Friday, December 23, 2011

ராஜபேட்டை , டான் -2 , எட்டாம் நெம்பர் வீடு - ஒரு முன்னோட்ட பார்வை

http://i.indiaglitz.com/tamil/news/rajapattai290911_1.jpg1. 1.  ராஜபேட்டை - தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ராஜபாட்டை. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். தில், தூள், சாமி படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்க பக்கா கமர்ஷியல் படம் இது. படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை தீக்ஷா செத் தமிழில் அறிமுகமாகிறார். டைரக்டர் கே.விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சிறுத்தை புகழ் அவினாஷ், நான் மகான் அல்ல வில்லன் அருள்தாஸ், ப்ரதீப் ரவாத், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிலமோசடி தொடர்பாகவும் அவற்றுக்கு பின்னே இருக்கும் மோசடி கும்பல் பற்றிய கதைதான் ராஜபாட்டை. படத்தில் விக்ரம் வில்லனிடம் இருக்கும் அடியாளாக ஜிம் பாயாக நடிக்கிறார். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தை பி.வி.பி.சினிமா புரெடக்ஷன்ஸ் சார்பில் பிரசாத் வி.பொட்லாரி தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் முதல்படம் இது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார், மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

சி.பி -இப்போ நடக்கறது அதிமுக ஆட்சி என்பதால் திமுக ஆட்சியில் நடந்த ,குறிப்பாக ஈரோடு என் கே கே பி ராஜா மாதிரி ஆளுங்களோட வணடவாளங்களை தண்டவாளத்துல ஏத்துற படமா இருக்கும். 

சென்னை, பாண்டிச்சேரி, ஹைதரபாத், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலும், பாடல் காட்சிகள் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் படமாக்கியுள்ளனர். படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. டிச.23 முதல் திரைக்கு வர இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்ரம் நடிக்கும் பக்கா கமர்ஷியல் படம் ராஜபாட்டை.

http://tamilmoviesonline.co.in/wp-content/uploads/2011/11/Deeksha-Seth-In-Rajapattai-6_thumb5.jpg

 சி.பி - ஆனா ட்ரெய்லர் எல்லாம் பார்த்தா தல அஜித் நடிச்ச சிட்டிசன் நினைவு தான் வருது.. விக்ரம் ஏகப்பட்ட கெட்டப்ல வர்றார்.. அந்த மேக்கப் எல்லாம் சரியா பொருந்தலை.. லெட் ஸி ,எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை .

ஹீரோயின் மெழுகு பொம்மை மாதிரி இருக்கு..ஈரோடு அன்னபூரணி, ஸ்ரீநிவாசா, சங்கீதா ஆகிய 3 தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது..

2. டான் 2 -ஷாரூக் கான், பிரியங்கா சோப்ரா, போமன் இரானி நடித்த படம், ‘டான்’. அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடிப்பில் 1978ல் வெளியான ‘டான்’ படத்தின் ரீமேக் இது. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘டான் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. 


ஷாரூக், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, குணால் கபூர் நடிக்கும் இந்தப் படம் தமிழில் அதே பெயரில் டப் ஆகிறது. ரிதேஷ் சித்வானியுடன் இணைந்து தயாரிக்கும் பர்ஹான் அக்தர் இயக்குகிறார். ஷங்கர் எஹசான் லாய் இசை அமைக்கிறார்கள். ஒளிப்பதிவு ஜேசன் வெஸ்ட். வரும் 23ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது. ‘டான்’ படத்தில் நடித்தவர்களில் அர்ஜுன் ராம்பால், இஷா கோபிகருக்குப் பதிலாக, இதில் லாரா தத்தாவும் குணால் கபூரும் நடித்துள்ளனர். 

டான் 2

 சி.பி -இதுல ஷாரூக் கெட்டப் எல்லாம் பார்த்தா அஜித் நடிச்ச பில்லா -2 கதையைத்தான் சுட்டுட்டாங்களோன்னு டவுட்டா இருக்கு.. பில்லா படத்துல அப்பாவி அஜித்தா வர்ற கேரக்டர்க்கு பரம சிவன்ல அஜித் வர்ற கேரக்டருக்கான கெட்டப்பை ஷாரூக் இதுல யூஸ் பண்ணி இருக்கார்.. 
இதை எல்லாம் வெச்சுப்பார்க்கும்போது டான் 2 பில்லா ரீமேக் , அல்லது பில்லா-2 வை தழுவிய கதை என்று தான் தோணுது..

