Tuesday, December 27, 2011

பதிவுலகை கலங்கடிக்கும் பாலிடிக்ஸ் - ஈரோடு பதிவர் சந்திப்பு பாகம் 3

 

15 பேருக்கு அவார்டு குடுத்ததும்  அவங்க கிளம்பிட்டாங்க .கில்மா படம் ஓடற சினிமா தியேட்டர்ல  பிட் ஓட்டிட்டு இடைவேளை விட்டதும் நம்ம ஆளுங்க இடத்தை காலி பண்ணுவாங்களே, அப்படி ஹால்ல பாதி பேரை காணோம்.சிறப்பு விருந்தினர் ,விழா ஏற்பாட்டாளர்கள் உட்பட எல்லாரும் கிளம்பிட்டாங்க, அப்போ மணி 12.30 .இப்போ மண்டபத்துல (ஹால்) சல சலப்பு ஏற்பட்டுச்சு.. பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த பதிவர்கள் கடுப்பாகிட்டாங்க.. இவங்க விருது வாங்கறப்ப கை தட்டத்தான் நாம வந்தமா?பதிவர்கள் கூடி பேச வந்தா ,இப்படி கூட்டத்தை கூட்டி காட்டவும்,வேலை முடிஞ்சதும் கழட்டி விடுற செயலும் ஏன்?ன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க..

மேடைல பதிவர்கள் அவங்கவங்களை அறிமுகப்படுத்திக்குங்கன்னு சொன்னாலும் யாரும் அவ்வளவா ஆர்வம் காட்டலை.. யாருமே இல்லாத கடைல யார் டீ ஆத்தறதுன்னு நினைச்சுட்டாங்க போல.. முறைப்படி என்ன செஞ்சு இருக்கனும்னா  விழாவில் முதல் நிகழ்ச்சியா புதுமுக பதிவர்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்திருக்கனும், அதுக்குப்பிறகு விருது வழங்கும் விழா நடந்திருக்கனும்.. 

ஃபிலாசபி பிரபா, ஆரூர்மூனா செந்தில்,மீ, ஜாக்கி,-----,யுவகிருஷ்ணா, கே ஆர் பி செந்தில் ,அதிஷா

இந்த சந்தர்ப்பத்துல சென்னைல நடந்த ஒரு பாலிடிக்ஸ் மேட்டரையும் சொல்லிடறேன்.. கேபிள் சங்கர்  சார் நடத்தற யூ டான்ஸ் + ஆதி ,பரிசல் சவால் சிறுகதைப்போட்டிக்கான பரிசளிப்பு விழா ஈரோடு பதிவர் சந்திப்பு நடந்த அதே நாள்ல நடத்தப்பட்டது.. இது பிளான் பண்ணி செஞ்சாங்களா? அல்லது எதேச்சையா நடந்ததா? தெரில , ஆனா வந்திருந்த பல பதிவர்கள் பேசுனதை வெச்சு பார்த்தப்ப பதிவர்கள்  ஜாக்கிசேகர் குரூப், கேபிள்சங்கர் குரூப் என 2 பிரிவுகளாக பிரிந்ததை உணர முடிஞ்சது. ( இந்த மேட்டர் விழாவுக்கு வந்த சென்னை பதிவர்கள் சொன்னது)

சென்னையில் நடந்த பரிசளிப்பு விழா வேற தேதில நடத்தி இருந்தா  2 விழாவும் இன்னும் சிறப்பா நடந்திருக்கும்.. அரசியல் வாதிகள் கூட்டம் கூட்டி பலத்தை காட்ற மாதிரி சும்மா வீம்புக்காக போட்டி  கூட்டம் நடத்திட்டாங்க.. இது வரும் காலங்களில் தவிர்க்கப்பட்ட வேண்டும்..

ஈரோட்டில் உள்ள முக்கியமான பதிவர்கள் நண்டு நொரண்டு வக்கீல் சார், நல்ல நேரம் சதீஷ்குமார் இருவரும் வரவில்லை. காரணம் கேட்டதற்கு உள்ளூர் ஆட்கள் எங்களை  விழா அமைப்பாளர் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை.எங்களுக்கு ஃபோன் நெம்பர் இருக்கு, மெயில் ஐ டி இருக்கு , ஆனா 4 நிமிஷம் ஒதுக்கி அழைக்காம இருக்கறப்ப நாங்க ஏன் வரனும்? என்றார்கள்.

போன வருடம் நடந்த சங்கமம் கூட்டத்தில் இது தெரிய வந்தது..இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஈரோடு சங்கமம் எனும் அமைப்பில் ஈரோடு பதிவர் யாரும் உறுப்பினர் இல்லை. மேடையில் அவர் சங்கமம் குழுமம் என அறிமுகப்படுத்திய 10 பேரில் எனக்குத்தெரிந்த முகங்கள் கோபி கோமாளி செல்வா, சித்தார் சங்கவி சதீஷ் மட்டும்தான்.

ஈரோடு நகரைச்சார்ந்த நண்டு நொரண்டு வக்கீல் ராஜசேகரன் சாரோ, சித்தோடு சதீஷ்குமாரோ, மற்றும் , சித்தோடு ஜேம்ஸ்பாண்ட் 07 சதீஷோ ,  கருங்கல் பாளையம் காட்டுவாசியோ  யாரும் இதில் உறுப்பினராக இல்லை.. ஏன்? அவர்களை முறைப்படி அழைத்துப்பேசி  எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே என் அவா.. 

வால்பையன் , ரோஹினிசிவா

போன வருடம் பணி நிமித்தமாக  நான் ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத போது நான் விழா அமைப்பாளர் க்கு போட்டியாக ஒரு அமைப்பை ஏற்படுத்த முயல்பதாகவும், அவர் மேல் எனக்குப்பொறாமை எனவும் ஒரு பேச்சு பதிவுலகில் கிளம்பியது.. அவை அனைத்தும் வெறும் யூகத்தின் அடிப்படையில் கிளப்பப்பட்டவை..

விழா அமைப்பாளர் பல சமூக நிறுவனங்கள் ,அமைப்புகளில் தொடர்பு உள்ளவர்.. நகரின் பல பெரிய மனிதர்களிடம்  பழக்கம் உள்ளவர்.. அவரைப்போன்ற திரமைசாலிகள் தான் சங்கமம் போன்ற ஒரு அமைப்பை நடத்த தகுதியானவர்.. நான் ஆஃபீஸ் வேலை பார்த்துக்கிட்டு, அப்பப்ப சினிமா பார்த்து விமர்சனம் எழுத மட்டுமே நேரம் உள்ளவன்.

இந்த கட்டுரையின் நோக்கம் யாரையும் தாக்கவோ, மனம் புண்படும்படி நடத்தவோ எழுதப்பட்டது அல்ல.. அனைத்து பதிவர்களும் ஒன்றாக எதிர்காலத்தில் கூடி மகிழ வேண்டும், சந்தோஷமாக எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.. போட்டி அமைப்பு , போட்டி குழு ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.


 திருப்பூர் சேர்தளம் குரூப்,இடம் இருந்து வலமாக 4 வது நபர்தான் ஜீரோ கிலோ மீட்டர் குறும்பட இயக்குநர் ரவிக்குமார்106 comments:

Unknown said...

செவ்வாய் வணக்கம் !!

K.s.s.Rajh said...

இனிய காலை வணக்கம் பாஸ்
பதிவர் சந்திப்பில் நடந்த பல விடயங்களை வெளிக்கொண்டு வாறீங்க பரிசு வேண்டியது கிளம்பிச் என்றது உண்மையில் தவறானது விழா ஏற்பாட்டாளர்கள் நீங்கள் சொன்னது போல முதலில் பதிவர் அறிமுகத்தை நடத்தியிருக்க வேண்டும்.

வருங்காலத்தில் இதை தவிர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...

Unknown said...

அரசியல் குறைந்தால் ஆக்கம் பிறக்கும்...பல விஷயங்கள் புரிந்தது சிபி நன்றி!

Unknown said...

எதுலதான் அரசியல் இல்ல...
உயர்வு-தாழ்வு என்று இருப்பது போல...
நிறைய எதிர்மறை விஷயங்கள் இருக்கு...
ஈரோடு கதிர் ப்ளாக் நான் படிப்பது ரொம்ப rare...
அதுக்காக அவரை ஒதுக்கறேன்னு அர்த்தமா...!!!
சிலருக்கு பிடிக்கறது...பலருக்கு பிடிக்காது...
பலருக்கு பிடிக்கறது...சிலருக்குபிடிக்காது...
#அவ்வளவே !

Romeoboy said...

தொடருமா ??? ஜாக்கி குரூப் கேபிள் குரூப் யார் சொன்னது உங்க கிட்ட ?? எதுவும் தெரியாம எழுதி உங்கள் மீது நீங்களே சேற்றை வாரி இறைத்து கொள்ளாதீர்கள். வேற என்னத்த சொல்ல எப்பயும் போல உங்க குரூப்ல இருக்கிற ஆளுங்க படிக்கிறது மட்டுமே உள்ளது. உங்க பதிவை படிச்சிட்டு எனக்கு வடை போச்சு சட்னி போச்சுன்னு வந்து கமெண்ட் போடுற ஆளுங்க தான் இந்த பதிவு படிக்க லாய்க்கு.

Cable சங்கர் said...

என்ன தலைவரே பதிவெழுத ஏதும் கிடைக்கலைன்னா.. இது மாதிரி ஏதாவதை ஆரமிச்சி வச்சிர வேண்டியதா..? அஹா.. :)) யுடான்ஸ் விழா முன்னமே முடிவு செய்யப்பட்டது. ஈரோட்டு விழாவில் சிறப்பிக்க இருந்தவர்களில் நானுமொருவன். அதை விடுத்து.. நாங்கள் நிகழ்ச்சியை நடதத் வேண்டியிருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. சும்மாவாச்சும் க்ரூப் அது இது என்று பேசுவதை விட்டுவிட்டு.. அரசியல் ஆக்க பார்க்காதீர்கள்.

senthil said...

