Saturday, December 10, 2011

யூத்துங்களுக்கான யூத்தால் எழுதப்பட்ட யூத்ஃபுல் ஜோக்ஸ் ஹி ஹி1. செயின் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டனர்-ஜெ#ஆனா நெக்லஸ் திருடர்கள் எல்லாம் இன்னும்இங்கே தான் மேடம் இருக்காங்க அஜாக்கிரதை நோ

---------------------
2. கேர்ள் ஃபிரண்ட்ஸ் அதிகம் இருக்கும் இளைஞனை யாரும் திட்டத்தேவை இல்லை.பெண்களுக்கு அதிக வாய்ப்பு தரும் கொள்கை கொண்டவனாக கூட இருக்கலாம்

-------------------
3. தனக்கு திருமணம் ஆன பின்பும் கூட தன் பெற்றோரை கடைசி காலம் வரை காப்பாற்றும் இயல்பு ஆணை விட பெண்ணுக்கே உண்டு என்பதால் பெண் குழந்தை பெஸ்ட்

----------------
4. பெண்கள் கூந்தலில் சூடும் பூச்சரம் கட்டிய பூக்களாக கடையில் வாங்கியதா?உதிரிப்பூக்களாக வாங்கி கட்டியதா? என்பதை நுட்பமானவன் கண்டறிவான்

------------------
5. கலைஞர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் செல்லாது-ஜெ அறிவிப்பு ,கணவர்கள் கொண்டாட்டம்,மனைவிகள் திண்டாட்டம்#இமேஜினேஷன்

-------------------

6. மழையில் நனைவது பிடிக்கும் என கவிதை எழுதுகிறவர்கள் எல்லாம் குடையுடன் மழை நாளில் நடப்பதை பார்க்கலாம்#சைக்காலஜி

------------------

7. டைம் ப்ளீஸ் என்ற பழைய டெக்னிக்கை துறந்து ஆண்கள் நேம் ப்ளீஸ் மிஸ் என டைரக்டா மேட்டருக்கு வந்துடறாங்க#ஜெண்ட்ஸ்ஸ்லாஜி

---------------------------

8. கோவிலில் ஃபிகரை சைட் அடிக்கையில் மனதில் குற்ற உணர்வு தோன்ற வாய்ப்பு இருப்பதால் ஆண் கோயிலுக்கு போவதை தவிர்க்கிறான்#சைட்டாலஜி

--------------------
9. ஜவுளிக்கடையில் துணி செலக்‌ஷன் செய்யும் ஃபிகரை நீ நிதானமாக சைட் அடிக்கலாம். அவள் உன்னை சட்டை செய்ய மாட்டாள்#சைட்டாலஜி

---------------
10. 300 கிமீ பயணம் செய்து ஊட்டி போய் மலர்க்கண்காட்சி பார்ப்பதை விட லோக்கல் ஈரோடு பஸ்ஸ்டேண்டில் ஃபிகர் கண் காட்சி பார்ப்பது சால சிறந்தது

--------------------- 


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/08/Kutralam.jpg 

11.ஆற்றில்,வாய்க்காலில்  போய் குளிக்கும் ஆண்கள் யாரையும் வேடிக்கை பார்க்காமல் குளியலை மட்டும் முடித்து வந்தால் அவர்கள்தான் யோக்கியசிகாமணிகள்#ஜிகிடி


-----------------------------------

12. ஞாயிற்றுக்கிழமைகளில் அண்டை வீடுகளின் ஃபிகர்கள் பரிச்சயம் ஏற்படும் நாள் என்பதால் அது ஆண்களுக்கு ஒரு விசேஷ நாள் எனலாம்#ஜிகிடி

-----------------------

13. பஸ்சில் மெசேஜ் அனுப்பும் ஃபிகர் தன்னைப்போல சிரிக்கும்போது எதற்கும் நீயும் சிரித்து வை.காதலனைப்போல நீயும் நெருக்கமாக அது குறுக்கு வழியாகலாம்


----------------------------

14. பெண்கள் எப்போதும் ரொம்ப நாசூக்கு. காதலனை கழட்டி விடும்போது கூட “டியர்,அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா அதுல நாம் சேர்வோம்” என பாசிடிவ் பதில்

--------------------------------

15. ஆண்களை விட பெண்களுக்கே விழிப்புணர்வு அதிகம் என்பதால்தான் காதலி பெயரை பச்சை குத்திக்கொள்ளும் காதலன் போல் காதலி காதலன் பெயரை குத்துவதில்லை

