Thursday, December 01, 2011

போராளி - ஹிட் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRpbiz-544ZRauuqmvEc1mCvHMbNfqb7GojRFnDKzgxEw54PZ9DVRYJ7UzKXx287OPzSk7Y6X9vwj64vjUL_NFqbk_I2MQ0v4F96BTleXQwNqyjL0qQlBkMRKSaRBF9WArEzgw5kXlzA/s1600/02.jpg

எம் சசிகுமார்க்கு சினி ஃபீல்ட்லயும் சரி, தனி மனித வாழ்க்கைலயும் சரி ஒரு நல்ல பேர் இருக்கு.. அது என்னான்னா அவர் நட்புக்கு முக்கியத்துவமும் மரியாதையும் தருவார், இயக்குநர் சமுத்திரக்கனியோட  அவர் கை கோர்த்த சுப்ரமணியபுரம், நாடோடிகள் படங்கள் நட்பை பேஸ் பண்ணுன படங்கள் தான் .இந்தப்படத்துலயும் அதே கருத்துதான், சொந்த பந்தங்களை நம்பாதே, நட்பு தான் கை கொடுக்கும்ங்கறது தான் ஒன் லைன்.. அது எந்த அளவு ஒர்க் அவுட் ஆகி இருக்குன்னு பார்க்கலாம்..

சசிகுமாரும், அல்லாரி நரேஷும் ஒரு அபார்ட்மெண்ட்ல புதுசா குடி வர்றாங்க.. அங்கே குடி இருக்கற எல்லாருக்கும் உதவி செய்யறார் சசி... ஹவுஸ் ஓனரே தன் பெண்ணை கல்யாணம் கட்டிக்குடுக்கற அளவு  க்ளோஸ் ஆகி நல்ல பேர் எடுக்கறார்..அந்த சமயத்துலதான் இவங்க 2 பேரும் பைத்தியங்கன்னு ஒரு குரூப் வந்து சொல்லுது.. 

இப்போ இடைவேளை.. அதுக்குப்பிறகு ஃபிளாஸ்பேக்.. அவங்க 2 பேரும் ஏன் அப்படி ஆனாங்க?கிராமம் , சொந்த பந்தம் , உறவு ,அடிதடி வெட்டு குத்து , துரத்தல் எல்லாம் முடிஞ்ச பின் சுபம்.. உஷ்  அப்பா மூச்சு வாங்குது.. படம் பார்த்த நமக்கே இப்படி மூச்சு வாங்குதே படம் பூரா ஓடிட்டே இருந்த ஆட்களுக்கு எம்புட்டு மூச்சு வாங்கி இருக்கும்?

சமுத்திரக்கனிக்கு ஒரு வார்த்தை முதல்ல உங்க பேட்டர்ன் மாத்துங்க.. ஒரே மாதிரி கதை, ஒரே யூனிட் ஆட்கள் ,சேசிங்க் எல்லாம் எங்களுக்கு மனப்பாடம் ஆகிடுச்சு..

http://www.metromatinee.com/gallery/a3827/large/Nivedita25688.jpg

சசிகுமார் நடிப்பில் நல்ல முன்னேற்றம்.. பொண்ணுங்களை சரியா கண்டுக்காம இருந்தவர் இந்தப்படத்துல கொஞ்சம் கண்டுக்கறார்..அவர் ரெட்டைக்குதிரையில் ஸ்லோமோஷனில் எம் ஜி ஆர் கணக்காய் வருவதெல்லாம் ஓவர்.. ஃபிளாஸ்பேக் கதையில் கொஞ்சம் மனதை தொடும் கதை இருந்தாலும் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.. 

சமுத்திரக்கனிக்கு கிராமத்து மணிரத்னம் ஆகலாம்னு ஒரு முடிவோட தான் கிளம்பி இருக்கார் போல.. பாதி படம் இருட்டு தான்.. எனக்கென்ன டவுட்னா நார்மல் வெளிச்சத்துல இயல்பான கிராமத்தை காட்னா யாராவது ஊரை விட்டு ஒதுக்கி வெச்சுடுவாங்களா?