மாம்ஸ் இதுல எங்க அரசியல் இருக்கு, போன வருசமே நீங்க வராம இருந்தப்பவே எல்லாரும் ஒரு மாதிரியா பேசிக்கிட்டாங்க, ஆணா இந்த வருசம் நீங்க சென்னை போக வேண்டி இருந்தும் நீங்க ஈரோட்ல இருந்து விழால கலந்திட்டது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, நான் கூட போன வருசம் உங்கள தப்பா நினச்சிட்டனோனு வருத்தப்பட்டேன், இப்ப உங்க பதிவ பார்த்த பிறகு தான் தெரியுது, இதுல கலந்துக்கிட்டதன் நோக்கமே 4 பதிவு தேத்தீரலாம்னுதான், வேணாம் மாம்ஸ் கதிர் அண்ணா ரொம்ப நல்லவரு அவர சங்கட படுத்தாதீங்க ப்ளீஸ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, இந்த அரசியல் இன்னும் எத்தன பதிவுகள் தொடரும்?

RAVI said...

மச்சி ரெண்டு விழாவும் ஒரே தேதி அமஞ்சு போச்சேன்னு விளக்கமெல்லாம் ப்ளஸ்ஸுல வருத்தமா ஓடுச்செ கவனிக்கலயா..?
இது நம்ம வீட்டு விழா.நாமதான் சிறப்பிக்கனும்.அதுக்கான அழைப்பிதழ் முகநூல்லயும்,ப்ளஸ்ஸுலயும்,ட்விட்டர்லயும் அருமையாக அழைப்பிதல் போட்டாச்சு.தனிப்பட்ட முறையில் உங்களை அழைக்கவில்லை என்பதைப் பெரிது படுத்த வேண்டுமா..?
எனக்கும்தான் தனிப்பட்ட முறையில் அழைப்பில்லை.
அது நம்ம குடும்பவிழா மச்சி.நாமதான் முன்னாடி நின்னு நடத்திக் கொடுக்கனும்ப்பா....

கடைசீ நாலுவரிகளுக்காகப் பாராட்டுகிறேன்பா......

RAVI said...

யோவ் இப்ப்டியெல்லாம் குறைதேடி எழுதுறவிங்களும் வேணும்யா :))))

அப்பதான் அடுத்த சங்கமம் திட்டமிட்டு மேலும் சிறப்பா நடக்கும்யா....

kathir said...

வன்மம் நிறைந்த இந்த எழுத்திற்கு என் கடும் கண்டனங்கள் செந்தில்!

ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமத்தில் 22 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

பவள சங்கரி குழுமத்தில் இல்லையென்று யார் சொன்னது. குழும உறுப்பினர்கள் என மேடையேறியதில் வால்பையன், ஆரூரன், பாலாசி, அகல்விளக்கு ராஜா, ரோகிணி உட்பட மற்றவர்கள் யாரும் உங்களுக்கு பதிவர்களாகத் தெரியவில்லையென்றால் அது உங்கள் அறியாமை மட்டுமே! 2008லிருந்து எழுதும் ஆட்களை உங்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு நான் என்ன செய்யமுடியும்.

அடுத்து ஈரோடு சங்கமம் என்பது அமைப்பு அல்ல. நிகழ்ச்சியின் பெயர் மட்டுமே சங்கமம். அதை நடத்துவது ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம். அதற்கென்று ஒரு வலைப்பக்கம் இருப்பது தெரியுமா? அதற்கென ஒரு மின்னஞ்சல் குழுமம் இருப்பது தெரியுமா?

நான் போன் பண்ணினாத்தான் வருவேன்னு அடம்புடிக்கிறவங்க, எனக்கு போன் பண்ணி போன் பண்ணி. அழையுங்களேன்னு சொல்லியிருக்கலாம்...
செந்தில், இது குழுமம் நடத்தும் பொது நிகழ்ச்சி. குழுமம் சார்பில் நானும் பொது அழைப்பு விடுத்திருக்கின்றேன். ட்விட்டரில் உங்களோடு புழங்குவதால் அழைப்பு குறித்த சுட்டியை உங்களுக்குப் போட்டேன். அதன் பலனை இப்போது காண்கின்றேன்.

மற்றபடி என்னைக்குறித்து தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்துகள் அனைத்திற்கும் என் கண்டனங்களைப் வன்மையாகப் பதிவு செய்கிறேன். காரணம் என் தனிப்பட்ட குணாதிசயம் வேறு குழும உறுப்பினராக என் குணாதிசயம் வேறு. அதை உற்று நோக்கி அலச என்னோடு ஆழ்ந்து பழகியிருக்க வேண்டும். நீங்கள் இதுவரை என்னோடூ ஒரு 20 வார்த்தை பேசியிருப்பீங்க. அடுத்து அந்த நிகழ்ச்சியில் மட்டும்தான் பார்த்திருப்பீங்க...

இன்றைய உங்கள் எழுத்துமூலம் பதிவுலகில் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்க முயற்சிசெய்கிறீர்கள்....

Sivakumar said...

சிபி சார். கேபிள், ஜாக்கி க்ரூப் என்று எதுவும் இல்லை. இருவரிடமும் நன்றாக பழகுபவர்கள் பலர் உண்டு. சென்னைப்பதிவர்கள் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபட்டாலும், மீண்டும் கூடிப்பேசி நட்பு பாராட்டுவார்கள். முதல் நாள் இரவு சட்டையை கிழித்து கொண்டாலும், மறுநாள் "என்ன மாப்ள. நேத்து என்ன நடந்துச்சி?'' என்று கேட்டுவிட்டு தோளில் கை போட்டு பேசிக்கொள்வார்கள். அதை கண்கூட பார்த்துள்ளேன். மற்றபடி புதிய பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கலாம் எனும் கருத்து சரியே. அதை இனிவரும் சந்திப்புகளில் சரி செய்வோம் என சங்கவி கூறினார்.

ப.கந்தசாமி said...

ஆர்வங்கள் குறைஞ்சு போச்சு. அவ்வளவுதான்.

kathir said...

உடான்ஸ் விழா + சங்கமம் தேதி முடிவானது எதேச்சையான ஒன்று. அதுகுறித்து விழா நடத்திய இரு குழுவினருமே தெளிவான புரிதலோடு இருக்கின்றோம்..

அதுகுறித்து முன்னெரே யுவகிருஷ்ணா buzzல் தெளிவுபடுத்திருக்கின்றோம். இனியும் அது குறித்த விவாதங்கள் அவசியமற்றது

முத்தரசு said...

அந்த குருப் இந்த குருப் - கட்சி மாதிரி இங்கேயுமா? ..ச்சே. போங்கய்யா.

Anonymous said...

நாராயணா, நாராயணா. நாரதர் கலகம் ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறதே, நாரதர் கலகம் நன்மையில் முடிஞ்சா சரி.

ராஜி said...

எப்ப பாரு நெட், பிளாக், கமெண்டுனு கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துக்கிட்டு இருக்கியே என்ன யூஸ்ன்னு என் பிள்ளைங்க கேட்பாங்க. சினிமா, அரசியல், கல்வி, மருத்துவம்ன்னு எல்லா விஷயங்களும் அலசுறாங்க. தப்புன்னு தெரிஞ்சால் துவைச்சு காய வைச்சுடுவாங்கம் எங்க பிளாக்கர்ஸ்ன்னு சொல்வேன்.
அப்பேற்பட்ட நக்கீரன் வழித்தோன்றல்களான பதிவர்கள் சந்திப்பில் அரசையலா? நல்லாவா இருக்கு?
இதை படித்தால் என் போன்ற புது பதிவர்கள்லாம் பதிவர் சந்திப்புக்கு வர தயங்குவார்களே. சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?

Astrologer sathishkumar Erode said...

ஃபோன் செய்து என்னை அழையுங்கள் என சொன்னால் அழைத்திருப்பேன்..// நாகரீகம்,பண்பாடு நோட் திஸ் பாயிண்ட்!

அழையா விருந்தாளியா போவதை யாருமே விரும்புவதில்லை.அது இந்த கொங்கு மண் தந்த குணம்.

ப்ளாக் எழுதுறது அஞ்சு பேரு....ஆனா அவங்க உறுப்பினர் இல்லை..)))))))))

விடுங்க சிபி சார்.ஈரோடு பதிவர்களை வெச்சு தான் ஈரோடு பதிவர் குழுமம் நடத்த முடியுமா என்ன..?

Astrologer sathishkumar Erode said...

நண்பர்களே..இது ஈரோடு பதிவர் குழுமம் என்பதால் ஈரோட்டு பதிவராக சி.பி.செந்தில்குமார் தன் கருத்தை சொல்லியிருக்கிறார்...ஈரோட்டில் வசித்துக்கொண்டு பதிவு எழுதும் ஈரோடு பதிவர்கள் இங்கு உறுப்பினர்களாக இல்லை என்பதையும் ,சொந்த ஊரில் இருப்பவனை மதிக்கவில்லை என்றும் செந்தில் தன் கருத்தை சொல்லியிருக்கிறார்.அந்த கண்ணொட்டத்தில் பார்த்தால் இதன் உண்மை உங்களுக்கு புரியும்...! இதில் அவர் கடுமையாக தாக்கியோ பொறாமையாகவோ யாரையும் ,எதையும் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன்.ஈரோடு பதிவர்களை வைத்து புகழ் பெற நினைப்பவர்கள் அவர்களுக்கு மரியாதையும் கொடுக்க வேண்டும்.தான் மட்டுமே ஈரோடு பதிவர் என நினைப்பதும், தன் பேச்சை கேட்பவர்கள் மட்டுமே ஈரோடு பதிவர் என நினைப்பதும் தவறு

ஜோசப் பால்ராஜ் said...