-------------------------------

Seljalandsfoss waterfall, Iceland
landscape-of-the-southern-iceland-iii.jpg

16. ஊமை,என்றோ பிசிக்கலி சேலஞ்சுடு என்றோ ரொம்ப கஷ்டப்பட்டு அவர்களை அழைக்க வேண்டியதில்லை,மவுன மொழி பேசுபவர்கள் என கண்ணியமாக அழைக்கலாம்

--------------------------------

17.முன் யோசனை என்பது என்ன?ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட அமரும்போது ரிசப்ஷனிஸ்ட்டை பார்த்தவாறு அமைந்த சேரில் இடம் பிடிப்பது.#ஜிகிடி

---------------------------

18. பஜ்ஜி சொஜ்ஜி போன்ற எண்ணெய்ப்பலகாரங்கள் சாப்பிடும்போது நாளை 4 ரவுண்ட் சேர்த்து ஓடவேண்டுமே என்ற கவலையுடன் நாக்கிற்கு அடிமை ஆகிறோம்

-----------------------------

19. ஊட்டி ஃபிளவர்ஷோவில் இயற்கை ரசிகர்கள் பூவை ரசிப்பார்கள்.இயற்கையின் படைப்பை ரசிப்பவர்கள் அங்கே வந்திருக்கும் பூவையை ரசிப்பார்கள்#ஜிகிடி

---------------------------

20.ஏய்.. ஏன் அப்படி என்னை சாப்பிடற மாதிரி பார்க்கறே? என்றாள்.சாமியார்களுக்குத்தானே உண்ணா விரதம் இருக்கத்தடை,எனக்கென்ன? என்றேன்#லவ்வாலஜி

--------------------------
San Rafael Falls Quijos River, Amazon Jungle, Ecuador
old-growth-rainforests-amazon-conservation.jpg
21. ஆண்,பெண் நட்பில் பல பெண்கள் ஒரு முன் ஜாக்கிரதைக்காக ஆணை அண்ணா என்கிறாள்,ஆனால் எதற்காகவும் ஆண் தங்கை என அழைப்பதில்லை#நீதி-ஆண் அஜாக்கிரதை!

-------------------
22. டவுன் பஸ்ஸில் பெண்களின் ஆதிக்கம்,சர்வீஸ் பஸ்ஸில் ஆண்களின் ஆதிக்கம்,கூகுள் பஸ்ஸில் பெண்களுக்காகப்பரிந்து பேசுபவர்களின் ஆதிக்கம்#பஸ்ஸாலஜி

------------------

23. கார்த்தியின் திருமணம் கோவையில்,தமனாவின் மனம் கோபத்தில்#கேன்சல் த ஷூட்டிங்க் &; சேட்டிங்க்,வாட்ச் அவுட் த வெட்டிங்க்

------------------

24  பிரதமருக்கு 129 தடவை கடிதம் எழுதிய மாயாவதி: ஒரு பதில் கூட இல்லை#இந்தம்மா கலைஞருக்கே அக்கா போல.சிலை வைப்பதிலும் ,உலை வைப்பதிலும்

--------------------------

25. கோயிலில் மட்டுமே பெண்கள் ஆண்களை (கடவுள்)சுற்றுகிறார்கள்,வெளி இடங்களில் ஆண் தான் பெண்களை சுற்றி சுற்றி வருகிறான்#காரியம் ஆகும் வரை

-------------------


26. ஆண்களைப்பிடிக்காதது போல பெண்கள் காட்டிக்கொள்கிறார்கள்,பெண்கள் மனதைப்படிக்காதது போல ஆண்கள் நடந்து கொள்கிறார்கள்#சைக்காலஜி

---------------

27. எப்போதும் வயிற்றைக்கொஞ்சமாவது காலியாக வைத்திருந்தால் உடலுக்கு நல்லது,பேச்சில் கொஞ்சமாவது ஜாலியை கொண்டிருந்தால் அது மனதுக்கு நல்லது

-------------------------

28. நம்மையே அடிக்கடி பார்த்தால் அது சுமாரான ஃபிகர்,நம்மை கொஞ்சம் கூட மதிக்காம,கண்டுக்காம தெனாவெட்டா இருந்தா அது சூப்பர் ஃபிகர்#சைட்டாலஜி

---------------------

29. ஆணின்மீது ஒரு பெண்ணைப்போல் அன்பு செலுத்த சிலரால் முடியாது,அதே ஆணுடன் பகை என்றால் அந்த பெண்ணைப்போல் வன்மம் காட்ட யாராலும் முடியாது

-----------------------
30. அழகா இருக்கே என பொய் சொன்னால் தான் பெண்கள் மயங்குகிறார்கள்,ஆனால் ஒரே ஒரு பார்வை மட்டுமே போதும்,ஆண்கள் மயங்குவதற்கு#சைக்காலஜி