ஸ்வாதி சொல்லவே வேணாம்.. செம ஃபிகர், அவர் சிரிக்கறப்ப அந்த தெத்துப்பல் அழகுக்கே அம்பது ரூபா சரியாப்போச்சு.. ஆரம்பத்துல அநியாயத்துக்கு முறுக்கிட்டு இருக்கற அவர் ஹீரோ கிட்டே காதல் வந்ததும் என்னமோ ரொம்ப அர்ஜெண்ட்டா செவ்வாய் கிரகத்துக்குப்போற கடைசி பஸ்ஸை பிடிக்கற அவசரம் மாதிரி என் ;லவ்வுக்கு பதில் சொல்லுங்க அப்டிங்கறதெல்லாம் ஓவர்.. பெண்களை குறை சொல்லக்கூடாதுங்கற உயர்ந்த (!!!!) லட்சியம் வெச்சிருக்கறதால ஸ்வாதி சில சமயம் தேவையே இல்லாம சிடுமூஞ்சியா வர்றது பற்றிய விமர்சனத்தை அவைக்குறிப்பில இருந்து நீக்கிடறேன் ..

நரேஷ் நடிப்பு செம.. கேவலமான கவிதையை ரெடி பண்ணி ரூட் போடறப்பவும் சரி , செகன்ட் ஆஃப்ல மன நிலை பாதிக்கப்பட்டவரா காட்டும்போதும் சரி செம நடிப்பு..  தன் சொந்த தயாரிப்பா இருந்தாலும் சக நடிகருக்கு இந்த அளவு வாய்ப்பு கொடுத்ததற்கு சசிகுமாரை பாராட்டலாம்.. 

50 புரோட்டா சாப்பிட்ட காமெடியனும், கஞ்சா கறுப்பும் அவங்க பங்குக்கு சிரிக்க வைக்கறாங்க.. அப்புறம் நிவேதா , வசுந்த்ரராக்‌ஷாயப் ( பேரே வாய்ல நுழைய மாட்டேங்குது) 2 பேரும் படத்துல பெரும்பாலும் உம்மணாமூஞ்சியாவே வர்றாங்க .நல்ல ஸ்மைலிங்க் ஃபேஸ் இருந்தும் கோபக்கார பொண்ணா , சிடு சிடு கேரக்டரா அவ்ளவ் தூரம் காட்டி இருக்க தேவை இல்லை

பாடல்கள் பாஸ் ரகம்.. நாடோடிகள் படத்துல வர்ற மாதிரியே ஒரு சேசிங்க் பாட்டு இருக்கு ( ஜகடம் ஜெகடம் ஜெக ஜெகஜம் ஜம் சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ)http://reviews.in.88db.com/images/Swathi/actress-swathi-saree-photos27.JPG

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  விலங்குகள் சத்தத்தை வெச்சே அவங்க குணத்தை சொல்லிடலாம்.. ஆனா மனுஷன் எப்போ எந்த குணத்துல  இருப்பான், காட்டுவான்னு சொல்லவே முடியாது.. அப்படிப்பட்ட மனுஷங்களோட வாழ்க்கை நடத்தும் எல்லாருமே போராளிங்கதான்..

2. இந்த உலகத்துலயே  லெட்டர் போட்ட அட்ரஸ்க்கே வந்து அவங்க எழுதுன லெட்டரை பிரிச்சுப்படிக்கற ஒரே ஆள் நீங்க தான்

3.  பேச்சிலர்க்கு வீடு தரமாட்டேன்.. எனக்கு ஒரு பொண்ணு இருக்கு...

வீட்டைத்தானே வாடகைக்கு கேட்டோம், பொண்ணையா கேட்டோம்?