பதிவோட லேபிள்ல சங்கமம் விழாவை மைய்யமாக வைத்து எழுதப்பட்ட புனைவுன்னு சேர்த்துடுங்க பாஸ்.

ரெண்டு விழாவும் ஒரே நாள்ல அமைந்தது தற்செயல் தான். யுடான்ஸ் நிகழ்சியில வெற்றியாளர்கள் பரிசு வாங்க சென்னைக்கு வருவதற்கு டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்ட பின்னர் எங்களால தேதிய மாத்த இயலாம போச்சு. இது கதிர் அண்ணணுக்கும் நல்லா தெரியும். அவருக்கு வேற தேதியில மண்டபம் கிடைக்காததால அதே தேதியில வைக்க வேண்டிய சூழல்னு எங்களுக்கும் தெரியும். சும்ம சிண்டு முடிஞ்சு விடாதிங்க.

அப்பறம் இந்த கேபிள் க்ரூப்பு, ஜாக்கி குரூப்பு எல்லாம் ஓவர் கற்பனை.

போன வருசம் நீங்க போட்டியா ஒரு க்ரூப்பு ஆரம்பிக்க முயற்சி செஞ்சதா யூகத்தின் அடிப்படையில் கிளப்பி விட்டதா சொன்னீங்களே, அத விட இது மோசமான கற்பனை.

க.பாலாசி said...

ஒரு பழமொழி உண்டுங்க.. ‘அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்‘ என்று. உங்களுக்கும் பொருந்துகிறது.

காவேரிகணேஷ் said...

சிபி,,

ஒரே ஹிட்டு போல..

என்ன சொல்றது, வாழ்த்துக்கள்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஒரு குரூப்பா தான் அலையாங்க போல !

கம்ப்யூட்டர விட்டு வெளிய வந்தா பக்கத்து வீட்டுக்காரங்களுக்கே தெரியாதாம் இது ஏங்க குரூப், தொண்டர்கள் அப்படின்னு ஏத்திவிடணும் !

குறை ஒன்றும் இல்லை !!! said...

அது சரி ! மத்த ரெண்டு பார்ட்டோட லிங்க் எங்கேங்க :))))))))

Astrologer sathishkumar Erode said...

கம்ப்யூட்டர விட்டு வெளிய வந்தா பக்கத்து வீட்டுக்காரங்களுக்கே தெரியாதாம்//;-))

CS. Mohan Kumar said...

கேபிள் குருப் ஜாக்கி குருப் என்பதை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன். இரண்டு பேரும் ஒரே குருப் தான் பாஸ். சென்னை பதிவர்கள் இப்படி பேசியதாக சொன்னது இன்னும் நல்ல காமெடி. முடிந்தால் அப்படி பேசியவர்கள் யார் என்று தான் சொல்லுங்களேன் (இல்லையேல் அது உங்கள் கற்பனை என்பது தெளிவாகும்)

நீங்கள் எழுதியதில் ஒரு விஷயம் உணர முடிகிறது. ஈரோட்டில் இருக்கும் சதீஷ், நண்டு போன்ற சிலரையும் சங்கமம் குழு அழைத்து விழாவில் இணைத்திருக்கலாம். ஆயினும் இதை செய்வதில் அவர்களுக்கு என்ன சங்கடம் ( Practical difficulty ) இருந்தது என தெரிய வில்லை.

விழா முடிந்த பிறகு பதிவர்கள் கலந்துரையாடல் என துவங்குவதால் பலரும் வெளியே போய் விடுகின்றனர். விழா துவக்கத்தில் முதல் பதினைந்து நிமிடம் பதிவர் அறிமுகத்துக்கு வைக்கலாம்

நீங்கள் யுடான்ஸ் சிறுகதை போட்டியில் பரிசு பெற்றும் சென்னை செல்லாமல் இந்த விழாவுக்கு வந்தீர்கள். இது நல்ல விஷயம் தான். ஆனால் அந்த நல்ல எண்ணம் இந்த பதிவில் தெரிய வில்லை. எந்த விழாவும் அனைவரையும் திருப்தி படுத்தும் படி நடத்தவே முடியாது. இது விழா நடத்தும் அனைவரும் அறிந்த ஒன்று. It is impossible to satisfy all the people. சங்கமம் பெரும்பான்மை மக்களை திருப்தி படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

நான் இதுக்கெல்லாம் புதுசு. இப்பதான் கடை திறந்திருக்கேன்...முத நாள் இஸ்கூல் போன LKG பையன் மாதிரி முழிக்கவேண்டியதாயிருக்கு இதப் படிச்சதும்...

என்னோட வலையில்;
மலையாளிகளின் airlines
திருவள்ளுவரின் Tweets

KARTHIK said...
This comment has been removed by the author.
KARTHIK said...
This comment has been removed by the author.
arul said...

no politics please

சக்தி கல்வி மையம் said...

என்னது தொடருமா?

மாப்ள சென்னையில அப்படி ரண்டு குருப் இல்லவே இல்லை. மற்றபடி பதிவுலகத்தில் அரசியல் வேணாமே?

Philosophy Prabhakaran said...

தலைவரே.... குத்துமதிப்பா எதையாவது தெரிஞ்சி வச்சிக்கிட்டு குழம்பின குட்டையில மீன் பிடிக்காதீங்க... போய் பிட்டுப்படம் பார்த்து விமர்சனம் போடுற வேலையை பாருங்க...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் என்னடா ஆச்சு உனக்கு இன்னைக்கு...? நல்லாதானே போயிட்டு இருந்துச்சு...?

Kaliyan said...

போட்டோவுல இருக்குறவங்க பேரே ஒனக்கு ஒழுங்கா தெரியல.. ஒனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை.. போனியோ தின்னியா.. பிட்டு படம் பாத்தியா... மாட்டுக்கு மயிறு புடுங்கினாமேரி எழுதினியா அத்தோட நிறுத்திக்க ராசா..

Kaliyan said...
This comment has been removed by the author.
Kaliyan said...

அன்புள்ள நல்லநேரம் ‘அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்’ ரேஞ்சிக்கு ஆயிட்டீங்களே பாஸு...

Admin said...

வெளிவராத செய்திகளை வெள்யே கொண்டு வந்தமைக்கு நன்றி..


அன்போடு அழைக்கிறேன்..

நாட்கள் போதவில்லை

அக்கப்போரு said...

@ செந்திலண்ணன்

சென்னைப் பதிவர்களுக்கும் எந்த அரசியலும் ( குறிப்பாக குரூப் ) கிடையாது.
பதிவர் சண்திப்புக்களில் கொஞ்சமும் உயர்வு / தாழ்வு மனப்பான்மையின்றி அனைவரும் குழுமிப் பேசி இருக்கிறோம்.
இப்போதும் அவ்விருவரும் இதைப் படித்திருந்தால் உரக்கச் சிரித்துக் கொள்வர் ஒருவருக்கொருவர் போன் செய்து.
ஹிட்ஸ் பெறுவதோ அல்லது ஜாக்கி கேபிள் இடையே விரிசல் என்று அவதுறு பரப்புவதோ உங்கள் நோக்கமல்ல என்று நினைக்கிறேன். பதிவை நீக்கிவிட்டு மீள யோசித்து பதிவேற்றவும் ........

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வணக்கம் சிபி,

பொதுவாவே உங்களுக்கு அதிக வார்த்தைகளில் நான் பின்னூட்டம் இடுவதில்லை(உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்).

காரணம்,வருடங்கள் கஷ்டப்பட்டு கோடிகள் செலவு செய்து எடுத்து சில மணி நேரமாக கொடுக்கப்பட்ட ஒரு காவியத்தை பார்த்து சில வரிகளில் தாங்கள் எழுதும் விமரினத்தை பார்த்து ஒரு சில எழுத்துக்களில் தானே நான் பின்னூட்டம் இடமுடியும்.
மற்றும் பின்னூட்டங்கள் விமரிசனங்கள் அல்லவே.மேலும்,தங்களின் பதிவுகளில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே பார்த்து பின்னூட்டமிடுவேன்,எனக்கு பதிவைப்பற்றி கூற முடியாத அளவிற்கு தாக்கம் இருந்தால் ம் ...என்றும் பின்னூட்டமிட்டுள்ளேன் .இவ்வாறான எனது பின்னூட்டங்கள் தாங்களை உற்சாகப்படுத்தும் என்ற நம்பிக்கையில்.அவ்வளவே.

ஆனால் இன்று என்னைப்பற்றி நேரடியாக தாங்கள் குறிப்பிட்டு பதிவிட்டதாலும்,தாங்கள் வெளிப்படையான நபர் என்பதாலும்,என் சார்ந்த விடயங்களையும்,அதில் உள்ள உண்மைகளையும்,அதற்கான எனது பதிலையும் தங்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாகவே இதனை இங்கு பதிவிடுகிறேன்.வேறு எதற்கும் அல்ல.மற்றும் இது பின்னூட்டமல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.அவ்வளவே.

முதலில் பதவுலகில் அரசியல் உள்ளது என்பதனையும்,அது எப்படி எப்படி இருக்கிறது என்பது பற்றியும்,அதில் குளிர் காயும் நபர்கள் பற்றியும்,எப்படி எப்படி குளிர்காயப்பட்டு வருகிறது என்பது பற்றியும்,கேமரா பற்றியும்,இரயில் பற்றியும் .... உங்களுடன் ,சங்கவி,சதீஸ் மற்றும் செல்வா போன்ற நண்பர்களை முதல் முதலில் சந்தித்த சந்திப்பில் அறிந்து மிகவும் வருந்தினேன்.அதோடு மற்ற சிலரை இது பற்றி கேட்டபோது அவர்கள் ...(இது வேண்டாம்)...என சொன்னார்கள்.இப்ப இதை சிலர் சுயநலத்திற்காக மறுக்கலாம்.ஆனால்,இது தான் உண்மை.

