்கும் முதல் படமான "3"-ல் இருந்து நடிகை அமலாபால் திடீரென நீக்கம் # முதல்ல பட டைட்டிலை மாத்துங்க. நாமம்தான் நினைவு வருது

--------------------------

34 அரவக்குறிச்சி திமுக., எம்.எல்.ஏ.,கைது:காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய விவகாரம் # அனுமதி கேட்டப்ப கொடுக்காம விட்டுட்டு!!

-------------------------------

35 . தனித்திருந்தேன்,பசித்திருந்தேன்,விழித்திருந்தேன். நீ வரவே இல்லை. # மீறி வந்தா செக்யூரிட்டிக்கு உங்கம்மாவையும் கூடவே கூட்டிட்டு வந்துடறே?

27 comments:

ராஜி said...

Mudhal varugai?

ராஜி said...

Irandaam varugai

மகேந்திரன் said...

அத்தனை துணுக்குகளும் கலக்கல்ஸ்....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இன்றைய சிந்தனை சிதறல்களில் பல வர்ணங்கள். ரசித்தேன்

Kanchana Radhakrishnan said...

கலக்கல்

கடம்பவன குயில் said...

ஒரே பதிவில் இத்தனை ட்விட்ஸ்னா எப்படி சிபி சார்??? 20 கொடுத்தால் போதுமானது. அதுவே அதிகம் தான். ரசிச்சது அத்தனையும் நினைவில் இருக்க வேண்டாமா???

கடம்பவன குயில் said...

so.........cute babies.

Anonymous said...

nice tweets.........

Unknown said...

என்னைபொறுத்தவரை 4 வது நச்!

RAMA RAVI (RAMVI) said...

எல்லாமே நன்றாக இருக்கு,குறிப்பாக 4,5,13,சிறப்பு.

vetha (kovaikkavi) said...

Arumai! Super! photoes all very fine....
Vetha. Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Mohamed Faaique said...

எல்லாம் நல்லாயிருக்கு..
11,21ம் செம....

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

நல்லா இருக்கீங்களா?
சின்னப் பையன் நான் உள்ளே வரலாமா?

ஹே...ஹே....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கலக்கல்.

நிரூபன் said...

சமயோசிதக் காமெடிகள், செண்டி மெண்ட் கலந்த காதல் ஜோக்ஸ், டீச்சரின் இஷ்டப்படாத பாடம் நடத்தல் பற்றிய கடிகள் என அனைத்துமே அருமை பாஸ்.!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

4, 5, 15, 31 மிக இரசித்தேன்.

சக்தி கல்வி மையம் said...

அசத்தலான நகைச்சுவை துணுக்குகள்..

காங்கேயம் P.நந்தகுமார் said...

செம கடி நக சுத்தி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் அசத்தல்...

Henry J said...

nice collections of Tamil SMS & Jokes... thanks dude


Life is beautiful, the way it is...

Why This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills

நாய் நக்ஸ் said...

Xqs me......
Enna thaney summa vanthuttu
poga kuppitteenga......
He...he.....

Aama nethikku pona mano-vai
kanume....
Enna aachi...?????

Unknown said...

XQS மீ சார், என் பிளாக் பக்கம் வந்துட்டுபோக முடியுமா?

படிக்கிற அளவு பிரமாதமா மேட்டர் இல்லையே?

கண்ணாடிய போட்டுட்டு படிங்க...

யோவ் லொல்லா....

பன்னிகுட்டியண்ணனும்....மலையாளியும்.....

சசிகுமார் said...

தேங்க்ஸ் அகைன்....

rajamelaiyur said...

/டியர். நம்ம காதல் ஒரு வெங்காயம் மதிரி..

என்ன உளர்றீங்க?

கட் பண்ணி பாரு.. கண்ல கண்ணீர் வரும் ..

//
படிக்கும் போதே கண்ணிற் வருது

rajamelaiyur said...

இன்று ....

NotePad ல விளையாடலாம் வாங்க.

Unknown said...

present sir