( பாக்யா ஜோக்  2008 வலங்கை மான் நூர்தீன்)

4. அவங்களைப்பார்த்தா உருப்படற மாதிரியே தெரியுது.. ஒரு ஒளிவட்டம் தெரியுது..

5. அவங்க யார்னு தெரியுமா?

சாரிங்க, எனக்கு என் சம்சாரம் சாந்தியைத்தவிர வேற யாரையும் தெரியாது..

6.  போடா.. போ போய் வேலையைப்பாரு.. 

ஹலோ, வேலை கிடைச்சா போய் இருக்க மாட்டோமா? வேலை இல்லாததால தானே இப்படி வெட்டியா சுத்திட்டு இருக்கோம்?

7. படிச்சவனுக்கு ஒரு வேலை, படிக்காதவனுக்கு பல வேலை.. 

8. டேய் பார்த்துடா, படிச்சு கிடிச்சு கலெக்டர் ஆகிடப்போறானுங்க

( சேம் டயலாக் இன் அறைஎண் 305 இல் கடவுள் பை த சேம் பர்சன் கஞ்சா கறுப்பு )

9.  கட்ன பொண்டாட்டி மேலயும், பெத்த பொண்ணு மேலயும் நம்பிக்கை இல்லாதவன் தான் பேச்சிலர்க்கு ரூம் தர யோசிப்பான்

(ம்க்கும், நீங்க கிண்டிக்கிட்டு போய்டுவீங்க)


10. பெட்ரோல் பேங்க் இல் - ஃபிகரு - நீ  செட் செஞ்சியா?


நான் எதும் செட் செய்யலை..

நீ ஏதும் கரெக்ட் செஞ்சியா? 

ம்ஹூம், நான் எதும்  கரெக்ட் செய்யலை.

இந்த டபுள் மினிங்க்ல பேசறது எல்லாம் வேணாம்..


http://3.bp.blogspot.com/-jp0QrkQOIBY/TcqjGQfcYlI/AAAAAAAABGA/Cxkns-UVO3Q/s1600/swathi_in+porali.jpg

11.  என் காதல்  கவிதையை கேளு.. நிலவே நிலவே நீ நில்லு.. என் மனசில நீதான் பாறாங்கல்லு.. எப்பவும் போதையா இருக்கற பனைமரக்கள்ளு.

. ( இந்த மாதிரி கவிதை எழுதுனா செட் ஆகற ஃபிகரும் செட் ஆகாது)

12.  எப்பவோ கிடைக்கற  பால்கோவாவை விட இப்போ கிடைக்கற பப்பர்மெண்ட் மிட்டாய் தான் முக்கியம்..

13. ஆமா ரஜினி படமா ரிலீஸ் ஆகுது? டாஸ்மாக்ல எதுக்கு இவ்ளவ் கூட்டம்?

சம்பாதிக்கற பணத்தை எல்லாம் இங்கே தானே கொண்டுவந்து கொட்றாங்க?

( விக்கி தக்காளீ, லேப்டாப் மனோ கவனிக்க)

14. வேடிக்கை மட்டும் பாருங்க.. ஏதாவது உதவி  கேட்டா ஒதுங்கிடுங்க..அப்புறம் என்ன இதுக்கோசரம்டா இங்கிலீஷ் படிச்சீங்க? 

15.  ஹீரோயின் - சிலோன் புரோட்டா வேணும்..

எனக்கு சிலோனே பிடிக்காது

16. சொந்த பந்தம் எல்லாம் சும்மா.. அவங்கவங்க லைஃபை அவங்கவங்க தான் பார்த்துக்கோனும்..


17. உன்னை நானே தூக்கிட்டு போகட்டா.. அப்படி பார்க்காதே. அண்டாவை தூக்கற ஃபீலிங்க்லதான் உன்னை தூக்குவேன்..


இல்ல, என்னை தூக்கற ஃபீலிங்க்லயே தூக்குங்க..