இன்றைய அரசியலே பாசிச தன்மை கொண்டது என்பதனை நான் உங்களுக்கு விளக்கவும் வேண்டுமோ?.அப்படி இருக்கும் பொழுது பதிவுலகில் மட்டும் நீங்கள் விரும்பும் தூய்மை எப்படி இருக்கும்.எங்கொல்லாம் அரசியல் இருக்கிறதோ,அங்கொல்லாம் இதுபோன்ற விடயங்கள் இருக்கும் நண்பா.


தாங்களின் பதிவில் சென்னை விசயம் மற்றும் நிகழ்வுகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது மன்னிக்கவும்,

மற்றபடி மற்ற விடயங்கள் குறித்து...

தங்களின் பதிவிலுள்ள நல்லெண்ணத்தையும்,உண்மைத்தன்மையையும் ,தங்களின் தூய்மையையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.காரணம் நீங்கள் ஆஃபீஸ் வேலைபார்ப்பவர் ...

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க்-75

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங் -அருமை

எனது கமெண்ட் - ம்...

அக்கப்போரு said...

@????? ??????

@மோகன்குமார்

சங்கமம் நிகழ்ச்சி இன்று வரை எனக்கு ஒரு பிரமிப்பான ஆச்சர்யம் தான். அதில் கலந்து கொள்ள முடியாத ஏக்கம் இன்னும் உண்டு. இந்த ஒரு பதிவை வைத்து ஈரோடு பதிவர்கள் குழுமத்தையோ / சங்கமம் நிகழ்வையோ சந்தேகிக்க " சரியாகச் சிந்திப்பவர்களால்" முடியாது மோகன். உங்களுடன் முழுக்க உடன்படுகிறேன்

Unknown said...

சிபி சென்னை பதிவர்களை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு, கருத்து மோதல்களை பார்த்து முடிவு செய்வது அபத்தமானது,

மற்றபடி ஈரோடு பதிவர்களை பற்றி நீங்கள் எழுதியிருப்பது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிவது போன்றது..

உங்களின் இந்தப் பதிவுக்கு எனது கண்டணங்கள்..

Rajagopal.S.M said...

பதிவு எழுத விஷயம் கிடைக்கலைனா ஏதாவது மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதுங்க. அத விட்டுட்டு ஏன் இந்த வெட்டி வேலை நண்பரே?

:((

Rajagopal.S.M said...
This comment has been removed by the author.
passerby said...

@kathir

விழாவை வைத்தவன், அல்லது தலைமையேற்று நடத்துபவன்தான் போய் அழைக்கவேண்டும். அல்லது அழைப்பை விடுக்கவேண்டும்.
“விழா நடத்துகிறீர்களே எனக்கும் அழைப்பு கொடுங்கள்!” என்று எவராவது கெஞ்சுவார்களா? கதிர் இங்கே அப்படித்தான் கெஞ்சச் சொல்கிறார்.
சுய கவுரவம், உணர்ச்சிவசப்படுபவர்களெல்லாம் எதையும் தலைமை தாங்கி நட்த்துவதற்கு அருகதை இல்லாதவர்கள். நாலுபேரை எனக்குத்தெரியும், என்னைடம் காசு இருக்கிறதென்பதெல்லாம் தகுதிகளல்ல.

சி.பி.செந்தில்குமார் said...

@ஆகாயமனிதன்..

நன்றி , என் பாய்ண்ட் எல்லாரும் ஒற்றுமையா இருக்கனும் என்பதுதான்

சி.பி.செந்தில்குமார் said...

@K.s.s.Rajh

இந்தப்பதிவின் நோக்கமே வருங்காலத்தில் எங்கே பதிவர் சந்திப்பு நடந்தாலும் இந்த மாதிரி விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான்

சி.பி.செந்தில்குமார் said...

>>அருண்மொழித்தேவன் said...

தொடருமா ??? ஜாக்கி குரூப் கேபிள் குரூப் யார் சொன்னது உங்க கிட்ட ?? எதுவும் தெரியாம எழுதி உங்கள் மீது நீங்களே சேற்றை வாரி இறைத்து கொள்ளாதீர்கள். வேற என்னத்த சொல்ல எப்பயும் போல உங்க குரூப்ல இருக்கிற ஆளுங்க படிக்கிறது மட்டுமே உள்ளது. உங்க பதிவை படிச்சிட்டு எனக்கு வடை போச்சு சட்னி போச்சுன்னு வந்து கமெண்ட் போடுற ஆளுங்க தான் இந்த பதிவு படிக்க லாய்க்கு.


யூ ஆர் மிஸ்டேக்கன் மீ. கேபிள், ஜாக்கி ஒற்றுமையா இருந்தா சந்தோஷம், நான் சொன்ன பாயிண்ட் சென்னை பதிவர்கள் சிலர் அந்த விழாவில் சொன்ன விஷயங்களை ஓப்பனாக இங்கே பதிவாக போட்டதுதான்.. மற்றபடி அவர்கள் இருவரும் எப்போதும் ஜாலியாக ,ஒற்றுமையாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி

சி.பி.செந்தில்குமார் said...

>>சங்கர் நாராயண் @ Cable Sankar said...

என்ன தலைவரே பதிவெழுத ஏதும் கிடைக்கலைன்னா.. இது மாதிரி ஏதாவதை ஆரமிச்சி வச்சிர வேண்டியதா..? அஹா.. :)) யுடான்ஸ் விழா முன்னமே முடிவு செய்யப்பட்டது. ஈரோட்டு விழாவில் சிறப்பிக்க இருந்தவர்களில் நானுமொருவன். அதை விடுத்து.. நாங்கள் நிகழ்ச்சியை நடதத் வேண்டியிருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. சும்மாவாச்சும் க்ரூப் அது இது என்று பேசுவதை விட்டுவிட்டு.. அரசியல் ஆக்க பார்க்காதீர்கள்

பாஸ், விஷயம் கிடைக்கலைன்னு இந்த போஸ்ட் போடலை.. சங்கமம் விழா அறிவிப்பு வந்து 6 நாட்கள் கழித்தே யு டான்ஸ் அறிவிப்பு வந்தது,நீங்க நினைச்சிருந்தா தவிர்த்திருக்கலாம்னு சென்னை ஆட்கள் விழாவில் சொல்லித்தான் எனக்கே தெரியும்.. நான் குறை சொல்லலை, சொல்லிக்காட்டலை.இனி இது போல் காண்ட்ரவர்சி வராமல் பார்த்துக்கனும்னு என் கருத்தைத்தான் பதிவு செஞ்சிருக்கேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>senthil said...

மாம்ஸ் இதுல எங்க அரசியல் இருக்கு, போன வருசமே நீங்க வராம இருந்தப்பவே எல்லாரும் ஒரு மாதிரியா பேசிக்கிட்டாங்க, ஆணா இந்த வருசம் நீங்க சென்னை போக வேண்டி இருந்தும் நீங்க ஈரோட்ல இருந்து விழால கலந்திட்டது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, நான் கூட போன வருசம் உங்கள தப்பா நினச்சிட்டனோனு வருத்தப்பட்டேன், இப்ப உங்க பதிவ பார்த்த பிறகு தான் தெரியுது, இதுல கலந்துக்கிட்டதன் நோக்கமே 4 பதிவு தேத்தீரலாம்னுதான், வேணாம் மாம்ஸ் கதிர் அண்ணா ரொம்ப நல்லவரு அவர சங்கட படுத்தாதீங்க ப்ளீஸ்

யாரையும் சங்கடப்படுத்த இந்த போஸ்ட் போடலை.. இனிமே யாரும் சங்கடம் கொள்ளக்கூடாது என்பதற்காக போட்ட போஸ்ட்.. 4 போஸ்ட் தேத்த எனக்கு மேட்டரா சிக்காது? எனது பதிவில் முதல் பாகம், 2 ஆம் பாகம் படிச்சுப்பாருங்க, பிளஸ் பாயின்ட்ஸ் எல்லாம் சொல்லிட்டு மைனஸ் சொல்லி இருக்கேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, இந்த அரசியல் இன்னும் எத்தன பதிவுகள் தொடரும்?

அரசியல் மேட்டர் ஓவர், இன்னும் 2 பாகம் இருக்கு, அது சாப்பாட்டு மேட்டர், நன்றி நவிலல்

சி.பி.செந்தில்குமார் said...

>>RAVI said...

மச்சி ரெண்டு விழாவும் ஒரே தேதி அமஞ்சு போச்சேன்னு விளக்கமெல்லாம் ப்ளஸ்ஸுல வருத்தமா ஓடுச்செ கவனிக்கலயா..?
இது நம்ம வீட்டு விழா.நாமதான் சிறப்பிக்கனும்.அதுக்கான அழைப்பிதழ் முகநூல்லயும்,ப்ளஸ்ஸுலயும்,ட்விட்டர்லயும் அருமையாக அழைப்பிதல் போட்டாச்சு.தனிப்பட்ட முறையில் உங்களை அழைக்கவில்லை என்பதைப் பெரிது படுத்த வேண்டுமா..?
எனக்கும்தான் தனிப்பட்ட முறையில் அழைப்பில்லை.
அது நம்ம குடும்பவிழா மச்சி.நாமதான் முன்னாடி நின்னு நடத்திக் கொடுக்கனும்ப்பா....

கடைசீ நாலுவரிகளுக்காகப் பாராட்டுகிறேன்பா......

நன்றி! தனிப்பட்ட அழைப்பை நானும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் உள்ளூர் ஆட்களூக்கு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்ற ஆதங்கத்தை முன் வைத்தேன் அவ்ளவ் தான்

சி.பி.செந்தில்குமார் said...

>>RAVI said...

யோவ் இப்ப்டியெல்லாம் குறைதேடி எழுதுறவிங்களும் வேணும்யா :))))

அப்பதான் அடுத்த சங்கமம் திட்டமிட்டு மேலும் சிறப்பா நடக்கும்யா....