------------------

31. தன் மனதுக்குப்பிடித்தவள் தன்னை ச்சீ போடா என சிணுங்கி கொஞ்சும் நாள் வாராதா என்று தான் ஒவ்வொரு காதலனும் காத்திருக்கிறான்


------------------------------------

32 .வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அரசு நிவாரன நிதி தருதே?பெண்ணின் உள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அதற்கு நிவாரண நிதி தருமா?#அரசு போண்டி ஆகிட ஐடியா

--------------

33. .ஜப்பானில் கடும் மின் தட்டுப்பாடு#ஆற்காடு வீரசாமிக்கு ஜப்பான்ல வேலை கிடைச்சுட்டுதா? சொல்லவே இல்ல?

---------------------


34.  உண்மையான அன்பு கண்ணுக்குத்தெரியாமல் இருக்கலாம்,ஆனால் அதை மறைக்க முடியாது

---------------

35 கணவன்மேல் பற்றுள்ள பெண்கள் மாங்கல்யத்தை கண்களில் ஒத்திக்கொள்கிறார்கள்,மனைவி மேல் பற்றுள்ள ஆண்கள் ஃபோட்டோவை பர்சில் வைத்துக்கொள்கிறார்கள்


25 comments:

கடம்பவன குயில் said...

முதல் யூத் நான்தானா!!!ஹா...ஹா...

ராஜி said...

23 tweet. Pazhasu pola iruke.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யாருப்பா இங்க யூத்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வணக்கம் பெரியரே...

கடம்பவன குயில் said...

தலைப்பை வன்மையாக கண்டிக்கறேன் யவர் ஆனர். யூத்தால் எழுதப்பட்ட என்ற வார்த்தையை அப்ஜக்ட் பண்றேன்.

யூத்துகளுக்கான யூத்புல் ஜோக்ஸ்ன்னு சொன்னால்தான் 100% சரியாயிருக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா நீ யூத்தாடா ராஸ்கல்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஓ அதுதான் பெண்கள் பச்சை குத்துவதில்லையோ நயன்தாரா போல...?!!!

MANO நாஞ்சில் மனோ said...

சரியா சொன்னேடா அண்ணா, மழை பிடிக்கும்னு சொல்றவன் குடை பிடிக்க தவறுவதில்லை...!!! அதுக்கும் ஒரு நேரங்காலம் இருக்குல்லாப்பா...???

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
chinnapiyan said...

Youth Booth. Except a few, every jokes like comments are enjoyed by me. keep going. best wishes.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

2 யாரு நீங்களா? ஆனா இளைஞன்னு சொல்லி இருக்கீங்களே?

சரியில்ல....... said...

Super vaaththiyaare.... Addakaasam....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

10 "காதல் மலர் கூட்டம் ஒன்று"

கும்மாச்சி said...

எல்லாமே சூப்பர், சி.பி.

ராஜி said...

பெண்கள் கூந்தலில் சூடும் பூச்சரம் கட்டிய பூக்களாக கடையில் வாங்கியதா?உதிரிப்பூக்களாக வாங்கி கட்டியதா? என்பதை நுட்பமானவன் கண்டறிவான்
>>>
ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி தான் சிபி சார்

ரிஷபன் said...

எல்லாமே சூப்பர்.
பேச்சில் கொஞ்சமாவது ஜாலியை வைத்துக் கொண்டிருந்தால் பதிவுக்கும் நல்லது.

Yoga.S. said...

ஜோக்ஸ் எல்லாம் அருமை!ஆனா,யூத்துங்களுக்கான ////யூத்தால்/// என்கிறது தான் கொஞ்சம் உதைக்குது!

karai shiva said...

தல சூப்பர் தல

சுதா SJ said...

இதை படிச்சு நானும் ஒரு யூத் என்பதை நிருபிச்சுட்டேன்.... ஹா ஹா

சுதா SJ said...

பாஸ் அந்த ரெண்டாவதா சொன்ன மேட்டருக்கு தேங்க்ஸ்.... எங்க பெருந்தன்மையை நீங்களாவது புரிஞ்சு கிட்டீங்களே.... ஹா ஹா

மின் வாசகம் said...

எப்பூடி உங்களால் மட்டும் இப்பூடி ...

Admin said...

வழக்கம் போலதான் என்னத்த சொல்றது..பிரமாதம்..

Mathuran said...

முதல் ஏழும் அசத்தல். அதிலும் ஐந்தாவது திருமணம் ரத்து விடயம் கலக்கலோ கலக்கல்

குறையொன்றுமில்லை. said...

ஓ இது யூத் களுக்கான பதிவா. அப்ப நான் எஸ்கேப்பூ.

arul said...

nice