உன்னை தூக்கறதும் அண்டாவை தூக்கறதும் ஒண்ணுதான்

( பருத்திப்பூ போல் லேசாக இருக்கும் ஸ்வாதியை அண்டா என வர்ணித்ததை அகில இந்திய ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி )

 18.  என்னடி.. அங்கே பார்த்துட்டே ஆர்டர் பண்றே?

போய் ஒரு லிட்டர் இண்டியன் ஆயில் கொண்டு வா..


அது எங்க கம்பெனி நேம்..

சரி பெனாயில் கொண்டு வா,,

19.  உன் முகத்துல 3 புள்ளி.. அப்புரம் ஒரு ஆச்சரியக்குறி...

( 2 கண்கள், உதடு புள்ளீயாம், மூக்கு ! வாம் அய்யோ ஹய்யோ)


20. நாம் விரும்பற கிளியை விட நம்மை விரும்பற குரங்கு மேல்..


http://www.bujjigadu.com/wp-content/uploads/2011/11/allari-naresh-porali300.jpg

21.  டேய் நல்லா பாரு அவன் தான் பெருமாள்..

அப்போ நான் ?

அம்மா தாயே பார்ட்டி ( பிச்சைக்காரனாம்)

22.  ஹீரோயின் - நான் இப்படி எல்லாம் யார் கிட்டேயும் இப்படி வழிஞ்சதில்லை


ஹீரோ - அப்போ நாங்க மட்டும் பார்ட் டைமா இதை பண்ணீட்டிருக்கற ஆளா?

23. மாமா, அக்காட்ட ஐ லவ் யூ சொல்லுங்க..

பாப்பா.. உன் வயசுக்கு இதெல்லாம் நீ பேசக்கூடாது..

அப்போ போய் பாட்டியை அனுப்பட்டா?

24. என்னடா பொண்டாட்டி கிட்டே வழிஞ்சிட்டு? எடுக்கற முடிவை முதல் இரவுக்கு முன்னாலயே எடுங்கடா.. அப்போ விழுந்திடுங்க..  ( ஏப்பா, அங்கே போய் சோலியை பார்ப்பாங்களா? ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பாங்களா?)


25.  சுகர் இருந்தா நான் சுகர் பேஷண்ட்-னு பெருமையா சொல்லிக்கறோம், ஆனா  மன ரீதியா ஏதாவது பிரச்சனைன்னா அதை வெளீல சொல்ல கூச்சப்படறோம்

26. தான் மட்டுமே நல்லாருந்தா போதும்னு நினைக்கறவங்களூம் இந்த உலகத்துல இருக்காங்க, தன்னை சுத்தி இருக்கறவங்களூம் நல்லாருக்கனும்னு நினைக்கறவங்களூம் இருக்காங்க.

27.  டேய்.. அதிகமா யோசிக்கக்கூடாது டா. அப்புறம் நம்மை மக்குன்னு வாத்தியார் சொல்லிடுவாரு..

இந்த எழவுக்குத்தாண்டா நான் யோசிக்கறதே இல்ல..

28.  நிலாவுல காலை வெச்சது யாரு?

ஆர்ம்ஸ்ட்ட்ராங்க்

அவர் இடது காலைத்தான் வெச்சாரு.. நான் கேட்டது வலது காலை முதல்ல வெச்சது யாரு?

( அண்ணே, இந்த ஜோக்கை நான் பேச நினைப்பதெல்லாம் கற விக்ரமன் படத்துல விவேக் பேசிட்டாருங்கோவ்)

29. நாங்க எல்லாம் அப்பவே அந்த மாதிரி..

எந்த மாதிரி..?

இப்படி தானா வந்து மாட்டிக்கறதுதான்..