நிறை , குறை இரண்டையும் எழுதி இருக்கேன், மற்ற 2 பாகமும் படிங்க,, அடுத்த சங்கமம் திட்டமிட்டு மேலும் சிறப்பா நடக்கட்டும் என்பதுதான் என் அவாவும்

சி.பி.செந்தில்குமார் said...

>>kathir said...

வன்மம் நிறைந்த இந்த எழுத்திற்கு என் கடும் கண்டனங்கள் செந்தில்!

ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமத்தில் 22 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

பவள சங்கரி குழுமத்தில் இல்லையென்று யார் சொன்னது. குழும உறுப்பினர்கள் என மேடையேறியதில் வால்பையன், ஆரூரன், பாலாசி, அகல்விளக்கு ராஜா, ரோகிணி உட்பட மற்றவர்கள் யாரும் உங்களுக்கு பதிவர்களாகத் தெரியவில்லையென்றால் அது உங்கள் அறியாமை மட்டுமே! 2008லிருந்து எழுதும் ஆட்களை உங்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு நான் என்ன செய்யமுடியும்.

அடுத்து ஈரோடு சங்கமம் என்பது அமைப்பு அல்ல. நிகழ்ச்சியின் பெயர் மட்டுமே சங்கமம். அதை நடத்துவது ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம். அதற்கென்று ஒரு வலைப்பக்கம் இருப்பது தெரியுமா? அதற்கென ஒரு மின்னஞ்சல் குழுமம் இருப்பது தெரியுமா?

நான் போன் பண்ணினாத்தான் வருவேன்னு அடம்புடிக்கிறவங்க, எனக்கு போன் பண்ணி போன் பண்ணி. அழையுங்களேன்னு சொல்லியிருக்கலாம்...
செந்தில், இது குழுமம் நடத்தும் பொது நிகழ்ச்சி. குழுமம் சார்பில் நானும் பொது அழைப்பு விடுத்திருக்கின்றேன். ட்விட்டரில் உங்களோடு புழங்குவதால் அழைப்பு குறித்த சுட்டியை உங்களுக்குப் போட்டேன். அதன் பலனை இப்போது காண்கின்றேன்.

மற்றபடி என்னைக்குறித்து தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்துகள் அனைத்திற்கும் என் கண்டனங்களைப் வன்மையாகப் பதிவு செய்கிறேன். காரணம் என் தனிப்பட்ட குணாதிசயம் வேறு குழும உறுப்பினராக என் குணாதிசயம் வேறு. அதை உற்று நோக்கி அலச என்னோடு ஆழ்ந்து பழகியிருக்க வேண்டும். நீங்கள் இதுவரை என்னோடூ ஒரு 20 வார்த்தை பேசியிருப்பீங்க. அடுத்து அந்த நிகழ்ச்சியில் மட்டும்தான் பார்த்திருப்பீங்க...

இன்றைய உங்கள் எழுத்துமூலம் பதிவுலகில் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்க முயற்சிசெய்கிறீர்கள்....

ஈரோட்டில் இருக்கும் எனக்கே ஈரோட்டில் உள்ள மற்ற பதிவர்களை தெரியவில்லை, அப்போ நீங்க என்ன செஞ்சிருக்கனும்? விழாவில் ஆரம்பத்துலயே அனைத்து பதிவர்களையும் அறிமுகப்படுத்தி இருக்கனும், இப்போ மேட்டரே அதான்.. மற்றபடி உங்களை தனிப்பட்ட முறையில் சொன்ன சில அப்சர்வேஷனை எடுத்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>! சிவகுமார் ! said...

சிபி சார். கேபிள், ஜாக்கி க்ரூப் என்று எதுவும் இல்லை. இருவரிடமும் நன்றாக பழகுபவர்கள் பலர் உண்டு. சென்னைப்பதிவர்கள் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபட்டாலும், மீண்டும் கூடிப்பேசி நட்பு பாராட்டுவார்கள். முதல் நாள் இரவு சட்டையை கிழித்து கொண்டாலும், மறுநாள் "என்ன மாப்ள. நேத்து என்ன நடந்துச்சி?'' என்று கேட்டுவிட்டு தோளில் கை போட்டு பேசிக்கொள்வார்கள். அதை கண்கூட பார்த்துள்ளேன். மற்றபடி புதிய பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கலாம் எனும் கருத்து சரியே. அதை இனிவரும் சந்திப்புகளில் சரி செய்வோம் என சங்கவி கூறினார்.

சங்கவி சொன்னார் ஓக்கே, ஈரோடு கதிர்தான் லீடர், அவர் சொன்னாரா? அவர் தான் உங்க கிட்டே பேச நேரம் ஒதுக்கலைன்னு நீங்களே சொன்னிங்க..

சி.பி.செந்தில்குமார் said...

Palaniappan Kandaswamy said...

ஆர்வங்கள் குறைஞ்சு போச்சு. அவ்வளவுதான்.

சரி பண்ணிடலாம் டாக்டர் சார், இந்த வருடம் செய்த தவறுகள் அடுத்த வருடம் நடக்காது பாருங்க. என் பேர் ரிப்பேர் ஆனாலும் பரவால்ல.. எதிர் காலத்துல இந்த தப்புகள் நடக்கக்கூடாது

சி.பி.செந்தில்குமார் said...

kathir said...

உடான்ஸ் விழா + சங்கமம் தேதி முடிவானது எதேச்சையான ஒன்று. அதுகுறித்து விழா நடத்திய இரு குழுவினருமே தெளிவான புரிதலோடு இருக்கின்றோம்..

அதுகுறித்து முன்னெரே யுவகிருஷ்ணா buzzல் தெளிவுபடுத்திருக்கின்றோம். இனியும் அது குறித்த விவாதங்கள் அவசியமற்றது

ஓக்கே டன்

சி.பி.செந்தில்குமார் said...

>>ஜோசப் பால்ராஜ் said...

பதிவோட லேபிள்ல சங்கமம் விழாவை மைய்யமாக வைத்து எழுதப்பட்ட புனைவுன்னு சேர்த்துடுங்க பாஸ்.

ரெண்டு விழாவும் ஒரே நாள்ல அமைந்தது தற்செயல் தான். யுடான்ஸ் நிகழ்சியில வெற்றியாளர்கள் பரிசு வாங்க சென்னைக்கு வருவதற்கு டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்ட பின்னர் எங்களால தேதிய மாத்த இயலாம போச்சு. இது கதிர் அண்ணணுக்கும் நல்லா தெரியும். அவருக்கு வேற தேதியில மண்டபம் கிடைக்காததால அதே தேதியில வைக்க வேண்டிய சூழல்னு எங்களுக்கும் தெரியும். சும்ம சிண்டு முடிஞ்சு விடாதிங்க.

அப்பறம் இந்த கேபிள் க்ரூப்பு, ஜாக்கி குரூப்பு எல்லாம் ஓவர் கற்பனை.

போன வருசம் நீங்க போட்டியா ஒரு க்ரூப்பு ஆரம்பிக்க முயற்சி செஞ்சதா யூகத்தின் அடிப்படையில் கிளப்பி விட்டதா சொன்னீங்களே, அத விட இது மோசமான கற்பனை.

நோ இமேஜினேஷன்.. விழாவில் வந்த சென்னை பதிவர்கள் சொன்ன தகவல்கள்

N.H. Narasimma Prasad said...

ஆஹா, பதிவுலகத்தின் மறுபெயர் 'பாலிடிக்ஸ்'ஆ? அடுத்த பகுதி எப்போ?

சி.பி.செந்தில்குமார் said...

>>குறை ஒன்றும் இல்லை !!! said...

அது சரி ! மத்த ரெண்டு பார்ட்டோட லிங்க் எங்கேங்க :))))))))

லிங்க் கொடுத்தாச்சு

சி.பி.செந்தில்குமார் said...

>>Kaliyan said...

போட்டோவுல இருக்குறவங்க பேரே ஒனக்கு ஒழுங்கா தெரியல.. ஒனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை.. போனியோ தின்னியா.. பிட்டு படம் பாத்தியா... மாட்டுக்கு மயிறு புடுங்கினாமேரி எழுதினியா அத்தோட நிறுத்திக்க ராசா..

ஹா ஹா சேம் சைடு கோல் போட்டு எனக்கு ஹெல்ப் பண்ணியதற்கு நன்றி சார். என் பாயிண்ட்டே அதான், ஒரு நிகச்சியின் தலைவரான ஈரோடு கதிர் அந்த ஊரில் உள்ள பதிவர்களைக்கூட ஏன் அறீமுகம் செய்யவில்லை என்பதுதான் இந்த பதிவின் சாராம்சம். ,மிக்க நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

>>மோகன் குமார் said...

கேபிள் குருப் ஜாக்கி குருப் என்பதை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன். இரண்டு பேரும் ஒரே குருப் தான் பாஸ். சென்னை பதிவர்கள் இப்படி பேசியதாக சொன்னது இன்னும் நல்ல காமெடி. முடிந்தால் அப்படி பேசியவர்கள் யார் என்று தான் சொல்லுங்களேன் (இல்லையேல் அது உங்கள் கற்பனை என்பது தெளிவாகும்)

இது என் கற்பனை அல்ல, விழாவிற்கு வந்த சென்னை பதிவர்கள் சொன்னது, சபை நாகரீகம் கருதியும், இன்ஃபார்மர் பெயரை சொன்னா நாளைக்கு எந்த தகவலும் கிடைக்காது என்பதாலும் நான் பெயர் சொல்லலை

சி.பி.செந்தில்குமார் said...

>>Philosophy Prabhakaran said...

தலைவரே.... குத்துமதிப்பா எதையாவது தெரிஞ்சி வச்சிக்கிட்டு குழம்பின குட்டையில மீன் பிடிக்காதீங்க... போய் பிட்டுப்படம் பார்த்து விமர்சனம் போடுற வேலையை பாருங்க...