சொல்ல முடியாது, டான் -2 படக்கதையை தெரிஞ்சுக்கிட்டு பில்லா -2 படம் அதே கதையை சுட்டு எடுக்கறாங்களோ  என்னவோ?எப்படியும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம், எப்படின்னா விக்ரம் நடிச்ச ராஜபேட்டையை விட இந்த ப்டத்துக்கு நல்ல தியேட்டர்ஸ் அமைஞ்சுருக்கு.

http://www.thedipaar.com/pictures/resize_20111108075821.jpgஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ஹிந்தியிலும், ஈரோடு ஆனூர் தியேட்டர்ல தமிழ் டப்லயும் ரிலீஸ் ஆகும் போல தோணுது..


3. எட்டாம் நெம்பர் வீடு - ரொம்ப நாளுக்குப்பிறகு ஒரு பேய்ப்படம், இது நேரடி தமிழ்ப்படம் போல தெரில.. ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தா சி ஐ டி காலனின்னு ஒரு ஹிந்திப்படம் வந்ததே அந்த படத்தை டப் பண்ணி நைஸா ரிலீஸ் பண்றாங்கன்னு நினைக்கறேன்.. ஈரோடு ஸ்டார் தியேட்டரில் ,அண்ணாவில் ரிலீஸ்..

இந்தப்படத்துக்கு ஸ்டில் போடலாம்னு கூகுள்ல தேடுனா கிடைக்கலை.. என்னய்யா மார்க்கட் பண்றீங்க?


18 comments:

மூ.ராஜா said...

முதல் பார்வை

Unknown said...

டிரைலர் நல்லாத்தான் இருக்கு...படம் எப்படின்னு தெரியலையே?
பில்லா ஒரிஜினல் நம்ம ஆளுக ஹிந்தியில சுட்டதுதானே....அவிங்க திரும்ப சுட்டா
தப்பில்லை....தொடர் பதிவு தரவும் சிறிய விமர்சனத்துடன்...

இன்று என் வலையில் படிக்க

2011ல் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்

Unknown said...

ஓக்கே!!

Anonymous said...

அண்ணே 8 ம் வீடு டிரையிலர் பார்க்கவே ரொம்ப ரெர்ரா இருக்கு கட்டாயம் பார்க்கணூம்.இப்பத்தானே ஷாருக்கோட ரா வன் வந்திச்சு அதுக்குள்ளே ரெண்டாவது படமா..

Unknown said...

என்ன சார் ராஜபாட்டை பெருசா எடுபடவில்லையாம்?

வெளங்காதவன்™ said...

ஓகே ஓகே...

ஆனா டான் பற்றிய பார்வை...

டான்- அமிதாப், ஜுனத்- ஹிந்தி
பில்லா- ரஜினி, ஸ்ரீப்ரியா- தமிழ்
டான்- ஷாருக், ப்ரியங்கா- ஹிந்தி
பில்லா- அஜித், நயன்தாரா- தமிழ்
டான்2- ஷாருக், ப்ரியங்கா- ஹிந்தி....

சோ, நாமதான் அவிங்க படத்த காப்பி அடிச்சு இருக்கோம்...

:-)

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி

சரியில்ல....... said...

சிபியின் சிறப்பு கண்ணோட்டம் சிக்ஸர்!

ராஜபாட்டைக்காக மட்டும் வெயிட்டிங்!

Unknown said...

அணணே நடத்துங்க...என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு அவங்களுக்கு மார்க்கட் பணண வராது ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவி அண்ணா, படம் பார்த்துட்டுதான் விமர்சனம் எழுதி எங்களை கொல்லுறேன்னு பார்த்தா படங்களை பார்க்காமலே படத்தை சொல்லி கொல்லுறியே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

விக்ரம் கெட்டப்பை பார்த்தால் படம் டண்டனக்கா மாதிரிதான் இருக்கு அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அங்கே இங்கே சுட்டு சுட்டு படம் எடுக்குறதுதாண்டா இப்போது பேஷன்...!!!

K.s.s.Rajh said...

ராஜபாட்டை விக்ரமின் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கும் என்று எதிர்பாக்கின்றேன் பொறுத்திருந்து பார்ப்போம்

அனுஷ்யா said...

எனக்கும் நம்பிக்க இல்ல அண்ணே..சுசீந்திரன் வேற ஓவரா பேசிருகாப்ல...பாப்போம்..

அனுஷ்யா said...

நான் பிரியங்கா சோப்ராவின் உதட்டிற்கு மட்டும் கோவில் கட்டுமளவிற்கு இரசிகன்..அதனால ஷாருக்க சகிச்சுகிட்டு இன்னைக்கு போலாம் ன்னு ஒரு ப்ளான்..

அனுஷ்யா said...

..ஒரு நிலைவாசற்படி நினைவாய்...நம் வலையில்..முத்தத்தின் மிச்சம்..

Yoga.S. said...

Good Morning,si.pi sir!thank u!

Jahira Banu said...

don-2 is sequel of Don

But Billa 2 is prequel of Billa.