30. முன்னே பின்னே தெரியாதவங்க கூட கை கொடுத்து உதவுவான், ஆனா இந்த சொந்தக்காரங்க இருக்காங்களே.. ( செம கிளாப்ஸ் தியேட்டர்ல)https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSGUktj7hQw9K-AMjO89graKrYz2nzVde28lJfIqGw9-0CpC9ZSoFrqxnnaTabJ9R5E61t5Ki8RpXJ_f9v1LrF0o7xwQJ7gt5EJ5CKv3BNGbI3QVM73KC3B5PHXiSOGjIH_3nFsd5Ozw/s1600/swathi-hot6.jpg

31. நீ இன்னும் உயிரோடவா இருக்கே? ஊர்ல  அத்தனை பஸ் லாரி எத்தனை ஓடுது.. அதுல எல்லாம் சாகாம எப்படி எஸ்கேப் ஆனே? ( எஸ் வி சேகரின்  வண்னக்கோலங்கள் நாடகத்துல வந்த ஜோக்)

32.  உலகம் பூரா இருக்கற எல்லா போலீசும்  இதைத்தானே சொல்றீங்க? இன்னார்தான்னு முதல்லயே சொல்லி இருக்கலாமில்ல?ன்னு எங்கேடா சொல்ல விடறீங்க? அடிச்சுட்டுத்தானே ஆரம்பிக்கறீங்க?

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பின் பாதி க்ளைமக்ஸில் ஹீரோவை காட்ட வேண்டும் என்ற குறுக்கீடோ நிர்ப்பந்தமோ இன்றி சிறு வயசு காட்சிகளை அதிகம் வைத்தது..

2. டி வி நடிகை சாண்ட்ரா சாந்தியாக வந்து படவா கோபியுடன் அலப்பறை செய்யும் காமெடி காட்சிகள் கலக்கல், கூடவே பொய்யல்ல போட்டுக்குடு பார்ட்டியும் அதகளம் பண்றாங்கப்பா..

3. கஞ்சா கறுப்பு காமெடி காட்சிகளை  திரைக்கதையில் சமயம் பார்த்து புகுத்திய விதம் அழகு..

4. சந்தனம் பூசி வந்த சப்பாத்திக்கள்ளியே பாடல் காட்சியில் நடன அமைப்பு அசத்தல்.. சிம்பிள் மூவ்மெண்ட் தான், ஆனால் வெகுவாக ரசிக்க வைத்தது.

5. பெட்ரோல்பங்கில் வரும் ரெகுலர் பிச்சைக்காரனை டெயிலி டீ வாங்கிக்குடுத்து  நண்பன் ஆக்குவது, அவரை குளிக்க வைத்து ஹேர் கட் பண்ணி விட்டு நிட் டிரஸ் போட வைத்து ஆளையே மாற்ற வைப்பது  எல்லாம் செம ( வசூல்ராஜா எம் பி பி எஸ் சீனை நினைவு படுத்தினாலும்..)https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2RuviPfXlbOCkHdA_VmkkpZekRdQcNMgYe2umPpOGHfTgBtE2wnQFOn-gvef5UE5cF9abc20h-DCkytH8BAhKrB3vFrYusPJINel6HX3KpdrIyt2cXbyh6vSuSohV33Wtv2mQvrrk0shJ/s1600/Swathi__37_.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் ,லாஜிக் மீறல்கள்

1. பெட்ரோல் பங்குக்களில் பெட்ரோல் அடிக்கும் தொழிலாளர்கள் டியூட்டி டைம் 12 மணி நேரம் தான்// ஒரு இடத்தில் 8 மணி நேர வேலை தானே, ஏதாவது பார்ட் டைம் ஜாப் பண்ணலாமே?னு வசனம் வருது.. ( எந்த பிரைவேட் வேலையும் 8 மணி நேரம் கிடையாது)

2.  அதே போல் பெட்ரோல் அடிக்கும் தொழிலாளர்கள் தினமும் இரவு போறப்பதான் எல்லா வசூல் பணத்தையும் கணக்கு பார்த்து செட்டில் செய்வார்கள், இதில் ஹீரோ ஒரு கார்க்கு பெட்ரோல் அடிச்சுட்டு, அந்த பணத்தை இன்னொரு தொழிலாளரிடம் கொடுத்து இதை மேனேஜர்ட்ட கொடுத்துடுங்கறார்.. அவர் என்ன அவருக்கு பி ஏவா?