நன்றி பிரபா.. தங்கள் ஆலோசனைக்கும் வழிகாட்டுதலுக்கும்.. புரிந்துணர்வுடன் கூடிய தங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி..

இதே பதிவர் சங்கமத்தை பற்றி பாசிட்டிவாக 2 போஸ்ட் போட்டேன்.. அதை கண்டுக்கவே இல்லையே? ஏன்?ஒரு நல்ல நண்பன்னா பிளஸ்ஸை பாராட்டனும், மைனஸ் ஸை சுட்டிக்காட்டனும்.. நீங்க எப்பவுமே மைனஸ் மட்டும்தானே சொல்றீங்க? நீங்க போட்ட சங்கமம் போஸ்ட்ல ஏதாவது பிளஸ் ,மேட்டர் போட்டீங்களா? ஆல் மைனஸ்.. நான் அப்படி இல்ல , 2 போஸ்ட் பிலஸ் போட்டிருக்கேன்..

சி.பி.செந்தில்குமார் said...

>>கே.ஆர்.பி.செந்தில் said...

சிபி சென்னை பதிவர்களை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு, கருத்து மோதல்களை பார்த்து முடிவு செய்வது அபத்தமானது,

மற்றபடி ஈரோடு பதிவர்களை பற்றி நீங்கள் எழுதியிருப்பது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிவது போன்றது..

உங்களின் இந்தப் பதிவுக்கு எனது கண்டணங்கள்..

நீங்களூம் இந்த பதிவின் சாராம்சத்தை புரிந்து கொள்ளாதது வருந்தத்தக்கது.. நான் சொல்ல வந்தது பாலிடிக்ஸ் இருக்கக்கூடாது என்பதே, இல்லை என்றால் சந்தோஷம்

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜகோபால்.S.M said...

பதிவு எழுத விஷயம் கிடைக்கலைனா ஏதாவது மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதுங்க. அத விட்டுட்டு ஏன் இந்த வெட்டி வேலை நண்பரே?

:((

நான் போடும் பெரும்பாலான பதிவுகள் மொக்கை பதிவுகள் தான், எப்போதாவது ஒரு முறைதான் இப்படி போடுவேன்..

kathir said...

//ஒரு நிகச்சியின் தலைவரான ஈரோடு கதிர் //

என் பெயரைச் சொல்லாமல் பின்னூட்டம் கூட போட முடியாது போல..... என் பெயரில் அத்தனை அன்பா அல்லது வன்மமா!!!! முடியல செந்தில்... :(

நிகழ்ச்சியின் தலைவர் சந்துரு அண்ணன் மட்டுமே! நான் ஒரு பொறுப்பை மட்டுமே எடுத்துக்கொண்டு நிகழ்த்தினேன். அவ்ளோதான்!

சி.பி.செந்தில்குமார் said...

>>passerby said...

என் தளத்திற்கு முதல் வருகை, நன்றிகள்

கருத்து தெரிவித்த பெரும்பாலான பதிவர்கள் பதிவின் நோக்கத்தை திசை திருப்பி விட்டார்கள் , ரெண்டே பாயின்ட்ஸ்தான் நான் சொல்ல வருவது

1. பதிவுலகில் பாலிடிக்ஸ் வேணாம்

2, உள்ளூர் பதிவர்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து தனிப்[பட்ட முறையில் அழைப்பு விடுத்திருக்கலாம், மேடையில் புதிய பதிவர்கள் அறிமுகம் செய்திருக்கலாம் என்பதே

சசிகுமார் said...

சிபி நீங்கள் தவறாக நினைத்து கொண்டாலும் பரவாயில்லை ஏன் மனதில் பட்டதை நான் கூறுகிறேன்....

நீங்கள் சொல்வது போல பரிசளிப்பு முடிந்ததும் விழா கலைக்கப்பட்டிருந்தால் அது வருந்த தக்கது தான். அது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.

எதையும் குறை சொல்வது எளிது. ஆனால் செய்து காட்டுவது கடினம் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. நீங்கள் ஏதேனும் ஆலோசனை வழங்குவதாக இருந்தால் அதை நல்ல முறையில் எடுத்து கூறி இருக்கலாம் அல்லது தனி மெயிலில் அனுப்பி அந்த தவறு அடுத்த முறை நடக்காதவாறு பார்த்து கொண்டு இருக்கலாம் அதை விடுத்தது பொது இடத்தில் இப்படி கூறி இருக்க வேண்டாம்.

போன் பண்ணி கூப்பிட்டால் தான் நான் போவேன் என்று சொல்வது "நான்" என்ற அகந்தையில் கூறுவது போல நினைக்க தோன்றுகிறது.

மற்றும் சென்னையில் க்ரூப் எல்லாம் ஒன்னும் இல்லை. யாருப்பா சொன்னது அவருடைய பெயரையும் போடுங்க.

பலபேரின் உழைப்பை குறை கூறுவது போல உள்ளது உங்களின் இந்த பதிவு. பதிவை மறு பரிசீலினை செய்யவும்.

கார்க்கிபவா said...

//கேபிள் குருப் ஜாக்கி குருப் //

பேசாம‌ தில்லி, கொல்க‌த்தான்னு டிரான்ஸ்ஃப‌ர் வாங்கிட்டு போயிட‌லாமான்னு யோசிக்கிறேன் :))

Kaliyan said...

நாந்தான் அப்பவே சொன்னனே.. நீயெல்லாம் பிட்டுபட விமர்சனம் எழுததான் லாய்க்கு.. ஒரு கமெண்ட்டுக்குகூட உறுப்படியா பதில் சொல்ல தெரியல ஒனக்கு.. ஏன் இந்த வேண்டாத வேலை.. போ..போயி புள்ளகுட்டிய படிக்க வைய்யி... ஒரு கொழந்தையப்போட்டு அடிக்கறதுல எனக்கு விருப்பம் இல்ல...

சி.பி.செந்தில்குமார் said...

@Kaliyan

மிக்க நன்றி சார். நான் எதுக்குமே லாயக்கில்லாதவன்னு எங்க வாத்தியார் சொன்னார், ஏதோ அந்த பட விமர்சனத்துக்காவது லாயக்குன்னு சொல்லி என் மானத்தை காப்பாத்திட்டீங்க, மீண்டும் நன்றிகள்,. ஆனா பாருங்க நான் கேட்ட கேள்விக்கு நேரடியா உங்களால பதில் சொல்ல முடியல , சமாளீக்கறீங்க

கேள்வி 1 - சங்கமம் விழா அறிவிக்கப்பட்ட்டு 6 நாட்கள் கழித்தே யு டான்ஸ் விழா அறிவிக்கப்பட்டது, அது ஏன்?

கேள்வி 2 - விழாவில் புதிய பதிவர்கள் அறிமுகம் ஆரம்பத்தில் வைக்காமல் சிறப்பு விருந்தினர் எல்லாரும் சென்ற பின் ஏனோ தானோ என நடத்தப்பட்டது ஏன்?

Unknown said...

//யாரையும் சங்கடப்படுத்த இந்த போஸ்ட் போடலை.. இனிமே யாரும் சங்கடம் கொள்ளக்கூடாது என்பதற்காக போட்ட போஸ்ட்.. 4 போஸ்ட் தேத்த எனக்கு மேட்டரா சிக்காது? எனது பதிவில் முதல் பாகம், 2 ஆம் பாகம் படிச்சுப்பாருங்க, பிளஸ் பாயின்ட்ஸ் எல்லாம் சொல்லிட்டு மைனஸ் சொல்லி இருக்கேன் // Super CP !

Unknown said...

முதல் இரண்டு பாகத்துல நம்ம CP எவ்ளோ எழுதினாரு, யாராவது கண்டுகிட்டீங்களா ?
குட்டையைக் குழப்பினால் தானே மீன் பிடிக்க முடியும் !
- CP சொல்வதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டால் நல்லது !
சிரிக்க ! சிந்திக்க !

Kaliyan said...

அட மொன்னையே... உடான்ஸ் தேதி அறிவிக்கப்பட்டது டிச.12, சங்கமம் தேதி டிச.10.. இது அங்க தெரியாது, அது இங்க தெரியாது.. ரெண்டுமே அந்த நேரத்துல மாத்தமுடியாம நடந்த நிகழ்ச்சிதான்..

ஒண்ணுந்தெரியாம சின்னபுள்ளத்தனமா பேசுறத நிறுத்து கொயந்த.. போயி வீட்ல பெரியவங்க இருந்தா வரச்சொல்லு.. போ..போ..

Unknown said...

// Kaliyan said...
அட மொன்னையே//
போஸ்ட் ஒன்னையும் காணமே சார் ! நீங்க பதிவரா ?

குறை ஒன்றும் இல்லை !!! said...

அடுத்த ஈரோடு சங்கமத்தில் சமூகப்பணிக்கு பரிசு பெற புதிய பதிவர்கள் செய்ய வேண்டியவை !

1. ஏதாவது கட்சிக்கு சொம்படிக்க வேண்டும் !

2. உலகமே காறி துப்பிய ஊழலை அப்படி ஏதும் நடக்கவில்லை என சாதிக்க வேண்டும் !

3. கவர்ச்சியான படங்களை குறிப்பிட்ட இடைவெளியில் போட வேண்டும் !

4. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாதிறியான கெட்ட வார்த்தைகள் இருக்கும் அதை ஜஸ்ட் லைக் தட்டாக உபயோகிக்க வேண்டும் !

5. ரயில் பாத்ரூம் கதவில் கிறுக்குவது போல ஓபாமா வரை அறிவுரை சொல்லி கடிதம் எழுத வேண்டும் !

இவ்வளவு தான் சமூகப்பணி ஆற்ற தேவையானவைகள் ! பதிவர்களே
ஸ்டார்ட் மீசிக் !!

