Tuesday, December 13, 2011

ஆஃபீஸ் ஸ்டெனோ ஜோக்ஸ்


1. சிறை நிரப்புங்கள்: பொதுமக்களுக்கு அன்னா ஹசாரே அழைப்பு # உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? நாங்க ஆஃபீஸ் போகவேணாமா?பூவாவுக்கு என்ன வழி?

-------------------------------------------

2. கவர்ச்சி ரொம்ப நல்லது! வித்யா பாலன் பளிச்!!  # என்னமோ கறை நல்லதுன்னு சொல்ற மாதிரி சொல்றீங்களே?நீங்க படிச்சது ஓப்பன் யுனிவர்சிட்டி?

--------------------------------------------

3.டாக்டர், பப்பாளி தேன் 2ம் சேர்த்து சாப்பிட்டா என்னாகும்? 

உங்களுக்கு சீக்கிரமே சுகர் வரும், அந்த கடைக்கு நல்ல வருமானம் வரும்

-----------------------------------------

4. Rajnikanth turns 62 என்று ஒரு செய்தி! எதுக்கு 62 முறை திரும்பினார் ?? 

அவருக்கு வயசுதான் 62, ஆனா மனசளவுல 26ன்னு அர்த்தமோ?

-------------------------------------

5. எனக்கு ட்விட்டர்ல யாரையும் அவ்வளவா தெரியாது.. 

டெய்லி கேரட் சாப்பிடுங்க, நல்லா தெரியும் # ஜஸ்ட் KIDDING

--------------------------------------
6. கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் படத்திற்கு இதுவரை ரூ.52 கோடி செலவிடப்பட்டுள்ளது # அரோகரா அரோகரா கோவிந்தா கோவிந்தா 

------------------------------------

7. அரோகரா, கோவிந்தா 2ம்  ஒன்னா சொல்ல மாட்டாங்க ,  

ஹா ஹா அதாவது படம் தமிழ்நாடு, ஆந்திரா 2 பக்கமும் ஊத்திக்கப்போவுதுன்னு சொல்லவந்தேன்

-----------------------------------

8. தமிழ்நாட்ல எந்த ஆட்சி வந்தாலும் கரண்ட்டே இருக்கறதில்லையே ,ஏன்? 

பவர் ஸ்டார் யார்?னு எல்லாருக்கும் தெரியும், ஆனா பவர் கட் ஸ்டார் யார்?னு தெரியலையே?

---------------------------------------

9.உங்க மனைவிக்கு கோபம் வந்தா என்ன நடக்கும்? 

ஹூம், என்ன வேணாலும் நடக்கும்.. 

----------------------------------


10. ஹெல்மட்டால் குழப்பம் -கணவன் என நினைத்து வேறு ஒருவருடன் பைக்கில் சென்ற பெண் # நீதி - ஹெல்மெட் போட்டா தப்பிச்சுக்கலாம்

-------------------------------

11. டாக்டர், உடம்பு குறையனும்னா என்ன சாப்பிடனும்? 

எதுவும் சாப்பிடக்கூடாது

------------------------------------


12.ஆசிரியர் - மாதா , பிதா குரு , தெய்வம் - எங்கே சொல்லு


மாணவன்  - - சதா, சுதா , ஸ்ருதி , தெய்வானை

----------------------------------

13.கழுதை கெட்டா குட்டிச்சுவரு-இதுக்கு என்ன மீனிங்?

சலவைத்தொழிலாளியிடம்  (வண்ணானிடம்) பொதி சுமைக்கும் கழுதைகள் OP அடிக்க S  எஸ்கேப் ஆனால் குட்டிசுவர் பக்கமே ஒதுங்கிஇருக்கும்

---------------------------------------

14. டாக்டர் சீனிவாசன் ,நத்தம் விஸ்வ நாதன், என்ன வித்தியாசம்?

அவரு பவர் ஸ்டாரு , இவரு பவர் கட் ஸ்டாரு

-----------------------------------

15. மேடம், உங்க வீட்ல ஏன் நெட் கனெக்‌ஷன் இல்லை?

என் புருஷனுக்கு எந்த கனெக்‌ஷனும் இருக்கக்கூடாதுன்னு மேரேஜ் ஆனப்ப எங்கம்மா எச்சரிச்சாங்க

----------------------------------
16. என் புருஷன் ஒரு லூசுங்க..

அடடா, அவரும் உங்களை மாதிரி தானா? MAD FOR EACH OTHER?

---------------------------------

17. டியர், காதலுக்காக நான் உயிரையே தருவேன்...

தருவீங்கன்னு தெரியும், உயிரை விடுவீங்களா?

----------------------------

18. உங்க பொண்ணு ஒரு நடிகையா?

ஆமா, எப்படி தெரியும்?

டைவர்ஸ் வயசுல ஒரு பொண்ணிருக்கான்னு சொன்னீங்களே?

----------------------------------


19.Followersக்கு வாழ்த்துறாங்க ,  Followingக்கு வாழ்த்துவதில்லையே ஏன் ?

1000 பேரை நாம சைட் அடிப்போம், அது கணக்கில்லை, நம்மை எத்தனை பேர் சைட்?அதுதான் கணக்கு

-----------------------------------

20.மேனேஜர் சார், பேலன்ஸ் வேலையை வீட்ல முடிங்கனு நீங்கதானே சொன்னீங்க?

அதுக்காக? ஃபைலை மட்டும் எடுத்துட்டு போங்க, ஸ்டெனோ எதுக்கு?

( ஒரு வேளை ஸ்டெனோவை அவர் கூட்டிட்டு போறாரோ என்னவோ?)

--------------------------------------------


13 comments:

Unknown said...

செவ்வாய்கிழமை உளுந்து வடை !

வெளங்காதவன்™ said...

தங்கள் பொன்னான பணி தொடரட்டும்...

:-)

Unknown said...

எல்லாம் வல்ல இறைவா நீ பாத்துக்க எல்லாத்தையும்...அண்ணே எல்லாம் நல்லா இருக்கு!

ராஜி said...

.உங்க மனைவிக்கு கோபம் வந்தா என்ன நடக்கும்?

ஹூம், என்ன வேணாலும் நடக்கும்..

----------------------------------

அடி பலமோ

Yoga.S. said...

வணக்கம்,சி.பி.செ சார்!ஜோக்செல்லாம் நல்லாருக்கு!பேபி ஸ்டில்ஸ் அசத்தல்!

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால அரைமணி நேரம் கழிச்சிதான் உன் பிளாக் ஒப்பன் ஆகி இருக்கு என்னடா ஆச்சு...?

MANO நாஞ்சில் மனோ said...

அவரு ஒரு லூசுன்னா, இதை எழுதுன நீயும் லூசா அண்ணே ஹி ஹி..

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாம் சிரிக்கும் பல்லாக்குகள் நன்றி அண்ணே...!

கிஷோகர் said...

http://kishoker.blogspot.com/2011/12/2.html

Menaga Sathia said...

எல்லாம் சூப்பர்ர்!!

Rathnavel Natarajan said...

அருமை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வழமைபோல்...

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

பஸ்ட் ஒன் சூப்பர்............