3.  ஒரு சீனில் ஹீரோ காரில் போறார், அப்போ வழில ஒரு தம்பதி கைல குழந்தையோட வழில நிக்கறாங்க, பைக் ரிப்பேர்.. உடனே ஹீரோ ஹெல்ப் பண்ணி பைக்கை ஸ்டார்ட் பண்ணி தந்துடறார், அப்புறம் அந்த லேடியை கார்ல வரச்சொல்லிட்டு பைக்ல ஹீரோ வர்றார், டிராப் பண்ற இடம் வந்ததும் அந்த ஜோடி விடை பெறும்போது அந்த மனைவி கைல குழந்தை இல்லை அவ்வ்வ் ஹாயா பின்னால உக்காந்துட்டு போறாங்க..அந்த அட்டுக்குழந்தை டர்க்கு டவல் போர்த்தப்பட்டு முன்னால இருக்கற மாதிரி காட்டி இருக்காங்க

4. வன்முறை, அடிதடி , வெட்டுக்குத்து எல்லாம் ஓவர்.. ஒரு கட்டத்துல போர் அடிச்சிடுது... சீக்கிரம் படத்தை முடிங்கப்பா என சொல்ல வைக்குது..http://www.chitramala.in/photogallery/d/475712-1/Swathi-hot-Pics003.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 42
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - எம் சசிகுமாருக்காக,ஸ்வாதிக்காக ஆண்கள் பார்க்கலாம், பெண்கள் பார்க்கறது சிரமம் தான்.. நாடோடிகளை விட, சுப்ரமணியபுரம் விட ஒரு மாற்று கம்மிதான்

ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள் , பி - 30 , சி - 20 நாட்கள் ஓடலாம்..


41 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

first visit

தமிழ்வாசி பிரகாஷ் said...

படம் பார்த்துட்டு சூடா விமர்சனம் எழுதிய சிபி அண்ணனுக்கு நன்றி...

தமிழ்வாசி பிரகாஷ் said...

சுவாதி படங்களை இதான் சமயம் என அள்ளித்தெறித்த சிபிக்கு வாழ்த்துக்கள்,,,

அண்ணே சரியா சொல்லிட்டேனா?


எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

குரங்குபெடல் said...

"வீட்டைத்தானே வாடகைக்கு கேட்டோம், பொண்ணையா கேட்டோம்? ( பாக்யா ஜோக் 2008 வலங்கை மான் நூர்தீன்) "


Well attack

கவிதை வீதி... // சௌந்தர் // said...

Very nice...

Anonymous said...

சுடச் சுட விமர்சனம்...........

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

கோகுல் said...

வியாழக்கிழமை படம் ரிலீசா அதியசம்தான்.

கோகுல் said...

சசி,சுவாதிக்காக பாக்கலாம்-ஓகே

arul said...

vasanangalai post seyyamal irunthaal your review will be short and sweet


(www.astrologicalscience.blogspot.com)

ராஜி said...

Padam parthacha?

கடம்பவன குயில் said...

வசனங்களுடன் review படித்ததில் ஓசியில் முழு படமும் பார்த்த மாதிரி இருக்கு. போராளி போரடிக்காது . பார்க்கலாம் என்கிறீர்கள். சரிதானே ?

ரைட்டர் நட்சத்திரா said...

படம் ஹிட்

கடம்பவன குயில் said...

உங்க பதிவுகள் வரவர ரொம்ப நீண்ட பதிவுகளாய் இருகிறதே. கொஞ்சம் நீளம் குறைத்து எடிட் செய்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் .