Astrologer sathishkumar Erode said...

கலியான் எனும் புனை பெயரில் வராமல் உன் சொந்த பெயரான அந்த புகழ் பெற்ற பெயரில் வருமாறு அனானிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்!

Astrologer sathishkumar Erode said...

சென்னை பதிவர்களுக்கு சிறப்பான வரவேற்பும்,பாராட்டுக்களும் கொடுக்கப்பட்டன..அவர்கள் விருந்தாளிகள்.அவர்கள் நமக்கு ஆதரவாக பேசுவார்கள் என எதிர்பார்க்க முடியாது!அப்படி நினைப்பதும் தவறு.பொறுப்ப்பாளர்கள் எனப்படுபவர்கள் இந்த விருந்தாளிகளை அழைக்கவும் அவர்களுக்கு பிரியாணி பரிமாறவுமே நியமிக்கப்பட்டவர்கள்.அவர்கள் உள்ளூர் பதிவர்களை ஒருங்கிணைக்க பாடுபடுவார்கள் என நினைப்பது முட்டாள்தனம்தான்!!

Astrologer sathishkumar Erode said...

ஒரு குடும்பத்து கல்யாணத்துக்கு வந்து போனவர்கள்,வாழ்த்தும் ,ஆசியும் சொல்லிவிட்டு,விருந்து சாப்பிட்டு போவார்கள்.அந்த கல்யாண வீட்டு குடும்ப பிரச்சினையில் தலையிட மாட்டார்கள்.அது அவர்கள் வேலையும் அல்ல.ஆனா கல்யாணம் நடக்கும் வீட்டு தலைவர் குடும்ப உறுப்பினர்களுடன் கல்யாணத்துக்கு முன்பே ஆலோசிக்க வேண்டும்.ஒரு குடும்ப உறுப்பினரை விட்டு,ரோட்டில் போறவனுக்கு மதிப்பு கொடுத்து அவனை முன்னிலைபடுத்தி கல்யாணம் நடத்தினால் குடும்பத்துக்குள் சண்டை வரத்தான் செய்யும்! கல்லடி படத்தான் செய்யும்.

Kaliyan said...

தோழர் ஆகாயமனிதன் அவர்களே பதிவரா இருக்கறவன்தான் கமெண்ட் போடணுனு எந்த மடையன் சொன்னான்..?

Astrologer sathishkumar Erode said...

விழாவில் புதிய பதிவர்கள் அறிமுகம் ஆரம்பத்தில் வைக்காமல் சிறப்பு விருந்தினர் எல்லாரும் சென்ற பின் ஏனோ தானோ என நடத்தப்பட்டது ஏன்?//
அப்பதானே உங்களை பத்தி ஒருத்தனுக்கும் தெரியாம போகும்..? ஃபோக்ஸ் லைட் ஒரு முகம் பக்கமே இருக்க வேண்டும்...ஈரோட்டு சமூக நிகழ்ச்சிகளில் இனி அவர் மட்டுமே இருப்பார்...இந்த பேனரை வைத்துக்கொண்டு பல நிகழ்ச்சிகளில் பொறுப்ப்பேற்க முடியும்..முன்னிலைபடுத்திக்கொள்ள முடியும்...பல முக்கியஸ்தர்களை நெருங்க முடியும்.அருமையான விசிட்டிங் கார்டு இது!

Kaliyan said...

பைப் வச்ச பிராவுக்கு ‘அஹா சூப்பர்’னு எச்சி ஒழுவ கமெண்ட் போட்ட ஆளுக்கெல்லாம் பதில் சொல்றதில்ல...

Kaliyan said...

நல்லநேர ராசா.. நீ கூகிள் பஸ்ல வாங்கின குத்துக்கு இன்னும் உம்மூஞ்சில ரத்தம் வருதுபாரு... அத முதல்ல தொடச்சிகிட்டுவா...போ..போ..

சி.பி.செந்தில்குமார் said...

>>Kaliyan said...

அட மொன்னையே... உடான்ஸ் தேதி அறிவிக்கப்பட்டது டிச.12, சங்கமம் தேதி டிச.10.. இது அங்க தெரியாது, அது இங்க தெரியாது.. ரெண்டுமே அந்த நேரத்துல மாத்தமுடியாம நடந்த நிகழ்ச்சிதான்..

ஒண்ணுந்தெரியாம சின்னபுள்ளத்தனமா பேசுறத நிறுத்து கொயந்த.. போயி வீட்ல பெரியவங்க இருந்தா வரச்சொல்லு.. போ..போ..

என் முக்கியமான கேல்விகளுக்கு நீங்க பதில் சொல்லலை. ஈரோடு கதிர்-ன் குழுமத்தில் உள்ளதாக சொல்லப்படும் பவள சங்கரி யார் என்றே சங்கவி சதீஷ்க்கு தெரியல, அவர் போஸ்ட் போடறப்ப ஃபோன் பண்ணி என் கிட்டே கேட்டார், கோமாளி செல்வா விழா நடக்கறப்ப காலை 11 மணிக்கு விழா ஹால் எங்கே, எப்படி வர்றது?ன்னு கேட்டார். குழுமம் உறுப்பினர்கள் 11 பேரில் அவர்களுக்குள்ளேயே அறிமுகம் இல்லாத போது எப்படி மற்ற பதிவர்களூக்கு அனைவரையும் அடையாளம் தெரியும்? அடையாளப்படுத்தவேண்டியது யார் கடமை?

சி.பி.செந்தில்குமார் said...

>>Kaliyan said...

பைப் வச்ச பிராவுக்கு ‘அஹா சூப்பர்’னு எச்சி ஒழுவ கமெண்ட் போட்ட ஆளுக்கெல்லாம் பதில் சொல்றதில்ல...

அண்ணே, நாங்க தான் சின்ன பசங்க, ஜொள் பார்ட்டி, நீங்க கண்ணியமான பதிவர் ஆச்சே, ஏன் அந்த மாதிரி கமெண்ட்ஸ், போஸ்ட் எல்லாம் படிக்கறீங்க, அய்யொ பாவம்

Astrologer sathishkumar Erode said...

நல்லநேர ராசா.. நீ கூகிள் பஸ்ல வாங்கின குத்துக்கு இன்னும் உம்மூஞ்சில ரத்தம் வருதுபாரு.//
நீங்க வாங்குன துடைப்ப கட்ட அடிய விடவா நான் வாங்கிட்டேன்...?யாருக்காக இப்படி உழைக்கிற..?

Astrologer sathishkumar Erode said...

யாரும் அடையாளம் காணப்படாமல் தான் ஒரே ஒருவர் மட்டுமே அடையாளம் காணப்பட வேண்டும் என்பதுதான் விழா பொறுப்பாளரின் முக்கிய நோக்கம்!!

Astrologer sathishkumar Erode said...

திருப்பூர் சேர்தளம் நண்பர்கள் யாரையும் முன்னிலைபடுத்திக்கொள்ளாமல் ஒரே யூனிஃபார்மில் வந்திருந்தனர்.அதுதான் ஒற்றுமை.வணங்குகிறேன்!!அவர்களில் யாரும் தலைவர்,செயலாளர் இல்லை போலிருக்கிறது...இணைய எழுத்தாளர்கள் யாரும், யாருக்கும் கீழ்படிந்து இல்லை!!

Kaliyan said...

//பவள, செல்வா//
அத ஈரோட்டுகாரங்கடதான் கேக்கணும் தம்பி...

என்கையப்புடிச்சி இய்த்தியான்னு எங்கபக்கம் வந்ததாலதான் இவ்ளோ பேசவேண்டிருக்கு.. உன்னாட்டம் மொன்னைகளுக்கு வௌக்கம் குடுத்தே நான் ஓஞ்சிப்போய்டுவேன் போலருக்கே...

Unknown said...

//Kaliyan said...
தோழர் ஆகாயமனிதன் அவர்களே பதிவரா இருக்கறவன்தான் கமெண்ட் போடணுனு எந்த மடையன் சொன்னான்..? //
நான் உங்களை பதிவரா என்று தானே கேட்டேன்...எதுக்கு கமென்ட் போட்டீங்கன்னா கேட்டேன்...
கேள்வி புரியாமல் பதில் சொல்பவனை தான் மடையன் என்று சொல்வார்கள்...
Kaliyan என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் உங்களை விமர்சனம் செய்ய எனக்கு இருகின்றது ?!
எழுத்தில் எவனும் எவனையும் வெட்டி சாய்த்து விடமுடியாது !

Astrologer sathishkumar Erode said...

//பவள, செல்வா//
அத ஈரோட்டுகாரங்கடதான் கேக்கணும் தம்பி..//
அப்பதானே சந்தேகம் வராது...? மெட்ராஸ் பதிவர்கள் யாருக்கும் இங்கு வந்து சண்டை போடும் அவசியம் இல்லை.முகத்தை மறைக்கும் தேவையும் இல்லை.

test said...

hi friend i m kolly........Tamil actor news gallerys and trailers dailly update please visit :http://www.kollywoodthendral.in/

நிரூபன் said...

அன்பிற்குரிய நண்பர்களே,

நாம் எல்லோரும் நண்பர்கள் தான்,
சென்னை, ஈரோடு, அப்படி வேறுபாடு ஏதும் வேண்டாம்! நடந்தவை எல்லாம் நன்மைக்கே என்று கருதி, அடுத்த வருடம் ஓர் சந்திப்பினை இச் சந்திப்பில் பெற்றுக் கொண்ட பாடங்கள் மூலமாக நல்ல முறையில் நடத்திக் காட்டுவோம்!

அடியேனும் வாரேன்! ஹே...ஹே..

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஜமூக நன்மைக்கு விருது எல்லாம் கொடுத்தாங்களே என்ன அடிப்படையில ?

ஹிட்ஸ் ?

4 பேருக்கு தெரிவது ?

யார் தேர்ந்தெடுத்தது ? குழுவா?