Mathuran said...

அட அதுக்குள்ள விமர்சனம் எழுதியாச்சா

கவி அழகன் said...

பாக்கவேண்டிய படம்

MANO நாஞ்சில் மனோ said...

சுட சுட விமர்சனமா கலக்கல் அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

சுவாதி படமெல்லாம் சூப்பர் அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

அம்பது நாள் தியேட்டருல ஒடுனாலே காசு சேத்துறலாமே நோ பிராப்ளம்...!!!

Unknown said...

போராளி போராடத்தேவயில்லைன்னு அர்த்தமா அண்ணே!

Unknown said...

விமர்சனம் கலக்கல்.
நடுநிலை என்பது இதுதானோ?

Unknown said...

நீங்க தலைவரா இருக்கின்ற உங்க (ஜொள்ளர்கள்)சங்கத்து விளம்பரமெல்லாம் பதிவுல வரக்கூடாது
இதை வன்மையாக கண்டிக்கின்றேன்...ஹஹஹ
விமர்சனம் வழக்கம் போல....நக்கலு நையான்டி புள்ளிவிவரம் கலக்கல்

சென்னை பித்தன் said...

ஓகேதானா?
நல்ல விமரிசனம்.

FARHAN said...

3. பேச்சிலர்க்கு வீடு தரமாட்டேன்.. எனக்கு ஒரு பொண்ணு இருக்கு...
வீட்டைத்தானே வாடகைக்கு கேட்டோம், பொண்ணையா கேட்டோம்?
( பாக்யா ஜோக் 2008 வலங்கை மான் நூர்தீன்)

8. டேய் பார்த்துடா, படிச்சு கிடிச்சு கலெக்டர் ஆகிடப்போறானுங்க
( சேம் டயலாக் இன் அறைஎண் 305 இல் கடவுள் பை த சேம் பர்சன் கஞ்சா கறுப்பு )

28. நிலாவுல காலை வெச்சது யாரு?
ஆர்ம்ஸ்ட்ட்ராங்க்
அவர் இடது காலைத்தான் வெச்சாரு.. நான் கேட்டது வலது காலை முதல்ல வெச்சது யாரு?
( அண்ணே, இந்த ஜோக்கை நான் பேச நினைப்பதெல்லாம் கற விக்ரமன் படத்துல விவேக் பேசிட்டாருங்கோவ்)

31. நீ இன்னும் உயிரோடவா இருக்கே? ஊர்ல அத்தனை பஸ் லாரி எத்தனை ஓடுது.. அதுல எல்லாம் சாகாம எப்படி எஸ்கேப் ஆனே? ( எஸ் வி சேகரின் வண்னக்கோலங்கள் நாடகத்துல வந்த ஜோக்)


Sharp Memory .... gud reviev

Sharmmi Jeganmogan said...

நல்ல நையாண்டியான விமர்சனம். ஆனால் படத்தில் வேறு யாருடைய போட்டாவுமே கெடைக்கலியோ? ஒரே போண்ணு போட்டாவா கெடக்கு...

Unknown said...

போட்டிக்கு படமில்லை!சரக்கும் இருக்கிறது! நல்லா ஓடிடும்!

Anonymous said...

நல்ல விமரிசனம்...பார்க்கலாம் என்கிறீர்கள்...ஓகே...

அம்பாளடியாள் said...

விமர்சனம் அருமை!...வாழ்த்துக்கள் சார் .என் தளத்தில்
கவிதை காத்திருக்கு ...

Napoo Sounthar said...

சூப்பர்..

Menaga Sathia said...

அதுக்குள்ள படம் பார்த்தாச்சா,ம்ஹூம்....

Anonymous said...

விமர்சனம் எல்லாம் சரி அண்ணே, படவா கோபிக்கு மனைவியாக நடிப்பவர் பெயர் தேவதர்ஷினி கிடையாது சாண்ட்ரா

Yoga.S. said...

வணக்கமுங்க!சினிமா,காரம்,COFFEE இல ஆஹா,ஓஹோன்னு புகழ்ந்தாங்களே?

சுதா SJ said...

அண்ணே தலைப்பில் ஹிட் எண்டு இருக்கிறதா பார்த்து ரெம்ப நல்ல படமுண்ணு சொல்லுறீங்க ஆக்கும் என்று ஓடி வந்தேன்... அவ்வவ்

சுதா SJ said...

ஹும்.... சமுத்திரகனி மட்டும் அல்ல சசிகுமாரும் தன் ஒரே சாயல் படம் பண்ணும் முறையை மாற்றனும்

சுதா SJ said...

சரி விடுங்கண்ண, அந்த சுவாதி குட்டிக்காண்டி படத்தை பார்த்து துளைப்போம்... ஹீ ஹீ

K.s.s.Rajh said...

பாஸ் உங்கள் பார்வைதான் என்னுடையதும் சசிக்குமார்,ஸ்வாதிக்காக படம் பார்ப்போம் அவ்வ்வ்வ்வ்வ்

வவ்வால் said...

சிபி,

என்னக்கொடுமைய்யா இது விமர்சனம் எழுதும் போதே வின்னர், ஹிட் னு போட்டு வச்சா , என்ன ஹிட் ஆகிடுமா :-))

எனக்கு என்னமோ விமர்சனம் மட்டும் ஹிட் ஆகிடும் தோனுது!

என்ன ஒரே மாதிரினு சொல்லிட்டிங்க இந்த படத்தில சசிக்குமாருக்கு தாடி, மண்டைல மயிர் எல்லாம் அதிகமா இருக்கு, அப்போ வித்தியாசமான படம் தானே :-))

கோவை நேரம் said...

மாத்தவே இல்லையா .... சசிகுமார் காண்டாக போகிறார்...

Unknown said...

எல்லா இணைப்புக்கும் ஓட்டு போட்டாச்சு ! கமெண்ட்ஸ் போட நெறைய இருக்கு....
அதுல இப்ப ஒன்னே ஒன்னு : நல்ல நல்ல வசனங்கள் நெறையா இருக்கு படத்துல...
குப்பை படத்துக்கு அத்தனை வசனம் போடுவீங்க...
இதுல மிஸ்ஸிங்...அதனை தனியாக ஒரு பதிவு போடவும் - இது என்னுடைய request சிபி !

கோவை நேரம் said...

லாஜிக் மீறல்கள் என்ற இடத்தில் சிபியின் கவனக்குறைவு.....
./// ஒரு சீனில் ஹீரோ காருல.......குழந்தை இல்லை ..அவ்வவ் ..////
.ஆனால் குழந்தை முன் சீட்டில் உட்கார்ந்து இருக்கிறது ..சிபி சரியாக படத்தை பார்க்காததுக்கு இது ஒரு உதாரணம் ( ஒருவேளை நோட்ஸ் எழுதிட்டு இருந்தீங்களோ ).உங்களோட பதிவுல இருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு அத்துபடி.(தீவிரமான ரசிகர்கள் ஆச்சே...) நீங்க சின்ன சின்ன குறைபாடுகள் சொல்லும் போது, அதை உன்னிப்பாய் கவனிக்கிறோம் திரையில்..உங்களின் பதிவுகள் உலகம் பூரா ரசிக்கப்படுகிறது.உங்களின் வளர்ச்சியில் நாங்களும் பங்கு கொண்டு இருக்கிறோம்.

maithriim said...

பஞ்ச தந்திரத்தில் தேவயாணி எவ்ளோ பெரிய மாத்திரை என்று சொல்வது போல எவ்ளோ பெரிய விமர்சனம் :-)
படத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசியுள்ளிர்கள்! நல்லப் பதிவு.
amas32