Unknown said...

மைனஸ் ஓட்டு நிறைய விழுந்திருக்கு......
ஈரோட்டுக்காரன் என்கிறமுறையில்... பதிவுலக சந்திப்பில் கலந்துகொண்டவன் என்கிறமுறையில் நான் கருத்திட வருகிறேன்,சிபிதான் பதிவுலத்தில் என்னை எழுத ஊக்கப்படுத்தியவர் என்பது பதிவுலகில் அனைவருக்கும் தெரியும்,தெரியவில்லையென்றால் தெரிந்துகொள்ளுங்கள்,அதற்க்காக அவர் சொல்லுவதை எல்லாம் நான் ஏற்றுக்கொள்ளமுடியாது,

பரிசளிப்பு விழா முடிந்ததும்...அனைவரும் ஓடிவிட்டார்கள்.....நீங்களே உங்களை அறிமுகப்படுத்திக்கங்க என்று கூறி விட்டு அப்படி எங்கே? போனர்கள்?அவசர வேலையாக சென்றார்களா?இல்லை மண்டபத்திக்கு வெளியே அரட்டையடித்துக்கொண்டிருந்தார்கள் நிற்க கதிர் உற்பட.....நாங்கள் அவ்வளவு கேவலமாக..போய்விட்டோமா?எங்க பிஸினஸ் எல்லாம் விட்டுக்கொண்டு எதற்க்கு வந்தோம் பணம் சம்பாரிக்கவா...?ஒரு வார்ததை இவர்தான் என்று அறிமுகப்படுத்த....யாருமே இல்லையா?அந்த அறிமுகத்துக்காகத்தானே வந்தோம்,அதை மெட்ராஸ்பவன் சிவக்குமார் சங்கவியிடம் தெளிவாக கூறியதும் வருந்தினார் அடுத்தமுறை சரிசெய்வதாக....மன்னிப்பும் கேட்டார்....

சங்கவியின் தளத்தைப்படித்துவிட்டு நாங்களே போன் செய்து கேட்டோம்...நான் முதன்முதலில் கேட்ட கேள்வி ஏன் சிபி பெயரை போடவில்லை என்று மெயிலிலும் கேட்டேன்...அதற்க்கான பதில் கிடைக்கவில்லை.....பிறகு எதாவது அரசியலாக இருக்கும் என்று விட்டுவிட்டோம்.

அதன் பிறகு சங்கவி எங்களுக்கு பலமுறை போன்செய்து மண்டப வழி கூறி...கண்டிப்பாக வரவேண்டும் என வலியுருத்தினார்...அங்கு சென்ற எங்களை கதிர் அவர்கள்,தாமேதரன் அய்யா அவர்கள்,சங்கவி அவர்கள்,வரவேற்றார்களே தவிர ஈரோட்டு சிங்கங்கள் சீந்தக்கூட இல்லை...அட அறிமுகம் கூட இல்லை....எங்களை நட்புடன் அரவணைத்தது சென்னை நண்பர்கள்தான்....ஆருர்மூனா....,சிவக்குமார்,நாய்நக்ஸ் நக்கீரன்,பிரபா,தமிழ்வாசி பிரகாஸ்,இவங்க எல்லாம் ஈரோட்டுக்காரர்களா? உங்களிடம் நானே சென்று வலியஅறிமுகம் செய்துகொண்டேன்....ஈரோட்டுக்காரனான என்னையே நீங்க உங்க நண்பர்கள் கண்டுக்கிலையே....நீங்கள்...கேள்வி கேட்பது வேடிக்கைதான்....

Unknown said...

SureshkumarK.S.
to sangkavi2011

அன்புள்ள
சங்கவி அவர்களுக்கு வணக்கம். ஈரோடு பதிவர் சந்திப்பு பற்றி உங்கள் பதிவில் படித்தேன், மிக மகிழ்ச்சி! நான் இது வரை பதிவர் சந்திப்பில்
கலந்து கொண்டதில்லை. முதன் முறையாக கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டிருக்கின்றது.கண்டிப்பாக வருவேன் நண்பர்களையும் உங்களையும் சந்திக்க வேண்டும்.சிபி கலந்து கொள்ளவில்லையா?அவரின் தொலைபேசி என் இல்லை.
நட்புடன்
வீடு சுரேஸ்

pulipandi said...

இந்த பதிவின் மூலம் சிபியோட வெள்ளந்தி மனச பார்க்க முடிஞ்சது.
நினைச்சத எழுதின அவரோட கருத்தை எதிர்கொள்ளாம நெடுக தாக்குதல் ஆனால் யாருமே விளக்கம் சரியா தரல.
விமர்சனங்கள உள்வாங்கி தவறுகள களஞ்சி அடுத்த முறையாவது நல்ல முறையில நடத்துங்க

pulipandi said...

ஈரோடு பதிவர்களை பத்தி தெரியாது ஆனால் சென்னை பதிவர்கள் யாரும் அரசியல் இல்லைனு கும்மி அடிக்க வேணாம்.
அதான் இண்ட்லி பிளாகர்ஸ் நடத்திய விழாவிலே பல்லிளிச்சுதே மறந்து போச்சா.
லக்கி கூட ஒரு பதிவு எழுதினாரே ஜாக்கிக்கு சான்ஸ் கிடைக்காம போய்டுச்சின்னு
அதெல்லாம் வேண்டாம்னு சொன்னா சிபி கெட்டவனா யோசிக்கவும்

Anonymous said...

@sibi

நேரம் ஒதுக்கலைன்னு சொல்லலை. மதிய உணவு முடித்து விட்டு பேசலாம் என்று அவர் சொன்னதாக சொன்னேன். இரண்டிற்கும் வித்யாசம் உண்டு.

Romeoboy said...

\\( இந்த மேட்டர் விழாவுக்கு வந்த சென்னை பதிவர்கள் சொன்னது ) //

அந்த அப்ரசண்டி யார்ன்னு தெரியனும் பாஸ். இவ்வளவு சொல்லிட்ட பிறகு அவர்கள் பெயரை மறைத்து கொண்டு இருப்பதில் இருந்தே தெரிகிறது நீங்க கதைகட்டி விட்டு இருக்கீங்கன்னு

ப.கந்தசாமி said...

@சி.பி.செந்தில்குமார்

ஏதாச்சும் நல்லது நடந்தா சந்தோஷம். என்னைப்போல பெரிசுகளுக்கு வருவதற்கு உற்சாகமாக இருக்கும். இந்த வருடம் கொஞ்சம் ஏமாற்றமடைந்தேன்.

யுவகிருஷ்ணா said...

சிபி!

யாரோ சென்னைப் பதிவர்கள் சொன்னதாக நீங்கள் குருட்டாம்போக்கில் அடித்து விட்டிருக்கிறீர்கள். அது இங்கே பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் போலிருக்கிறது :-(

சொன்னது யாரென்று கூட சொல்ல வேண்டாம். இவர்கள் எல்லாம் சொல்லவில்லை என்று ஒரு லிஸ்ட் போடுங்கள். அட்லீஸ்ட் என் தலை மட்டுமாவது தப்பிக்கும்.

மற்றபடி, இந்தப் பதிவு ஹிட்டுக்காக போடப்பட்டதாக தெரிகிறது. உங்களது முந்தைய இரு பதிவுகள் இந்த க்ளைமேக்ஸை நோக்கியே போடப்பட்டதாகவும் நினைக்க வேண்டியிருக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

யுவகிருஷ்ணா said...

சிபி!
.

மற்றபடி, இந்தப் பதிவு ஹிட்டுக்காக போடப்பட்டதாக தெரிகிறது.

யுவா, காமெடி பண்னாதீங்க, ஹிட்டுக்காக போஸ்ட் போடனும்னா ஒரு டப்பா படத்துக்கோ அல்லது வீணா போன ஒரு கில்மா படத்துக்கோ விமர்சனம் போட்டு ஹிட்ஸ் அடிச்சிடுவேன்.என் மனசில் பட்டதையும் , சிலர் சொன்னதையும் வெச்சு போஸ்ட் போட்டேன், அதை பலரால் ஏத்துக்க முடியல .

நான் மீண்டும் சொல்வது பாலிடிக்ஸ் வேணாம்கறதுதான், அப்படி ஏதும் இல்லைன்னா சந்தோஷம்

சி.பி.செந்தில்குமார் said...

>>அருண்மொழித்தேவன் said...

\\( இந்த மேட்டர் விழாவுக்கு வந்த சென்னை பதிவர்கள் சொன்னது ) //

அந்த அப்ரசண்டி யார்ன்னு தெரியனும் பாஸ். இவ்வளவு சொல்லிட்ட பிறகு அவர்கள் பெயரை மறைத்து கொண்டு இருப்பதில் இருந்தே தெரிகிறது நீங்க கதைகட்டி விட்டு இருக்கீங்கன்னு

18 வருடங்கள் பத்திரிக்கைத்துறையில் பணியாற்றியும் , ஒரு வருடம் வலைப்பூவில் பதிவு எழுதியும் வருகிறேன், இதுவரை கதை கட்டிய அனுபவ்ம் இல்லை, சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும் காலம் அதை உணர்த்தும்

சி.பி.செந்தில்குமார் said...

>>veedu said...

....ஈரோட்டுக்காரனான என்னையே நீங்க உங்க நண்பர்கள் கண்டுக்கிலையே....நீங்கள்...கேள்வி கேட்பது வேடிக்கைதான்....

எனது முதல் பாக, 2ம் பாகத்தில் நீங்கள் போட்ட கமெண்ட்டை மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்க


நான் கேள்வி எல்லாம் கேட்கவில்லை, யாரையும் குறை கூறும் எண்னமும் இல்லை, வரும் காலங்களீல் இந்த தவறுகளை களையனும்னு தான் சொன்னேன், சொல்றேன்

Kodees said...

விமர்சனத்தை சரியான முறையில் எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும் :)